பழந்தமிழர் மரபு என்பதே வேட்டையில் இருந்து தான் தொடங்குகிறது, அதை தொன்றுதொட்டு பின்பற்றிவரும் வேட்டுவ வலையர்கள் தமிழகம் முழுக்கவே பரவி வாழும் இனக்குழு ஆவார்கள்... என்னுடைய சிறுவயதில் என் தந்தையரோடு ஒருசில முறை வேட்டையாட செல்வதுண்டு, பெரும்பாலும் கூட்டிச்செல்ல மாட்டார். இவைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த கூடாது என்பது அவரது என்னம்... வேட்டையாட பின்னாலில் இளைஞர்களோடு போவதுண்டு, அப்போதெல்லாம் நம்முடைய வேட்டை நாய்கள் குறுக்கும் நெடுக்கும், முன்னும் பின்னுமாக ஓடும், சிலநேரம் காலுக்கடியில் ஓடி நம்மை சாய்த்துவிடவும் கூடும் அப்படி ஒரு நேரற்ற தன்மையுடையது நாய்கள்... இதை முத்தரையப் பாவலர் சேக்கிழார் பெருமான் எத்தனை உன்னிப்பாக கவனித்து அழகுற ஆய்ந்து பாடல் புனைந்திருக்கிறார் என்று என்னும் போது தமிழாய்ந்த சான்றோர் கண்ணில் நீர் ததும்புதல் இயல்பேயாகும்... மண்ணையும் மரபையும் காப்பதும், வேட்டையாடி வீரம் சொறிவதும் மலையரான வேட்டுவர் மரபு என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார் சேக்கிழார் பெருமான், மேலும் வேட்டுவர்களை மறவர் என்றும் மள்ளர் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது மறவர் என்பதும் மள்ளர் என