முத்தரையர் கல்வெட்டுகள்

1.முத்தரையன் கோட்டை, கன்மியூர் கோட்டை முதலிய ஊரவர்கள் திருவையாற்றேம்பலான திருஞானசம்பந்த நல்லூர் எனும் ஊரை கைக்கோளார் ஒருவருக்கு விற்றுக்கொடுத்த செய்தி அடங்கிய கல்வெட்டு.

2.இக்கல்வெட்டு சாழநாட்டுத் திருப்பாலையூர் சிவன்கோயில் இறைவனுக்கு பருத்திக்குடி நாட்டு மேன்முக்குளத்து கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன் என்பவர் திருநந்தாவிளக்கு எரிப்பதற்காக இருபத்தைந்து பசுக்களை தானமாகத் தந்ததைக் தெரிவிக்கிறது.

3.தென்னிலங்கை வளஞ்சியர் (வலையர்) என்னும் வணிகக் குழுவினனான செகல் சேவுகத் தேவன் கல்வெட்டு

4.கரிகால சோழ குழுவினராகிய சோழ முத்தரையர் | திருவரங்குளம் கிராமம் கோவில்பட்டி பிச்சன் என்பவரிடம் இன்றும் உள்ள செப்பேடு.

5.மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் திருமறைநாயனார்க்கு, பனங்காட்டாங்குடி, இலுப்பைக்குடி, மடைக்கழி ஏம்பலான வலையங்குடி ஆகிய ஊர்களை இறையிலிதானமாக வழங்கப்பட்ட செய்தி.

6.கோயிலுக்கு நிலதானம் அளித்த பிற்கால பாண்டியர் கல்வெட்டில் காணப்படும் முத்தரையர் பெயர்களும் ஊரும் | தரியமானான வடமுத்தரையன், நாசகனாழ்வானான சாயப்படை முத்தரையன் | பூம்பிழால் முத்தரையன் கோட்டை




7.மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சொக்கலிங்கலிங்கபுரத்தில் இருந்த வலையரில் கட்டசிம்ப அம்பலக்காரன் பிச்சன் அம்பலக்காரன் மற்றும் அவரது மனைவி வீராயி ஆகியோர் பிள்ளையார் மீது கொண்ட அதீத பக்தியை தெரிவிக்கும் கல்வெட்டு.

8.முத்தரையர் மன்னர்களில் தன்னாட்சி புரிந்த பெரும் வேந்தன், கோனாளறு முத்தரையர், தென்னவன் இளங்கோ முத்தரையர், கோ இளங்கோவதி அரையர், மல்லன் விதுமனான தென்னவன் தமிழதியரையன், உத்தமதாணி போன்ற சிறப்பு பெயர்களால் வழங்கப்பட்டவர் பேரரசர் கோ இளங்கோ முத்தரையர் ஆவார். இவரது பெயரில் பல ஊர்களும் இவர் எழுப்பிய பல ஆலங்களும் இன்றும் உள்ளன. இவருடைய பெயரையே பல்வேறு கல்வெட்டுகள் இவரது ஆண்சியாண்டாக குறிக்கிறது. எழுத்தில் சொல்லிவிட முடியாத அளவுக்கு முத்தரையர் மன்னர்களில் புகழ்பெற்றவர் இவர் மட்டுமேயாகும்.


9.கோவில் வழிபாட்டு செலவுக்காக ஊரில் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வருவாயை ஒதுக்கி கொடுத்த கல்வெட்டு செய்தியில் வீரக்கழல் முத்தரையர் கையெழுத்திட்ட செய்தி.


10.கோயிலில் திருவமுது செய்வதற்க்காக பல ஊரார் சேர்ந்து இறையிலி நிலம் அளித்த கல்வெட்டில், | வடமுத்தரையன் | கையெழுத்திட்ட செய்தி. இந்த வடமுத்தரையன் பற்றி பல கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. அக்கால அரசியலில் இவர் செல்வாக்குப் பெற்றவராக இருந்திருக்கக் கூடும்.




Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER