Posts

Showing posts from August, 2023

| குகன் வழிவந்த வலையர்கள் |

Image
| குகன் வழிவந்த வலையர்கள் | இந்தியாவில் அனைவருக்கும் இராமாயணம் பற்றி தெரியும். ராமன், லக்ஷ்மணன், இராவணன், மேகனந்தன், கும்பகர்ணன், விபீஷணன், அனுமன் போன்றவர்கள் தான் ராமாயணத்தில்  முக்கியமான கதாபாத்திரங்கள். இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பல சமுதாயங்கள் இவர்களை தன் குடி என்று பெரும் அளவில் உரிமை கொண்டாடுவது இல்லை.   பெரும் அளவில் தன் குடி என்று நிறையா சமுதாயங்கள் சொல்வது குகன், வால்மீகி போன்றவர்களை தான். அதுவும் காலம் காலமாக கூறி கொண்டார்கள். வால்மீகி ஒரு வேட்டுவர் என்று கருதபடுகிறது. வேட்டுவ மரபே  சேர்ந்த கோலி, பேடர் (போயர், நாயகர்), வேட்டைக்கார நாயக்கர் என பலர்  வால்மீகி அவர்களின் வம்சத்தினர் என்று சொல்கிறார்கள். அதேபோல் நிஷாதராஜ அரசன் தான் குகன். நிஷாதராஜன் என்கிற சம்ஸ்கிருத சொல் தமிழில்  வேட்டுவ அரசன் என்று பொருள் ஆகும். ஆம், குகன் ஒரு வேட்டுவர். இவர் கம்ப இராமாயணத்தில் நாவாய் வேட்டுவர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஆயிர கணக்கான கப்பல் வைத்து இருந்தார் என்று கம்பராமாயண சொல்கிறது.  இவரே ராமனுக்கு கப்பல் உதவியும் செய்தார் என்று நாம் அறிந்ததே. குறிப்பு: கேரளாவில் இருக்க

சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்

Image
சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்... இந்திய விடுதலை வரலாற்றில் முத்தரையர்கள் நேதாஜி படைப்பிரிவான INA வில் சேர்ந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தன் உயிரை தியாகம் செய்த முத்தரையர்கள்... #அம்பலக்காரன் #பெரிய_தம்பி தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் தொண்டியன்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் 1944ல் போர்முனையில் தன் உயிரை இந்த நாட்டிற்காக இழந்தார்... [FFPO எண். 6507/1970, 19.11.1970, TNSAC] #அம்பலம் #கருப்பையா: 1901 இல் பிறந்தார், மாவட்டம். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவேகம்பேட்டை பாப்னியை பூர்வீகமாக கொண்டவர் அப்பா பெயர் காளிமுத்து. அவர் 1942 இன் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார், மேலும் 147, 433 IPC மற்றும் DIR இன் 38 இன் கீழ் கைது செய்யப்பட்டார். 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, திருவாடானை மற்றும் மதுரை சிறைகளில் வைக்கப்பட்டு, இறுதியாக பெல்லாரியில் உள்ள வெல்லஸ்லி சானடோரியம் சிறையில், 1946 இல் இறந்தார். [ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சீட்டு, ச

| வன்னிய முத்துராஜா |

Image
| வன்னிய முத்துராஜா | வன்னியர் எனும் பட்டம் பல சமுதாயத்துக்கு உண்டு. வலையர், அம்பலக்காரர்(வலையர்), முக்குவர்,  இருளர், மறவர், கள்ளர், குறும்பர், பள்ளி, என பல சமுதாயத்துக்கு வன்னியர் பட்டம் உண்டு. மதுரையில் வன்னிவேலம்பட்டி எனும் கிராமத்தில் 90% வன்னியர் பட்டம் உடைய வலையர்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.  அதே போல் வன்னியர் பட்டம் உடைய அம்பலக்காரர்கள் இன்று வன்னிய முத்துராஜா என்று அழைக்கபடுகிறார்கள். மேலும் பழனி செப்பேடு வன்னி முத்தரசர் பற்றி பேசுகிறது. இவர்கள் திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.  குறிப்பு: மதுரையை சேர்ந்த வன்னியர்கள் இலங்கை சென்று வன்னி வள நாட்டை உருவாக்கி ஆட்சி புரிந்தார்கள். இவர்களில் பிரபலமானவர் தான் பண்டார வன்னியன். மதுரையில் வன்னியர் பட்டம் உடைய சமுதாயம் வலையர்கள். நவீன்குமார் அம்பலக்கார பிள்ளை முத்தரையர் வரலாறு தேடல் நன்றி