கார்மண்டல சதகம் பாண்டிய நாட்டு முத்தரையர்
இதுவரை வெளிவராத புதிய சதக (கார்மண்டல சதகம்) பாடல். புதிய பல வரலாற்று செய்திகளோடு பாண்டிய நாட்டை ஆண்ட முத்தரையர் வரலாறு 🐬
கீழ்க்காணும் படச்செய்தி 👇
|| இவர்கள் மதுரையிலிருந்தபோது பலநூல்கள் தொகுத்ததாகவும் இசைநூல்கள் தோற்றுவித்ததாகவும் கூறப்பட்டுள்ளார். நாலடியாரிலும் முத்தரையர் புகழப்பட்டுள்ளார். இக்குலத்தார் சோழ தேசத்தை 9ம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்ததாகச் சோழ வமிச சரித்திரத்தால் உணரலாகும்; பல்லவ சாசனங்களிலும் இவர்கள் பெயர்கள் காணப் படும். குடுமியாமலை, பொன்னமராவதி முதலிய ஊர்களில் கிடைக்கும் சாசனங்களால் பாண்டி நாட்டின் சில பகுதிகளை இக்குலத்தினர் ஆண்டு வந்தாரெனப் புலப்படுகிறது. நார்த்தாமலைச் - சாசனத்தில் இவர்கள் மதுரையரசர் குலத்தினரென்று கூறப்பட்டுளது. எனவே இவர்கள் ஒருபெருங்குலத்தை சார்ந்தவராய் தொண்டைநாடு முதல் பாண்டிநாடு வரையில் பரவியிருந்தனர் எனப் பெறப்படும். பாண்டிநாட்டை வௌவி அரசாண்டவர் இம் முத்தரையரே எனலாம். இவர்கள் சைன மதத்தைச் சார்ந்தவராயிருப்பதும் முன் கூறிய கருத்தை வலி யுறுத்துகின்றது. களப்பிரர் என்பார் கூலிப்படை வீரரெனக் கருதலாகும். முத்தரையர் இக் கூலிப்படை வீரரைக் கொண்டு பாண்டி நாட்டைக் கவர்ந்து பலவாண்டுகள் அரசாண்ட காலத்து நூல்கள் தொகுத்தாரென ஊகிக்கலாகும். திகம்பர தரிசனம் என்னும் சைனநூல் விக்கிரமசகம் 526. (கி. பி. 470) பூச்சிபாதர் என்பாருடைய மாணாக்கரொருவரான வச்ச நந்தி என்பார் ஒரு திராவிட சங்கம் தாபித்தார் என்று கூறுமென்பர் (செந்தமிழ் 3:406). இவ்வறலாறுகளை நோக்கின் கார்மண்டல சதகத்தார் உண்மையெனக் கொள்ளவமையும். |
Comments
Post a Comment