காடக முத்தரையர்
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
__________________________________
3.காடக முத்தரையர்
பல்லவ நாட்டை
பல்லவர்கள் ஆண்டனர். இவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும்.
அப்போது சோழ நாட்டுப்பகுதியிலும் பல்லவர்கள் ஓரளவு ஆட்சி செய்தனர். மீதப் பகுதிகளில், பல்லவர்களின் பங்காளிகளாக, பாதுகாவலர்களாக இருந்து முத்தரையர் ஆட்சி செய்தனர்.
இவர்களது காலத்தில் பாண்டிய நாட்டை பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டாகும்.
பாண்டியர்க்கும், பல்லவர்க்கும் எப்போதும் போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது. பாண்டியர் படையெடுத்து வரும்போதெல்லாம் முத்தரையரின் சோழ நாட்டை தாண்டித்தான் படை நடத்த வேண்டிய கட்டாம்.
இப்படி படை நடத்தி வரும்போது பல்லவரோடு போரிடுவதற்கு முன்பு, முத்தரையருடன் போரிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாம் இருந்தது.
இப்படி பமுறை பாண்டியர்கள் முத்தரையரிடம் தோற்றுள்ளனர். பல்லவருடன் போரிட முடியாமலேயே நாடு திரும்பினர்.
இவ்வாறு நாடு திரும்பிய பாண்டியர்கள், முத்தரையருடன் போரை தடுக்க எண்ணி, சினேகிதம் கொண்டாட முயன்றனர். காலப்போக்கில் தங்களது ஆட்சிக்கு உதவியாக முத்தரையர்களையும் வைத்துக் கொண்டனர்.
ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் கி.பி.811-860 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இவனது ஆட்சிக் காலத்தில் "சத்ரு பயங்கர முத்தரையன். " என்ற நாடாழ்வான் பாண்டிய நாட்டில் இருந்தான். இவனது புகழ் பெற்ற ஆட்சி முறையை "சத்ரு பயங்கர முத்தரையன்" என்ற தலைப்பில் விரிவாக காண்போம்.
மேலும் சித்தகுட்டி மாதவன் என்ற சோழ முத்தரையன், நல்லூர்க்கிழவன் "இருந்சோநாடு" பகுதியை ஆண்ட "எட்டிச் சாத்தன்" என்ற "இருப்பைக்குடி கிழவன்" இராசபாளையம் பகுதியிலிருந்த ஆண்மர் நாட்டின் தலைவன் "சங்கர மூரி" போன்ற அரசாள்வார்கள் பலர் பாண்டிய நாட்டில் ஆட்சிபுரிந்தனர்.
இவ்வாறு பாண்டிய நாட்டிலும், பல்லவ நாட்டிலும் செல்வாக்கோடு ஆட்சி செலுத்திய முத்தரையர்கள் காலத்தில் பல்லவ நாட்டில் அரசுரிமைச் சிக்கல் ஏற்பட்டது. இரணிய வர்மப் பல்லவன் காலத்தில் ஆட்சியில் வெற்றிடம் ஏற்பட்டது. அரசுக்கு ஏற்ற தலைவன் இல்லாத நாடு தத்தளித்தது. சித்திரமாயன் என்ற இளவரசன் ஆட்சியைப் பிடிக்க தீவிரமானான். பெரும் கலகத்தை விளைவித்தான்.
அந்த நேரத்தில் பல்லவ நாட்டில் "காடக முத்தரையர்" என்ற பெரும் அரசியல் தலைவன் இருந்தான்.இவனைப்பற்றி.👇
"காஞ்சிப் பல்லவ நாட்டிற்கு வரும் அரசு ஆபத்தைத் தடுக்கக் கூடிய தகுதி பெற்றவனாக இந்த காடக முத்தரையர் விளங்கினார். காடக முத்தரையர் உயிருக்கு அஞ்சவில்லை. அந்த அளவுக்கு சுத்தமான வீரனாக காடகர் இருந்தார். இவர் தன்னந்தனியே இருந்து பல பேருடன் சண்டையிட்டு சுத்த வீரத்தனத்தை நிலை நாட்டுபவர்" என்று வரலாற்று வல்லூனர்களும் எழுதுகின்றனர்.
பல்லவ நாட்டின் படைத் தலைவனாக இருந்த உதயச் சந்திரனும் காடக முத்தரையரும் வெகுநேரம் நாட்டை நோக்கி வரும் ஆபத்தைப் பற்றி கலந்து பேசினர். பல்லவ சாம்ராஜ்யத்தினர் பொறுப்பு மிக்க இருவரின் ஆலோசனைப்படி நடக்கச் சம்மதித்தனர்.
சித்திரமாயனை தடை செய்வதையும், தக்கவரை பட்டமேற்ற வேட்டிய பொறுப்பையும் ராஜ தந்திரியான காடக முத்தரையரிடமே ஒப்படைத்தனர்.
காடக முத்தரையர் இரணியவர்மப் பல்லவனிடம் பலமுறை தூது சென்றார். அவரை நாட்டை ஆள ஒப்புக்கொள்ள கேட்டுக்கொண்டார். இறுதியில் இரணியவர்மப் பல்லவனின் கடைசிப் புதல்வன் "பரமேச்வரவர்மன்" எனப்பட்டு பின்னாளில் "பல்லவ மல்லன்" எனப்பட்டவரை, பல்லவ நாட்டிற்கு அரசுரிமைப்பட்டம் ஏற அரும்பாடு பட்டு "King Maker" ஆன காடக முத்தரையர் செயல்பட்டார்.
வாரிசு இல்லாத பல்லவ நாட்டிற்காக காடக முத்தரையர் நெஞ்சு துடிதுடித்தது. பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது முத்தரையருக்குள்ள பற்றைப்போல வேறொருவருக்கும் இருக்க முடியாது. பல்லவர் பெருநாடு வளப்பமாகத் திகழ வேண்டும் என்று முத்தரையர் கனவு கண்டு வந்தார்.
பரமேஸ்வர வர்மன் சிறு வயதில் பட்டமேறியவன். தான் பட்டம் ஏறுவதற்கு உறுதுணையாக நின்ற காடக முத்தரையர் பால் மதிப்பும், மரியைதையும் வைத்திருந்தான்.
பல்லவ நாட்டின் அரசுரிமையில் காடக முத்தரையரின் பங்கு மிக முக்கியமானது. பல்லவ நாடு மன்னன் இல்லாது தத்தளித்த போது, இரணிய வர்மனின் மகன் நந்திவர்ம பல்லவ மல்லனை பல்லவ நாட்டின் அரசனாக்கியவன் காடக முத்தரையன்.
இவன் செய்த செயற்கரிய செயலை பல்லவ நாடே போற்றியது. பாராட்டியது. இவன் ஆற்றிய பங்கை நன்றி மறவாத மக்கள் சிறப்பித்து.👇
"அவராணை வருகின்ற மை கேட்டு
மஹா சமாந்தரும், நகரத்தாரும் மூலப்ர
க்கிருத்தியும் "காடகமுத்தரையரும்" எதிர்வந்து கோயில் கொண்டு புகுந்த இடம்"
என்று புடைச் சிற்பமாக கீழ் காஞ்சியில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலில் அமைத்துள்ளனர். (ஆம் நூல் உதயச்சந்திரன் பக்;70-71 நூல் முத்தரையர் பக்:68)
தொடரும்...
என்றும் அன்புடன்....
உங்கள் தோழன் சிவமாரி...

Comments
Post a Comment