வலையர்

முன்னைதமிழருள் மூத்தவர் வலையரே
தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே
பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு
கலத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே
கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி
பகைவனை விரட்டியப் போர்மறவரும் அவரே
அதனாலேபுகழும் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் அன்னோரை
பின்னாளில் ஐங்குறுநூறும் அழகாய்ச்சொன்னது“வலைவர் தந்த கொழுமீன்” என்றவர்பெயரை...

திணை சார்ந்த தொன்மைத் தமிழரின் வரலாறு,அவர் ஆற்றியத் தொழில் சார்ந்தே சாதியாய் உருப்பெற்றது என்றே சொல்கின்றது.குறிஞ்சித் திணையில் பிறந்திட்ட தமிழன் மெல்ல மெல்ல முல்லைத் திணைக்கு நகர்ந்திட்டான்.அங்கும் நிலைக்காமல் மருதத் திணைநோக்கி நகர்ந்தாங்கே நிலைபெற்றான்,அங்கேயே அவன் நாகரிகம் அடைந்தான்,போர்த் தொழில் பயின்றான்,பிழைப்புக்கு ஓர் தொழிலும் அறிந்தான்.அதன் பின்னரே நெய்தலுக்குச் சென்றான்,கரைகடந்து கலமேறி உலகை அளந்தான்.இயங்கியல் அடிப்படையில் ஆய்ந்து பார்த்தால் தமிழர் வரலாறு/உலக மாந்தர் வரலாறு இதுவாகத்தான் இருக்கும்.

மண்ணில் வாழும் குடிகளிலெல்லாம் தொன்மைச் சிறப்பு மிக்க ஒரேகுடி தமிழர் குடியே.அக்குடியிலும் முதுகுடி எதுவென்று இதுவரை ஆய்ந்தோர் சொன்னது பாணன்,பரதன்,மள்ளன் இவைதானென்று.அனால் இந்தக்குடிகளைப் போலவே,முதல் மனிதன் பிறந்த காலத்திலிருந்து இம்மண்ணில் வாழும் ஒரு குடி உண்டு,அதுதான் “வலையர்” என்னும் பெருங்குடி.

அவரே வலையையும்,வளைதடியையும் முதன் முதலில் அறிந்து முறையே கடலிலும் களத்திலும் வீசிய,வரலாறு புகழும் எம் “வலைய” மக்கள். அதற்கு ஆயிரம் ஆயிரமாய் இலக்கியச் சான்றுகள் தமிழிலே உண்டு.ஆனாலும் இதை ஏனோ வரலாற்றுப் பேராசான்கள் கவனத்தில் கொள்ளவில்லை.ஒருவேளை,அன்று ஆளுமை செலுத்திய,அம்பலம் செய்த வலையர்களின் கூட்டம் இன்று அதிகாரத்தில் இல்லை என்பதாலோ???!!!

பண்டு துவங்கி நீர் சார்ந்தே மனிதனின் வாழ்வு/வாழ்விடம் அமைந்தது.மலையிலும்,காட்டிலும் மனிதன் நிலைக்காமல் மருதத்தில் அவன் வாழ்வைத் துவங்கியதன் காரணமே ‘நீர்’தான் என்றால் அது மிகையன்று.மனிதனுக்கும் பிற விலங்குகளுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ‘உற்பத்தித்திறன்’தான் என்பது ‘மார்க்சியம்’(சான்று-மனிதக் குரங்கு மனிதானாக மாறியதன் உழைப்பின் பாத்திரம்-பிரடெரிக் எங்கெல்சு).மனிதானால் தமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ள முடியும்,மனிதனல்லாத பிற விலங்குகளால் அது இயலாது,இதுவே மனிதனுக்கும் விலங்குகளுக்குமான வேறுபாடு,தவிர பகுத்தறிவு என்பது அல்ல(பெரியாரியவாதிகளின் கவனத்திற்கு!).தமது பசியைப் போக்கிக்கொள்ள மனிதனுக்கு உணவு தேவைப்பட்டது.அந்த உணவை உறபத்திசெய்ய நீர் இன்றியமையாத ஒன்றாகியது,எனவே நீரைத் தேடிப் புறப்பட்டான்,மருத நிலத்தை வந்தடைந்தான்,மிகை அளவு நீரை அங்கே கண்டான்.அப்படி மருதத்தில் வாழ்வைத் துவங்கிய மனிதன் முதலில் நீர் நிலைகளிலும்,ஓடைகளிலும் வலை வீசி தம் பசியை ஆற்றிக்கொண்டான்,மானுட வரலாற்று ஆராய்ச்சியில் வல்லவரான தேவநேயப்பாவாணரின் கருத்தும் இதுவே.நீர் நிலைகளில் வலை வீசியது யார்?அவன்தான் வலையன்.சான்று உண்டா?உண்டு,இலக்கியத்தைக் கொண்டு ஆராய்வோம்.

ஐங்குறுநூறின் அம்மூவனார் பாடிய நெய்தல் திணையில் வரும் பாடல்...

“சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர்
‘வலைவர்’ தந்த கொழுமீன் வல்சிப்
பறைதடி முதுகுருகு இருக்கும்
துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே”

///”வலைவர்”,”வலைஞர்” இவையாவும் வலையர் என்ற சொல்வழக்கின் செய்யுள் வடிவம் என்பதை நம் அறிவோம்.முக்கூடற்பள்ளு இலக்கியத்திலே வரும் மள்ளர்/மல்லர் என்ற சொற்றொடர் ‘பள்ளர்’ என்பதன் செய்யுள் வடிவு.அதுபோல வலையர் என்பதை “வலைஞர்”,”வலைவர்” என்றே செய்யுள் வழக்கில் இலக்கியங்கள் குறிப்பிடும்.

பாடலின் பொருள்;தலைவனோடு காதல் கொண்ட தலைவி,பறத்தலை கைவிட்டு தம்மை விரைந்து மணம் செய்துகொள்ளுமாறு அவனிடத்தே வற்புறுத்துகிறாள்.அதற்குச் சான்றாய் ‘கடலுக்குச் சென்று வலையைக் கொண்டு மீன் பிடிக்கும் மக்கள்,அம்மீன்களை கரைக்கு கொண்டுவந்தவுடன் அதனை வாங்குவதற்கு பலரும் போட்டியிடுவர்’.அதுபோல பருவ வயதினளாகியத் தம்மை மணம் முடிக்க பலரும் முயன்று வருவதாகவும்,அதை உணர்ந்து தம்மை விரைந்து மணக்குமாறும் அவனிடத்தே சொல்லுகின்றாள்.
இதன் மூலம் ஐங்குறுநூறு இயற்றப்பட்ட காலத்திலேயே வலையர்கள் வாழ்ந்ததும்,அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்ததும் தெளிவாகத் தெரியவருகின்றது.
அடுத்து ஒரு சான்று,பெரும்பாணாற்றுப்படை என்ற தொகை நூலிலிருந்து

“கோடை நீடினும் குறைப்பட வறியாத்
தோடாழ்குளத்துக் கோடுகாத்திருக்கும்
கொடுமுடி ‘வலைஞர்’ ”

பாடலின் பொருள்;கோடை நீடித்தாலும்,குறையாத ஆழமுள்ள குளத்தின் கரையினிலே மீன்பிடிக்கக் காத்திருக்கும் வலைஞர்/வலையர்.

அடுத்து ஒரு சான்று,தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி மாங்குடி மருதனார் பாடிய ‘மதுரைக் காஞ்சி’யிலிருந்து

“வண்டிரை கொண்ட கமழ்பூம் பொய்கை
கம்புட் சேவல் இன்துயில் இரிய
‘வல்லை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்’ “

பாடலின் பொருள்;வண்டுகள் தங்கிய பூமணம் பொருந்திய பொய்கையிலே படர்ந்திருக்கும் வள்ளைக்கொடியைக் கம்புள் சேவலின் இனிய தூக்கம் களையும்படி நீக்கிவிட்டு வலையை விரித்து கொழுத்த மீன்களை பிடித்து விற்கும் வலைஞர்/வலையர்
இன்னும் ஓர் சான்று,கரிகாற்பெருவளத்தானை நோக்கி உருத்திரங்கன்னார் பாடிய ‘பட்டினப்பாலை’யில் இருந்து

“ஏமாப்ப வினிதுதுஞ்சிக்
கிளை கலித்துப் பகைபேணாது
‘வலைஞர் முன்றின் மீன்பிறழவும்’
விலைஞர்குறம்பை மாவீன்டவுங்
கொளைகடிந்துங் கனவு நீங்கியும்”

பாடலின் பொருள்;’வலையர்களின் வீட்டின் முன்பு குதித்து விளையாடும் மீன்களைப் போன்று’,இதன் மூலம் அக்கால வலைய மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர் என்று இப்பாடல் விளக்குகிறது.
இப்படி வலை வீசிய பெருமக்களே இன்றளவும் வாழும் வலையரின மக்கள்.நீர் நிலைகளில் மட்டுமல்ல இவர்கள் காட்டிலும் வலைகொண்டு விலங்குகளைப் பிடித்தனர்(இன்றளவும் வேட்டுவ வலையராய் வாழுகின்றனர்),பரதவரும் இவரே(இன்றளவும் கடற்கரை ஓரங்களில் பர்வதராஜ குல வலையராய் வாழுகின்றனர்),மருத நிலத்தில் அம்பலம் செய்ததாலேயே இவருக்கே உரிய தனிச் சிறப்பாக “அம்பலக்காரன்” என்ற பட்டம் இன்றளவும் இவருக்கு உண்டு-இவற்றின் எச்சங்கலே இவர்கள் தரித்திருக்கும் ‘தலையாரி’,‘பாளையக்காரன்’ பட்டம்,முத்துக்குளித்து மிகை அளவு முத்துக்களை இவர்கள் பெற்றதனாலேயே இவர்கள் “முத்துராஜா”க்கலாகினர்,அம்முத்துகளை மரக்கலத்தில் ஏற்றி அயல்நாடுகளுக்கு கொண்டு சேர்த்து வணிகம் செய்ததாலேயே இவர்கள் எல்லோரும் “முத்திரையர்” ஆயினர்.

நன்றி:பகிர்வு...


Comments

Post a Comment

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER