மூன்று தரை சோழ முத்தரையர்கள் (6முதல் 10வரை)

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
____________________________________
சோழ முத்தரையர்(கள்):
__________________________

6.சங்கர நாராயணன் என்ற சோழ முத்தரையன்

இவரைப்பற்றிய கல்வெட்டு
ஒன்று, திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோவிந்த புத்தூரில் கோப்பர கேசரியின் 13வது ஆட்சியாண்டு (கி.பி.1025)ல் உள்ளது.

இவர் கோவிந்தப்புத்தூரில் ஸ்ரீ கைலாசநாதர் ஆழ்வார் என்ற கோவிலை கட்டியுள்ளார். இக்கோயிலை பராமரிக்கவும், திருச் சென்னடைபுறம், நெய்யமுது, கறியமுது, வெற்றிலை பாக்குப் படையல், அயனச் சங்கராந்தி, இரண்டுக்கும் விசு இரண்டுக்கும் வைகாசி விசாகமும், நீராட்டுதல், பெருந்திருவமுது செய்யவும், திருப்புகையும், திருச்சந்தனமும், திருவிளக்கு போடவும், அதற்குத்தினம் எண்ணெய் நாழியும் ஆழாக்கு இத்தனையும் குறைவரத் தினசரியும் செய்து வர வேண்டும் என்றும் அதற்காக பட்டர்கள் இவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதற்காக வடகுடி கண்மாயில் நில தானம் கொடுத்துள்ளார். இவர் திருச்சி மாவட்டம் மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் என்று திரு.நடன காசிநாதன் கூறுகிறார். இச்செய்தி தொகுதி.19 க.எ.331ல் கல்வெட்டை காணலாம்.

7.வேட்டைக்காரன் சோழ முத்தரையன்

வேட்டைக்காரன் சோழ முத்தரையனின் கல்வெட்டுத் தொகுதி S.||.7 க.எண்.105ல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரிய வயலூரில் உள்ளது.

இக்கல்வெட்டில் இவனின் மகன் "சிய முத்தரையன்" ஆவான் என்கிறது. இந்த சிய முத்தரையனும் மற்றொரு வேட்டைக்காரன் பந்தலும் சேர்ந்து வேட்டைக்கு சென்றுள்ளனர். இந்த பந்தலுவின் தந்தை சேந்த முத்தரையன் ஆவான்.

இவர்கள் சேர்ந்து வேட்டையாடும் போது, சிய முத்தரையனின் அம்பு குறி தவறி தாக்கியதால் பந்தலு முத்தரையன் இறந்துபட்டான். இதனால் இரண்டு குடும்பத்திற்குள்ளும் பகை ஏற்பட்டுள்ளது. இந்த பகையை நீக்கவும் இந்த தவறுக்காகவும், இக்கோவிலில் (ஏதோ ஒரு தர்மம்) செய்துள்ளான்.

8.சுந்தரச் சோழ முத்தரையன்

இந்த சுந்தரச் சோழ முத்தரையன்
பற்றிய கல்வெட்டு தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், புல்லமங்கை பசுபதி கோவிலருகில் உள்ளது.

இவனுக்கு "பராந்தக முத்தரையன்" என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இவன் கிழார்க் கூற்றத்து பில்லமங்கலம் பிரம்மதேயக் கிராமம் திருவாலந்துறை காளாப்பிடாரி கோவில் முன்பாக மக்கள் கூடி 1 1/2 மா நிலத்தை விற்றுள்ளனர்.

இந்நிலத்தை 25 ஈழக் காசுக்கு விற்கப்பட்டுள்ளது. விற்கப்பட்ட நிலம் கண்டமங்கலம் என்ற பிரம்மதேயக் கிராமத்தைச் சேர்ந்தது. இந்த நில விற்பனையின் போது சுந்தர சோழ முத்தரையன் கணக்கனாக இருந்துள்ளான். இக்கல்வெட்டில் பராந்தக முத்தரையன் பெயரும் உள்ளது. (க.தொ.19ல் க.எண்.63ல் உள்ளது.)

9.சேக்கிழான் சக்தி மலையனாகிய சோழ முத்தரையன்

இவனைப்பற்றிய கல்வெட்டு
கோப்பர கேசரி பன்மரின் 3வது ஆட்சியாண்டில் (கி.பி 1125) தஞ்சை மாவட்டம் திருச்சோற்றுத்துறையில் (தொகுதி 19.க.எண்.72,78 மற்றும் 827ல்) காணப்படுகிறது.

இங்குள்ள மகாதேவர்க்கு ஒரு நந்தாவிளக்கு வைத்து எரிப்பதற்கு மேலூர் கோட்டத்து காவனூரில் இருக்கும் இவன் 25பொன் கொடையளித்தான்.

அந்தப் பொன் பரிசோதித்த சுத்தத் தங்கம் என்றும் குறிப்பிடுகிறான். இதே மன்னனின் 2வது ஆட்சியாண்டில் (கி.பி.1124) ராஜாயி ராஜ வளநாட்டு, மேற்கானாட்டு நகரம் வானவன் மாதேவியிலுள்ள காளீஸ்வரமுடையார் மகாதேவர்க்கு ஒரு நந்தா விளக்கும் வைத்துள்ளான்.

இந்த விளக்கை எரிக்க 96 ஆடுகளை என்றென்றும் குறையாத எண்ணிக்கையுடன் பராமரிக்க கேட்டு கல்வெட்டியுள்ளான். இச்செய்தியை க.எண் 827ல் கூறப்பட்டுள்ளது. மேலும் க.எ.72ல் இவன் நில புலன்களை, மாடு, மனை உடைய செல்வம் நிறைந்த ஆநிரை கொண்ட பண்ணையார் என்கிறது.

10.விக்கிரமச் சோழ முத்தரையர்

பு.க.எண் 694ல் விக்கிரமச்
சோழர் பற்றிய கல்வெட்டு ஒன்று
வீர பொக்கன உடையார் காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் காணப்படுகிறது. இதில் கூழைக் குளத்தூரில் தட்டான் வகைக்குள் சுவந்திரம் பெறுவதில்
பகை ஏற்பட்டுள்ளது.

இந்த பகையை தீர்க்க கீழைப்புதுவயல் ஊரார்களும், விக்கிரமச் சோழ முத்தரையர்களும் கூடி நியாயம் பேசி தீர்த்து வைத்தனர் என்று இவ்வூரில் இடிந்து கிடக்கும் சிவன் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

தொடரும்...

என்றும் அன்புடன்...
உங்கள் தோழன் சிவமாரி....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்