மூன்று தரை சோழ முத்தரையர்கள் (1முதல் 5வரை)

மூன்று தரை முத்தரையர்கள்:
______________________________
சோழ முத்தரையர்(கள்)
_________________________

1.எதிரில்லாதானான சோழ முத்தரையர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில், இக் கோயில் கட்டும்போது பல்வேறு பட்டவர்களுடன் ஆலங்குடி ஊராண்ட "எதிரில்லாதானான சோழ முத்தரையர்" இரண்டு நிலைக் காலைத் தர்மமாக கொடுத்துள்ளதை புதுக்கோட்டை கல்வெட்டு 1037விளக்குகிறது.

2.சேக்கிழான் அரையன்:

தென் ஆற்காடு மாவட்டம் காட்டு மன்னார் கோயிலருகிலுள்ள உடையார்குடி கோயில் கல்வெட்டில், கோ ராசகேசரி வர்மனின் 6வது ஆட்சியாண்டில் மேலப்பழுவூரை சேர்ந்த "சேக்கிழான் அரையன் சங்கர நாராயணனாகிய சோழ முத்தரையன்" நிலம் கொடையளித்துள்ளான் என்று கூறுகிறது.

3.சித்தக்குட்டி மாதவன்:

மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் குருவித்துரை கல்வெட்டில் "சித்தக்குட்டி மாதவனான சோழ முத்தரையன்" கல்வெட்டு உள்ளது இவனைப்பற்றி ஏற்கனவே (சத்ரு பயங்கர முத்தரையன் என்ற தலைப்பில் பார்த்திருக்கிறோம்.)

4.முடிகொண்ட சோழ முத்தரையன்:

ஜெயங்கொண்ட சோழபுரம் கல்வெட்டில் ராஜ ராஜனின் 27ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.1045) கயிறூர் கலியனான "முடிகொண்ட சோழ முத்தரையன்" காணப்படுகிறான். இந்த சோழபுரத்தை காரைக்காட்டு நென்மேலியான ஜெயங்கொண்ட சோழபுரம் என்று கூறுகிறது. இம்முத்தரையன் முடிகொண்ட சோழ முத்தரையன் ஆட்சித் தலைவனாக இருந்தவன். இவனின் மகன்கள் "கலியன் கயிறூர்" மற்றும் "கலியன் வாணியன்" ஆகியோராவார். இவர்கள் இருவரும் ஏதோ ஒரு போரில் இறந்துபட்டதாக தெரிகிறது. இறந்த இவர்கள் ஆன்மா சாந்தியடைய இக்கோயிலில் திருநந்தாவிளக்கு ஒன்று வைத்து, அதன் பராமரிப்பிற்காக 32 பசுக்களை கொடையாக அளித்தூள்ளான். சோழர் காலத்தில் ஆட்சியிலிருந்த முத்தரையர்கள் அரசை இழந்து, ஆட்சி அதிகாரிகளாக மாறியுள்ளனர். இவ்வாறு பதவி இழந்த முத்தரையர்கள், தனது முன்னோர்களின் பெயரை வைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக விக்கிரமச் சோழ முத்தரையன், விசயாலய முத்தரையன், பராந்தக முத்தரையன், சுந்தர சோழ முத்தரையன், என்ற பெயரில் ஆட்சித் தலைவனாக இருந்துள்ளான். (ஆவணம்.  இதழ் 2/4/1992 பக்கம் 28.)

5.கருணாகர சோழ முத்தரையன்:

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை கோயிலில் விக்கிரமச் சோழனின் 12ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.1129-30)ல் உள்ள கல்வெட்டு தொகுதி 27ல் க.எ.188ல் "கருணாகரச் சோழ முத்தரையன்" பற்றிய செய்தி உள்ளது. இம்முத்தரையனுக்கு "சூற்றிய தேவன்" என்ற பட்டப்பெயரும் இவனது இளைய சகோதரன் "விக்கிரமச் சோழன் மொழக்கன் பள்ளி கொண்டான்" என்ற பெயரிலும் உள்ளான். இவன் மாம்பாக்கம் என்ற இடத்திலே நடைபெற்ற போரில் இறந்துபட்டவன்.

இவர்களால் ஏற்பட்ட பகை, பழி நீங்க அய்யாறன் சாத்தான் என்பவன் திவக்கரை ஆளுடையார் கோயிலில் திரு நொந்தா விளக்கு ஒன்றை வைத்து, விளக்கு எரிப்பதற்காக 32 பசுக்களை கொடையாக அளித்துள்ளான்.

தொடரும்....

என்றும் அன்புடன்....
உங்கள் தோழன் சிவமாரி....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்