DNT என்றால் என்ன..??

DNT என்றால் என்ன..??
DNT தேவை ஏன்..??
சலுகைக்காகவா DNT..??
உரிமைக்காகவா DNT..??

1.சீர்மரபினர் நலச்சங்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருவது எதற்காக?

சமூகநீதி பேசுகின்ற தமிழகத்தில் சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு அன்னிய அரசு வழங்கிய உரிமைகளும் சலுகைகளும் கூட பறிக்கப்பட்டு விட்டன. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், சீர்மரபினர் மக்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தீவிரமான போரட்டங்களை நடத்தி வருகிறது 

2, எந்தெந்த சாதி சீர்மரபினர் வகுப்பில் வருகின்றனர்?

தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர். அதில் பிரமலைக்கள்ளர், கூத்தப்பர் கள்ளர், பெரியசூரி கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர் என்ற நான்கு(4) கள்ளர்களும், மறவர், ஆப்பநாடு கொண்டயன் கோட்டை மறவர், செம்ப நாட்டு மறவர், மறவர் என்ற மூன்று(3) மறவர்களும், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர், ஊராளி கவுண்டர், சேர்வை, அம்பலகாரர், அம்பலக்காரர், வேட்டைக்காரன் என்ற எட்டு(8) முத்தரையர்களும், போயர், கல் ஒட்டார் உள்ளிட்ட ஒன்பது(9) ஒட்டார்களும், தொட்டிய நாயக்கர், தெலுங்கபட்டி செட்டி, வெல்லயாங்குப்பம் படையாட்சி உள்ளிட்ட பதினேழு(17) இதர பிரிவனரும், 27 பிரிவு குறவர்களும் அடங்கும். கள்ளர், மறவர், வலையர்கள் மட்டுமே 1 கோடி மக்களுக்கும் மேல் உள்ளனர் அகமுடையார் சமுதாய இன்னும் விடுபட்ட உட்பிரிவு சமுதாய மக்களையும்  சேர்க்க வேண்டும் கோரிக்கை 

4. எப்போது DNT(Denotified Tribes) என்ற சாதி சான்றிதழ் பறிக்கப்பட்டது?

இம்மக்களுக்கு 1979 வரை DNT(Denotified Tribes) என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 30.7.1979 அன்று அதிகாரிகள் மத்திய அரசு பரிந்துரைத்ததாக பொய்யான காரணத்தைக் கூறி DNT என்பதை DNC (Denotified Community) என்று மாற்றிவிட்டனர். யாரும் கவனிக்காத நிலையில் இந்த மக்கள் பெற்று வந்த இலவச உயர் கல்வி பறிக்கப்பட்டுவிட்டது. நான் DNT(Denotified Tribes) என்று இருந்ததால் கல்விகட்டணம் இல்லாமல் மருத்துவம் படுத்து முடித்தேன்.

5. மத்திய அரசு மாற்றவில்லை என்று எவ்வாறு கூறுகிறீர்கள்?

அ) இந்தியாமுழுவதும் குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை DNT என்றுதான் அழைத்து வருகின்றனர். 
ஆ) மேலும் 2008ம் ஆண்டு மத்திய அரசின் DNT ஆணையம் இவர்களை இந்தியாமுழுவதும் ஒரேமாதரியாக DNT என்றுதான் அழைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 
இ) 2014-2015ம் ஆண்டுமுதல் மத்திய அரசு DNT மாணவர்களுக்குமட்டும் கல்வி உதவித்தொகைத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு அத்திட்டம் கிடைக்கவில்லை. 
ஈ) 2015 மத்திய அரசு மீண்டும் ஒரு DNT ஆணையத்தை நியமித்துள்ளது DNC ஆணையம் என்று போடவில்லை.
உ) 36 அசைக்கமுடியாத ஆவணங்களை சமர்பித்துள்ளோம்.
ஊ) தற்போதைய தேசிய ஆணையம் முதன்மை செயலாளருக்கு 14.10.2016ல் DNT என்று மாற்றக்கோரி கடிதம் எழுதியுள்ளது.
எ) மார்ச் மாதம் மத்திய அரசிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய அரசு DNTயை DNC என்று ஒருபோதும் மாற்றவில்லை என்று எழுத்துமூலமாக கூறியுள்ளது

6. உங்களுடைய கோரிக்கைகள் என்ன?
எங்கள் கோரிக்கைகள் பல அதில் குறிப்பாக 
 மீண்டும் DNT சான்றிதழ் வழங்க வேண்டும்
 பறித்த உரிமைகளையை மீண்டும் வழங்க வேண்டும்
 10 % தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
 மீண்டும் இலவச உயர் கல்வி வழங்க வேண்டும்
 DNT மக்களுக்கு அரசியலமைப்புச்சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும் 
 DNT நலவாரிய உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும்
 DNT நலவாரிய நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
 ரெங்கி கமிஷனின் 76 பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்
 OBC கமிஷனின் நீதியரசர் ஈஷ்வரஐயா கமிஷனின் OBC 27% இடஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து DNT/NT/SNT மக்களுக்கு 9% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் 
 பிகுராம்ஜி கமிஷனின் இடைக்கால பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்
 DNT மக்களின் உரிமைகளை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்
 மத்திய அரசு வழங்கும் மாதம் ரூ1200/- கல்வி உதவித்தொகை திட்டத்தை தமிழக DNT மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்
போன்ற பல்வேறு கோரிக்கைகள் அதில் முதல் கட்டமாக அரசு ஆணை 1310 நாள் 30.7 1979யை உடனே திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்துகிறோம்.

7. DNTலிருந்து DNCயாக மாற்றியதால் உங்கள் சமுதாயம் இழந்தத என்ன?

 சென்னை கல்வி விதி 92ன் படி எல்லா பழங்குடி மாணவர்களுக்கும் எல்லா நிலை கல்வி கட்டணத்தையும் அரசு திருப்பி கொடுத்துவந்தது. 1979ல் பழங்குடி என்ற வார்த்தை மாற்றப்பட்டதால் அந்த சலுகையை இழந்துவிட்டோம்.
 அப்போது கல்வி நிறுவனங்களில் அட்டவணை பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த இடங்கள் பூர்த்தியாகாமல் இருந்தால் இந்த பழங்குடி மக்களுக்கு வழங்கி வந்தனர். ஆனால் பெயர் மாற்றத்தால் அதை இழந்து விட்டோம்.
 DNC என்று மாற்றியாதல் மத்திய அரசு DNT மக்களுக்கு ஒதுக்கி வந்த சிறப்பு நிதியை தமிழக DNT மக்கள் இழந்துவிட்டோம்.
 2014-15 முதல் மத்திய அரசு DNT மாணவர்களுக்கு மட்டும் செயல்படுத்திவரும் அதிகப்படியான கல்வி உதவித்தொகை திட்டத்தை இழந்துவிட்டோம்.
 மத்திய அரசின் பரிந்துரையின் படி மாநில அரசுகள் DNT மக்களுக்கு என்று மாநில அளவில் தனி உயர் அதிகாரியை நியமித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் MBC/DNC அதிகாரி என்றே நியமிக்கப்பட்டுள்ளார். DNT மக்கள் தனி அதிகாரி பெருவதை இழந்துவிட்டோம்.
 அதேபோன்று மத்திய அரசின் பரிந்துரையின் படி மாநில அரசுகள் DNT மக்களின் பொருளாதார முன்னேற்த்திற்காக தனி நிதி கழகம் உறுவக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் BC/MBC பொருளாதார முன்னேற்த்திற்காக தனி நிதி கழகம் உள்ளது. DNT மக்கள் தனி நிதி கழகத்தை இழந்துவிட்டோம்.
 மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் DNT, பிற்படுத்தப்பட்ட பழங்குடி என்ற அடிப்படியில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் DNC என்று மாற்றி MBCல் சேர்த்ததால் தனி இட ஒதுக்கீட்டை இழந்துவிட்டோம்.
 எல்லா ஆவணங்களிலும் 1979 வரை பழங்குடி என்று இருக்கும்போது சமுதாயம் என்று மாற்றியாதல் 60000 ஆண்டுகால எங்கள் அடையாளத்தை இழந்துவிட்டோம்.
 அரசு ஆணை 1310/30.7.1979 ஆதாரமே இல்லாமல் பொய்காரணத்தை செல்லிபோடப்பட்டுள்ளது. அதை திரும்ப பெறுவதற்கும் உச்சநீதிமன்ற இட ஒதுக்கீடு வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
 சென்னை கல்வி விதியில் இன்றும் DNT என்றே உள்ளது. இது ஒரு சட்டம். இதற்கு முரணாக அரசு ஆணை 1310/30.7.1979 ஒரு அறிவுறுத்தல், இருக்கமுடியாது.

8. பிறகு ஏன் உங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்க தயங்குகிறது?

 அக்கறையின்மை, 
 மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற அசட்டுத்தைரியம், 
 இம்மக்களுக்கு எதிறாக செயல்படும் அரசு அதிகாரிகள், 
 மக்கள் ஆதரவு இல்லை என்ற தப்புக்கணக்கு.

9. மக்கள் ஆதரவு உங்கள் போராட்டத்திற்கு எப்படி உள்ளது?

எம்மக்கள் பழங்குடி மக்கள் என்பதால் முதன்மை உரிமைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சட்ட உரிமைக்கு இன்னும் கொடுக்கவில்லை, அறியாமை, வறுமை, கண்மூடித்தனமான அரசியல், தொண்டு உள்ளம் கொண்டவர்கள் பற்றக்குறை, நிதி குறைபாடு என்ற ஒரு கடினமான சுழலில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. விரைவில் வீதிக்கு வருவார்கள், வட இந்தியாவைவிட ஒரு வலிமையான போராட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள போராட்டம் ஒரு திருப்பு முனை போராட்டம் என்னை போன்ற முதியவனின் சுமையை குறைக்க நிறைய இளைஞர்கள் தயாராகிவிட்டார்கள்

Comments

  1. அண்ணா வணக்கம், எனக்கு தங்களிடமிருந்து சில தகவல்கள் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும். தொடர்பு கொள்ள அனுமதி தாருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்