மூன்று தரை சோழ முத்தரையர்கள் (11முதல் 15வரை)

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
__________________________________
சோழ முத்தரையர்(கள்)
_________________________

11.அபிமான மேரு சோழ முத்தரையன்

தொகுதி 17 க.எ.186ல் முதலாம் இராஜேந்திர சோழனின் 8மற்றும் 10வது ஆட்சியாண்டு (கி.பி.1020-1022) குமரிக்குட்டி என்ற சிறப்பு பெயரும் இவனுக்கு உண்டு. மேரு என்றால் இமயம் போல மிக உயந்தது என்ற பொருளை குறிக்கிறது.

குமரி என்றாலும், குட்டி என்றாலும் இளமையை குறிப்பதாகும். மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானதால் குமரிக்குட்டி என சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவன் திருவக்கரை கோயில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் அமைந்துள்ளகோவிலாகும். வீர தீர செயல்களால் புகழப்பட்ட இவன், தெய்வபக்தியும் மிகுந்தவனாக விளங்கியுள்ளான். முத்தரையர் ஆட்சி பிற்கால சோழர்களால் பறிக்கப்படும். ஒரு நூற்றாண்டுக்குள் சோழனுடன் அபிமானத்துடன் இணைந்து சோழ முத்தரையர் என்ற பெயரையும் பெற்றவன்.

இவன் இக்கோவில் மூலஸ்தானமுடைய மகாதேவர் மீது கொண்ட பக்தி காரணமாக 64 பலம் எடை கொண்ட வெண்கலத் தளிகையும் ஒரு விளக்கையும் தானமாக கொடுத்துள்ளான். இவன் வடபிடாகை ஆற்றுப் பார்க்கத்தை சேர்ந்தவன். தான் கோயிலுக்கு அளித்த தர்மம் எந்த காலத்திலும் அழியாது எப்போதும் அணையாது. விளக்கு எரிக்க 90 ஆடுகளையும், வழுதாவூர் மன்றாடி (இடையர்) வசம் கொடுத்துள்ளான்.

12.மும்முடிச் சோழ சிங்களாந்தக முத்தரையர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கோட்டூரில் (மலையக் கோயிலருகில்) முதலாம் குளோத்துங்க சோழனின் 47வது ஆட்சியாண்டில் (கி.பி.1116-17) இக்கல்வெட்டு தெரிவிப்பதாவது, இங்குள்ள குளத்தில், குமிழி அழிந்து பட்டுள்ளதை புதுப்பித்து கட்டியுள்ளான். இக்கல்வெட்டு புதுக்கோட்டையில் க.எ.155ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில் இவனை "மும்முடிச் சோழ சிங்களாந்தக முத்தரையன்" என்று கூறுகிறது. திருமயத்திலும், மலைக்கோயிலிலும் முத்தரையர்களின் குகைக் கோயில்களும் உள்ளன. இவனால் நீரை தேக்கி நில வளம் பெருக்க மடை கட்டப்பட்டுள்ளது. இதுவே இடிந்துள்ளது. இவனது வழி வந்தோர் புதுப்பித்து கட்டியுள்ளனர். இவ்வாறு புதுப்பித்து கட்டியவனை கல்வெட்டு,

"கோட்டியூர் அரையன் பெரியான் உட்கா கண்டனான குலோத்துங்கச் சோழ கனகராஜன்" என்றே கூறுகிறது. இம்மடையை புதுப்பித்த அவன் எங்கள் முதலிகள் (மூதாதையர்) முத்தரையர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி தொகுதி 23ல் க.எண் 155லும் உள்ளது.

13.விக்கிரமச் சோழ பிரம்மாதராய முத்தரையன்

"விக்கிரமச் சோழ பிரம்மாதராய முத்தரையனு"க்கு அரையத்தேவன் மூவாயிரத் தொருவன் என்ற சிறப்பு பெயர் உண்டு. இவனது தம்பி அரையத்தேவன். திருவெண்காடுடையான் என்ற விக்கிரமச் சோழர் பிரம்மாத ராய முத்தரையன் ஆகிய இருவரும் நாடாண்டவர்கள்.

இவர்கள் சோழர்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து அருகிலுள்ள நாடுகளை இணைத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு இணைக்க ஒத்துழைப்பிற்காக ஒப்பந்த விவரம் கல்வெட்டாக திருவானைக்காவல் கோயிலில் உள்ளது. (20/1937-38) இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை திருச்சிராப்பள்ளி உடையார், திருச்சோற்றுத்துறை உடையார், திருநாகேஷ்வர முடையார், திருக்காமக் கோட்ட முடையார், திருசக்தி முற்றம் உடையார் என்ற கடவுளர்களின் மீது ஆணையிட்டு உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு நாடாழ்வானும் (ஐந்து நாடாழ்வார்கள்) தம் தம் நாட்டிலுள்ள கடவுளர் மீது ஆணையிட்டு ஒருங்கே திருவானைக்கோயிலில் கல் வெட்டியுள்ளனர். ARE 1937-38.பக்.91

இவனது தம்பி வீர ராஜ கேசரி
பன்மாறன் என்பவன் திருச்சி
மாவட்டம் ஊற்றத்தூரில் இருந்துள்ளான்.என்பதையும்
முந்தைய பதிவில் கண்டுள்ளோம்.

14.குலமாணிக்க முத்தரையன்

தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பெரிங்கூர் கோயிலில் இரண்டாம் ஆதித்திய கரிகாலனின் 5ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.968-69)ல் இச்செய்தி உள்ளது.

குலமாணிக்க முத்தரையனுக்கு கண்ப் பெருமான் என்ற சிறப்பு பெயரும் இருந்துள்ளது. இவன் பெரிங்கூரைச் சேர்ந்தவன். நக்கன் என்பவனின் மகன் ஆவான். இவன் காடிபட்டியில் உள்ள கோயிலில் நந்தாவிளக்கு வைத்து விளக்கு எரிக்க 96 ஆடுகளை கொடுத்தான். (தொகுதி 22 பாகம்.1ல் க.எ.203)

15.கண்டராதித்த முத்தரையன்

இவனது கல்வெட்டு தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் கோயிலில் உள்ளது. இவனை கண்டராதித்த முத்தரையன் என்றும் மிறைக் கணபதி என்றும் அழைக்கப்பட்டுள்ளான். இவன் காவிரித் தென்கரை, திறைமூர் நாட்டு, திருவிடை மருதூரில், ஸ்ரீ மூலஸ்தானத்து மகாதேவர்க்கு ஒரு நந்தாவிளக்கு கொடையளித்துள்ளான். இந்த விளக்கு எப்போதோம் அணைந்துவிடாது எரியச்செய்ய 96 ஆடுகளை கொடையாக அளித்துள்ளான். (S.||-vp.nom715)

தொடரும்...

என்றும் அன்புடன்....
உங்கள் தோழன் சிவமாரி....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER