மூன்று தரை சோழ முத்தரையர்கள் (16முதல் 20வரை)

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
_____________________________________
சோழ முத்தரையர்(கள்)
__________________________

16.முத்தரையன் ஆரூரு

இவனது கல்வெட்டு தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூரில், முதலாம் ராஜராஜனின் 19வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் உள்ளது. திருநாவலூர் திருத்தோனீஸ்வரத்துக் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது.

இங்குள்ள மலையனுக்காக திருநந்தாவிளக்கு வைத்து எரிக்க, சாவாலும், மூப்பாலும் குறையாது 90 ஆடுகளை இந்த முத்தரையன் ஆரூர் வழங்கியுள்ளான். இக்கல்வெட்டு எண் 986 இதனை தெரிவிக்கிறது.

17.அப்போதி முத்தரையன்

இவனது கல்வெட்டு தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூரில் 3ம் கிருஷ்ணனின் (கண்ணரதேவரின் 19வது ஆண்டு) திருத்தோண்டீஸ்வரம் கோவிலில் உள்ளது.

அப்போதி முத்தரையன் இக்கோவிலில், வயது முதிர்வாலும், இறந்துபடுதல் மூலமாகவும், எப்போதும் குறைவுபடாமல் 90 ஆடுகளை வைத்து நொந்தா விளக்கை எரிக்கும்படி கொடுத்துள்ளான். இச்செய்தி கூறும் கல்வெட்டு எண்.996 இதனை தெரிவிக்கிறது.

18.விசையாலய முத்தரையர்

இவனது கல்வெட்டு திருச்சி மாவட்டம், திருநெடுங்கலம், லால்குடி வட்டத்தில், 3ம் குலோத்துங்க சோழனின் 32வது ஆண்டு கி.பி.1209-10ல் இக்கோயில் கல்வெட்டில் உள்ளது.

விசையாலய முத்தரையன் வளம்பக்குடியைச் சேர்ந்தவன். இவனுக்கு, தில்லை திருநட்டப் பெருமாளான விசையாலய முத்தரையன் என்றும் பெயர் இருந்துள்ளது.

இவன், விளைநிலம், புஞ்சை, நீர் நிலம் காடு, கரம்பை, உள்பட்ட நிலத்தை கொடுத்து நீர் வார்த்து, வரியை நீக்கிக் கொடுத்துள்ளான். கல்வெட்டு தொகுதி 26ல் க.எண். 721 குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே விசையாலய முத்தரையன் இதே கோயிலில் 301 1/4குழி நிலத்தையும் கொடுத்துள்ளான். இந்த விபரம் கல்வெட்டு எண் 725ல் உள்ளது.

மற்றும் இதே மன்னனின் 4வது ஆட்சியாண்டில் கி.பி.1219-20ல் க.எண். 730லும் காணப்படுகிறது. இந்த விசையாலய முத்தரையனின் பிள்ளைகளாக, ஆளுடை பிள்ளையும், அனபாய முத்தரையனும் காணப்படுகின்றனர். இவர் ஏராளமான நிபந்தனைகளை விதித்து நிலக் கொடையளித்து கோயிலை பராமரிக்க வேண்டி விட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வாண்டாகோட்டை ஊராட்சியில், கிழமேலாக ஓடும் வெள்ளாற்றங்கரையில், குடி கொண்டிருக்கும் திருவிடையார்பட்டியில் மூலநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலின் சக்தி காசிக்கு வீசம் கூடுதலாக உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது.

இங்கே இறந்தவர்களுக்கு 16ம் நாள் சடங்கை நிறைவேற்றுகின்றனர். இக்கோயில் மண்டபத்தில் "வரத ஸ்ரீ இத் திருமண்டபம் எல்லாம் தலையராகிய இராகுத்த மிண்டர் விசையாலய முத்தரையர் திருமேனிக்கு நன்றாக பெருங்கிளையார் (பங்காளிகள்) மகதராயர் செய்வித்த கல் மண்டபம்" என்று கூறுகிறது.

78ஆம் ஆண்டு 274ம் எண் கல்வெட்டில். தஞ்சை மாவட்டம், அச்சுதமங்கலம், சோமநாத சுவாமி கோயிலில் உள்ள கல்வெட்டில் 3ம் ராஜராஜனின் (கி.பி.1216)ல்

திருநட்டப் பெருமாள் உலகனான விசையாலைய முத்தரையன் கோயில் திருப்பணிக்கு நிலம்விட்டு, பிதாக்களின் நன்மைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

மனையகுடி வளம்ப குடியான் திருநட்டப் பெருமாள் உலகனான விசையாலைய முத்தரையன் எனப்படுகிறான். பாண்டி குலாசனி வளநாட்டு, கிளியூர் நாட்டு கள்ளிக்குடியில் உள்ள நிலம், உலக விடங்கப் பேரரையன் இவன் தம்பி தில்லைக்குடி விசையாலைய நாடாழ்வான் குலோத்துங்க முத்தரையன் எழுத்து, திரிபுவன வீர முத்தரையன் எழுத்து இவை செழியதரையன் எழுத்து. என்று காணப்படுகிறது.

19.உடையான் முத்தரையன்

சோப கிருது வருடம், புரட்டாசி
மாதம், 20 தீ விசையாலைய
காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் கண்டீஸ்வரம் கோயிலில் உடையான் முத்தரையன் பற்றிய கல்வெட்டு உள்ளது.

விசையாலையத் தேவரின், பண்டாரத்தினரும் (கோயில் பொக்கிஷ அறை) துலையாநிலை ஊரைச் சேர்ந்தவர்களும், குமட்டிராய பத்த பிள்ளை என்பவரும், மங்கலத்து வயலிலும், பட்டத் தொட்டான் பிறகரையிலுமாக, சீவித நிலம் விட்டுள்ளது.

இந்த நிலம் ஏற்கனவே "உடையான் முத்தரையன்" உனப்பதவான் என்பவனின் சீவிதமாகவும், படைக்குப் பாதி சீவிதமாகவும் விட்ட, குமரன் வயலிலும், காணியாச்சியாகப் பற்றி வழங்கப்பட்டதாக கூறுகிறது.

உடையான் முத்தரையனும், உனப்பதவானும், படைத் தலைவர்களாகவும், அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த படைக்குப் பராமரிக்க நிலம் விட்டு இருந்ததையும், இவர்களுக்கு மண், மனை, அம்பலம், காவல் புஞ்சை சுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதையும் இக்கல்வெட்டு தெளிவுபடக் கூறுகிறது. பு.க.எண்.938ல் விளக்கப்பட்டுள்ளது.

உனப்பதவான், அம்பலம், அதே கண்டீஸ்வரம் கோயிலில் மதுரை நாயக்கர்களின் அரசியல் தலைவனாக இருந்த விசையாலையத் தேவர் (இந்த இடத்தில் தேவர் என்பது உயர்ந்த நோக்கில் மரியாதை சொல்) சூரைக்குடி அரசியல் தலைவன், க(ரு)டுவன் கருங்காடன் என்ற முத்தரையனும் கல்வெட்டி கொடுத்துள்ளனர்.


இதில் மங்களத்து வயலில் சீவித நிலம் 1 1/2யும், இதற்குண்டான புஞ்சை, மனை, கோயில் சுவந்திரம், குளச் சுதந்திரம் மற்றும் எப்பேற்பட்ட சுதந்திரமும் காணியாட்சியும் வழங்ப்பட்டுள்ளது.

இந்த காடன் வகையராக்கள், பெருங்காடன் என்றும் பிடாரன் என்றும் பட்டயங்கள் பெற்றும் பிடாரன்பட்டி, காடன்பட்டி என்ற பெயரில் ஊர் அமைத்துக்கொண்டு இன்று பொன்னமராவதி பகுதியில் வாழ்கின்றனர்.

20.காடவதியரையன்(பூதி தீரன்)

செங்கல்பட்டு மாவட்டம்,
உத்தரமல்லூர் வைகுந்தப்
பெருமாள் கோயில் கல்வெட்டில்👇

"வரத ஸ்ரீ கோவிசய
யாண்டு இருபத்தாறாவது கா
லியூர்க் கோட்டத்துத் தன் கூற்றுத்தர மேருச்
சதுர் வேதி மங்கலத்து சபையோம்
நில வில ஆவணக் கை எழுத்து
முத்தரைய நாட்டு மீ கூற்று
விளாநாட்டுக் கூகூர்க் கூகூர் விசய
நல்லுழான் காடவதிய ராய னாகிய பூதி
தீ ரனுக்கு எம்மூர்த் தென்படகை பெருங்
கொட்டேரிக் கீழாடலம் பூண்டித் தெற்குக் கூறிடா
தெ கிடந்த கீழப் பூண்டியும்" என்கிறது....
இக்கல்வெட்டில் முத்தரையர் நாடு,
என்று ஒரு நாடு இருந்ததும் தெரிகிறது.

தொடரும்....

என்றும் அன்புடன்....
உங்கள் தோழன் சிவமாரி....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்