தொடக்கம் |
|
| 2649. | மின் திரித்து அன்ன வேணி வேதியன் இடைக்காடன் பின் சென்று மீண்டனை யான் கொண்ட பிணக்கினைத் தீர்த்த வண்ணம் இன்று உரை செய்து முந்நீர் எறிவலை வீசி ஞாழன் மன்றல் அம் குழலினாளை மணந்து மீள் வண்ணம் சொல்வாம். | 1 |
|
| உரை |
| | |
| 2650. | அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம் கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு இடத்து வைகி மந்தணம் ஆன வேத மறைப் பொருள் உணர்த்தும் மாதோ. | 2 |
|
| உரை |
| | |
| 2651. | நாதனின் அருளால் கூறு நான் மறைப் பொருளை எல்லாம் யாது காரணத்தான் மன்னோ அறிகிலை எம் பிராட்டி ஆதரம் அடைந்தாள் போலக் கவலையும் சிறிது தோன்ற ஆதரம் இலள் ஆய்க் கேட்டாள் அஃது அறிந்த அமலச் சோதி. | 3 |
|
| உரை |
| | |
| 2652. | அரா முகம் அனைய அல்குல் அணங்கினை நோக்கி ஏனை இரா முகம் அனைய உள்ளத்து ஏழைமார் போல எம்பால் பரா முகை ஆகி வேதப் பயன் ஒருப் படாது கேட்டாய் குரா முகை அவிழ்ந்த கோதாய் உற்ற இக்குற்றம் தன்னால். | 4 |
|
| உரை |
| | |
| 2653. | விரதமும் அறனும் இன்றி மீன் படுத்து இழிஞர் ஆன பரதவர் மகளா கென்று பணித்தனன் பணித்தலோடும் அரதன ஆரம்தாழ்ந்த வார மென் முலையாள் அஞ்சி வரத நிற் பிரிந்து வாழ வல்லனோ என்று தாழ்ந்தாள். | 5 |
|
| உரை |
| | |
| 2654. | வீங்கு நீர்ச் சடையான் நீங்கு மெல்லியல் பரிவு நோக்கி வாங்கு நீர்க் கானல் வாழ்க்கை வலைஞர் கோன் மகளாய் வைகி ஆங்கு நீர் வளர் நாள் யாம் போந்து அரும் கதி முடித்தும் என்னாத் தேங்கு நீர் அமுது அன்னாளைச் செல விடுத்து இருந்தான் இப்பால். | 6 |
|
| உரை |
| | |
| 2655. | அன்னது தெரிந்து நால்வாய் ஐங்கரக் கடவுள் தாதை முன்னர் வந்து இதனால் அன்றோ மூண்டது இச் செய்தி எல்லாம் என்ன ஈர்ங் கவளம் போல் ஆங்கு இருந்த புத்தகங்கள் எல்லாம் தன் நெடும் கரத்தால் வாரி எறிந்தனன் சலதி மீது ஆல். | 7 |
|
| உரை |
| | |
| 2656. | வரை பக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில் உரை பெறு போத நுலை ஒல் எனப் பறித்து வல்லே திரை புக எறிந்தான் ஆகச் செல்வ நான் மாடக் கூடல் நரை விடை உடைய நாதன் நந்தியை வெகுண்டு நோக்கா. | 8 |
|
| உரை |
| | |
| 2657. | அடுத்து நாம் இருக்கும் செவ்வி அறிந்திடாது இவரை வாயில் விடுத்து நீ இருந்தாய் தீங்கு விளைந்தது உன் தனக்கும் இந்தத் தொடுத்த தீங்கு ஒழிய இன்று ஓர் சுற உரு ஆகி வையம் உடுத்த காரோத நீர் புக்கு உழல்க எனப் பணித்தான் மன்னோ. | 9 |
|
| உரை |
| | |
| 2658. | வெரு வரு செலவின் வேழ முகத்தனை விதித்த சாபப் பெருவலி தன்னைச் சாரும் பெற்றியால் சாபம் கூறான் அருவரை நெஞ்சு போழ்ந்த வள் இலை வடிவேல் செம் கை முருகனை வணிகர் தம்மின் மூங்கை யாகு என்றன் இப்பால். | 10 |
|
| உரை |
| | |
| 2659. | நாயகன் ஏவலாலே நாயகி வலைஞர் மாதர் ஆயது நந்திப் புத்தேள் அடுசுற ஆகி முந்நீர் மேயதும் கருணை வள்ளல் மீன் படுத்து அணங்கை வேட்டுப் போயதும் அவட்குக் கேள்வி புகன்றது முறையில் சொல்வாம். | 11 |
|
| உரை |
| | |
| 2660. | சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள் கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர் ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த தாழை மூது எயில் உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம். | 12 |
|
| உரை |
| | |
| 2661. | முடங்கு முள் இலையார் புதைந்து எதிர் எதிர் மொய்த்து நுடங்கு கைதை போதொடு வளி நூக்க நின்று அசைவ மடங்கு மெய்யராய்க் கையிரும் கேட்க வட்டத்து அடங்கி வாள் பனித்து ஆடம் அரற்றுவார் அனைய. | 13 |
|
| உரை |
| | |
| 2662. | புலவு மீன் உணக்கு ஓசையும் புட்கள் ஓப்பு இசையும் விலை பகர்ந்திடும் அமலையும் மீன் கொள் கம்பலையும் வலை எறிந்திடும் அரவமும் வாங்கும் மா அரவமும் அலை எறிந்திடும் பரவை வாய் அடைப்பன மாதோ. | 14 |
|
| உரை |
| | |
| 2663. | வாட்டு நுண் இடை நுளைச்சியர் வண்டல் அம் பாவைக் கூட்டுகின்ற சோறு அருகு இருந்து உடைந்த பூம் கைதை பூட்டுகின்றன நித்திலம் பொரு கடல் தரங்கம் சூட்டுகின்றன கடிமலர் சூழல் சூழ் ஞாழல். | 15 |
|
| உரை |
| | |
| 2664. | நிறைந்த தெண் கடல் ஆதி நீள் நெறி இடைச் செல்வோர்க்கு அறம் தெரிந்த போல் பொதிந்த சோறு அவிழ்ப்பன தாழை சிறந்த முத்தொடு பசும் பொனும் பவளமும் திரட்டிப் புறம் தெரிந்திடக் கொடுப்பன மலர்ந்த பூம் புன்னை. | 16 |
|
| உரை |
| | |
| 2665. | கொன்று மீன் பகர் பரதவர் குரம்பைகள் தோறும் சென்று தாவி மேல் படர்வன திரை படு பவளம் மன்றல் வார் குழல் நுளைச்சியர் மனையின் மீன் உணக்கும் முன்றில் சீப்பன கடல் இடு முழு மணிக் குப்பை. | 17 |
|
| உரை |
| | |
| 2666. | கூற்றம் போன்ற கண் நுளைச்சியர் குமுத வாய் திறந்து மாற்றம் போக்கினர் பகர் தரும் கயற்கு நேர் மாறாம் தோற்றம் போக்கு அவர் விழித் துணைகள் அக் கயல்மீன் நாற்றம் போக்குவது அவர் குழல் நறு மலர்க் கைதை. | 18 |
|
| உரை |
| | |
| 2667. | அலர்ந்த வெண் திரைக் கருங் கழிக் கிடங்கரின் அரும்பர் குலைந்து அழிந்து தேன் துளும்பிய குமுதமே அல்ல கலந்து அரும் கடல் எறி கருங்கால் பனம் கள்வாய் மலர்ந்து அருந்திய குமுதம் மொய்ப்பன வண்டு. | 19 |
|
| உரை |
| | |
| 2668. | ஆய பட்டினத்து ஒருவன் மேல் ஆற்றிய தவத்தால் தூய வானவர் தம்மினும் தூயனாய்ச் சிறிது தீய தீவினைச் செய்தியால் ஆற்றி திண் திமில் வாணர் மேய சாதியில் பிறந்துளான் மேம்படும் அனையான். | 20 |
|
| உரை |
| | |
| 2669. | செடிய கார் உடல் பரதவர் திண் திமில் நடத்தா நெடிய ஆழியில் படுத்த மீன் திறை கொடு நிறைக்கும் கடிய வாயிலோன் அவர்க்கு எலாம் காவலோன் ஏற்றுக் கொடிய வானவன் அடிக்கு மெய் அன்பு சால் குணத்தோன். | 21 |
|
| உரை |
| | |
| 2670. | மகவு இலாமையல் ஆற்ற நால் மறுமை யோடு இம்மைப் புகல் இலான் என வருந்துவான் ஒரு பகல் போது தகவு சால் பெரும் கிளை யொடும் சலதி மீன் படுப்பான் அகல வார் கலிக்கு ஏகுவான் அதன் கரை ஒருசார். | 22 |
|
| உரை |
| | |
| 2671. | தக்க மேரு மலைமகனோடு அடையில் தவத்தான் மிக்க மீனவன் வேள்வியில் விரும்பிய மகவாய்ப் புக்க நாயகி தன்பதி ஆணையால் புலவு தொக்க மீன் விலை வலைஞன் மேல் தவப் பயன் துரப்ப. | 23 |
|
| உரை |
| | |
| 2672. | இச்சையால் அவன் அன்பினுக்கு இரங்குவாள் போலச் செச்சை வாய் திறந்து அழுது ஒரு திரு மகவு ஆகி நெய்ச்ச பாசிலைப் புன்னை நல் நீழலில் கிடந்தாள் மைச்ச கார் உடல் கொடும் தொழில் வலைஞர் கோன் கண்டான். | 24 |
|
| உரை |
| | |
| 2673. | கார் கொல் நீர்த் திருமாது கொல் கரந்து நீர் உறையும் வார் கொள் பூண் முலை மடந்தை கொல் வனத் துறை வாழ்க்கைத் தார் கொள் பூம் குழல் அணங்கு கொல் தடங்கணும் இமைப்ப ஆர் கொலோ மகவு ஆகி ஈண்டு இருந்தனள் என்னா. | 25 |
|
| உரை |
| | |
| 2674. | பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் கூடல் வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள் துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித் தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான். | 26 |
|
| உரை |
| | |
| 2675. | பிறவி அந்தகன் தெரிந்து கண் பெற்றெனக் கழிந்த வறியன் நீள் நிதி பெற்றென வாங்கினாள் வலைஞர் எறியும் வேலையின் ஆர்த்தனர் கை எறிந்து இரட்டிக் குறிய வாள் நகை வலைச்சியர் குழறினார் குரவை. | 27 |
|
| உரை |
| | |
| 2676. | பிழை இல் கற்பு உடை மனைவியும் பெறாது பெற்று எடுத்த குழவியைத்தடம் கொங்கையும் கண்களும் குளிரத் தழுவி முத்தம் இட்டு உச்சி மோந்து அன்பு உளம் ததும்ப அழகிது ஆகிய மணி விளக்காம் என வளர்ப்பாள். | 28 |
|
| உரை |
| | |
| 2677. | புலவு மீன் விலைப் பசும் பொனால் செய்த பல் பூணும் இலகு ஆரமும் பாசியும் காசி இடை இட்டுக் குலவு கோவையும் சங்கமும் குலத்தினுக்கு இசைய அலகு இலாதபேர் அழகினுக்கு அழகு செய்து அணிந்தாள். | 29 |
|
| உரை |
| | |
| 2678. | தொண்டை வாய் வலைச் சிறுமியர் தொகையொடும் துறை போய் வண்டல் ஆடியும் நித்தில மாமணி கொழித்தும் கண்டன் ஞாழல் சூழ் கானல் அம் கடி மலர் கொய்தும் கொண்டல் ஓதி பின் தாழ்தரக் குரை கடல் குளித்தும். | 30 |
|
| உரை |
| | |
| 2679. | தளர்ந்த பைங்கொடி மருங்குலும் தன் உயிர்த் தலைவன் அளந்த வைகலும் குறை பட அவனிடத்து ஆர்வம் கிளர்ந்த அன்பு ஒண் கொங்கையும் கிளர நாள் சிறிதில் வளர்ந்து வைகினாள் வைகளும் உயிர் எலாம் வளர்ப்பாள். | 31 |
|
| உரை |
| | |
| 2680. | ஆலவாய் உடை நாயகன் ஏவிய வாறே மாலை தாழ் இள மதிச் சடை மகுடமும் கரங்கள் நாலும் ஆகிய வடிவு உடை நந்தியும் சுறவக் கோலம் ஆகி வெண் திரைக் கடல் குளித்து இருந்தான். | 32 |
|
| உரை |
| | |
| 2681. | குன்று எறிந்த வேல் குழகனும் கரி முகக் கோவும் அன்று எறிந்த தந்திரம் எலாம் சிரமிசை அடக்காக் கன்று எறிந்தவன் அறிவரும் கழல் மனத்து அடக்கா நின்று எறிந்த கல் மத்து என உழக்கிடா நிற்கும். | 33 |
|
| உரை |
| | |
| 2682. | கிட்டும் தோணியைப் படகினைக் கிழிபட விசை போய்த் தட்டும் சோங்கினை மேலிடு சரக் கொடும் கவிழ முட்டும் சீறி மேல் வரும் பல சுற வெலாம் முடுக்கி வெட்டும் கோடு கோத்து ஏனைய மீன் எலாம் வீசும். | 34 |
|
| உரை |
| | |
| 2683. | தரங்க வாரி நீர் கலக்கலால் தந்திரம் கொடு மேல் இரங்குவான் புலவோர்க்கு அமுது ஈகையால் எண்ணார் புரங்கண் மூன்றையும் பொடித்தவன் ஆணையால் புனலில் கரங்கள் நான்கையும் கரந்த மீன் மந்தரம் கடுக்கும். | 35 |
|
| உரை |
| | |
| 2684. | தள்ளு நீர்த்திரை போய் நுளைச் சேரிகள் சாய்ப்பத் துள்ளு நீர் குடித்து எழு மழை சூல் இறப் பாயும் முள்ளு நீர் மருப்பு உடைய மீன் மொய் கலம் அந்தத் தெள்ளு நீர்த் துறை நடையற இன்னணம் திரியும். | 36 |
|
| உரை |
| | |
| 2685. | எற்றித்தால் எனத் துறை மகன் யாம் இது பிடிக்கும் பெற்றி யாது எனக் கிளையொடும் பெருவலைப் பாசம் பற்றி ஆழி ஊர் படகு கைத் தெறிந்தனன் படகைச் சுற்றி வாய் கிழித்து எயிற்று இறப் பாய்ந்தது சுறவம். | 37 |
|
| உரை |
| | |
| 2686. | பட உடைப்ப ஓர் தோணி மேல் பாய்ந்து அத் தோணி விடவுறத் தெறித்து எறிந்திட விசைத்து ஒரு சோங்கின் இடை புகுந்து நீள் வலை எறிந்து இங்ஙனம் வெவ்வேறு உடல் புகுந்து உழல் உயிர் எனப் பரதனும் உழல்வான். | 38 |
|
| உரை |
| | |
| 2687. | முன்னர் வீசினால் பின்னுற முளைத்து எழும் முயன்று பின்னர் வீசினால் முன்னுற பெயர்த்து எழும் வலத்தில் உன்னி வீசினால் இடம் பட உருத்து எழும் இடத்தின் மன்னி வீசினால் வலத்து எழும் மகர வேறது தான். | 39 |
|
| உரை |
| | |
| 2688. | எறி வலைப் படு அகம் மலர்ந்து ஈர்ப்பவன் உள்ளம் மறு தலைப் பட வலையினும் வழீஇப் பொருள் ஆசை நெறி மலர்க் குழல் நல்லவர் நினை வென நினைவுற்று அறிபவர்க்கு அறிதாம் பரம் பொருள் என அகலும். | 40 |
|
| உரை |
| | |
| 2689. | ஏவலாளரோடு இன்னவாறு இன்ன மீன் படுத்தற்கு ஆவதாம் தொழில் இயற்றவும் அகப் படாது ஆக யாவரே இது படுப்பவர் என்று இரும் கானல் காவலாளனும் பரதரும் கலங்கஞர் உழந்தார். | 41 |
|
| உரை |
| | |
| 2690. | சங்கு அலம்பு தண் துறை கெழு நாடன் இச் சலதித் துங்க மந்தரம் எனக் கிடந்து அலமரும் சுறவை இங்கு அணைந்து எவன் பிடிப்பவன் அவன் யான் ஈன்ற மங்கை மங்கலக் கிழான் என மனம் வலித்து இருந்தான். | 42 |
|
| உரை |
| | |
| 2691. | நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத் தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ. | 43 |
|
| உரை |
| | |
| 2692. | உயர்ந்த சாதியும் தம்மினும் இழிந்த என்று உன்னிக் கயந்த நெஞ்சுடை வலைக்குலக் கன்னியை வேட்பான் வியந்து கேட்பது எவ்வாறு அவர் வெறுக்குமுன் அவருக்கு இயைந்த மீன் வலை உரு எடுத்து ஏகுதும் என்னா. | 44 |
|
| உரை |
| | |
| 2693. | கருகிருள் முகந்தால் அன்ன கச்சினன் கச்சோடு ஆர்த்த சுரிகையன் தோள்மேல் இட்ட துகிலின் குஞ்சி சூட்டும் முருகு கொப்பளிக்கும் நெய்தல் கண்ணியன் மூத்த வானோர் இருவரும் மறையும் தேடி இளைப்ப ஓர் வலைஞன் ஆனான். | 45 |
|
| உரை |
| | |
| 2694. | முழுது உலகு ஈன்ற சேல் கண் முதல்வியை அருள் இலார் போல் இழி தொழில் வலை மாதாகச் சபித்தவாறு என்னே என்றும் பழி படு சாபம் ஏறார் பரதராய் வரவும் வேண்டிற்று அழகிது நன்று நன்று எம் ஆலவாய் அடிகள் செய்கை. | 46 |
|
| உரை |
| | |
| 2695. | தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதி வாணன் என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப் பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான். | 47 |
|
| உரை |
| | |
| 2696. | கழித்தலைக் கண்டற் காடும் கைதை அம் கானும் நெய்தல் சுழித்தலைக் கிடங்கும் நீத்துச் சுஃறெனும் தோட்டுப் பெண்ணை வழித்தலை சுமந்து வார் கள் வார்ப்ப வாய் அங்காந்து ஆம்பல் குழித்தலை மலர் பூம் கானல் கொடு வலைச் சேரி சேர்ந்தான். | 48 |
|
| உரை |
| | |
| 2697. | பெருந்தகை அமுது அன்னாளைப் பெறாது பெற்று எடுப்பான் நோற்ற அருந்தவ வலைஞர் வேந்தன் அதிசயம் அகத்துள் தோன்ற வரும்தகை உடைய காளை வலை மகன் வரவு நோக்கித் திருந்து அழகு உடைய நம்பி யாரை நீ செப்புக என்றான். | 49 |
|
| உரை |
| | |
| 2698. | சந்த நால் மறைகள் தேறாத் தனி ஒரு வடிவாய்த் தோன்றி வந்த மீன் கொலைஞன் கூறு மதுரையில் வலைஞர்க்கு எல்லாம் தந்தை போல் சிறந்து உளான் ஓர் தனி வலை உழவன் நல்ல மைந்தன் யான் படைத்து காத்துத் துடைக்கவும் வல்லன் ஆவேன். | 50 |
|
| உரை |
| | |
| 2699. | அல்லது வான் மீன் எல்லாம் அகப்பட வலை கொண்டு ஓச்ச வல்லவன் ஆவேன் என்ன மற்று இவன் வலைஞன் கோலம் புல்லிய மகன் கொல் முன்னம் புகன்ற சொல் ஒன்றில் இப்போது சொல்லியது ஒன்று இரண்டும் சோதனை காண்டும் என்னா. | 51 |
|
| உரை |
| | |
| 2700. | தொண்டு உறை மனத்துக் கானல் துறைமுகம் அஃதேல் இந்தத் தண் துறை இடத்து ஓர் வன்மீன் தழல் எனக் கரந்து சீற்றம் கொண்டு உறைகின்ற ஐய குறித்தது பிடித்தியேல் என் வண்டு உறை கோதை மாதை மணம் செய்து தருவேன் என்றான். | 52 |
|
| உரை |
| | |
| 2701. | சிங்க ஏறு அனையான் காலில் செல் நடைப் படகில் பாய்ந்து சங்கு எறி தரங்கம் தட்பத் தடம் கடல் கிழித்துப் போகிக் கிங்கரன் ஆன காளை வரை எனக் கிளைத்த தோள் மேல் தொங்கலில் கிடந்து ஞான்ற தொகு மணி வலையை வாங்கி. | 53 |
|
| உரை |
| | |
| 2702. | செவ்விதின் நோக்கி ஆகம் திருக நின்று எறிந்தான் பக்கம் கௌவிய மணிவில் வீச இசை ஒலி கறாங்கிப் பாயப் பை விரித்து உயிர்த்து நாகம் விழுங்க வாய்ப் பட்ட மீன் போல் வெவ் வினைச் சுறவேறு ஐயன் விடு வலைப் பட்டது அன்றே. | 54 |
|
| உரை |
| | |
| 2703. | மாசு அறு கேளிர் அன்பின் வலைப் படும் வலைஞர் கோன் தாய் வீசிய வலையில் பட்ட மீனினைச் சுருக்கி வாங்கிக் காசு எறி தரங்க முந்நீர்க் கரை இடை இட்டான் கள் வாய் முசு தேன் என்ன ஆர்த்து மொய்த்தன் பரதச் சாதி. | 55 |
|
| உரை |
| | |
| 2704. | கிளையும் நம் கோனும் வீசு வலைஞராய்க் கிளர் தோள் ஆற்றல் விளைவொடு முயன்று பல் நாள் வினை செயப் படாத மீன் இவ் இளையவன் ஒருவன் தானே ஒரு விசை எறிந்தான் ஈத்தான் அளிய நம் குலத்தோர் தெய்வ மகன் இவன் ஆகும் என்றார். | 56 |
|
| உரை |
| | |
| 2705. | கைதை சூழ் துறைவன் ஓகை கை மிகப் பம்பை ஏங்க நொய்து எனும் நுசுப்பில் கள்வாய் நுளைச்சியர் குரவை தூங்கப் பைதழை பகுவாய்க் கச்சைப் பரதவன் கலங்கன் ஞாழல் செய்த பூம் கோதை மாதைத் திருமணம் புணர்த்தினானே. | 57 |
|
| உரை |
| | |
| 2706. | அந்நிலை வதுவைக் கோலம் ஆயின மருகனாரும் மின் நிலை வேல் கணாளும் விண் இடை விடை மேல் கொண்டு தன் நிலை வடிவாய்த் தோன்றத் தடம் கரை மீனம் தானும் நல்நிலை வடிவே போன்று நந்தியாய் முந்தித் தோன்ற. | 58 |
|
| உரை |
| | |
| 2707. | கொற்ற வெள் விடை மேல் காட்சி கொடுத்தவர் கருணை நாட்டம் பெற்றலின் மேலைச் சார்பால் பிணித்த இப் பிறவி யாக்கைச் சிற்றறிவு ஒழிந்து முந்நீர்ச் சேர்ப்பன் நல் அறிவு தோன்றப் பொன் தனு மேரு வீரன் பூம் கழல் அடிக்கீழ்த் தாழ்ந்தான். | 59 |
|
| உரை |
| | |
| 2708. | இரக்கம் இல் இழிந்த யாக்கை எடுத்து உழல் ஏழை ஏனைப் புரக்க இன்று என்போல் வந்த புண்ணிய வடிவம் போற்றி அறக்கு எறி பவளச் செவ்வாய் அணங்கினை மணந்து என் பாசம் கரக்க வெள் விடை மேல் நின்ற கருணையே போற்றி என்றான். | 60 |
|
| உரை |
| | |
| 2709. | அகவிலான் பரவி நின்ற அன்பனை நோக்கிப் பல் நாள் மகவு இலா வருத்தம் நோக்கி உமை நாம் மகளாத் தந்து தகவினான் மணந்தேம் நீ இத் தரணியில் தனதன் என்ன நகவிலாப் போகம் மூழ்கி நம் உலகு அடைவாய் என்ன. | 61 |
|
| உரை |
| | |
| 2710. | பெண்ணினை வதுவைக்கு ஈந்த பெருந்துறைச் சேர்ப்பற்கு அன்று தண் அளி சுரந்து நல்கித் தருமமால் விடைமேல் தோன்றி விண் இடை நின்றான் சென்றான் வேத்திரப் படையா னோடும் உள் நிறை அன்பரோடு உத்தர கோச மங்கை. | 62 |
|
| உரை |
| | |
| 2711. | அங்கு இருந்த அநாதி மூர்த்தி ஆதி நால் மறைகள் ஏத்தும் கொங்கு இரும் கமலச் செவ்விக் குரை கழல் வணங்கிக் கேட்பப் பங்கு இருந்து அவட்கு வேதப் பயன் எலாம் திரட்டி முந்நீர்ப் பொங்கு இரும் சுதை போல் அட்டிப் புகட்டினான் செவிகள் ஆர. | 63 |
|
| உரை |
| | |
| 2712. | அவ்வேலை அன்புடையார் அறு பதினாயிரவர் அவர்க்கும் அளித்துப் பாச வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி மைவ் வேலை அனைய விழி அம் கயல் கண் நங்கையொடு மதுரை சார்ந்தான் இவ் வேலை நிலம் புரக்க முடி கவித்துப் பாண்டியன் என்று இருந்த மூர்த்தி. |
|
|
Comments
Post a Comment