பாண்டிய நாட்டை ஆண்ட வலையர்கள்
| பாண்டிய நாட்டை ஆண்ட வலையர்கள் |
பண்டைய காலத்தில் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த மக்கள் தான் வணிகத்தில் மிக சிறந்தவர்களாக இருந்தார்கள். இதுக்கு காரணம் அவர்கள் அருகே இருக்கும் கடல் ஆகும். கப்பலில் பல நாட்டுக்கு சென்று பல பொருட்களை வணிகம் செய்தார்கள் நம் முன்னோர்கள். இதன் காரணமாகவே அவர்கள் மிகவும் செழிப்பாக இருந்தார்கள். 13 நூற்றாண்டில் பாரதம் வந்த மார்கோ போலோ எனும் இத்தாலிய நாட்டை சேர்ந்த ஒருவர் அவரின்
நாட்குறிப்பிள் "உலகத்தில் மிகவும் பணக்கார தேசம் பாண்டிய தேசம்" என்று குறிப்பிட்டு உள்ளார். இதுக்கு முக்கிய காரணம் பாண்டியர்கள் செய்த வணிகம் ஆகும்.
அகநானூறு பாடலில் " அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை " இப்பாடல் பாண்டியனின் கொற்கைத் துறைமுகத்தில் பழையர் பழங்குடி மக்கள் நிறைநிலா நாளின் அந்தி வேளையில் தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், சங்குகளையும் போட்டு கடல் தெய்வத்தை வழிபட்டனர் என்று கூறுகிறது. இவர்களே கடல் வழியாக பல நாடு சென்று, வணிகம் செய்து பாண்டிய நாட்டை வளமாக்கினார்கள்.
இந்த புகழ்பெற்ற பழையர் குடியில் தோன்றிய அரசர்கள் தான் மோகூர் மன்னன் என்று அழைக்கப்பட்ட பழையன் மாறன். இவர் பாண்டிய மன்னரின் படை தலைவன் ஆவார். பழையன் மாறன் மற்றும் அவரின் தம்பி இளம் பழையன் மாறன் தான் பாண்டிய அரசருக்கு அடுத்த நிலையில் இருந்தன. இவர்கள் இருவரும் பாண்டியர் குடியே சார்ந்தவர்கள். ஆம் பாண்டியரும் பழையர் குடி தான்.
வலையர் எனும் சொல் தான் பலையர் -> பழையர் என்று மருவி உள்ளது.
வ என்கிற சொல் ப என்று மாறுவது இயல்பு ஆகும்.
உதரணமாக வாங்கலதேசம் -> பங்கலாதேஷ்
வேடர் -> பேடர்
வரத ராஜன் -> பரத ராஜன்
மேலும் தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ்நாட்டுத் தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநரும் பழையர் என்பவர்கள் வலையர் என்றே அவரின் "தமிழர் வரலாறு" புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
அதே போல் வலையர்கள் இன்றும் தூத்துக்குடியில் இருந்து நாகைபட்டினம் வரைக்கும் கடல் மீனவர்களாக இருப்பது பழையர் வலையர் என்பதை உறுதி செய்கிறது.
||நவீன்குமார் அம்பலக்கார பிள்ளை அவர்கள் முகநூல் பக்கத்திலிருந்து பகிரப்பட்டது||
Comments
Post a Comment