திருச்சி குழுமணி தெய்வத்திரு "மிராசுதாரர்.பரமசிவம் முத்துராஜா"


திருச்சி குழுமணி தெய்வத்திரு "மிராசுதாரர்.பரமசிவம் முத்துராஜா"

திருச்சி மாவட்டம் குழுமணி கிராமத்தை சேர்ந்த பெரும் நிலக்கிழார் தெய்வத்திரு "பரமசிவம் முத்துராஜா" அவர்கள் மிகப்பெரிய சிவபக்தர் ஆவார். அய்யா அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயிலின் மீது அதிக பக்தியும் பற்றும் உடையவர் ஆவார். முன்பு அய்யா பரமசிவம் முத்துராஜா அவர்கள் தனக்கு குழந்தைவரம் வேண்டி மனம் உருகி இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் வேண்டியிருக்கின்றார். அவர் வேண்டியது போலவே அவருக்கு சில காலங்களிலே ஓர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சேதுபதி சீமையில் அமைந்துள்ள இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் சென்று அவரது வேண்டுதல் நிறைவேறியதனால் அவரது முதல் ஆண் குழந்தைக்கு "சேதுபதி" என்ரே அய்யா பரமசிவ முத்துராஜா அவர்கள் பெயர் வைத்துள்ளார். மற்றும்  இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலுக்கு ஏதாவது பெரிய அளவில் ஓர் திருப்பணி செய்ய அய்யா பரமசிவ முத்துராஜா அவர்கள் எண்ணினார் அவர் அவரது விருப்பத்தை முதலில் கோவிலில் உள்ள தனக்கு தெரிந்த பழக்கப்பட்ட பட்டர்களிடம் இதை பற்றி கூறியுள்ளார்.

அந்த பட்டர்கள் இராமேஷ்வரம் கோவிலை பரம்பரையாக நிர்வாகித்து வரும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் அவர்களிடம் திருச்சியை சேர்ந்த நிலக்கிழார் ஒருவர் கோவிலுக்கு திருப்பணி செய்ய விரும்புகின்றார் என்று மன்னரிடம் கூறியுள்ளனர். மன்னரும் பரமசிவ முத்துராஜா அவர்களை பற்றியும் அவர்களின் பின்பலம் பற்றியும் அனைத்தையும்(சாதி உட்பட) விசாரித்து தெரிந்து கொண்டு இறுதியில் பரமசிவ முத்துராஜா அவர்களுக்கு "மாசி மாதம் மகா சிவராத்திரி விழாவின் முதல் நாள் அன்றும் மற்றும் ஆடி மாதம் பதினேழு நாள் திருவிழாவின் முதல் நாள் அன்றும்" முதல் மண்டாகப்படி உரிமையை சேதுபதி மன்னர் அவர்கள் பரமசிவ முத்துராஜா அவர்களுக்கு வழங்கி உள்ளார்.

அய்யா பரமசிவ முத்துராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மண்டகப்படி உரிமைக்காவே இராமேஷ்வரம் கோவில் அருகே ஓர் மண்டகப்படி கட்டிடமும் ஓர் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். அன்றில் இருந்து இன்று வரை "மாசி மாதம் மகா சிவராத்திரி விழாவின் முதல் நாள் அன்றும் மற்றும் ஆடி மாதம் பதினேழு நாள் திருவிழாவின் முதல் நாள் அன்றும்" ஆகிய விழாக்களில் இராமேஷ்வரம் "பகவான் இராமநாதர் சுவாமிகள்" அய்யா பரமசிவ முத்துராஜா அவர்களால் கட்டப்பட்ட "குழுமணி பரமசிவ முத்துராஜா" மண்டகப்படிக்கு முதல் தரிசனம் கொடுத்து வருகிறார் மற்றும் நான் மேற்கூறிய விழாக்களின் போது "குழுமணி பரமசிவ முத்துராஜா" மண்டகப்படியில் பரமசிவ முத்துராஜா அவர்களுக்கு பரிவட்டம் முதல் அனைத்து மரியாதைகளும் கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டது இன்றும் செய்யப்படுகின்றது.

"சேதுபதி மன்னர் மற்றும் பரமசிவம் முத்துராஜா அவர்களின் நட்பு"

சேதுபதி மன்னர் 1975-ஆம் ஆண்டு இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த இருந்தார் அதன் காரணமாக தமிழகம் முழுவதும் சேதுபதி மன்னர் சுற்று பயணம் செய்தார் அவ்வாறு சேதுபதி மன்னர் திருச்சி வந்த போது குழுமணி கிராமத்தில் "பரமசிவ முத்துராஜா" அவர்களின் வீட்டிற்க்கே நேரடியாக மன்னர் சென்றிருக்கின்றார்.

அதன் தொடர்சியாக கும்பாபிஷேகத்திற்க்கு தேவையான அனைத்து வாழை மரங்களையுமே பரமசிவ முத்துராஜா அவர்கள் தனது சொந்த தோட்டத்தில் இருந்து கோவிலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலுக்குள் 1975-ஆம் ஆண்டு நடைபெற்ற மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மிக முக்கியஸ்தர்கள் தொடர்பாக கல்வெட்டு ஒன்று உள்ளது அதில் 25-ஆவது பெயராக திருச்சி குழுமணி "மிராசுதாரர்.பரமசிவம் முத்துராஜா" என்று அக்கல்வெட்டில் அய்யா பெயர் இடம் பெற்றுள்ளது.

(குறிப்பு : தெய்வத்திரு.பரமசிவம் முத்துராஜா அவர்கள் திருச்சி குழுமணியில் இருந்தாலும் அய்யா அவர்களின் பூர்வீகம் குழுமணி அருகே உள்ள எட்டரை கிராமம் ஆகும். அய்யா அவர்களின் மறைவிற்க்கு பிறகு இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோவில் விழாவின் போது அய்யாவின் மூத்த மகன் ஆகிய சேதுபதி முத்துராஜா அவர்கள் மண்டகப்படி நடத்தியுள்ளார் பின்னாட்களில் சேதுபதி முத்துராஜா அவர்களும் உடல் நலக் கோளாறால் இறைவனடி சேர்ந்து விட்டார் ஆக தற்போது பரமசிவ முத்துராஜா அவர்களின் இளையமகன் "வாசுதேவன் முத்துராஜா" அவர்கள் தொடர்சியாக மண்டகப்படி விழாவை நடத்தி வருகின்றார்.

பரமசிவ முத்துராஜா அய்யா அவர்களுக்கு இராமேஷ்வரம் கோவிலை தவிர்த்து பல சிவாலயங்களிலும் மண்டகப்படி உள்ளது அதில் வைதீஸ்வரன் கோவிலும் ஒன்று)

படஉதவி : அரியலூர் விஷ்வா சேர்வை

பகிர்வு : மதுரை மகேஷ் முத்தரையர்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்