மூக்கறுப்பு போரும் முத்தரையர் சமூகமும்
"மூக்கறுப்பு போரும் முத்தரையர் சமூகமும்"
வரலாற்றின் மிகக் கொடுமையான போர் முறைகளில் ஒன்றுதான் மூக்கறுப்பு போர். எதிரி நாட்டினரைக் கொல்லாமல், அவர்களின் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான வடுவை ஏற்படுத்தி, முகத்தை சிதைப்பதுதான் அந்தப் போர் முறை. இவ்வாறான கொடூரமான போரை ஒரு சமயம் தமிழ்நாடு சந்தித்தது அதிலும் மதுரை சந்தித்தது, இந்த போரில் பெரிதும் பாதிக்கப்பட்டது இன்றைய தென் பகுதி மற்றும் கொங்கு பகுதி மக்களே ஆகும்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களிலே பெரும் புகழ் கொண்டவர் திருமலை நாயக்கர் ஆவார். இந்த திருமலை நாயக்கர் காலக்கட்டமான 16-ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசரான கந்திருவ நரச ராஜா என்பவர் தனது தளபதி கெம்பையா தலைமையில் பெரும் படை ஒன்றை திரட்டி மதுரையின் மீது போர் தொடுத்தான். இந்த பெரும் படையானது மதுரை நோக்கி செல்லும் போது திருமலை நாயக்கர் ஆட்சி எல்லையான சேலம் பகுதிக்குள் நுழைந்த உடன் கண்ணில் பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரது மூக்குகளையும் வெட்டி மைசூர் மன்னருக்கு பரிசாக கொடுக்க சாக்கு பையில் குவித்து சேகரித்து பின்பு அதை மைசூருக்கு அனுப்பினான். தொடர்ச்சியாக பல ஊர்களையும் தாக்கி, திண்டுக்கல்லை அடைந்து மதுரையை நோக்கி முன்னேறியது கன்னடர் படை.
திடீர் தாக்குதலால் நிலைகுலைந்துபோன திருமலை நாயக்கர் கன்னடர் படையை எதிர்கொள்ள சேதுபதி படை உட்பட பெரும் படை ஒன்றை திரட்டினார். பின்னர் அந்த பெரும் படை கொண்டு திண்டுக்கல் அருகே நடைப்பெற்ற போரில் கன்னடர் படையை வெற்றியும் கண்டார். இந்த போரில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் போர் வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்பு மைசூரு வரை கன்னடர் படையை துரத்தி சென்ற திருமலை நாயக்கரின் கூட்டு படை மைசூர் அரசர் உட்பட அனைவரது மூக்கையும் அறுத்து பழி தீர்த்துக் கொண்டனர்.
மேற்குறிப்பிட்ட மூக்கறுப்பு போர் பற்றியும், அந்த பெரும் கூட்டு படை பற்றியும் குறிப்பிடும் ஒரே ஒரு கல்வெட்டு தான் தமிழ்நாட்டில் உள்ளது அந்த கல்வெட்டு சேலம் மாவட்டம் பேளூர் என்ற இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்துள்ளது.
இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று தகவல் என்பது மூக்கறுப்பு போர் சமயத்தில் திருமலைநாயக்கரின் ஆணைக்குப்படி தஞ்சாவூர் அச்சுதப்ப நாயக்கர் மற்ற பாளையகாரர்களுடன் இணைந்து திருச்சிராப்பள்ளி சென்று திருச்சிராப்பள்ளி முத்திரையர் படையையும் ஒருங்கிணைத்து பின்பு மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய கூட்டுப்படை சேலம் சின்னபூபாலராயரின் ராஜியத்துக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த கல்வெட்டு செய்தி நமக்கு உணர்த்தும் வரலாற்று தகவல் என்னவென்றால் அது மூக்கறுப்பு போர் சமயத்தில் ஏற்படுத்தப்பட்ட கூட்டுப்படையில் திருச்சிராப்பள்ளி முத்திரையர் படையும் பெரும் பங்கு பெற்றது பின்பு மைசூரு சென்று கன்னடர் மூக்கை அறுத்து என்பதாகும்.
(குறிப்பு : திருச்சிராப்பள்ளி முத்திரையர் படை மட்டும் மூக்கறுப்பு போரில் பங்கு பெறவில்லை தவிர மதுரையை சுற்றி இருந்த நான்கு வலையர் படையும் பங்கு பெற்று உள்ளது அந்த வரலாற்று தகவல்களை எனது பாண்டிய நாட்டு முத்தரையர் சமுதாய வாழ்வியல் வரலாறு வரலாற்று புத்தகம் வெளியிட்ட உடன் வெளிப்படுத்துகின்றேன்.
கட்டுரையாளர் : A.K. மகேஷ் முத்தரையர்.)
கல்வெட்டு படி
முதல் பக்கம்
1. நரலோக க
2. .ண்டன்
3. .ன் பூபால சின்ய ராமன்
4. சொக்கநாத சுவாமி
5. மீனாட்சியம்மை
6. திருத்தேர் வடச்சங்
7. கல் பண்ணிண கெ
8. ங்கையாடி திருவ
9.நந்தல் பண்டார
10.த்துக்கு நரலோ
11. க கண்ட வங்
12. கி நாராயண சேர
13.சோழ பாண்டி
14.ய வல்லாளரா
15. ய மனோபயங்கரன்
16. மதவாராண
17.யத் தாபனாசரியன்
18. கங்குவாடன் ஆ
19. தி தென் - - டினார்
20. கண்டன் செவு:
21. டு த்தவம் மிசாதே
22. சந்திறோதயன்
23. சேலம் சின்ன பூபா
24. ல ராயர் குமாரர் ல
25. ஷ்ம[ண] பூபாலராயர்
26. தாபித்த மடம் சிந்ந
27.ய[ம] [ச]முத்திரமா ந[க]
28. அக்கிராமும் க
29. லியாணி கிரி தொ
கல்வெட்டின் இரண்டாம் பக்கம்
1. ட ட ஹ
2. மபூ பங்
3. ற் குநி
4. பூய கல சு
5. க்கிற வா
6.ரமும்
7. தி தி கை
8. யும் அசு
9. பதியும் மா
10. யெந்தி
11. ரமும் தி
12. வல வா
13. கா .ண
14. மும் பெற்
15. றனாள் ப
16. .ண்டார
17. த்தை நிறு
18. த்தி நதும்
19. திரை விசு
20.வனாத வீ
21.ரப்பனாயக்
22.கர் திரும
23.லை .னாயத்
24. தாற்கும் த
25. ஞ்சாவூர் அ
26. டப்ப செவ்
27. வய அச்சுத
28.ற்கு .னாத
29. .னாயக்கற்
30. கு
கல்வெட்டின் மூன்றாம் பக்கம்
1. த உ - - - தமா கற
2. ம தேவ ராயரும் வந்து
3. திருச்சிராப்பள்ளி முத்
4.திரையர் இ பொது தி
5. ரு மலை .னாயக்கர் இநி ந
6. மக்கு சகாயமார் எண்
7.ணு உசாவ மதிரை
8.தஞ்சாவூர் செஞ்சி
9.சேலம் .னாலாம் வீ
10. டு சிந்ந பூபாலன் யா
11.தவராய ராச்சியத் திரு
12. பனாசாரியன் வந்த
13. ர லாம் என்று உபச
14.ரா ஓலைவிடு கூன
15. ற யனுப்ப இந்த வே
16. ளை உதவ வேணு
17. ம் எண்ணு வேங்
18. கடப்ப .னா[ய]க்கர் திருச்சி
19. ராப்பள்ளி வந்து ரா
20.யர் பாளையம் குந்தி
21 மீசையுடநெ மூக்கறு
22.ப்பிச்சார் அது கண்டு
23. ராய திருவதியே பொ
24. .னார் திருமலை .னாயக்
25. கரை அனுப்பிக் கொ
26. ள்ளிகிற பொது சங்க
27. மும் பூதாநமும் அ
28. ப்படி{யே] அன்னதா நமு
29. ம் வெகுகாலமாக
30. நடந்து வரும் அந்த வீ
31. [ர]றுத்து க - - - போனோ
32. ம் எண்ணு வருகிற
33. பொது பண்டாரத்தை
34. கூட்டி வந்து தம
35. யனார் [ச]மூகத்திலும்
36. தம்பியார் ந கிருஷ்ண
37. ப்பனாயக்கர் முன் பரி
38. யறியப் பன்ண சங்
39.கிலி முதிச்சு மடமு
40. ம் [ஸ்]தாபிச்சோம் இ
41. ந்த மடத்துக்கும்
கல்வெட்டின் நான்காம் பக்கம்
1. [ஒற்றைகொம்பு மட்டும்] ட
2. ட து
3. க கு
4. ம அ
5. ந தம்
6. ப .ண்
7. ணிந பெ
8.[ஓற்றைகால் மட்டும்] கங்கை
9. யிலு
10. ம் காசியி
11. லும் பஞ்
12. ச மகா பா
13.தகமும் த
14. ங்கள் மா
15.தா பிதாவை
16.யும் கொ
17. .ண்ண
18. பாபத்தி
19.லெ போ
20.வான் இ
21. துக்கு ச்ச
22. காயம் ந
23. மக்கும் ந
24. க நா பட்
25. டுக
26. பிருது ழு
27. க்க நூரு பொ
28.ம்மய
29. .னாயக்கர்
30. குமாரன்
31. தாதா நா
32. யக்கர் சதா
33. சொவை.
Comments
Post a Comment