| வலையர் குடியில் பாண்டிய மன்னர் பழையன் மாறன் |


| வலையர் குடியில் பாண்டிய மன்னர் பழையன் மாறன் |

பாண்டிய நாட்டில் பண்டைய காலம் தொட்டு வாழ்ந்து கொண்டு வரும் என் வலையர் இனமே. தென் மாவட்டத்தின் அடையாளமே. வலையர் புகழ் பெரும் அளவில் உள்ளது. அழகர் கோவில், பாரி வள்ளல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாண்டி  முனீசுவரர் கோவில் , ஏழூர் மூப்பர் நாட்டு திருவிழா என பல சொல்லலாம்.

பாண்டிய நாட்டில் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டு வரும் என் வலையர் மக்கள் பாண்டியர் மரபே சார்ந்தவர்கள் என்கிற உண்மையே மறந்து விட்டார்கள். சங்க காலத்தில் கொற்கை மற்றும் மதுரை பாண்டியர்களின் தலைநகரமாக இருந்தது என்பதை நாம் அறிவோம். அதே கொற்கை மற்றும் மதுரையில் நம் வலையர் இனம் சங்க காலம் தொட்டு இன்று வரைக்கும் வாழ்ந்து கொண்டு வருகிறோம். 

சங்க காலத்தில் பல்வேறு பெயரில் நாம் அழைக்கப்பட்டு வந்தோம்.  வேட்டுவர், பழையர், வலையர்(வ,ஞ). 
சங்க காலத்தில் வாழ்ந்த நம் புகழ் பெற்ற மன்னர் தான் பழையன் மாறன் என்பவர். இவர் பாண்டிய மரபே சார்ந்த மன்னர் ஆவார். அதாவது பாண்டியர் குடியே சார்ந்தவர். இவரின் குடி மற்றும் காவல்மரம் வேப்பமரம் ஆகும். இதை நாம் சங்க இலக்கிய பாடலில் காணலாம். அதே போல் தொல்காப்பியம்  பாண்டியர்களின் குடி பூ வேம்பு என்று சொல்கிறது. இதிலிருந்து பழையன் மாறன் மற்றும் பாண்டியர்கள் ஒரே குடி என்று தெரிய வருகிறது.

14-ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் வாழ்ந்த "நச்சினார்க்கினியர்" உரையாசிரியர்களுள் " பழையர் என்பவர்கள் வலையரே" என்று சொல்கிறார்.
ஆக பாண்டியரும் பாண்டியர் மரபில் வந்து பழையன் மாறன் மன்னரும் வலையர் என்கிற முடிவுக்கு நாம் வரலாம்.

நன்றி

நவீன்குமார் அம்பலக்கார பிள்ளை
முத்தரையர் வரலாறு தேடல்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER