வலையுழவு, வலையால் கடலில் உழுது உண்ணும் வலையர்கள்
அருந்தவம் செய்து பார்வதியை மகளாகப் பெற்ற வலைஞர் மன்னன், வலையனாக வந்த சிவபெருமானை பார்த்து கேட்கிறார், திருந்திய அழகினையுடைய நம்பி, நீ யார் செப்புக என்று.
அதற்க்கு வலையனான சிவபெருமான் சொல்கிறார், மதுரையில் வலையர்க்கெல்லாம் தந்தையைப்போல் சிறந்துள்ள ஓர் தனிவலை உழவனது நல்ல மைந்தன் என்கிறார்.
இதுல பாருங்க மீனவர்களை வலையுழவர்கள் அதாவது வலையால் கடலில் உழுது உண்பவர்கள் என்று சொல்கிறார் பரஞ்சோதி முனிவர், அதுவும் இல்லாமல் மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதராகிய தன்னையே வலையர்க்கெல்லாம் தந்தை என்கிறார் சிவபெருமான்.
தமிழை பரஞ்சோதி முனிவரும், வலையரை சிவபெருமானும் வாழ்த்துங்கால் பேரின்பம் என்னையும் ஆட்கொள்கிறது 🙏
"யான்பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்"
||சித்தன் சிவமாரி||
Comments
Post a Comment