முத்தரையர்கள் கண்டெடுத்த ஸ்ரீ செகுட்டைய்யனார்


முத்தரையர்கள் கண்டெடுத்த அய்யனார்.

சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

சிங்கம்புணரி அருகில்
எஸ் கோவில்பட்டி உள்ள ஸ்ரீசெகுட்டைய்யனார் கோவில் வரலாறு...

முன்பு ஒரு காலத்தில் வேட்டையாடுவதற்தா நம் ஆட்கள் குழுவாக சென்று வேட்டையாடுவதுமாக இருந்தனர் அன்றும் குழுவாக வேட்டையாட சென்ற வலையர்கள் சிறு சிறு குழுவாக பிரிந்து வேட்டையாட காட்டுக்குள் நுழைந்தனர் 

அவர்களின் குழுவில் உள்ள ஒருவர் மட்டும் தனியாக கிழங்கு தோண்டும் போது ஓங்கி பாறையில் வெட்டியபோது தன் அந்த இடம் ரெத்த வெள்ளமாகவும் தன் கண்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடியத் தொடங்கியவுடன் சிறிது நேரத்தில் மயக்கம் வந்து அப்படியே நிலை தடுமாறி கீழே விழுந்தார் தன் முதலாளி கிழே விழுந்தை பார்த்த அவரின் செல்ல நாய் ரத்தம் வந்த இடத்தை பார்த்து பயந்து போன நாய் கத்திக்கொண்டே தன் குழு ஆட்களை தேடி சென்றது கத்திக்கொண்டே வந்த நாயை பின்தொடர்ந்து வந்த அவர்கள் இரத்த பாய்ந்து வந்தபடியே இறந்து கிடந்தவரை பார்த்து அதிந்து போய் இரத்தம் வரும் இடத்தை பார்த்து அதிர்ந்து போனார்கள் வெளியே வந்த செவிட்டய்யனாரை பார்த்து வெலவெலத்து போய் அய்யா இவர் தெரியாமல் செய்துவிட்டார் அவரை மன்னித்து விடுங்கள் என்று அனைவரும் கதற அதற்கு மனம் இறங்கிய அய்யனார் அவருக்கு திரும்பவும் உயிர் தந்தது... 

அன்றுமுதல் அய்யனாரை குலதெய்வமாக வழிபடும் வலையர்கள் இன்று வரை அவர் கேட்டுக்கொண்டதற்கா யாரும் மாடி வீடு கட்டுவதில்லை...
வருடம் தோறும் சிறப்பான முறையில் புரவிஎடுத்து சீரும் சிறப்புமாக விழா எடுத்து வழிபடுகின்றனர்...
புரவி எடுத்துவரும் ஆரம்ப இடம் என்றால் அது சூரைக்குடியாக இருக்காலாம் கோவில் இருப்பது எஸ்.கோவில்பட்டிதான்
கோவில் நிர்வாகம் முதல் கோவில் பூசாரி வரை வலையர்களே. கோவில் அமைந்துள்ள எஸ்.கோவில்பட்டி  முழுவதுமே முத்தரையர்‌ சமூகமான வலையர் மட்டுமே வசிக்கின்றனர்...

இன்று புரவி எடுத்துவரும் சூரைக்குடியில் மட்டுமே அனைத்து சமூக மக்களும் உண்டு அங்கு முத்தரையர்கள் சொற்ப எண்ணிக்கையே..
சூரைக்குடி பஞ்சாயத்தை பொறுத்தவரை பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்கும் முக்கிய இடத்தில் இந்த எஸ்.கோவில்பட்டி உள்ளது..
இந்த வருடம் தேர்தலில் வெற்றி பெற்ற நம் சமூகக்தவரே பஞ்சாயத்து தலைவர்...

குறிப்பு : காது வளர்ப்பது நம்ம சமூகம் மட்டுமே..

இந்த சிறப்பு வாய்ந்த கோவில் வரலாறுகளை தெரிந்துகொள்வது மட்டுமல்லாது வருடத்தில் ஒரு முறையாவது நேரில் சென்று பார்த்து வழிப்பட்டு வாருங்கள்...

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER