மூன்று தரை பல்லவ முத்தரையர்கள்

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்
______________________________
பல்லவ முத்தரையர்கள்:
-------------------------------------------
1. பரதன் வியாளகஜ மல்லப் பல்லவரையன்:
முதலாம் இராராஜனின் கி.பி. 987 ல் உடையார்குடி கல்வெட்டில்
இவனைப்பற்றிய செய்திகள் வந்துள்ளன. இதனை ஆவணம் இதழ் கல்: 1994ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. பரதன் வியாள கஜ மல்லப் பல்லவரையனின் தந்தை பல்லவ முத்தரையன் ஆவான். இந்தப் பல்லவ முத்தரையன் வெண்ணையூர் நாட்டவன். இவன் அரசியல் செல்வாக்குப் பெற்ற தலைவனாக இருந்தவன்.
இவனது அபிமானம் பெற்ற ஆதித்த கரிகால் சோழ இளவல்
ஒருவனைச் சில அதிகாரிகள் கூடிக் கொன்று விட்டனர். இந்த இவளலின்
ஆன்மா சாந்தியடைய வேண்டி 2 3/4 வேலியும், 1 மா நிலத்தையும்
விலைக்கு வாங்கியுள்ளான். இந்த நிலத்தை திரு நந்தீஸ்வரத்து பட்டாரகர்
கோயில் முன்பு கட்டப்பட்டுள்ள மூவாயிரத்து நூற்றுவனான
நிலையம்பலத்து தண்ணீராட்டும் அந்தனரின் பராமரிப்பிற்காக
கொடையாக அளித்துள்ளான். இதன் மூலம் இவனுக்கும், கரிகால்
சோழனுக்கும் குல அடிப்படையில் பிணைப்பு இருந்துள்ளதை நன்கு
அறியலாம்.
2. பல்லவ
முத்தரையன்:
-----------------------------------
தென் ஆற்காடு மாவட்டம் திருநாவலூர் மேலூரில் முதலாம்
இராஜராஜனின் 18ஆவது ஆட்சியாண்டில் கி.பி. 1003ல் உள்ள கல்வெட்டு
பல்லவ முத்தரையன் பற்றி விளக்குகிறது. இக்கல்வெட்டு தொகுதி 11 பக்கம்
47. க.எண். 1000ல் காணப்படுகிறது.
திருத் தொண்டீஸ்வர முடைய மகாதேவர்க்கு, திருநாவலூர்
பெரும் பாக்கம் மற்றும், பல ஊர்களில் வரி வசூலித்தும் நெல்லும்
பொன்னும் 700 கல நெல்லும், காசு நிறை கல்லால் 30 கழஞ்சு விதித்து
அதிகாரியாக "பல்லவ முத்தரையர்” இருந்து வசூலித்துள்ளார். இவன் இ
இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
3. காடுபட்டி முத்தரையர்,
----------------------------------
காடுபட்டி முத்தரையர் மற்றும் அவரது மகன் அரிகண்ட
பெருமானார் பற்றிய செய்திகளை தொகுதி எண் 12 ல் க.எண்.44ல்
குறிப்பிட்டுள்ளது. இக் கல்வெட்டு, விஜய நிரூபதுங்க விக்கிரம வாமனின்
24ஆவது ஆட்சியாண்மல் (கி.பி. 870)காஞ்சிபுரம் மாவட்டம் மேற்படி வட்டம்
பலில் உள்ளது. இவர் பல தானம், தருமங்களைச் செய்துள்ளார்.
இவரின் மகன் அரிகண்ட பெருமானார் மிகுந்த தெய்வ பக்தி
கொண்டவர். இங்கே குடி கொண்டு அருள்பாலித்து வரும் தெய்வத்திற்கு
ஒன்றை வைத்துள்ளார். இந்த விளக்குத் தொடர்ந்து எரிய வைக்க,
எந்த நேரமும் அணையாது எரிந்து கொண்டிருக்கக் கூடிய நந்தா விளக்கு
கோவிலைப் பராமரித்து வந்த சீயபுரத்துச் சபையோரிடம் 30 கழஞ்சி
பொன்னும் மேஞ்சாடியம் அயன் படியால் நாற்கழஞ்சறையும், எண்ணெய்
130 நாழியும் கொடையாக அளித்துள்ளான். இந்தச் செய்தியை
கல்வெட்டுத் தொகுதி 12ல் க.எண்.75ல் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.
முன்னோர்களின் நினைவாக இக்கோயிலில் சந்திவிளக்கு ஒன்று வைக்க
வேண்டிக் கொண்டுள்ளனர். தெய்வமாகிப் போன தங்களின் மூதாதையர்
இத்தெய்வத்துடன் இணைந்து இருப்பதாகவும், அவர்கள் எப்போதும் ஒளி
காடுப்பட்டி முத்தரையன் கேட்டுக் கொண்டதன்படி, பிள்ளைப்
பாளையத்தில் திருமேற்றளிக் கோவில் முகப்பில் தளக்கல்லில்
குறிப்பிட்டுள்ளபடி இறையான் சேரி பழந் திருமேற்றளியும், மடமும் நாலு
பாட்டி நிலமும் கொடையளித்துள்ளார்.
4. அருளாளன்:
----------------------------
அருளாளனின் தந்தை நூற்றெண்ம முத்தரையன்" ஆவான்.
இவர்களைப் பற்றி. கல்வெட்டுத் தொகுதி 2. க.எண். 29ல் காஞ்சிபுரம்
மாவட்டம் சைதாப் பேட்டை வட்டம், திருச்சூலம் கோவிலில் இரண்டாம்
ராஜராஜனின் 4ஆம் ஆட்சியாண்டில் கல்வெட்டாகக் காணப்படுகிறது.
கலிங்கத்தரையன் என்பவனும் முத்தரையர் குலத்தவனே
சிறவான். இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் நெருக்கம்
இருந்துள்ளது. இவர்கள் காடிபள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
இருவரின் மகன்களான, அருளாளனும் நாயகனும் சேர்ந்து தனது முன்னோர்களின் நினைவாக இக்கோயிலில் சாந்தி விளக்கு ஒன்று வைக்க வேண்டி கொண்டுள்ளனர். தெய்வம் ஆகிப்போன தங்களின் மூதாதையர் இத்தெய்வத்துடன் இணைந்து இருப்பதாகவும், அவர்கள் எப்போதும் தீப ஒளியில் வெள்ளத்தில் இருக்க வேண்டியள்ளனர். சந்தி விளக்கு
ஒன்றை வைப்பதற்கும் இருவருமாகச் சேர்ந்து 6 பசுக்களையும், 24
ஆடுகளையும் கொடையாக அளித்துள்ளனர்.

தொடரும்...
மேலும் தகவலுக்கு நமது
இணையத்தை பார்க்கவும்..👇

Marimuthuampalam.blogspot.com


என்றும் அன்புடன்...
சிவமாரி அம்பலம்...
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER