மூன்று தரை பாண்டிய முத்தரையர்கள்

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்
___________________________

பாண்டியநாட்டு முத்தரையர்கள்
____________________________

1.அஞ்நூற்றுவ முத்தரையன்:
------------------------------------------

இவனது கல்வெட்டு கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை சுவாமிக்கு திருநந்தா விளக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இச்செய்தி தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர் எண் 1969/38Hல் உள்ளது. இவனுக்கு சித்த குட்டி அம்பி என்ற பெயரும் உள்ளது.

இவனைப் பற்றிய கல்வெட்டு.👇

1.வரத ஸ்ரீ கறைக் கண்
2.ட ஈ ஷ்வ ரத்துக கலம்
3.ற்ற யாண்டு திருநந்தி
4.க் கரைய் பட்டாரகர்க்கு
5.நாஞ்சி நாட்டு வேய் கோ
6.ட்டு மலையுடைய
7.சித்த குட்டி அ
8.ம்பியாயின அஞ்ஞா
9.ந்றுவ முத்தரையன்
10.நிசதம் உரிய் நெய்
11.எரிவதாக வைச்ச திரு
12.நந்தா விளக்கு ஒன்று
13.க்கு வைச்ச சாவா மூவா எ
14.ருமை ஒன்பது இவை பெ
15.ரு மக்களுக்குச் சமைஞ் (ச)
16.இடையன் வீரன் மங்கல
17.வன் வய்த்த (ந)ன்.

இக்கல்வெட்டில் நாஞ்சில்நாட்டு, வேய்கோட்டு மலையுடைய  சித்தகுட்டி அம்பியான "அய்நூற்றுவ முத்தரையன்" என்கிறது.

தினசரியும் இவனால் வைக்கப்பட்ட திரு நந்தா விளக்கு எரிக்க ஒன்பது எருமை மாடுகளை கொடுத்துள்ளான். இவற்றிலிருந்து தினசரியும் உழக்கு நெய் அளக்கும் படியும் இந்த எருமைகள் எக்காலத்திலும் வயது கூடினாலும் உழைப்பினாலும் எப்போதும் 9 க்கு குறையாமல் இருக்கும்படி வழங்கியுள்ளான்.

2.பாண்டி முத்தரையன் அரட்டவதி அரையன்:
----------------------------------------------

இவனது கல்வெட்டு கரூருக்கு அருகில் வீரக்கணம்பட்டி குன்றில் உள்ள பாழடைந்த கோவில் காணப்படுகிறது. இங்குள்ள பாழடைந்த கற்றளி கோயில் வழிபாடின்றி உள்ளதில், முன்புறம் பாறைப் பகுதியில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக உள்ளது. இப்பகுதியில் குறுநில மன்னராக இருந்த பாண்டி முத்தரையன், அரட்டவதி அரையன் என்பவரின் தாய் பாண்டிப் பெருந்தேவி, பாண்டி முத்தரையன் என்பவன் நினைவாக காள ஈசுவரம் என்ற கோயிலைக் கட்டியுள்ளாள். இக்கோயிலை மலைமீது பாழடைந்த ஈஸ்வரன் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. இவர்கள் மதுரை பாண்டிய மன்னர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். இந்தப் பாண்டி பெருந்தேவி பாண்டிய குல பெண்ணாக கருதப்படுகிறாள்.

இவளால் எழுப்பப்பட்ட கோயில் பாண்டி முத்தரையன், சோழிய அரையன் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது. சோழிய அரையன் என்ற குறுநில மன்னனைக் குறித்து இப்பகுதியில் உள்ள வெள்ளியணை என்ற ஊரில் உள்ள ஏரியில் ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது. இந்த ஏரியை சோழிய அரையன் அகணிதன் குளம் என இன்று அழைக்கப்படுகிறது. இதனால் இங்குள்ள கோயில், சோழிய அரையன் வழிவந்த குறுநில மன்னருக்காக கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

3.அரட்ட காயிபன்;
-----------------------------------

அரட்டை காயிபன் முத்தரையர் பற்றிய நடுகல் கல்வெட்டு தென் ஆற்காடு மாவட்டம், செஞ்சி வட்டம், ஒலக்கூர் பசுமலைக்கருகில் உள்ள தொண்டூர் குன்றில் உள்ளது. இக்கல்வெட்டில் தமிழ் பிராமி எழுத்தில், பண்டைத் தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கல்வெட்டு இரண்டு வரிகளில்,

"ஸங்காயிபன் ஏவ அகஸ ஊரறம்
மோசி செய்த அதிட்டானம்"

என்று சமணர் படுக்கைகள் செய்ததைக் குறிக்கிறது. இக்கல்வெட்டு கிமு முதல் நூற்றாண்டிலிருந்து கிபி முதல் நூற்றாண்டு என கருதப்படுகிறது. இந்த ஸங்காயிபன் என்ற பெயர் திருச்சி மாவட்டம் புகளூர் ஆறுநாட்டார் மலையிலும் உச்சிப்பிள்ளையார் கோயில் மலையிலும் காணப்படுகின்றன. ஆனைமலை கல்வெட்டில் அரட்டை காயிபன் என்று உள்ளது. கல்வெட்டில் காணப்படும் அகசஊர் இன்று தொண்டூருக்கு அருகிலுள்ள அகலூரின் ஊரின் பழைய பெயராக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இக்கல்வெட்டினை தொல்லியல் அலுவலர் மா.சந்திரமூர்த்தி கண்டறிந்துள்ளார்...

4.வள (வ) முத்தரைய சாமி:
-----------------------------------------

இவரும் ஒரு முத்தரையன் என கருதப்படுகிறார். ஒன்பதாம் நூற்றாண்டு ஆக கருதப்படுகிறது. இப்போர் வீரனின் நடுகல், கரூர் அருகே ஈசநத்தம் அருகில் உள்ளது. இந்த நடுகல்லை இப்பகுதியில் வாழும் கம்பளத்து நாயக்கர்கள் வணங்கி வருகின்றனர். இச்சிலையின் இடது கையில் வில் ஏந்திய வண்ணம் வலது கையில் தடி ஒன்றை ஊன்றிய நிலையில் உள்ளது. வலது தோளில் அம்புகளுடன், அம்பராத் தூண் உள்ளது. சற்றே சாய்ந்த பெரிய கொண்டையும் நீண்ட காதுகளுடனும் பெரிய மீசையுடன் வீரனாகக் காட்சியளிக்கிறார். கழுத்திலும் இடையிலும் அணிகலன்கள் உள்ளன.

அண்மையில் பாளையத்திற்கு அருகில் ஈசானம்பாறையில் காளேஸ்வரம் என்ற கோயிலில் பாண்டி முத்தரையன் அரட்டவதி அரையன் என்ற முத்தரைய மன்னனின் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது முத்தரையன் நடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடுகற்கள் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.

5.சம்மி மூப்பன்:
---------------------------------

மதுரை முத்துவீரப்ப நாயக்கர் மன்னர் காலத்தில் மதுரை மாவட்டம் பெருஞ்சாழி நகரில், சகம் 1700 கிபி 1778ல் மதுரை, கவரை நாயக்கரின் வீட்டில் நடைபெற்ற துக்கத்திற்கு வளைய மூப்பர்கள் சென்றனர். அவர்கள் வீடு திரும்பும் போது, பாப்ப மூக்கன் மருமகள் மீது, திம்மநாயக்கன் மகன் உமிழ்ந்த தாம்பூலம் (எச்சில்) பட்டது. இதனால் பெரிய பூசல் ஏற்பட்டது. வலைய மூப்பர் "சாதி நாயமார்" என்று பெயர் பெற்றவர்கள். கலவரம் பெரிதாகி, மூப்பர்கள், கவரை நாயக்கர்களில், ஆண், பெண் என 74 பேர்களைப் பிடித்து சிறைவைத்து விட்டு மன்னர் முன்பாக நிறுத்தி வழக்குத் தொடர்ந்தனர்.

இறுதியில் கவரை நாயக்கர்கள் மீது குற்றம் சுமத்தி ஆயிரம் பொன் அபராதம் விதிக்கப்பட்டது. மன்னரின் நியாயமான தீர்ப்பை பாராட்டி, அப்பகுதி வளைய மூப்பர்கள் நாலாயிரம் பொன் வரி வசூலித்து மன்னனுக்கு கொடுத்தார்கள். இதனைப் பாராட்டிய மன்னர் அரண்மனை காணிக்கையை (வரியை) வசூலிக்கும் பணிப் பொறுப்பு இவர்களுக்கு ஒப்படைக்க, மூங்கில் குறிச்சி மல்லன் மூப்பன் மகன் சம்மி மூப்பனுக்கு "நாட்டான்" என்ற அந்தஸ்து வழங்கி ஓலைச்சுவடியில் பட்டயம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்டயம் பெற்ற மூப்பர்கள் கொங்குநாடு சென்று குடியேறினர். தங்கள் குல தெய்வங்களையும் கொண்டுசென்றனர் இத்தெய்வங்களை ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையம் மலையைச் சுற்றியுள்ள காடுகளில் நிறுவி மணியடிக்கும் பூசாரிகளாக ஆயினர். இன்று மணிப்பூசாரிகள் என்றே மூப்பர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த பட்டையச் சுவடி 24.01.1986ல் காப்பாட்சியர் இரா.ப. கருணானந்தம் அவர்களால் படிஎடுக்கப்பட்டு, பெரியார் மாவட்ட சங்க தலைவர், கே.சின்னகுட்டி அவர்களிடம் உள்ளது...

தொடரும்...
மேலும் தகவலுக்கு நமது
இணையத்தை பார்க்கவும்..👇

Marimuthuampalam.blogspot.com

என்றும் அன்புடன்...
சிவமாரி அம்பலம்...
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER