ஓலைச்சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களில் முத்தரையர்


ஓலைச்சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களில் முத்தரையர் 
____________________________________________

வரலாற்றை அறிய செப்புப்பட்டயங்கள் மிகவும் உதவியாக உள்ளன இதேபோல கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் வரலாற்றை நமக்கு தெரிவிக்கின்றன புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தகைய பல செப்பேடுகளும் மேலும் பகுதிகளிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் முத்தரையர் வரலாறு கூறும் செப்பேடுகள் பல உள்ளன அவை முத்தரையரைப் பற்றிக் கூறும் செய்திகளைக் காண்போம்

1.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி அம்பலகாரர் திரு.மயிலப்பன் முத்தரையர் அவர்களிடம் கீழ்க்காண்ட ஒன்பது செப்பு ஏடுகள் உள்ளன. அவைகளில் சாலியவாகன சகாப்தம் 1400க்கு கிபி 1478க்கு மேல் செல்லாயி நின்ற நந்தன வருடம் வைகாசி மாதம் 9ஆம் தேதி வழங்கப்பட்ட செப்புப் பட்டயங்களில், ஆலவள நாட்டிக்கு வந்தவர்கள் பேய் வெட்டி மயிலாடி ஆவான் முத்திரியர், அமரன் முத்திரியர், ஆலமங்காட்டார் சொரிய முத்திரியர் ஆக நாலு வகை முத்திரியர் பற்றிக் கூறுகிறது.

2.இவரிடமே உள்ள சாலிவாகன சகாப்தம் 1400 க்கு மேல் செல்லா நின்ற விஜய வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி குறிப்பிடும் செப்புப் பட்டயத்தில், பேய் வெட்டி மயிலாடி ஆவிடை முத்திரியர் உள்ளிட்ட 8 கரைப் பேர்களையும்,

3.இவரிடமே உள்ள மற்றொரு பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1400 க்கு மேல் செல்லாநின்ற விஜய வருடம் ஆவணி மாதம் 9ஆம் தேதிய செப்பு பட்டயத்தில் பேய் வெட்டி மயிலாடி ஆவிடை முத்திரியர் உள்ளிட்டார் எட்டு கரைப் பேர்களும் 

4.இவரிடமே உள்ள சாலிவாகன சகாப்தம் 1400 க்கு செல்லா நின்ற விஜய வருடம் ஆவணி மாதம் 9ம் தேதி செப்புப் பட்டயத்தில் பேய்வெட்டி மயிலாடி ஆவிடை முத்திரியர் உள்ளிட்ட 8 கரைப் பேர்களும் குறிக்கப்பட்டுள்ளன. 

5.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், "இம் மண் ஆண்டான்பட்டி"யிலுள்ள திரு.ப.அருணாச்சலம் அம்பலக்காரரிடம் உள்ள செப்புப்பட்டயங்கள் கூறுவதாவது: சாலிவாகன சகாப்தம் 1430 க்கு மேல் ருத்துரோக்காரி வருடம் ஐப்பசி மாதம் ஐந்தாம் தேதி செப்பேட்டில் "சூரியன் முத்திரி உள்ளிட்டார்" 8 கரையினர் பற்றியும்

6.சாலிவாகன சகாப்தம் 1430 க்கு மேல் செல்லாநின்ற காலத்தில் அனைத்து பட்டயங்களிலும் "சூரிய முத்திரியர்" பெயர் குறித்து பட்டயங்கள் வழங்கப்பட்டுள்ளது. முற்காலச் சோழர்கள் சூரிய வம்சத்தினர் இதே வம்சத்தைச் சேர்ந்தவர்களே முத்தரையர்களும் ஆவார்கள்.

7.புதுக்கோட்டை நகரம் அய்யனார் புரத்திலுள்ள நாடோடி ஆறுமுகம் சேர்வை மகன் கண்ணையா எம்.ஏ.,எம்.எட்., அவர்களிடம் கலியுக சகாப்தம் 1300க்கு செல்லாயி நின்ற தாரண வருடம் ஆவணி மாதம் 18ம் நாளைய செப்பு பட்டயத்தில், காணியான முத்திரி, செம்பன்றாவான் முத்திரி, கூட மடிஞ்சான் அடைக்கன் முத்திரி, பிச்சாடி கட்டையன் முத்திரி வகை நான்கு பேர்களும் குறித்துக் கொடுத்துள்ளனர்.

8.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கோவில்பட்டியில் திரு.பிச்சன் என்ற ஆதிதிராவிடரிடம் உள்ள சாலிவாகன சகாப்தம் 1400க்கு மேல் நின்ற விஜய வருடம் ஐப்பசி மாதம் 9ம் தேதி பட்டயத்தில் "ராய ராய கரிகால சோழனுக்கு" குழுவினராகிய சூரிய முத்தரையர் உள்ளிட்ட எட்டு கரை பெயர்கள் காணப்படுகின்றன.

9.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் வசிக்கும் நாட்டு அம்பலம் திரு.அ.முத்து அவர்களிடம் உள்ள சாலிவாகன சகாப்தம் 1647ல் உள்ள ஓலைச் சுவடி ஒன்றில் சிராயன், செல்லமுத்திரி, அரும்பிச்சை முத்திரி, காரவீர முத்திரி, கருப்ப முத்திரி, ஆகியவர்களின் பெயர்களும், மற்றொன்றில் 

10.சாலிய வாகன சகாப்தம் 1421க்கு மேல் செல்லாயிநின்ற பவ வருஷம் ஆவணி மாதம் முதல் தேதியன்று அச்சி சிராயன் கரை, மட்டையன் கரை இந்த 7 கரைகளின் பெயர்களைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. 

11.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் பனம்பட்டியில் இருக்கும் திரு.பிலியன் அம்பலகாரரிடத்தில் முன்னோர்களுக்கு சேதுபதி மகாராஜா கையொப்பமிட்டு சமஸ்தானம் முத்திரையுடன் அச்சுத ஆண்டு தை மாதம் 20ஆம் தேதி வழங்கப்பட்ட ஓலைச்சுவடி ஆவணமாகும். இந்த ஆவணத்தில் ஆங்கில ஆண்டு குறிப்பிடப்படவில்லை. பிலியன் அம்பலக்காரரின் முன்னோர் காட்டில் கவல கிழங்கு வெட்டிய போது அங்கிருந்த சிலையில் காயம்பட்டு ரத்தம் வழிய எடுத்து வந்த சிலையை வைத்து கோயில் கட்டும்படியும் அதற்காக பெரியகோட்டை, சில்வார்பட்டி கிராமம், அம்பலம், கணக்கு, முதல்வடம், மண்டகப்படி, கோயில் பூசை வேலைக்கு பெரியகோட்டை நடுமடை பாசன நிலம், விபூதி, முதலாவது உனக்கு சாத்தியம் என்று பட்டயம் எழுதி கையொப்பமிட்டு, கரும்பரத்தார் சுப்பையா, வாபா ரவுத்தர் ஆகியோர் கையொப்பம் செய்து கொடுத்துள்ளனர்.

12.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் பனையப்பட்டி நாட்டு அம்பலம் திரு.நா.கருப்பையா முத்தரையரிடம் உள்ள செப்புப்பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1400க்கு மேல் செல்லாநின்ற செயா ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள் வழங்கப்பட்டுள்ளது. இப்பட்டையம் தாப்பா விலக்கி கோளியா முத்திரி உள்ளிட்டார், கொம்ப வச்சான் முத்திரியன் உள்ளிட்டார், பொங்காணி (பெண் காணி) பெத்து வந்தான், நாச்சான் முத்திரியன், உள்ளிட்டார், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் பான்னூரு, குறைந்தமங்கலம் திருவுடி கானான நரியன் முத்திரியன் உள்ளிட்டார் (புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம்) வடமலை நாட்டு தெம்மாவூரிலிருந்து வந்தவன், அம்பவிசுவன் முத்திரியன் உள்ளிட்டவர்களுக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டு, பெரியகோயிலில் கருவலம் மெய்க்காவலும் மண்ணு, மனா, கோயில், குளம், அம்பலம், உம்பளம், யிடுகாடு, படுதுரை, பள்ளு, பறை தொழிலாளிகளுக்கும் விட்டுக்கொடுத்து அளிக்கப்பட்டுள்ளது.

13.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூரிலுள்ள செப்புப்பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1389க்கு செல்லாயி நின்ற தாருண வருடம் ஐப்பசி மாதம் 17ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. அதில் குந்திரிய மொங்கு வெட்டி வலான் முத்திரி, உள்ளிட்டாற்கும், நரியன் பூமாடி முத்திரி உள்ளிட்டாற்கும், சுள்ளாண்டி முங்கிய பிச்சணன் முத்திரி உள்ளிட்ட மூனு வகை வகையாருக்கும் நிலம் விட்டு, நான்கு எல்லையுடன் குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது.

14.பொன்னமராவதி ஒன்றியம் செம்பூதியில் இருக்கும் திரு கிருஷ்ணசாமி நாயுடு அவர்களிடமுள்ள செப்புபட்டயம் சாலிவாகன சகாப்தம் 1300க்கு மேல் செல்லாயி நின்ற பிங்கள வருடம் அற்பிசை மாதம் ஏழாம் நாள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரான்மலை கமிலங்கிரி நாதர் சுவாமிக்கும், அம்மன் தேனாட்சிக்கு மங்கையாக ஈசுபார்க்கும், அம்மன் பாகம்பிரியாள் ஈசுபரியும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில் "கரிகால சோழ, விக்கிரம பாண்டிய ராஜா" அவர்களும், ஊண் பாண்டிய ராஜாவும் தாரை வார்த்து நிலம் விடப்பட்டுள்ளது. கல்லும், புல்லும், பூமி, சந்திரன், சூரியன் உள்ளவரைக்கும் என்று கூறி தேவாரம்பாடி 3 திருவாச்சி 17, அலங்கா பூடம் 20, உடக்குலம், தட்டு முட்டு, கோபுரம் அடிப்போக்கு 1, சிம்மாசக்குறடு 1, பிறவடைப் போக்கு 43 இதற்கு கருவலம், கொடிமுடி, கண்டான் சங்கான முத்திரி வசம் வழங்கப்பட்டுள்ளது.

15.பொன்னமராவதி ஒன்றியம் வேந்தன்பட்டி அருகில் இருக்கும் கருப்புக்குடிபட்டியில் இக்கும் முத்தரையர்களுக்கு சாலிவாகன சகாப்தம் 1840 க்கு மேல் செல்லாநின்ற சாறுவரி ஆண்டு மார்கழி மாதம் 11 ஆம் தேதி திரு.மே.பெ.பெருமாள் பூசாரிக்கு வழங்கப்பட்டுள்ள செப்புபட்டயமாவது, பூதி முத்திரி, தேனா குயிலன், ஒய்யாக்கி அழகன் தம்பி பெருமான் பூத முத்திரி ஆகியோர்க்கு வார்ப்பட்டு கிராமத்தில் நிலக்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

16.பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் திரு.சு.சித்தாண்டி பூசாரி அவர்களிடமுள்ள செப்புபட்டயம் சாலிவாகன சகாப்தம் 1389 க்கு மேல் செல்லாநின்ற தாருண வருடம் ஐப்பசி மாதம் 17ஆம் தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்டதில் கண்டிராய நல்லூர் (கண்டியா நத்தம்) விருதுக்கு வெட்டி தாங்கின, சொரியழகன், மகதவூடி காத்தான், காடன் முத்திரியன், உள்ளிட்டார் 8 கரைப் பேர்களுக்கு மண்ணு, மனை, கோயில், குளம், அம்பலம், உம்பளம் யிடுகாடு, படுதுறை, பள்ளுப் பறை அனைத்துத் தொழிலாளிகளையும் குறித்து சாதனம் பண்ணிக் கொடுக்கப்பட்டுள்ளது.

17.ஆலவயல் திரு.சு.சித்தாண்டி பூசாரி அவர்களிடம் உள்ள செப்புபட்டயம் சாலிவாகன சகாப்தம் 1400 க்கு மேல் செல்லாநின்ற ஜெய வருடம் ஆவணி மாதம் 9ம் தேதி குறிப்பிட்டு பிடாரன் முத்தரையன், செம்ம முத்திரியன், காடன் முத்திரியன், .........முத்திரியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. செப்பேடு சிதைந்துள்ளது.

18.பொன்னமராவதி ஒன்றியம் நல்லூரில் இருக்கும் திரு.ப.உலகன் அம்பலம் அவர்களிடம் உள்ள செப்புப் பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1389 க்கு மேல் செல்லாநின்ற தாருண வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது இப்பட்டயத்தை உலக முத்திரி நாடு, மாரி நாடு மதிச்சான், உலக முத்திரி உள்ளிட்டாற்கும், நம்மள் முத்திரி உள்ளிட்டாற்கும், மாணக்க முத்திரி உள்ளிட்டாற்கும், விசையாலயன் முத்திரி உள்ளிட்டாற்கும் ஆக வகை 4க்கு கரை 8க்குமாக நிலங்களை ஒதுக்கி கொடுத்து மண்ணு, மனை, கோயில், குளம், அம்பலம் உம்பளம், பள்ளுப்பாறை பல தொழிலாளிகளையும் கொடுத்துள்ளனர். இந்த உலக முத்தரையன் பிரபலமாக வாழ்ந்துள்ளார். இவனது பெயரில் நல்லூரில் ஒரு கோயிலை எழுப்பியுன்ளான். குடிநீர் ஊருணியும் வெட்டியுள்ளான். தற்பொழுது இந்த ஊரணி "அப்பச்சி ஊருணி" எனப்படுகிறது. ஆலவயல் கிராமத்தில் பல சான்று பெயர்கள் உள்ளன. உலகன்பட்டி என்ற ஊரையும் இவனது பெயரிலேயே ஏற்படுத்தியுள்ளான், ஓலைச்சுவடி ஆவணங்களிலும் இவனது பெயர் காணப்படுகிறது.

19.பொன்னமராவதி ஒன்றியத்தில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலை சேர்ந்த கொன்னைப்பட்டி கிராமத்தில் உள்ள திரு.சே.பழனியப்பன் அவர்களிடம் உள்ள ஒரு ஓலைச் சுவடி ஆவணமும், செப்புப்பட்டயம் ஆவணமும் உள்ளது, இக்குடும்பத்தினர் இந்த முத்துமாரியம்மன் கோவிலுக்கு தொண்டு செய்து வருகின்றனர்.

20.இவர்களிடம் உள்ள ஓலைச்சுவடி ஆவணம் சாலிவாகன சகாப்தம் 1389ல் உலகன் முத்திரி, உள்ளிட்டாரும், நாக முத்திரி உள்ளிட்டாரும், அடக்காடி முத்திரி உள்ளிட்டாரும், பன்னியான் நல்லான் முத்திரி உள்ளிட்டாரும் ஆக 4 வகையினர்க்கு காணியாச்சியாக, நிலங்களும் பூசையும் ஒதுக்கிவிடப்பட்டுள்ளது. 

21.பொன்னாவரை பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் சமீபம் வெள்ளைகுடியில் இருக்கும் ஆ.அடைக்கலம் பூசாரி அவர்களிடமுள்ள செப்புப்பட்டயம் சாலியவாகன சகாப்தம் 1208 க்கு மேல் செல்லாநின்ற பிலவ வருடம் ஆனி மாதம் பத்தாம் தேதி குறிப்பிட்டு கோவிலில் பூஜை பொருட்களையும் நிலத்தையும் அம்மன் ஆலய கந்(த)லை முத்திரி வசம் கொடுக்கப்பட்டுள்ளது.

22.பழனியில் உள்ள முத்தரையர் மடத்திற்காக 1896ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி துன்முகி வருடம் புரட்டாசி மாதம் 16-ம் நாளில் கிரையம் செய்யப்பட்டு நிலம் விடப்பட்டுள்ளது பழனியை சேர்ந்த பெருமான் மகன்  வண்ணி முத்துராஜாக்கள் சாதி, முத்துக்காத்த பண்ணக்காரர் 1)கோவை மாவட்டம் உடுமலை வட்டம் காரத் தெருவில் இருக்கும் நல்லபெருமாள் சேர்வைக்காரர் மகன் நத்தம் சேர்வைக்காரர் 2)மேற்படியூர் நல்ல காமு முத்திரியர் மகன் பண்டித மாயாண்டி முத்திரியர்  3)மேற்படி தாலுகா கடத்தூரிலிருக்கும் கருப்பண்ண முத்தரையர் மகன் கவுண்டன் பூசாரி 4)கருமாண்ட சேர்வைக்காரர் மகன் கருப்பண்ண சேர்வைகாரர் 5)கணியூரிலிருக்கும் கருப்பண்ண சேர்வைக்காரர் மகன் ஆனைக்குட்டி சேர்வைகாரர் 6)கருப்பண்ண முத்திரியர் மகன் கருப்பன் முத்திரியர் 7)மாரியப்ப முத்திரியர் மகன் திருமூர்த்தி முத்திரியர் 8)கொம்தலிங்கத்திலிருக்கும் வீரப்ப முத்திரியர் மகன் கருப்பண்ண முத்திரியர் 9)செல்லப் பெருமாள் முத்திரியர் மகன் வீரமலை முத்திரியர் 10)திருச்சி ஜில்லா உரையூர் மேட்டுத் தெருவில் இருக்கும் சின்னத்தம்பி கொத்தனார் மகன் கடம்ப கொத்தனார் 11)வீமநாயக்கன் பாளையம் வீரபத்திர முத்திரியர் மகன் ஆறுமுகம் முத்திரியர் 12)________ ஆகிய 12 பேர்களுக்குமான பரிவர்த்தனையாக தற்போதுள்ள இடத்தை வழங்கியுள்ளனர். கிரையம் பெற்ற 12 பேர்களில் பட்டப்பெயர்கள் பணக்காரர், சேர்வைக்காரர், முத்திரியர், பூசாரி, கொத்தனார், என்ற பெயர்களில் பல ஊர்களிலும் ஆக வசிப்போர் பலகோடி வாங்கியுள்ளனர்.

23.பொன்னமராவதி ஒன்றியம் கண்டியா நத்தம் ஊராட்சி கோவிலில் ஓலைச்சுவடி பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கண்டியா நத்தத்தை அக்காலத்தில் கண்டிராய நல்லூர் என்கிறது. இந்த ஓலைச் சுவடிபட்டயம், விருதுக்கு வெட்டி, தூங்கன், பிச்சன், காடன், காத்தான், உள்ளிட்ட எட்டு கரை முத்தரையர் பேர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

24.புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்திலுள்ள செப்புப் பட்டயத்தில் சாலிவாகன சகாப்தம் 1012க்கு செல்லா நின்ற விசையை ஆண்டு ஆவணி மாதம் 13ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது.  நைப்புத்திண்ணி முத்திரியர், தாப்பாக்கலை முத்திரியர், அறம்பன்ற முத்திரியர், உள்ளிட்டாருக்குமாக வழங்கப்பட்டுள்ளது.

25.புதுக்கோட்டை நகரம் சின்னப்பா நகர் வீதியில் இருக்கும் திரு பெருமாள் அவர்களிடம், ஆலங்குடி வட்டம், மாங்கோட்டை ஊராட்சியில் உள்ள கோயிலுக்குரிய பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1511 க்கு மேல் மாவூருக்கோட்டை, பாச்சல் நல்லூர் (மாங்கோட்டை,பாச்சிக்கோட்டை) கிராமங்களை,  செம்புகமுடி, உம்முனான் குறிச்சி, மஞ்சாடி வில்காரன் பெரியான் முத்திரியன் உள்ளிட்டாருக்கும், தூங்கன்புலி மஞ்சாடி முத்திரி உள்ளிட்டாருக்கும், சுள்ளான் குண்டி மாணிக்க முத்திரி உள்ளிட்டாருக்கும், மரம்புடுங்கி காரி முத்திரி உள்ளிட்ட 4 வகை 8 கரை பேர்களுக்கு, விடப்பட்டு கல் நடப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஊர்கள் பாளையக்காரர், நாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.

26.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் வாளரமாணிக்கத்திலிருக்கும் அனி ஒளிச்சான் வகையான (முத்தரையர்)களுக்கு கோவில் பணிகள் பற்றி குறிப்பிட்டு பட்டயம் சாலிவாகன சகாப்தம் 1760க்கு கலியுக சகாப்தம் 4938க்கு செல்லா நின்ற ஹேவிளம்பி வருடம், தை மாதம் 6ம் தேதி வழங்கப்பட்டுள்ளது, பட்டயத்தில் கம்மங்காடு மாகாணம், வாளரமாணிக்கம் மாகாணம், கோயில்களும், அருளாடிகளும் கோயிலில் வெட்டும் கிடாய்களை யார்? யார்? எடுத்துக்கொள்வது, கோயிலில் உரிமை பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

27.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கொன்னையூர் கிராமம், தச்சம்பட்டியில் இருக்கும் ஊர் அம்பலக்காரர் பழ.சிதம்பரம் அவர்களிடம் 8 ஓலைச்சுவடி பட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மங்களகோட்டை, காவல்காரன், கருவேடன், பூத முத்திரி, சேர முத்திரி, லிங்க முத்திரி, விருதுக்கு வெட்டி முத்திரி, அவன் மகன் விய்ய முத்திரி, சேக்காண முத்திரி, தொண்டு காண முத்திரி, பிடாரன் முத்திரி, குப்பா முத்திரி, கருப்ப முத்திரி, ஆகியோருக்கு அம்பலக்காணியாட்சியாக வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அவர்களை வேடன் என்றே பல ஏடுகளும் குறிப்பிடுகின்றன.

28.பொன்னமராவதி ஒன்றியம், வேந்தன்பட்டியில் இருக்கும் அழ.செம்பன் அம்பலம் அவர்களிடமுள்ள செப்புபட்டயம் சாலிவாகன சகாப்தம் 1830 க்கு மேல் செல்லா நின்ற விக்ருதி வருடம், மார்கழி மாதம் ஏழாம் நாள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கருவேடன் பூத முத்திரி, வில்லான முத்திரி, அறுபது வில்லிகள், எழுபது பரிசைக்கார மன்னமுத்திரி, சேர முத்திரி, நாகலிங்க முத்திரி, கருவேடன் மன்னமுடி துரை, மக்கள் விருதுக்கு வேட்டி முத்திரி, விய்ய முத்திரி, உலக முத்திரி, குப்பா முத்திரி, கருவேடன் கூத்தன் முத்திரி, பெரியான் முத்திரி.......மா முத்திரி, சூர முத்திரி, லிங்க முத்திரி, சூர முத்திரி இவர்களிடம் கோயில் பூஜை பொருட்களை ஒப்படைத்து பட்டயம் வெட்டப்பட்டுள்ளது. இவர்கள் முத்தரையர்கள், அனைவரும் கோட்டையை காவல்காரர்கள்.

29.இவரிடமே உள்ள மற்றொரு சிறிய பட்டயம் ஒன்று பிலவங்க ஆண்டு சித்திரை மாதம் 16ஆம் நாள் மணலூர் மங்கலக் கோட்டை காவல் காத்த பூத முத்திரி, வெள்ளையன் முத்திரி, மின்ன முத்திரி, சூற முத்திரி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளன.

30.இவரிடமே உள்ள மற்றொரு பட்டயம் பிலிவங்க ஆண்டு சித்திரை மாதம் மணலூர் மங்கள கோட்டையிலிருந்தே வழங்கப்பட்டுள்ளது. மங்கலக் கோட்டை காவல்காரன் வேடன் பூத முத்திரி, லிங்க முத்திரி, சூர முத்திரி, இவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது, கோயில் பூஜை பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.

31.இவரிடமே உள்ள மற்றொரு செப்புபட்டயம் சாலிவாகன சகாப்தம் 1575 க்கு மேல் செல்லாநின்ற பிலவங்க வருடம் சித்திரை மாதம் 16ஆம் நாள் மங்கலக்கோட்டை காவல்காரன் கருவேடன் பூத முத்திரி, வில்லா முத்திரி, மன்ன முத்திரி, சேர முத்திரி, நாகலிங்க முத்திரி, விருதுக்கு வெட்டி முத்திரி, விய்ய முத்திரி, உலக முத்திரி, குப்பா முத்திரி, கறுத்த முத்திரி, பேயன் முத்திரி, முத்துராசு முத்திரி, ராம முத்திரி, சூர முத்திரி, லிங்க முத்திரி, இவர்களுக்கு கோயில் பூசை பராமரிக்கும்படி கூறி விடப்பட்டுள்ளது .

32.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலத்தில் கிபி 1483ல் விஜய வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி கொத்தமங்கலத்தை கரை பிரியல் செய்து முத்தரையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள அம்புலி ஆற்றின் கரையில் உள்ள பதினெட்டு கிராமங்களை தாணம நாடு என்றும் கூறும் இப்பட்டயம், ஆதனூர் கூற்றத்து கானாட்டு வெள்ளாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதே ஆதனூர் குறுந்தம்பாறையைச் சேர்ந்த, முத்தரையர்களின் ஒரு பிரிவினர் கிபி 1478 ஜய வருடம் ஆவணி மாதம் 9ம் தேதி திருமயம் வட்டம் மேலப்பனையூர், குல மங்கலத்தில் இன்று வசிக்கும் முத்தரையர்களுக்கு பட்டம் வழங்கி உள்ளதையும் இங்கே முன்பே கண்டுள்ளோம்.

இந்தப் பட்டயம், மண்ணுக்கு முண்டன் மணவாளன் முத்திரியன் (மணவாளன் குடியிருப்பு) (2)கொமப்புலி கருவாண்டான் முத்திரியன் (கருவாடன் குடியிருப்பு)  (3)நன்ன பெரியான் முத்திரியன் (நானம் பெரியான் குடியிருப்பு) (4)மாலாண்டி வெள்ளியன் முத்திரியன் ஆக வகை நால்வரும் மேலத்தெருவிலும் (5)சுண்டாங்கி முத்திரியன் (சுண்டாங்கி குடியிருப்பு) (6)கூனரி முத்திரியன் (கூனரி குடியிருப்பு) (7)சங்கரன் விசயாலய முத்திரியன் (சங்கரன் குடியிருப்பு) ஆக வகை மூவரும் கீழத்தெருவில் நிற்பது என்றும் வழங்கப்பட்டுள்ளது, தற்சமயம் பட்டப்பெயரை தவிர்த்து குடியிருப்பு பெயர்கள் மட்டும் வழக்கத்தில் உள்ளன.

குறிப்பு : திருமயம் தொகுதியில் ஏராளமான செப்புப்பட்டயங்கள் முத்தரையர்கள் வைத்து இருந்துள்ளனர் பல செப்பேடுகள் தேக்காட்டூர் வேளாளர் ஒருவர் (வாணாதராயர் மரபு எனக் கூறும்) பத்திரப்படுத்தி தருவதாக வாங்கியுள்ளார். இவரது செயல்பாட்டில் வைத்திருந்த செப்புப்பட்டயங்கள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டது என்றும், தஞ்சாவூரில் கொடுத்து விட்டேன் என்றும், புதுக்கோட்டை திவானிடம் கொடுத்து விட்டேன் என்றும், அவரின் வாரிசுதாரர் ஒருவர் சொல்லி இருக்கிறார். இவை எல்லாம் கிடைத்தால் இன்னும் ஏராளமான முத்தரையர் பற்றிய வரலாற்று ஆதாரங்கள் நமக்கு கிடைக்கலாம்.

தொடரும்...

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Post a Comment

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER