கொடையளித்த முத்தரையர் கோமான்கள்

கொடையளித்த கோமான்கள்
____________________________

1.முத்தரையர் மகளார் வரகுணனாட்டி
---------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரை தலைநகராக கொண்டு சங்க காலம் முதல் 9ம் நூற்றாண்டு வரை, ஆண்ட வேளிர்குல மரபில், வந்த இருக்குவேள் என்பவரின் பட்டத்து ராணி வரகுணனாட்டி,

இவர் முத்தரையர் மகளார் என கல்வெட்டு சுட்டுகின்றது. இவள் குடுமியான்மலை பெருமானுக்கு விடிவிளக்கு வைக்க துளைப் பொன் ஏழு கழஞ்சு கொடை அளித்துள்ளார்...

இதன் காலம் கி.பி.970-985 எனக் கருதப்படுகிறது. பு.க.எண்.45,155...

2.பெரும்பிடுகு முத்தரையர்
மனைவி அரசி நங்கையார்...
------------------------------------------

இந்த அரசி குடுமியாமலை மேலைக் கோயிலுக்கு எப்போதும் விளக்கு எரிய இரு கழஞ்சு பொன் கொடை கொடுத்துள்ளார். கல்வெட்டில் காணப்படும் பெரும்பிடுகு முத்தரையன் செந்தலைக் கல்வெட்டின்படி சுவறன் மாறன் என்ற புகழ் பெற்றவன்.

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் இவனது உருவம் பொறித்த நடு கல்லில் "ஸ்ரீ சத்ரு கேஸரி" "அபிமான தீரன்" "ஸ்ரீ கள்வர் கள்வன்" வாள் வரி வேங்கை குத்தியது" எனக் குறிக்கப்பட்டுள்ளது. செந்தலை தூணில், பதிமூன்று பட்டங்கள் கொண்டிருந்ததையும் குறிப்பிடுகின்றன. இவ்வரசி "அனந்தன் பழியிலி முத்தரையர் மகளார் எனக் குறிப்பிடுகின்றது. பு.க.எண்.31

3.சாத்தன் மாறனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி:
-------------------------------------------------

திருமயம் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு குகைக்கோயிலை சாத்தான் மாறன் என்ற முத்தரைய மன்னன் குடைவித்துள்ளான். காலம் கிபி எட்டாம் நூற்றாண்டு ஆகும். விடேல்விடுகு விழுப்பேரதி அரையன் என்னும் சுவரன் மாறனின் தாய், தனது மூதாதையர்கள் குடைவிக்கப்பட்ட குடைவரைக் கோயிலை புதுப்பித்து கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளார். அண்டக்குடி என்ற கிராமத்தை தானம் அளித்துள்ளாள். பு.க.எண்.13

4.சாத்தன் பூதியின் மகள் பூதி அரிந்திகை:
----------------------------------------------

சாத்தன் பூதியின் மகள் பூதி அரிந்திகை. இவள் கொடும்பாளூர் மன்னன் சாத்தன் மறவன் என்பவனை மணந்தவள். இவள் திருக்கோவிலூர் வட்டம் கிமூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலுக்கு நிவந்தம் அளித்தாள். இக்கல்வெட்டில் சாத்தன் மறவன் தேவி எனப்படுகிறாள். நூல் முத்தரையர் பக்:63

5.மீனவன் தமிழதியரையன் மனைவி அரசி பழியிலி சிறிய நங்கை;
--------------------------------------------------

அரசி பழியிலி சிறிய நங்கை, புதுகை மாவட்டம், நார்த்தாமலை, மேல்மலை, குகை கோயிலுக்கு நிவந்தமாக, அண்ணல்வாயில் கூற்றத்து, பெருவிளத்தூரில் சாத்தன் காணியான மூவேரியில் நிலக்கொடை கொடுத்துள்ளார். சாத்தன் பழியிலி என்ற முத்தரைய மன்னன் தனது பெயரிலேயே பழியிலி ஈஸ்வரம் குடைவறையாகக் குடைந்துள்ளாள். இச்சிறிய நங்கை மல்லன் ஆனந்தன் என்பவனின் மனைவியாவாள். மீனவன் தமிழதியரையனுக்கு மல்லன் விதுமனனான தென்னவன் தமிழதிரையன் என்ற பெயரும் உண்டு. பு.க.31,19,145


6.குவாவன் சாத்தன் மகள் சாத்தான் காளி;
--------------------------------------------------------
இவள் நியமத்து ஆயிரத்தளி மகாதேவற்கு நந்தா விளக்கு எரிக்க பொன் பதின் கலஞ்சு கொடையாக அளித்துள்ளார். குவாவன் என்ற மன்னனுக்கு குவாவன் மாறன் குவாவன் சாத்தன் என்ற இரு மகன்கள் இருந்தனர். சாத்தானுக்கு சாத்தன் காளி என்ற மகள் இருந்தாள். அக்கால ஆட்சி பரப்பு புதுக்கோட்டை தஞ்சாவூர் இணைத்து பரவி இருந்ததை அறியமுடிகிறது. ஏ.ஆர்.இ.1960 எண் 318.

7.உத்தமதாணி எனும் தென்னவன் இளங்கோ முத்தரையன்;
----------------------------------------------------------
இவன் தஞ்சை மாவட்டம் திருச்சோற்றுத்துறை கோவிலில் உத்தமதாணி திருவிளக்கு தானம் கொடுத்துள்ளார். இவனுக்கு உத்தமதாணி எனும் பட்டப்பெயரும் உண்டு. தனது பெயரிலேயே கீரனூரில் உத்தமநாத சுவாமி கோயிலை கட்டியுள்ளான். இவன் தனது பெயரில் தென்னவன் குளம் தென்னங்குடி என்ற ஏரியையும் ஊரையும் நிர்மாணித்து உள்ளான். நார்த்தாமலையில் அனிமத ஏரியையும் வெட்டியுள்ளார். கீழதாணியத்தில் உத்தம தானேஸ்வரர் என்ற கோவிலையும் கட்டியுள்ளான் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் உத்தமதாணி என்று பல கொடைகள் அளித்துள்ளான்.

8.சத்துரு பயங்கர முத்தரையன் மனைவி அனுக்கன் அப்பி நங்கை;
-----------------------------------------------------------
நெல்லை மாவட்டத்தில் இவள் தென் திருமாலிருஞ்சோலையில் கரு மாணிக்க தேவர்க்கு திருவிளக்கு எரிக்க 25 ஆடுகள் கொடையாக கொடுத்து இருக்கிறாள் இவளை அரசு என்று கல்வெட்டு கூறுகிறது. ஏ.ஆர்.421/1906 க.எண்.71

9.பராந்தக முத்தரையன் அரசி பஞ்சவன் மாதேவி;
-------------------------------------------------------
இவர்கள் வல்லத்து பட்டாருக்கு நந்தா விளக்கெரிக்க குவாவன் பிரம்மனிடம் 90 ஆடுகளையும், பஞ்சவன் மாதேவி உடையார்குடி கோவிலுக்கு நந்தா விளக்கு வைக்க போன் பன்னிரு கழஞ்சரையும் அளித்துள்ளனர். நூல் முத்தரையர் பக்.71

10.அனந்தன் காரியான பராந்தக முத்தரையன்;
--------------------------------------------------------
இவன் வல்லத்து பட்டாரருக்கு நந்தாவிளக்கு கொடையாக கொடுத்துள்ளான்.

11.கண்டராதித்த முத்தரையன்;
------------------------------------------------------
இவன் காவிரி தென்கரை திரைமூர் நாட்டு திருவிடை மருதூரில் மகா தேவற்கு நந்தாவிளக்கு வைக்க 96 ஆடுகள் கொடையாக அளித்துள்ளான். முத்தரையர் பக்:72 S.||.vol.vp915

12.கருணாகரச் சோழ முத்தரையர்;
-------------------------------------------------------------------
இவன் மாம்பாக்கம் பெருமானுக்கு திரு நந்தாவிளக்கு வைத்துள்ளான் திருவக்கரையில் நந்தாவிளக்கு வைக்க 32 பசுக்களை கொடையாக அளித்துள்ளார். நூல் முத்தரையர் பக்:74

13.சோழ முத்தரையன் எனும் சங்கரநாராயணன்;
---------------------------------------------------------------------
இவன் உடையார்குடி கோயிலுக்கு நிலக்கொடை கொடுத்துள்ளான். முத்தரையர் பக்;72

14.அபிமான மேருச் சோழ முத்தரையன்;
----------------------------------------------------------
இவன் திருவக்கரை மகாதேவருக்கு வெள்ளித் தளிகை ஒன்றை கொடையாக அளித்துள்ளார். முத்தரையர் பக்:74

15.விடேல் விடுகு முத்தரையன் அடியான் கிடாவன் காத்தான்;
---------------------------------------------------------
இவன் நியமம் பிடாரி கோயிலுக்கு திருவிளக்கு வைக்க அரைக்காணி நிலக்கொடை கொடுத்துள்ளான்.

16.வில்லவன் முத்தரையர்;
----------------------------------------------------
புதுகை மாவட்டம் திருவரங்குளம் பகுதி வேப்பங்குடியில் வாழ்ந்தவன் இவன் திருவரங்குளம் கோயிலில் பணிகளுக்காக நிலம் 10,000/- பொற்காசுகளுக்கு மா, புளி உட்பட விற்றுள்ளார். பு.க.எண்.433

17.திருக்கட்டளையில் முத்தரையர்கள்;
-------------------------------------------------------------
இவ்வூர் இறைவனுக்கு தெற்றலூர் வயலில் நீர் நிலம் நத்தத்து ஊர் பூமியை திருவிழா நடத்துவதற்காக கொடையாக அளித்துள்ளனர்.

18.இவ்வூரைச் சேர்ந்த சிங்கன் கொற்றனின் ஞாபகமாக அவனது தம்பி தம்பிமார் இருவராக மூவரும் சேர்ந்து நிலையை விளக்கு ஒன்றும் காசும் கொடையாக கொடுத்துள்ளனர்.

19.இவ்வூரைச் சேர்ந்த சிங்க பேரரையன் என்பவன் மிலட்டூர் எனும் இடத்தில் போரில் இறந்துபட்டான். மிலட்டூர் பல மண்டல பேரரையன் என்பவன் இந்த பழியை நீக்க தம்பி அணுக்கனுடன் பெருமானுக்கு விளக்கு ஒன்று வைக்கவும் பராமரிக்கவும் 25 ஆடுகளை கொடுத்துள்ளன.

20.திருவரங்குளம் பகுதி வேப்பங்குடியைச் சேர்ந்தஇன்பாண்டார் (இம்மண்டார்) என்போர், ஆலங்குடியில் உள்ள நாமபுரீஸ்வரர் கோயிலில் வடக்கு மதில் சுவற்றை கட்டி கொடுத்துள்ளார்கள்.

21.புதுகை மாவட்டம் பேரையூரில் இருந்த, குவாவன், சத்ருகேசரி பேரரையன், பொய்யிலிப் பேரரையன் ஆகியோர், குறைதீர்க் வேண்டி, இங்குள்ள நாகநாத சுவாமி கோயிலுக்கு 50 ஆடுகள் கொடையாக அளித்துள்ளனர்.

22.குன்றாண்டார் கோவில் பர்வதகிரீஸ்வரர் சுவாமிக்கு இவ்வூர் வாலிவடுகனான கலிமூர்க்க முத்தரையன் வாலி ஏரியை வெட்டி கொடுத்துள்ளான் மேற்படி கோவிலில் நூற்றுக்கால் மண்டபத்தில், தூண்களை துவரங்கோட்டை அரையர்களில் பொன்ன துண்டரையனும், இளங்கோவதரையன் மகனும், மேலும் பல்வேறு அரையர்களுமாக தானம் கொடுத்துள்ளார்.

23.மேற்படி ஊர் மேற்படி கோயிலில் திருமண்டபமும் நித்த மண்டபமும்,  பாதையா மாலன், அழகிய சோழ நாடாழ்வான் முத்தரையன் தர்மமாக செய்தது எனப்படுகின்றது.

24.மேற்படி ஊர் மலையடிப்பட்டி வாகீஸ்வரர் சுவாமிக்கு சாத்தன் எனும் தங்களின் மூதாதையர் குடைவரையா வெட்டியதில் அவனது மக்கள் விளக்கி வைத்துள்ளனர் அதற்காக கொடைகளும் அளித்துள்ளனர்.

25.வங்கார முத்தரையர்;
-----------------------------------------------
இவன் செய்துள்ள கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டம் திட்டக்குடி வேப்பங்குளம் ஆகிய இடங்களில் உள்ளன.
26.பிரம்மாதராய முத்தரையரின் தம்பி வீர ராஜகேசரி பன்மாறன், என்பவன் திருச்சி மாவட்டம் ஊற்றத்தூர் சோழேசுரமுடையார் கோயிலுக்கு பொன்னும் மணியும் நிலங்களும் விலை உயர்ந்த பொருட்களையும் தானமாக அளித்துள்ளார்.

27.கம்பன் அரையனின் சகோதரன், திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கத்தில் மார்பிடுகு ஏரியை தர்மமாக வெட்டியுள்ளார் இவன் விஜய நல்லூழான் எனப்படுகிறான்...

தொடரும்...

சிவமாரி அம்பலம்...

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥


Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்