மூன்று தரை சோழ முத்தரையர்கள் (33முதல் 35வரை)

நாடாண்ட முத்தரைய மன்னர்கள்
____________________________

சோழ முத்தரையர்கள் :
_____________________________

33.வாமதேவ முத்தரையர்:
-----------------------------------------

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் கிபி 1578 இல் (சகாத்தம் 1500) கல்வெட்டாக கனகசபை மண்டபத்தில் உள்ளதில் வாமதேவ முத்தரையர் பற்றி கூறுகிறது...

மிகுந்த கலையம்சத்துடன் சுற்றுலா மையமாக திகழக்கூடிய வரலாற்று சிறப்பு மிகு கட்டம் சிற்பக்கலையுடனும் ஆவுடையார் கோவிலில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆத்மநாதர் இருந்தபோதும் வழங்கப்படுவது எல்லாம் மாணிக்கவாசகருக்கு தான் நடை பெறுகிறது...

இக்கோயிலில் கனகசபை மண்டபத்தை முழு பொறுப்பேற்று கட்டி முடித்தவர் வாமதேவ முத்தரையர் ஆவார். இம்மண்டபம் விசையை ஆண்டில் தொடங்கி பிலவங்க ஆண்டில் (சகாத்தம் 1524-32) எட்டு ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் நாடகம் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது...

கோயில் திருப்பணி பொறுப்பேற்றிருந்த பரதேசி முத்தரையனிடம் காளையார்கோவில் கூற்றத்து கரியமாணிக்கனும் தம்பி அழகனும் சாலியானேந்தல் நிலத்தை கோயிலுக்கு சகாப்தம் 1524 கொடுத்துள்ளனர்...

அதே சகாப்தம் 1524 சுபகிருது ஆண்டு மாசி மாதம் 26 ஆம் தேதி கறையடியர், நம்பியார் சிவநாயன் பேரன், முருதி, பெரியபிள்ளை, கிழவரின் பெண்மக்கள், பேரன்மார், ஆண்மக்கள் பேரன்மார், குருபூசை கட்டளைக்கு திருமல்லாண்ட வயலில் (கிடங்கி வயல்) நிலம் கொடுத்துள்ளனர்...

மேலும் திருமிழலை நாடன் கட்டளை இரண்டாம் காலத்துக்கு இப்பகுதி கிராம தலைவர்கள் நிலம் இவன் மூலமாக விட்டுள்ளனர்...

34.திருச்சி மாவட்டம் எட்டரையில்:
-------------------------------------------

திருச்சி மாவட்டம் எட்டரை ஐயனார் கோயில் கல்வெட்டு..👇

சாலிய வாகன சகாத்தம்
சூ எள சா எ (1845ம் ஆண்டு)மேல்
செல்லா நின்ற சூயுள சசா
சனவரி மீ 2 உ 22 வசுவா விசு
ஹீ தைய் மீ யா
உ யெட்டரை ய லி
ருக்கும் ஐயனர்
கோயில் திருப்
பணியும் யானை, கு திரையும் ஷேடி
யூரிலிருக்கும் சே
ண் பெரு நட்டு
முத்தியனம்பல
காறன் கூட்டம்
சொந்ததில் ?
சலவு செய்து கட்டிணது

குறிப்பு: இக்கல்வெட்டின் மூலம் இன்று திருச்சி மாவட்டத்தில் முத்துராஜா எனப்படுவோர் கிபி 1845 இல் அம்பலக்காரர் என்ற பெயரிலேயே வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றாக உள்ளது...

35.ஸ்ரீ கற்கடக முத்தரையன்:
-------------------------------------

இவனைப்பற்றி தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கூடலூர் என்னும் ஊரில் பாளைய வேடியப்பன் கோவிலில் கல்வெட்டுடன் நடுகல் உள்ளது. இக்கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கல்லில் உள்ள வீரன் பாளையக்காரன் எனப்படுகிறான் இக்கல்லின் முன்புறம் படலம் என்பவனின் உருவமும், குதிரையின் உருவமும், பின்புறம் கல்வெட்டுடன் உள்ளது. கற்கடக முத்தரையன் கங்கனின் மகனான படலனின் நினைவாக அவனது தவி தித்தன் என்பவன்  இந்த கல்வெட்டை வெட்டியுள்ளான்...

இந்த கல்வெட்டு குறிக்கும் ஸ்ரீ கற்கடக முத்தரையன் இப்பகுதியின் ஆட்சி தலைவனாக இருந்தவன். இப்பகுதியில் மிகுந்த செல்வாக்குடன் முத்தரையர் இருந்துள்ளனர்...

கல்வெட்டு:👇

ஸ்ரீ கற்கட முத்தரையந் கங்க
ந் மகந் படலந் இக்கல்லில்
இவநையுங் குதிரையும் செ
ய் வித்தேன் இவந் தம்பி தித்தனேன் ள

ஆதாரம். தொல்பொருள் ஆய்வு 1973-47A

தொடரும்...

என்றும் அன்புடன்...
சிவமாரி அம்பலம்...
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்