கலை வளர்த்த முத்தரையர் காவலர்கள்

கலை வளர்த்த முத்தரையர் காவலர்கள்:
_____________________________

1.பெரும்பிடுகு பெருந்தேவி;
----------------------------------

இவரைப் பற்றி முன்பே கண்டோம் இவள் தனது மரபினர் குடைவித்த திருமயத்தில் சத்தியகிரி நாதப் பெருமாள் கோவிலை புதுப்பித்து கட்டினார். இவள் விடேல்விடுகு விழுப்பேரதியரையன் என்னும் சாத்தன் மாறனின் தாயார் ஆவார். முத்தரையர்களால் அமைக்கப்பட்டதும் காலத்தால் முற்பட்டதுமான குகைக்கோயிலாக திருமயம் விஷ்ணு குகைக் கோயில் விளங்குகிறது.

2.மகதராயர் செய்வித்த கல்மண்டபம்;
--------------------------------------

புதுகை மாவட்டம் வல்லக்த்திராகோட்டை (வல்லத்தரையர் கோட்டை) ஊருக்குத் தெற்கே ஆற்றின் வடகரையில் திருவிடை நேரி என்றும் பெருந்திருவாட்டி நல்லூர் என்றும் பெயர் பெற்று இன்று திருவிடையார்பட்டி  என்ற பெயரில் வழங்கும் ஊரில் ஸ்ரீ மூலநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் திரு மண்டபத்தை எல்லாம் தலையாரான இராகுத்த மிண்டர் விசையாலய முத்தரையர் திருமேனிக்கு நன்றாக பெருங் கிளையாரான மகதராயர் செய்வித்தார் என கல்வெட்டு தெரிவிக்கின்றது.

3.தென்னவன் இளங்கோ முத்தரையன்;
---------------------------------------

இவனைப் பற்றி முன்பே கண்டோம் இவனுக்கு உத்தமதாணி என்ற பட்டப்பெயரும் உண்டு, திருமயம் வட்டத்தில் கீழதானியம் என்ற ஊரை நிர்மாணித்து உத்தம தானீஸ்வரர் கோயிலை கட்டியுள்ளான் இவன் 18 ஆண்டுகள் சிறப்பாக ஆண்டவன். முத்தரையர் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இக்கோயில் உள்ளது.

இவன் கீரனூரில் தனது பெயரிலேயே உத்தமநாத சுவாமி கோயிலை கட்டியுள்ளான் கிபி 630-660 வரை ஆண்ட இவனை இக்கல்வெட்டு இளங்கோவதி அரையர் என குறிக்கின்றது. இவன் திருச்சோற்றுத்துறை கோயிலில் உத்தமதாணி எனும் திருவிளக்கை வைத்துள்ளான்.

4.சுவரன் மாறன் என்ற பெரும்பிடுகு முத்தரையன்;
-----------------------------------------

இவன் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவன். முதலாம் நரசிம்மவர்ம பல்லவனுக்கும் முதலாம் ராஜராஜ சோழனுக்கும் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு ஒப்பானவன். இவன் செந்தலை தலைநகராகக் கொண்டு ஆண்டவன் இவனது உருவம் பொறித்த நடுகல் தனித்து வேங்கையுடன் போரிடும் காட்சியுடன் கிள்ளுக்கோட்டை என்னும் ஊரில் உள்ளதை முன்பே கண்டோம். இவன் செந்தலையில் சுந்தரேஸ்வரர் கோயிலையும் நியமத்தில் பிடாரி கோயிலையும் கட்டியுள்ளார் செந்தலை தூண் கல்வெட்டு ஒருபுறம் ஸ்ரீ சத்ரு மல்லன், ஸ்ரீ கள்வர் கள்வன், ஸ்ரீ அதி சாகசன் என்றும், மறுபுறம் ஸ்ரீமாறன், அபிமான தீரன், சத்துரு கேசரி, தமராலயன், செரு மாறன், வேல்மாறன், சாத்தன் மாறன் தஞ்சைக்கோன், வல்லக்கோன், வான் மாறன், என்று புகழ்ந்து உரைக்கின்றன.

இவன் கொடும்பாளூர், மணலூர், திங்களூர், காந்தளூர், காரை, மரங்கூர், அண்ணல்வாயில், செம்பொன் மாரி, வெண்கோடை, புகழி, கண்ணனூர் ஆகிய இடங்களில் பல்வேறு மன்னர்களையும் வென்று சக்கரவர்த்தியாக ஆண்டதை கல்வெட்டு எடுத்துக்காட்டுகின்றது.

5.குவாவன் சாத்தன்;
-------------------------------------------

குன்றாண்டார் கோயிலை அடுத்த மலையடிப்பட்டியில் குடைவரையாக சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வெட்டுவித்தவன்  ஆவான் இவனது தம்பி குவாவன் மாறன் செந்தலையை தலைநகராகக் கொண்டு ஆண்டவன். இந்த குடைவரையில் மிகச் சிறந்த சிற்ப கலை வேலைப்பாடுகள் காணப்படுகின்றன மாமல்லபுரத்து சிற்பத்தை ஒத்த குட்டிக்கு பேன் பார்க்கும் தாய் குரங்கு போன்ற சிற்பங்கள் உள்ளன. இக்கல்வெட்டு விடேல்விடுகு முத்தரையன் ஆகிய குவான் சாத்தன் திருவாலத்தூர் மலை தளியாகக் குடைந்து படாரரை பிரதிஸ்டை செய்து இத்தளியை என்று விளக்குகிறது. தான் அமைத்த குடவரைக் கோயிலில் தன்னையே துவாரபாலகராக சிலை வடித்தான், பூவாலைக்குடியில் புஷ்பவனேஸ்வரர் குகை கோயிலையும் கட்டியுள்ளார்.

6.சாத்தன் பழியிலி;
--------------------------------------

இவன் நார்த்தாமலையில் தனது பெயரிலேயே பழியிலி ஈஸ்வரம் என்ற கோயிலையும் விஜயாலய சோழீஸ்வரம் என்ற குடைவரைக் கோயிலையும் கட்டியுள்ளார்.

மல்லன் விதுமன் ஆன தென்னவன் தமிழதியரையன் என்பவன் மேற்கண்ட கோயிலை புதுப்பித்து கட்டியுள்ளான். இவனது மகள் மல்லன் அனந்தனின் மனைவியான சிறியநங்கை என்பவள் இக்கோயிலுக்கு முக மண்டபமும் நந்தி, நந்தி மண்டபம், பலிபீடம் கட்டியுள்ளார்.

பாராண்ட முத்தரையர்கள் சுற்றுலா மையங்களுக்கு தகுதியான கலை கோயில்களை வரலாற்று சின்னங்களாக விட்டுச் சென்றுள்ளனர். இக் கலைப் பொக்கிஷங்கள் இன்று கேட்பாரற்று நாதி இல்லாமல் நசிந்து கொண்டிருக்கின்றன. இம் மரபின் வழித்தோன்றல்கள் கூட தங்களின் வரலாற்றை அறியாமல் இருக்கின்றனர். பாகுபாடு அற்ற முறையில் அரசும் நல்லவர்களும் வல்லவர்களும் அவற்றின் பெருமைகளை வெளிக்கொணர வேண்டும்.

7.பூதிகளரி என்னும் அமரூன்றி முத்தரையன்;
-----------------------------------------

இவனின் கலைத்தொண்டை காணும்போது இவன் மிகப்பெரிய மன்னனாக இருந்திருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரசமலை என்ற ஊராட்சியில் இவனது கோயில் பணி காணப்படுகிறது. இவன் குவாவன் சாத்தனின் மகனான சாத்தன் பூதிக்கும் "பூதிகளரி" என்ற மகன் இருந்துள்ளான். பூதி களரிக்கு அமரூன்றி முத்தரையன் என்ற பட்டப்பெயர் உண்டு. இவன் இங்கு உள்ள பூவாலைக்குடி என்னும் ஊரில் புஷ்பவனேஸ்வரர் என்ற குகைக்கோயிலை அமைத்துள்ளான்.

இவனது பிற கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டம் திருச்சின்னம்பூண்டி,செந்தலை, திருக்கோற்றுத்துறை, கும்பகோணம் வட்டத்தில் உள்ள கோடிக்காவல் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இவனால் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட கோயிலைக் காணலாம் இக்கோயிலில் பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன. ஆதாரம் ARE 142/1907 DAMILILA Vol 1R78
முத்தரையர் ஆர்.திருநாடன் காசிநாதன் பக்:96

தொடரும்...

தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER