மூன்று தரை சோழ முத்தரையர்கள் (29 முதல் 32 வரை)




நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
_________________________

சோழ முத்தரையர் (கள்):
______________________

29. குன்று சூழ் நாட்டு முத்தரையன்:
----------------------------------------

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் குடுமியான்மலை சிகாநாதர் கோயிலில் தென்புரம் சுவரில் விக்கிரம ஆண்டு வைகாசி மாதம் 25ஆம் நாள் (15 ஆம் நூற்றாண்டு) கல்வெட்டு எண் 906 இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது...

வலையரும், முத்தரையரும் ஒரே சாதி என்பதற்கு எடுத்துக்காட்டான சான்றாக இக்கல்வெட்டு விளங்குகிறது. முத்தரையர்கள் நாடாண்டவர்கள், ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகள் மன்னர்களாகவும் பல நூற்றாண்டுகள் ஆட்சியில் பங்கு கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். இவ்வாறு மகோன்னத நிலையிலிருந்த முத்தரையர், காலத்தின் கோலம் நிலைதடுமாறிய தொழில்களை மேற்கொண்டு உள்ளதை இக் கல்வெட்டு விளக்குகிறது. வலையரும் முத்தரையரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் முத்தரையர்கள் மட்டும் பிற சாதியினர் இறந்துபட்ட போது கட்டைகள் முக்காடு இடுதலை தீச்சட்டி கொண்டு சுளுந்து கொளுத்துதல் காத்து சுடுதல் போன்ற இழிவான செயல்களை செய்து வர கட்டாயப்படுத்த பட்டுள்ளனர். இதேசமயம் சுபகாரியங்களில் பந்தல் போடுதல் சுளுந்து (காட்டுக்குள் இருந்த மரக்கிளையில் ஒருவகை ஒளியால் குத்திப் பிளந்து சீராக்கி காய்ந்த பிறகு தீயில் பிடித்தல் அணையாமல் நீண்டதூரம் வழி பாதைக்கு விளக்காக பயன்படுத்தலாம்)

இத்தகைய காரியங்களை இழிவு எனக் கருதிய வலையர்கள் செய்ய மறுத்துள்ளனர் ஆனால் முத்தரையர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் இதனால் இரு பிரிவுகளுக்கும் பிரச்சனை பெரிதாகி வலையர்கள் முத்தரையர்களை சாதி நீக்கம் செய்துள்ளனர் இதனால் இந்த தொழிலை இனிமேல் யார் செய்வது என்ற பிரச்சனை பெரிதாகி அப்போது ஆட்சியில் இருந்த மன்னர் சிவந்தெழுந்த பல்லவரையரிடம் போய் பஞ்சாயத்தில் இனிமேல் தீமைக்கான காலங்களில் இத்தகைய காரியங்களை செய்ய வேண்டாம் நன்மைக்கான காரியங்களை மட்டும் செய்யலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டு இதனை கல்வெட்டாக வெட்டியுள்ளனர்....

((குறிப்பு: இந்த சிவந்தெழுந்த பல்லவரையனை கொன்று கிபி 1686 இல் புதுக்கோட்டையை (அப்போது பல்லவரையன் சீமை எனப்பட்டது) தொண்டைமான்கள் கைப்பற்றினர் ராமநாதபுரம் கிழவன் சேதுபதியால் தேவகோட்டையில் இக்கொலை நடைபெற்றது.))

இதனை ஒட்டி கல்வெட்டு 926 இல் இதே கோயிலில் மன்மத வருடம் ஆனி மாதம் எட்டாம் தேதி கிபி  1615 இல் வெட்டப்பட்ட கல்வெட்டில் விசலூர் கோனாட்டு முத்தரையன் செலுந்தி வன முத்தரையன் உள்ளிட்டோர் பிற சாதியினருக்கு மேற்கண்ட இழிவான காரியங்களை செய்துள்ளனர் இதனை வளையர்கள் நாட்டு கூட்டம் கூட்டி முத்தரையர்களை சாதியை விட்டு நீக்கி ஈனம் பண்ணினர் ஊரை விட்டு விலக்கி வைத்தனர் அப்போது இலுப்பூர் பகுதி ஆட்சியாளராக இருந்த மல்லப்ப பல்லவரையனிடம் முறையிட்டுள்ளனர். ஆட்சியாளரும் , சபையினரும் கூடி இனிமேல் பட்டறைகளும் முக்காடும் இட வேண்டாம் என்று கட்டளையிட்டனர்...

இக்கல்வெட்டின் தீர்ப்பை ஏற்று பல சாதி தலைவர்களும் மருங்கூர் சேவுக முத்தரையநும் பிடாரன் என்பவனும் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளனர்...

குடுமியான் மலைக்கு அருகில் உள்ள புல்வயல் என்ற ஊரில் 1445 (கிபி 1523) விக்கிரம ஆண்டு சித்திரை மாதம் 4ம் தேதி கல்வெட்டு எண் 847 இல் வெட்டப்பட்ட கல்வெட்டில் அதுபோலவே முத்தரையர்கள் இழிவான காரியங்களை செய்துள்ளனர். ஆட்சியாளர்கள் கூடிப்பேசி இனி தீமைக்கான காரியங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று கல்வெட்டி உள்ளனர். இதில் மேலைக் கூவ தேவேந்திர முத்தரையன் எழுந்தராமை வென்ற முத்திரையனைப் பனையன், கடம்பராய முத்தரையன், தேவேந்திர முத்தரையன், திருவன், வள்ளி, பெரியான், சயிரன், மணவாளர் காத்தான் போன்ற முத்தரையர்கள் இருந்துள்ளார். இந்த தீர்ப்பை அப்போது ஆட்சியாளராக இருந்த பல்லவராயர் பிரதிநிதி தென்னவதரையர் கட்டளையிட்டு கல்வெட்டாக வெட்டியுள்ளனர் கடம்பராயர் முத்தரையர் பெயரால் கடம்பராயன்பட்டி என்று ஊர் இன்றும் உள்ளது.

30. சூரியன் ஆரியச் சக்கரவர்த்தி:
-------------------------------------------

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோவிலூரில் உள்ள பாலபுரீஸ்வரர் கோயிலில் விசைய வருடம் பங்குனி மாதம் பதினாறாம் நாள் புதிய கல்வெட்டு எண் 921 இல் உள்ள கல்வெட்டு செய்திகள் குடிமகன் கண்டனும் தம்பிகளும் சேர்ந்து கண்டன் கார்டன் என்பவனை குத்திக் கொன்றனர் இதுபற்றி செங்காட்டு நாட்டார்கும் (ஆலங்குடி) தாழ்வி நாடாருக்கும் (தானம நாடு) தெரிவிக்கப்பட்டு இரு நாட்டாரும் கூடி நியாயத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்...

இந்த நாட்டுக் கூட்டம் வல்லநாட்டு கிராமம் முத்தரையர் குறிச்சி (இன்று மூத்தநாக் குறிச்சி) யைச் சேர்ந்த சூரியன் ஆரியச் சக்கரவர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. பகை தீர்ந்தது.இந்த நாட்டின் முடிவுக்கு ஏதேனும் தாழ்வு வந்தால் பொறுப்பேற்றுக்கொண்ட சூரியன் ஆரியச்சக்கரவர்த்தி இரு நாட்டுக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இக்கல்வெட்டில் முத்தரையர் குறிச்சி நாடு என்றும் முத்தரையர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் கரிகால் சோழனின் வழி வந்தோர் என்றெல்லாம் செப்பேடுகள் கூறுகின்றது...

31. விச்சாதிர முத்தரையன்:
-------------------------------------------

சோழன் பரகேசரிவர்மன் பத்தாவது ஆட்சியாண்டில் கிபி 1028 இல் தஞ்சாவூர் மாவட்டம் கருந்திட்டைக்குடி கோவிலில் (ஆவணம் இதழ் 2 ஏப்ரல் 4/92 பக்கம் 150 முதல்) இச்செய்தி உள்ளது முதலாம் ராஜராஜனின் படைத்தலைவனாக குதிரைச் சேவகர் அரங்கன் காரியான விச்சாதிர முத்தரையன் இருந்தான். காரி குளிர்வாகை என்ற முதரையனும் வில்வித்தையில் சிறந்து விளங்கினர். தங்களின் திறமையை மன்னனிடம் வில்வித்தையில் செய்து காட்டினர்.

இவர்கள் திறமை காட்டிய போது காரி என்ற முத்திரையன் மீது அம்பு பட்டு எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறான். இறந்துபட்ட முத்தரையன் காரி குளிர்வாகை ஆன்மா சாந்தி பெற அவனது உறவினரான கண்டங்காரி (காரி நக்கானின் மகன்) காரி கொற்றத்தின் மகன் கண்டன் பொற்காரியும் இவனது கொழுந்தன் குட்டி பொன்னாடையும் சேர்ந்து கருந்திட்டைக்குடி கோயிலில் நந்தா விளக்கு ஒன்றை வைத்து எரிக்க செய்துள்ளனர்....

32. செல்வ முத்தரையன்:
----------------------------------

இரண்டாம் குலோத்துங்க சோழனின் 6ம் ஆட்சியாண்டில் கிபி ஆயிரத்து 1139 இல் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு வட்டம் திருவொத்தூரில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ள கல்வெட்டுத் தொகுதி 11 பக்கம் 5 கல்வெட்டு எண் 85 இல் இது உள்ளது...

மிருக வேட்டையாட சூற்றி மகன் கொங்கன் செல்ல முதரையணும், படபுலியன் என்பவனும் காட்டுக்குள் சென்றனர் வேட்டையின் போது கை தவறுதலாக கொங்கன் செல்ல முத்தரையன் விட்ட அம்பு படப்புலியான் மீது தாக்கியதால் இறந்துவிட்டான்...

இந்தப் பழி பாவத்தையும் பகையையும் நீக்கிட வேண்டி திருவோத்துடையர் சுவாமிக்கு பசு 16 கொடையாக அளித்துள்ளான்...

தொடரும்...

என்றும் அன்புடன்...
சிவமாரி அம்பலம்....
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்