| குகன் வழிவந்த வலையர்கள் | இந்தியாவில் அனைவருக்கும் இராமாயணம் பற்றி தெரியும். ராமன், லக்ஷ்மணன், இராவணன், மேகனந்தன், கும்பகர்ணன், விபீஷணன், அனுமன் போன்றவர்கள் தான் ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள். இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பல சமுதாயங்கள் இவர்களை தன் குடி என்று பெரும் அளவில் உரிமை கொண்டாடுவது இல்லை. பெரும் அளவில் தன் குடி என்று நிறையா சமுதாயங்கள் சொல்வது குகன், வால்மீகி போன்றவர்களை தான். அதுவும் காலம் காலமாக கூறி கொண்டார்கள். வால்மீகி ஒரு வேட்டுவர் என்று கருதபடுகிறது. வேட்டுவ மரபே சேர்ந்த கோலி, பேடர் (போயர், நாயகர்), வேட்டைக்கார நாயக்கர் என பலர் வால்மீகி அவர்களின் வம்சத்தினர் என்று சொல்கிறார்கள். அதேபோல் நிஷாதராஜ அரசன் தான் குகன். நிஷாதராஜன் என்கிற சம்ஸ்கிருத சொல் தமிழில் வேட்டுவ அரசன் என்று பொருள் ஆகும். ஆம், குகன் ஒரு வேட்டுவர். இவர் கம்ப இராமாயணத்தில் நாவாய் வேட்டுவர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஆயிர கணக்கான கப்பல் வைத்து இருந்தார் என்று கம்பராமாயண சொல்கிறது. இவரே ராமனுக்கு கப்பல் உதவியும் செய்தார் என்று நாம் அற...