முத்தரையர் கல்வெட்டுகள்
1.வடபரிசாரநாட்டு ஆலத்தூரை அவினாசி ஈஸ்வரன் கோயிலுக்குத் தேவதானமாக அளித்த கல்வெட்டில். வளஞ்சியன் பள்ளம் என்ற பெயர் இவ்வூரில் வளஞ்சியர் (வலையர்) பெருமை பெற்றிருந்தனர் என்பதைச் சுட்டுகின்றது.
2.விஜயாலய சோழ முத்தரையர், முத்தரையர்களிடம் இருந்தே தஞ்சையை கைப்பறினார் என்கிற ஆய்வாளர்களின் யூகத்திற்கு முற்றுப்புள்ளி | இந்தளூர் மற்றும் கழுக்காணி முட்டம் செப்பேடுகள், பல்லவ மன்னன் கம்பவர்மனிடம் இருந்தே விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றினார் என்று தெளிவுபடுத்துகிறது.
3.தேவர்மலை முத்தரையர்
குடைவரை கோயில் 👇
4.இலங்கைத் தீவில் 970 மீன் வலைஞர் சிற்றூர்களும் 400 முத்துக்குளிக்கும் கிராமங்களும் இருந்துள்ளது. அதில் முக்கால்வாசி ஊர்கள் கடல்கோளினால் அழிந்துள்ளது.
5.சங்ககால மீனவர்களின் குடியிருப்பு அமைப்பை கூறும் பெரும்பாணாற்றுப்படை | சிறிய குடிசை போன்ற வீடுகளிலும், பெரிய தூண்களையுடைய உயர்ந்த மாடங்களிலும் வாழ்ந்துள்ளனர். இந்நூல் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
6.இருப்பைக்குடி கிழவன், எட்டிச்சாத்தன் என்கிற சத்ரு பயங்கர முத்தரையர்
7.இலங்கையை சேர்ந்த தேவர் பட்டம் கொண்ட வளஞ்சியர் (வலையர்) இன மன்னர், செகல் சேவுகத் தேவன்
8.அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில், அர்த்தமண்டபம் வடக்குச் சுவர் கல்வெட்டு, கும்பனூர் முத்தரையன் நிலக்கொடை அளித்த செய்தியை கூறுகிறது. மேலும் முத்தரையர்களின் நில அளவை முறை முந்திரிகை என வழங்கப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
9.விருதுநகர் மாவட்டம் திருச்சுழியல் திருமேனிநாத சுவாமி அர்த்தமண்டபம் சுவர் கல்வெட்டு, முத்தரையர் ஒருவர் திருநொந்தாவிளக்கு எரிக்க தானம் வழங்கிய செய்தியை தருகிறது.
10.விருதுநகர் மாவட்டம் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோயில் தென்புறம் நடப்பட்டுள்ள தனிக்கல் | கேரளசிங்க முத்தரையனா மாதேவன் மருதன் என்பவர் நிலதானம் வழங்கிய செய்தியை தருகிறது.
Comments
Post a Comment