திருவானைக்கோயில் முத்தரையர் காவலும் காவற்காணியும்
சோழ நாடு மூன்றாம் ராஜராஜ சோழனின் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவானைக்கோயிலில் கிடைத்த கல்வெட்டு அரிய வரலாற்று செய்தியை தருகிறது.
கிபி 1236 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ராஜராஜ வளநாட்டு பாச்சில் கூற்றத்தில் கீழ்பாலாற்றை சேர்ந்த காரிச்சாத்தன் துறையில் காணி உரிமை பெற்றிருந்த தாமணித்தேவன் மற்றும் அவரது சகோதரர்கள் திருவானைக் கோயிலுக்கு நிலவிற்பனை செய்த தகவலை தருகிறது.
இவர்கள் நில விற்பனை செய்ததற்கு ஒப்புதலாக திருவானைக் கோயிலின் சார்பாக பெருமான் அழகனான மணவாள முத்தரையன் என்பவர் கிழிப்புணைத் தீட்டாக நாலாயிரம் காசுகளைப் பெற்று நிலத்தினை விற்றவர்களுக்கு அளித்துள்ளார்.
திருப்பெருந்துறை கோயிலின் மிக பொறுப்பில் விளங்கிய மணவாள முத்தரையன் ராஜேந்திர சோழ மங்கலத்தின் காவல் பொறுப்பினை ஏற்று அதற்காக சோழ அரசர்களால் காவல் காணி எனப்படும் சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டு சிறப்புற்று இருந்ததை கல்வெட்டு உணர்த்துகிறது.
பெருமான் அழகனான மணவாள முத்தரையனை
" ராஜேந்திர சோழ மங்கலத்து காணியுடைய கள்ளரில் பெருமான் அழகனான மணவாள முத்தரையன் "
" ராஜேந்திர சோழ மங்கலத்து காவல் காணியுடைய பெருமான் அழகனான மணவாள முத்தரையன்"
என குறிப்பிடுகின்றன.
சோழர் ஆட்சி காலத்தில் திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் திருவானைக்கோயில் மற்றும் திருவெள்ளறை பகுதிகளில் மிக உயர் பொறுப்புகளை வகித்த கள்ளரகளில் ஒருவரான அழகிய மணவாள முத்தரையர் சோழ நாட்டின் காவல் பொறுப்பேற்று காவல் காணி எனும் நில உரிமைகளை பெற்று விளங்கியதை கல்வெட்டு ஆதாரம் நமக்கு உணர்த்துகிறது.
பதிவு: தொல்லியல் துளிகள்
"காணி உடைய கள்ளரில் பெருமான் அழகான மணவாள முத்தரயனென்"
இதற்கு பொருள் 👇
காவல்காணி உடைய யானையை போன்ற பலசாலியான பெருமாள் போன்ற கருமையான அழகுடையவன் மணவாள முத்தரையன் என்று பொருள்-
ஆதாரம் 👇
Comments
Post a Comment