சுருதிமான் நக்கன் சந்திரனான இராஜமல்ல முத்தரையன்
இராஜேந்திர சோழனின் படைகளில் ஓர் படைப்பிரிவுக்கு படைவீரர்களாக இருந்த #சுருதிமான்களுக்கு #தலைமை வகித்த #இராஜமல்ல_முத்தரையன்
இந்தக் கல்வெட்டு இராசேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. "கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு ங-ஆவது" என்று தொடங்குவதன் மூலம், இது அவரது 3-ஆம் ஆட்சி ஆண்டு (சுமார் கி.பி. 1015) கல்வெட்டு
"வடகரை விழாநாட்டு" - அதாவது காவிரி ஆற்றின் வடகரையில் இருந்த விழாநாடு என்னும் நாட்டுப் பிரிவில் உள்ள ஒரு ஊரைப் பற்றி பேசுகிறது.
"சுருதிமான் நக்கன் சந்திரனான இராஜமல்ல முத்தரையன்"
#சுருதிமான் என்பது இராஜேந்திர சோழரிடம் இருந்த ஓர் படைவீரர் பிரிவை குறிக்கிறது.
#இராஜமல்ல_முத்தரையன் இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சோழ அரசின் படைத்தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். சுருதிமான்கள் இருந்த ஒரு படைபிரிவுக்கு முத்தரையர் தலைமை தாங்கினார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம்.
*கடகத்தில் என்பது படைமுகாமை குறிப்பது. அல்லது படை தலைமை இடமாக இருக்கலாம்.
பதிவு: 3lion stodio's
Comments
Post a Comment