"அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" கல்வெட்டு
இந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டு கிபி 1920 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அக்கல்வெட்டில் உள்ளது அருண்மொழிவர்மன் - அரசியார் பஞ்சவன் மாதேவியார் என்பது ஜனவரி 24, 2026 ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டது.
106 ஆண்டுகள் எத்தனையோ பேரின் ஆய்வுக்கு உட்பட்டாலும் அது அருண்மொழிவர்மன் என்பது எவர் மனதிலும் உதிக்கவில்லை.
இதற்கு முன்னர் வரலாற்று புதினம் எழுதிய #பாலகுமாரன் அவர்கள் முதலில் கண்டறிந்தாலும் அதனை வெளிப்படையாக தெரிவிக்காமல், அருண்மொழி வர்மன் முத்தரையர் குலத்தில் உதித்தவன் என்று பஞ்சவன் மாதேவியார் மற்றும் அவர் தந்தை பழுவேட்டரையர் அழைப்பது போல் வரிகளை உருவாக்கியிருந்தார்.
அதற்கு ராஜராஜனை ஏன் முத்தரையர் என்று சொல்லுகிறீர்கள் என்று பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
விஜயாலய சோழனே முத்தரையர் மகன் என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்த பிறகு
தற்சமயம் இராஜராஜ சோழன் மன்னராவதற்கு 12 ஆண்டுகள் முன்னர் தமது 25ம் வயதில் இளவரசராக இருந்த சமயம் அவருடைய அரசியார் பஞ்சவன் மாதேவியார் தன் கணவர் பெயர் "அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" என்று கல்வெட்டாக உடையார்குடி அனந்தீவரர் ஆலயத்தில் தெரிவித்துள்ளார் என்பதனை எடுத்துரைத்துள்ளேன்.
-ஜெகன் சுந்தரராஜன்
Comments
Post a Comment