வாணகோவரையர் முத்தரையர் என்பதற்கு முக்கிய சான்று :
🔴 கல்வெட்டு வரிகள் :
"கோப்பர கே
சரி பன்மக்
கு யாண்டு நா
ன்காவது வே
ட்டுவதி அர
யர் வாணகோ
வரையர் ஆன
ஆனைமங்கலம் மு
டய கள்ளன் தாழ
ன் மேல்க்கோவல்
லூர் நாட்டு அளவி
ப்பாடி தொறு மீட்டுப்
பட்டான் மன்றாடி கல்"
இதன் பொருள் :
வேட்டுவதியரையர் ஆன வாணகோவரையர் வேட்டுவ இன முத்தரையர் சாதி மன்னர். (அதியரையர் வலையர் சாதி அரசன்) ஆட்சியில் ஆணமங்களத்தில் வாழ்ந்த "கள்ளன் தாழன்" (பெயர்) என்பவன் ஆநிரைகளை மீட்க போராடி இறந்தான் அவனின் வீரத்தை போற்றி நடுகல் அவன் சமூகத்தை சேர்ந்தவர்கள் எழுப்பியது. அதாவது "மீட்டு பட்டான் மன்றாடி கல்" என்னும் கல்வெட்டின் வரிகள் (ஆநிரை மீட்டு இறந்த மன்றாடியான இடையரின் நடுகல் என்பது குறிப்பது).
🔴 வாணகோவரையர் முத்தரையர் என்பதற்கு முக்கிய சான்று :
● "#வேட்டுவதியரையன்" என்னும் சொல்லை பிரித்தால் வேட்டுவ+அதி+அரையன் என பிரியும். இங்கு அதியரையன் என்பது வலையர் சாதி அரசன் என்பதை குறிக்கும் "முத்தரையன்" என்பதன் மற்றொரு வடிவமாகும். எனவே வேட்டுவதியரையன் என்பது வேடர் இனத்தில் ஆளும் வர்க்கத்தவரான வலைய முத்தையரையர்களையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. இதை
வெங்கல நாட்டுப் பட்டக்காரரான காக்காவாடி பட்டக்காரர் வேங்கடாசல நல்லண கவுண்டன் அவர்களின் வம்சத்து "காக்காவாடி வேங்கடாசல நல்லண்ண கவுண்டர் வமிசாவளி" சுவடியும் உறுதிப்படுத்துகின்றது..
"பூர்வத்தில் குறுகுல வம்சமான க்ஷத்திரிய சாதியில் ஸ்ரீ காளஹஸ்திபுரத்தில் வாலைத்தனான ஈசுவர கடாட்சத்தினாலே பூஜை பண்ணிச் சுவாமியினுடைய அனுக்கிரகம் பெற்ற கண்ணப்ப நாயனார் என்கிறவருடைய #வேட்டுவச்_சாதியில் காளஹஸ்திபுரத்துக்கு ராஜாவான நாகராசர் என்னப்பட்ட வமிச பரம்பறற்களிலே "#முத்துராஜாக்கள்_கூட்டம்" என்று பேர் பிறசுத்தி பட்டவர்களாய் இருக்கும் நாளையில்...." என்று அந்த வமிசாவளி கைபீது சுவடி தெரிவிக்கின்றது.
அதாவது வேட்டுவ இனத்தின் தோன்றிய முத்துராஜாக்கள் கூட்டத்தினர்களே வேட்டவதியரையர்களான வாணக்கோவரையர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
🔴 ஆநிரை மீட்டு இறந்த வீரர் இடையர் :
● ஆநிரை மீட்டு இறந்தவர் கள்ளன் தாழன் கள்ளன் தாழன் என்பது இங்கே கண்ணனை குறிப்பதான பெயர்.
கண்ணன் இடையர் சமூகம் பெயருக்கு முன் கள்ளபிரானான கிருஷ்ணனின் பெயர்களுள் ஒன்றான கள்ளன் என்பதை வைத்துக்கொள்வதில் வியப்பேதும் இல்லை.
திருக்கோவிலுக்கு கொடையாளர்களால் வழங்கப்படும் ஆநிரைகளை பெற்றுக்கொண்டு கோவில் திருவிளக்கிற்கு நெய் அளந்து கொடுக்கும் இடையர்களை "#மன்றாடி" என வழங்கப்படுவது இதே முதலாம் பராந்தக சோழனின் வழித்தோன்றல்களான இராசராச சோழன் முதலிய மன்னர்களின் காலத்திலும் நடைமுறையில் இருந்த சோழர் கால கல்வெட்டுகளின் மரபு ஆகும். இதற்கு சான்றாக தஞ்சை பெரியக்கோவிலில் உள்ள பல சோழர் கால ஆநிரை கொடை கல்வெட்டுகள் உள்ளன. அவ்வாறு, திருக்கோவிலுக்கு கொடையாக வழங்கப்பட்டு மன்றாடி இடையர் பாதுகாப்பில் விடப்பட்ட ஆநிரைகளை கவர்ந்து சென்றவர்களிடமிருந்து
'கள்ளன் தாழன்' என்ற திருக்கோவில் மன்றாடி இடையர் சமூகத்தவன் ஆநிரையை மீட்க போய் அவர்களுடன் நடந்த சண்டையில் இறந்துவிட்டான். அவன் தியாகத்தை போற்றும் விதமாக அவர் சமூகத்தினர் நடுகல் எடுத்து வழிபட்டனர். அது மன்றாடி கல் என்று அழைக்கப்பட்டது அதாவது "இடையர் கல்". இந்த 'மன்றாடி' என்பது ஆநிரைகளை காத்து திருக்கோவிலுக்கு நெய் அளக்கும் இடையர்களை குறிப்பதே ஆகும்.
இதை நாம் மட்டும் சொல்லவில்லை இந்திய தொல்லியல் துறையினரின் நூலான" Annual report on indian epigraphy 1971-1972"ல் பக்கம் 55, கல்வெட்டு எண் : 230/1971-1972ல்
● "Records the death of Kallan Talan, a shepherd of Anaimangalam, after roscuing the cattle of Alavippādi in Merkövalür-nādu, whom Vettuvadi-araiyar Vanakō-araiyar was ruling. In characters of about the 10th century. Cf. ibid.. No. 1971/39"
● "#Kallan_Talan, #a_shepherd of Anaimangalam.." அதாவது கள்ளன் தாழன் (Kallan Talan) என்ற பெயர் கொண்ட ஆனைமங்கலத்தை சேர்ந்த இடையர் (Shepherd) என்பது இதன் பொருள்.
(பெருமாள் அடியார்களும் + யாதவ இடையர் குலத்தில் பிறந்த பெருமாளை இடையர் குலத்தில் உள்ளவர்கள் தங்கள் பெயருடன் சேர்த்து கொள்வதும் கள்ளன் என்பது பெயருக்கு முன்)
கல்வெட்டுகளில் வரும் கள்ளன் என்பது சில நேரங்களில் கல்தச்சர்களையும் கோனார்களை, பெருமாள் அடியார்களையும் குறிப்பதே. ஆங்கிலேயர் ஆவணங்களில் வரும் கள்ளன் என்பதே சாதியை குறிப்பது.
🔴 பொதுவான கல்வெட்டு பொருள் :
வேட்டுவ இன முத்தரையன் குல மன்னரான வேட்டுவதியரையன் வாணக்கோவரையர் ஆட்சியின் போது திருக்கோவிலுக்கு கொடையாக வழங்கப்பட்ட ஆநிரைகள் களவு போனதால் அதை மீட்க சென்ற மன்றாடி இடையரான கள்ளன் தாழன் என்பவன் திருடர்களோடு நடந்த சண்டையில் ஆநிரைகளை மீட்டு பின் இறந்து விட்டதால் அவனின் தியாகத்தை போற்றிய அவரின் உறவர்கள் அல்லது பொது சமூகத்தார்கள் நடுகல் எடுத்து அவனை தெய்வமாக நினைந்து வழிப்பட்டனர் என்பதாகும்.
பதிவு: 3 lion studios
Comments
Post a Comment