அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்” : ஒரு கல்வெட்டு சொல்லும் சோழ வம்ச ரகசியம்


உத்தம சோழரின் தந்தையான கண்டராதித்த சோழரின் 5ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 955) கொடும்பாளூர் அரசரான "மஹிமாலய இருக்குவேள் பராந்தக வீரசோழன்" பழுவேட்டரையரின் திருப்பழுவூர் ஆலயத்துக்கு நிலம் நிவந்தமாக கொடுத்துள்ளார்.

பழுவேட்டரையர் மற்றும் இருக்குவேளார் ஆகியோர் சோழனுடன் மன உறவில் இருந்தவர்கள் ஆவர்.

அதே போல் கிபி 972 ம் ஆண்டு கண்டராதித்தரின் மகனான உத்தம சோழர் 3 ம் ஆட்சி ஆண்டில் பழுவேட்டரையரின் மகளான அரசியார் பஞ்சவன் மாதேவியார் தனது கணவரான அருண்மொழிவர்மனின் பெயரை உடையார்குடி கல்வெட்டில் "அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்பெயரானது, அருண்மொழிவர்மனின் இருக்குவேளிர் உறவையும் பராந்தக சோழனின் வாரிசு என்பதனை எடுத்துரைப்பதாக உள்ளது.

மேலும், மஹிமாலய இருக்குவேளிரின் பழுவூர் கல்வெட்டு உடையார்குடி கல்வெட்டை வெளியிட்டது பழுவேட்டரையர் மகளும் இராஜராஜனின் மனைவியுமான அரசியார் பஞ்சவன் மாதேவி என்பதனை மேலும் உறுதி படுத்துகிறது.

S. ஜெகன்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்