முத்தன் பள்ளம் (நாவல்)
முத்தன் பள்ளம்: முத்தனின் முன்னோர்கள் திருக்காட்டுப்பள்ளி, செந்தலையை தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள் , ஆட்சி மாறுதலுக்குப் பிறகு நாயக்கர், மராட்டியர் காலத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் காவல்பணி செய்வதாக ஒப்புக்கொண்டு வெவ்வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள் . அப்படித்தான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்த முத்தனையும் ' தோப்புவிடுதி' பெருந்தலை தனக்கும், ஊருக்கும் காவகாக்க வேண்டுமென்று சொல்லி அழைத்துவந்து ஊருக்குக் கிழக்காக இடம் ஒதுக்கி தங்க வைத்தார்... தோப்புவிடுதிக்கு இடம்பெயர்ந்து வரும்போது , முத்தன் தன் குலதெய்வமான காவக் கருப்பையும் சேர்த்தே பிடிமண்ணில் சுமந்து வந்தான்.ஊரின் கிழக்காலே முத்தனும், ஊருக்கு மேற்காலே அடர்த்த பத்தைக்குள் அவன் குலசாமியான கருப்பசாமியும் குடியேறிக் கொண்டனர். முத்தனுடைய கருப்பசாமி தோப்புவிடுதிக்கு வந்து சேருவதற்கு முன்னாள் அந்த ஊருக்குள் பெண் தெய்வங்கள் மட்டும்தான் இருந்தது. கருப்பசாமி வந்த பின்னால் பெண் தெய்வங்களோடு காவக்கருப்பும் சேர்ந்து கொண்டதாகவும், கருப்பு சேர்ந்த பின்னாடி தாய்த் தெய்வங்களுக்கும் சக்தி கூடிப்போச்சு என்று ஊர