நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR / BHOYA / BHOI / BHOIR


நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR /BHOYA / BHOI /BHOIR

நாயக்கர் போயர்
-----------------------------------
நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR /BHOYA / BHOI /BHOIR
போயர்(Boyar) அல்லது போய நாயுடு என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியோர் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

பொருளடக்கம்
--------------------------------
1 போயர் (Boyar) என்றழைக்கப்படும் (Bedar) வேட்டுவ சாதி மக்கள்
1.1 மகாராஷ்டிராவில் போயர்கள்
1.2 தெனிந்தியாவில் போயர்கள்

2 வரலாறு
---------------------
2.1 இந்தியாவின் மத்திய மாகாணங்களில் போய நாயக்கர்களின் வரலாறு

3 முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள்
4 குறிப்பிடத்தக்க போய நாயக்கர்கள்
5 போய நாயக்கர்களின் கோவில்கள்

5.1 ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம்
5.2 ஸ்ரீ போய கங்கம்மா கோவில்
5.3 ஸ்ரீ சென்னகேசவ கோவில்
5.4 கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு

6 அரசியலில் போய இன முக்கியஸ்தர்கள்
7 இன்றைய நிலை
8 இன்றைய நிலையில் குறிப்பிடத்தக்கவர்கள்

போயர் (Boyar) என்றழைக்கப்படும் (Bedar) வேட்டுவ சாதி மக்கள்
இராமாயணம் ஒரு நாயகன்(Nayaka) = கிராத் (Kirat) = போய (Boya) = வேடர் (vedar) = பேட (Beda) சமூகத்தில் பிறந்த முனிவர் வால்மீகியால் எழுதப்பட்டது.

போயர்களின் சாதிய பெயர்கள் பின்வருமாறு அழைக்கப்படும்:-

வேடன் = வேடர் = கண்ணப்ப குல மக்கள், பேட அல்லது போய = போயர் = பேடர் = வால்மீகி.

போயர்கள் (Bhoyar), கவரா (Kavara) மற்றும் கோஹர்யா என்பன கோழி (Kohli ) இனத்திலிருந்து பூர்வ வழியாக வந்த இனமாகும்.[4]

கோழி (kolis ) இனத்தவர்கள் மகாராஷ்டிரா முழுவதுமாக இருப்பிடமாக கொண்டுள்ளனர், இவர்கள் கிராத் (kirat) வம்சவளியினறவர்,மேலும் இவர்கள் கஹர்ஸ் (Kahars) என்றும் அழைக்கபடுவர்.

கோழி (koli) இனத்தவர்களும் கிராத் (kirat) இனத்தவர்களான இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரின் இனமும் ஒன்றே என்றும் மேலும் இவர்கள் சூரிய குலத்தினை சார்ந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

கருநாடகாவில் பேடர் என்றும் வால்மீகி நாயக்கா என்றும் அழைப்பர் மேலும் தென் இந்தியாவில் போய டோரா எனும் வார்த்தை மருவி போயடுறு ஆக உருமாறி இறுதியில் போய எனும் சொல் வேடர்களை குறிக்க நிலைத்துவிட்டது.

போயர்கள், நாய்டு அல்லது நாயுடு, நாயக், டோரா (ராஜா) , டோரா பிட்டா (ராஜபுத்திரர்கள்) மற்றும் வால்மீகி என்று அழைக்கபடுவர். இதை Edgar Thurston அவர்கள் சென்னை மாகாணத்திற்கான மக்கள் துகை கணக்கெடுப்பின் பொழுது அரசுக்கு அறிக்கை அளித்த பொழுது பின்வருமாறு கூறியுள்ளார். The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.[7]

போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.

மகாராஷ்டிராவில் போயர்கள்
போயர்கள் மகாராஷ்டிராவில் போய் (bhoi) என்றும் ரமொஷி (Ramoshi) என்றும் அழைக்கபடுவர், போய் என்பது தெலுங்கு வார்த்தையான போயாவில் இருந்து மருவி வந்ததாகும், மேலும் போய் இரு வேறு பிரிவு மக்களாக பிரிதரியப்ப்பட்டனர் அவை முறையே பேஸ்த மற்றும் குன்லோடு என்பவையாகும்.தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்த போய இனமக்கள் மகாபாரதத்தில் வரும் கங்கையின் புத்திரரான பீஷ்மரின் வம்சாவளியினராவர். இதில் உட்பிரிவினரான காஜலு (Kajale) மற்றும் கம்பளி (Kampale) இனத்தவர்கள் அடங்குவர்.[8]

மகாராஸ்ட்ராவில்[9] சில போய மீனவ சாதிகள் பெயர்கள் பின்வருமாறு:-

மசிந்தர் போய - Machindar Bhoi
பரதேசி போய - Pardesi Bhoi
தேம்பார் போய - Dembhar Bhoi
கஹர் போய - Khar Bhoi and
கோழி போய - Koli (Bhoi)
மகாராஸ்ட்ராவில்[10] உள்ள கோலாப்பூரில் போய மீனவர்களின் சங்கத்தின் பெயர் தங்களது சமூகத்தின் பெயரினை முன்னிறுத்தி பின்வருமாறு பெயர் சூட்டியுள்ளனர்:- போயராஜ் மீனவர்கள் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (Bhoiraj Fisheries Co-operative Society Ltd) ஆகும்.

திருமணம் — போய பேஷ்ட இன மக்கள் பின்வரும் பதினான்கு பிரிவிகளுக்குள் மணமக்களை பந்தம் மேற்கொள்ள முனைவர்.

கட்டேவாடு Kattewadu (stick)
மம்ளிவட Mamliwada (mango).
கண்டவாடு Gantawadu (bell).
குண்டோடு Gundodu (ball).
புசவடு Pusawadu (beads).
சின்டவாடு Chintawadu (tamarind).
டுன்டிவாடு Duntiwadu (pile).
நாசுவாடு Nasuwadu.
சீமல்வாடு Shebelawadu.
பாடவாடு Badawadu.
அல்லேவாடு Allewadu.
குரெப்ஒமௌ GurebomoUu.
பம்பரோல்லு Pamparollu. &
வேமொலொள்ளு Vemolollu.

மேலும் மராத்த போயர்கள் (maratha Bhois ) பின்வருமாறு பின்வரும் இருபத்தி மூன்று பிரிவுகளாகும்.

அதானே - Adane
லோனரே - Lonare
தம்க்ஹனே - Tamkhane
லடகே - Landage
நமதே - Nemade
க்ஹண்ட்களே - Khandgale
தகே - Dake
வண்கஹிலே - Wankhile
ஹிரவே - Hirawe
ஜிரங்கே - Jirange
கேசபுரே - Kesapure
ஜம்டடே - Jamdade
காஜலே - Kajale
பபலே - Pabale
புஜங்கே - Bhujange
கம்பள - Kambale
சுர்டுஷே - Surdushe
சட்டே - Satode
பவனே - Bavne
கவண்டே - Gavande
பாடச்கள் - Bhadaskal
கோனே - Ghone &
காதமல் - Ghatmal
முதலியனவாகும்.[11]

கருநாடக போயர்கள், பேடர் (Bedar), பேந்தர் (Bendar) மற்றும் பேராட் (Berad) சூர்யகுல சத்திரிய வம்சமான வால்மீகி குலமாகிய மகாராஷ்டிரா ராஜபுதிரர்களான ரமொஷி இனமாகும்.[12]

தெனிந்தியாவில் போயர்கள்
கி பி பதினாறாம் நூற்றடில் கருநாடக தேசத்தினை அரசாட்சி செய்துவந்த, சித்ரதுர்கா அரச குடும்பமானது வேடர்கள் எனும் போய நாயக்கர்களின் வம்சமாகும். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) வம்சாவளியான வால்மீகி குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் எனும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும், மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும்.

போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு பிரிவே ஆகும். முடிராஜ் இனத்தை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோழி (Koli) என்றும் அழைப்பர். இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் புலனாகின்றது.

சூரிய குலமான போய (Boya) வால்மீகி முனிவரின் கோழி வம்சாவளியினரை பின்வருமாறு அழைப்பர்:- பலிஜா, பாலிஜி, குருச்துல மற்றும் நாயுடு (Balija / Balji / Gurusthula / Naidu) என அழைப்பர். இவர்கள் மதுரை (Madura), தஞ்சாவூர் (Tanjore) மற்றும் விஜயநகர் (Vijayanagar) ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அட்சிபுரிந்துவந்துள்ளனர். பலிஜா இனம் இரு பிரிவுகளை உடையது.

தேச (Desa )பலிஜா எனும் கோட்ட (Kota ) இனம் அரச இனம் என்றும் மற்றொன்று
பேட்ட (peta) எனும் வணிகர்கள் ஆவர் மேலும் இவர்கள் காஜலு (Gazulu ) எனும் வளையல்
விற்பவர்களாவர்.மேலும் இவர்கள் பெருகி (periki ) எனும் உப்பு (salt Seller ) வியாபாரிகள் ஆவர்.

போயர்கள் தங்களை வால்மீகி பிராமணர்கள் என்றும் கூறிக்கொள்வர்,[18]மேலும் சேடர் (sadaru) மற்றும் லிங்கயத் (lingayat) இனமக்கள் போய இனத்தின் துணை பிரிவாகும்.

சென்னையில் போய இன மக்களின் துணை பிரிவான குல்டி (Gulti) இன மக்கள் சென்னையில் சூளை பகுதிகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வாழ்ந்ததாக 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Gulti - A section of Boya, members of which are to be found in Choolay, Madras City.)

போய இன மக்களின் ஒரு துணை பிரிவே ஒட்டர் இன மக்கள் ஆவர், அவர்கள் கல் ஒட்டர். மண் ஒட்டர், மற்றும் பாய் ஒட்டர் என்றும்,பொதுவாக நாயக்கன் என்றும் போயர் என்றும் கூறுவர், 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேச கக்காட்டிய பேரரசில் போய மற்றும் கம்மா சத்திரியர்கள் முசுனுரி நாயக்கர்களாக அரசாட்சி புரிந்துவந்தனர். தில்லி சுல்தான்களின் இருந்து 1326 - ஆம் ஆண்டில் மீட்கபட்டபின்னர் கிங் பிரதாப ருத்ரா அவர்களின் அரசவையில் எழுபத்தைந்து நாயக்கர்களாக போயர், வேலாம, கம்மா, ரெட்டி, தெலுகா, மற்றும் பலிஜா போன்ற வேளாண்மை சார்ந்த சாதிகளுக்கும் நாயக்கர்களாக இருந்து ஆட்சிபுரிந்தனர். பின்னர் 17 - ஆம் நூற்றாண்டில், நாயக்கர்களின் பரஸ்பர பொறாமை மற்றும் போட்டி பிரிந்திருக்க அவசிமாயிற்று, ஆகையால் போயர்கள் (Boyars /Bedars), பின்வரும் தொழில்களை செய்து தங்களை பொருளாதார சூழல்களுக்கு தக்கவாறு மாற்றிகொண்டனர். அத்தொழில்கள் பின்வருமாறு:- கொல்லர்கள், சிற்பிகள், மேன்மக்கள், தலைவர்கள், துறவிகள் , நில உரிமையாளர்கள், கோவில் சிற்பிகள், கை வர்த்தகர்கள், மற்றும் கடல் வழி தொழில்கள் செய்பவர்கள் என தங்களை வேறுபடுத்தி பல்வேறு பிரிவுகளாக பிரிந்தனர்.

கர்நாடக வரலாற்றில், வேட (போய) இன மக்களை வால்மீகி மக்கள் நாயகன், பேட, தலைவர என அழைக்கப்பட்டனர். சித்ரதுர்கா, சுர்பூர், கேளடி, போன்ற இடங்களை கர்நாடகா வால்மீகி சமுகத்தை சேர்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததை வரலாற்று சுவடுகளின் மூலம் இன்றும் காணலாம். இந்த மக்கள், வால்மீகி (Valmikis) என்றும் அழைக்கப்டுகின்றனர், பேட (போய / அதாவது ஹண்டர்ஸ்), தளவர் (அதாவது பூர்வீக குடிகள்) கடந்த காலங்களில் நாயக்கர் சமூகமாக இருந்து சிறந்த ஆட்சி நிர்வாகத்தினை அளித்துள்ளது சிறப்பான ஒன்றாகும், தற்போது பேட (போய) மற்றும் தளவர் சமூகங்கள் நாயக்கர்களின் அடையாளங்களாக உள்ளன.

விஜயநகர பேரரசு (கி.பி.1300), சித்ரதுர்கா (Chitradurga) பகுதியில் "Nayakas" என்று சிற்றரசர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. போய தளபதி Timmanna நாயகன் திறமைகளை பாராட்டி அவரின் சாதனைகளுக்காக தனது சிறந்த பரிசாக விஜயநகர பேரரசின் கீழ் இருந்த சித்ரதுர்கா அரசாட்சியினை போய திம்மன்ன நாயக்கருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் சித்ரதுர்கா கோட்டை கி.பி.1562-ஆம் ஆண்டு முதல் 1565-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது, விஜயநகர நகரம் வீழ்ச்சிக்கு பிறகு, தங்கள் சுதந்திரத்தை போய நாயக்கர்கள் பிரகடனம் செய்தனர். சித்ரதுர்கா போய குடும்பம் மற்றும் பெரும்பாலான மற்ற மைய கர்நாடகா நாயக்கர்களின் எச்சங்களை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். பின்னாட்களில் சித்ரதுர்கா போயர்களின் தலைநகரானது, கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு இறுதிவரை ஆட்சிபுரிந்து வந்தனர். இறுதியாக 1799-ஆம் ஆண்டில் ஹைதர் அலி வசமானது, பின் நாட்களில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவின் மத்திய மாகாணங்களில் போய நாயக்கர்களின் வரலாறு
பாரத தேசத்தில் மக்கள் மற்றும் அரசவம்சமும் இரண்டு வர்கங்களிளிருந்தே தோன்றியதாக கருதப்பட்டு வருன்கின்றது, ஒன்று சூரிய வம்சம் (Solar or Sun Race) மற்றொன்று சந்திர வம்சம் (Moon or Lunar Race) ஆகும். கச்வஹா,கோழி,பாயிஸ்,மற்றும் பட்கிஜார் ஆகிய இனங்கள் விஷ்ணுவின் அவதாரம் எனகருதபடும் ஸ்ரீ ராமரின் அவதாரம் சூரிய வம்சமே ஆகும்.(Kachhwaha, Gohil, Bais and Badgijjar, are recorded as being of the solar race, descended from Vishnu through his incarnation as Rama)

மௌரிய (Maurya) அரச வம்சம் சூரிய (Solar or Sun Race) குலமாகும் வம்சாவளி ஆகும்.[26]

ஆட்சிக்கு உட்பட்ட இடங்கள் : பஞ்சாப், பாட்னா, ஒரிசா மற்றும் மைசூர் ஆகியன.

ஆட்சி செய்த இடங்கள்: கி.மு.322 ஆம் ஆண்டு முதல் 185 ஆம் ஆண்டு வரை

மொழி : சமஸ்கிருதம் மற்றும் பரகிரத் (Sanscrits and Prakirats)

மதம் : பிராமனிஷம், புத்திசம் மற்றும் ஜைனிசம்

ஆட்சி புரிந்த அரசர்கள் : சந்திரகுப்தா மௌரிய, பிந்துசார, அசோக பேரரசர், தசரத சக்ரவர்த்தி மற்றும் ப்ரிஹ்றதா ஆகியோர் ஆவர். (Chandragupta Maurya, Bindusara, Ashoka the great, Dasaratha, Satadhanvan, Brihadratha)

ஆங்கில போயர் (Bhoyar) எனும் வார்த்தை போயர் (Bhoir) எனும் வார்த்தைக்கு சமமானது, இவர்களின் மேன்மை பொருந்திய பிற பெயர்கள் மகாஜன் (Mahajan), படேல் (Patel) எனவும் இது ராஜபுத்திரர்கள் வழி வந்த பன்வர் (Panwar) எனப்படும் சாதியிலிருந்து வந்த துணை சாதி பிரிவுகளாகும். போயர் (Bhoyar) என்பது Bhor என்று பொருள்படும் Bhor என்றல் சூரிய விடியல் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம் மற்றும் சூரிய குலம் என்றும் பொருள்படும்.

போயர்கள் (Bhoyars) நான்குபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர் அவை பின்வருமாறு:

பன்வாரி - Panwari
தலேவர் - Dalewar
சுராசிய - Chaurasia
தரியா - Dharia
மேலும் நூற்றிற்கும் மேலான குல பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இவர்கள் விவசாயத்தினை தொழிலாக கொண்டவர்களாக இருந்துவந்துள்ளனர். மேலும் இவர்கள் உணவை பிராமணர் அல்லாதோரிடத்தில் ஏற்க மாட்டார்கள், மேலும் நீரினை சமமானவர்களிடத்தில் பெற்றுகொள்வர்.போயர்கள் தங்களின் குழந்தைகளுக்கு பத்து முதல் பன்னிரண்டு பெயர்களை இடுவர், மேலும் அவை யாவும் சரிவர அமையாவிடில் சோதிடர் இறுதிமுடிவாக ஒரு நல்ல பெயராக நட்ச்சத்திர முறைப்படி இடுவார்.

போயர்கள் மற்றும் கோழி ஒரே சமூகத்தினை சார்ந்தவர்கள் அவர்கள் முறையான விவசாயத்தினை அறிந்து விவசாயம் செய்துவந்தனர், கலை எடுத்தல், நெல் பயிரிடுதல் மற்றும் கரும்பினை விவசாயம் செய்திருந்தனர் மேலும் பாத்திகட்டி நீர்பாசனம் செய்தல் என்பன ஆகிய முறைகளை அறிந்திருந்தனர். கோழி (kohli ) இனத்தினர் பெரிய நீர் தேக்க அணைகளை கட்டும் தொழிலினையும் மற்றும் சிறு விவசாய வழியினரும் ஆவர்.

தரியா (dharia - from Dhar , the old name of Jubbulpore country ) ராஜபுத்திர வம்சாவளியினர் ஆவர், அந்த வம்சாவளியினர் போயர் (Bhoyar ), பாலர் (Balar ), மஹார் (Mahar ), மராத்தா (Maratha ), & தெலி (Teli ) மற்றும் சாடர் (Chadar ) & கலிய (Kalia ) துனைபிரிவினராவர்.

தொக்வர் (Dhokwar - Sub caste of bhoyar ) போயர் மற்றும் கோழியின் (Goali ) துணை சாதியினராவர்.

பன்வர் - ஒரு ராஜபுத்திர சமூகமாகும் மற்றும் பஞ்ச மற்றும் போய (Banja & Bhoya ) சமூகங்கள் பன்வரின் துணை சமூகங்களாகும் மேலும் அஹிர் (Ahir ), பிலாலா (Bhilala ), கோசாலி (Kosli ), மராத்தா (maratha ) மற்றும் மாரோரி (Marori) பன்வர் எனும் சமூகத்திலிருந்து வந்த உட்பிரிவுகளே ஆகும்.

அஹீர் (Ahir) எனும் ராஜபுத்திர இனத்தினை,கோலி (Gaoli), கோள (Guala),கோளகர் (Golkar),கோலன் (Gaolan), ரவட் (Rawat),கஹ்ர (Gahra), மகாகுல் (Mahakul) என அழைப்பர்

கோளகர் (Golkars) தெலுங்கிலிருந்து மருவிய கொல்லர் (Golars) எனும் வார்த்தையாகும். (The Golkars of Chanda may be derived from the Telugu Golars or graziers).

அஹீர் இனத்தவரான கோழி இனத்தவரே தற்பொழுதும் நேபாள (Kings of Nepal) நாட்டின் அரசர்களாக உள்ளனர்.

அஹீரின் துணை சாதிகளாக அஹீர் சுனார்,சூத்திர,லஹர்ஸ்,சிம்பி,செயில், குரோ மற்றும் கோழி என்பனவாகும். (In many castes there is a separate division of AhIrs, such as the Ahir Sunars, Sutars, Lohars, Shimpis, Sails, Guraos and Kolis)

கடவுளின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் அஹீர் இனத்தவராவார், மேலும் இவர் பாண்டவர்களின் உறவினரும் யாதவ (Yadava) குல அரசரும் ஆவார், மேலும் அஹீர் இனத்தின் ஒரு துணை பிரிவினரே கொவரவர்கள் (Gowara) மற்றும் கென்ட் கவரா Gond - Gowaris அழைக்கபடுவர். (In Chanda the Gowaris are admittedly descended from the unions of Gonds and Ahirs, and one of their subcastes, the Gond- Gowaris)[36]ஸ்ரீ கிருஷ்ணர் சந்திர குலத்தினை (Moon or Lunar Race ) சார்ந்தவராக இருப்பினும், அவரின் தந்தையின் வழி சூரிய குலம் (Solar or Sun Race) என்பதனை மறுபதற்கில்லை, மேலும் அக்காலத்தில் மகாபாரதத்தில் வரும் பீஷ்மரின் அவர்களின் தாயாரின் பெயர் கங்கா என்னும் பெயரினை முன்னிறித்தி போய எனும் கங்கவார் குலமும், மேலும் அதனை கங்கமாத என்றும் மற்றும் கங்கபுத்ரா என்றும் அழைக்க படுவர். எனவே அக்காலத்தில் தாயாரின் அடையாளங்களை முன்னிருத்தியே வர்கங்கள் தேன்றின ஆகையால் இந்த சூரிய மற்றும் சந்திர வம்சாவளி குலத்தோன்றல் விஷயங்கள் முற்றுபெருகின்றன. (It has not been forgotten that Krishna is sometimes given, on his father's sides, a solar pedigree ; but it is as member of a lunar dynasty, the Jadons of Mathura, that he is chiefly celebrated.)

போயர்கள் (Bhoya மற்றும் கொற்கு (Korku) இனத்தவர்கள் தார் (Dhar ) எனும் நகரினை பூர்விகமாக கொண்ட வம்சாவளியினர் ஆவர். மேலும் பெப்ச (Bopcha ) எனும் கொற்கு (Korku இனம், போயர்கள் (Bhoya - Cultivator), பாரதி (Parthi - Hunter ), கோழி (Kohil - Local Cultivating Caste ), சனரியா (Sanaria - Tribe ), சௌதரி (Chaudhari - Head Man), பட்லிய (Patlia - Patel or Chief office of a village ), மற்றும் சோன்வானியா (Sonwania - one who purifies offenders among Gonds & other tribes) ஆகியோர் ஒரே ரத்த இனத்தினை (வம்சாவளியினர்) சார்ந்தவர்கள் இவர்கள் தங்களுக்குள் பெண் குடுத்து பெண் எடுதுக்கொள்ளுவர்.

பன்வர் (Panwar / Puar / Ponwar / Paramara Rajput) என்பது அக்னிகுல வம்சமாக குறிபிடப்பட்டுள்ளது, அக்னிகுலம் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை முறையே:

பன்வர் - Panwar
சவுகான் - Chauhan
பரிகார் - Parihar &
சாளுக்ய அல்லது சோழன்கி - (Chalukya or Solanki) ஆகியனவாகும்.
பன்வர் இனத்தவர்கள் மல்வா (Malwa) எனும் உஜ்ஜைன் (Ujjain ) அரசர்களாவர் மேலும் தார் (Dhar) எனும் இடத்தினை தலைநகராக கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள் ஆவர்.

சாளுக்கிய சம்ராஜியாமனது போய சாம்ராஜ்யம் ஆகும், இவர்கள் ஒரிசா தேசத்தினை கி .பி. 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து 234 ஆண்டுகள் 12 போய அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

போய மக்கள் பூர்வீக குடிகள் என்று ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டத்தில் உள்ள போய கிராம வரலாற்றுச்சுவடுகள் கூறுகின்றன, மேலும் அவர்கள் மேல்குடிமக்களான ராஜபுத்திரர்கள் என்றும் கூறுகின்றன.

முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள்
ஒரிசா தேசத்தினை சூரிய குலமான (Solar Race ) கங்கவார் பேரரசு (Imperial Gangas) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினாறாம் நூற்றாண்டுவரை பல்வேறு பெயர்களை உடைய சூரியகுல ராஜவம்சத்தினர் ஆண்டுவந்துள்ளனர், கி.பி.1519 ஆகஸ்ட் மாதத்தில் ஒரிசா தேசத்தினை ஆண்டுவந்த சூரிய வம்ச அரசரான பிரதாப ருத்ர தேவா (Pradapa Rudra Deva) அவர்களை விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயர் (Krishna Deva Rayar) சூரிய குல வம்சாவளியான போரில் வெற்றிகொண்டு சூரிய வம்ச அரசரான பிரதாப ருத்ர தேவா (Pradapa Rudra Deva) அவர்களின் புதல்வியான ஜகன்மோகினி (Jaganmohini ) அவர்களை திருமணம் புரிந்தார்.

குறிப்பிடத்தக்க போய நாயக்கர்கள்
கண்ணப்ப நாயனார் எனும் போய தின்னடு ஒரு வேட குடும்பத்தில் பிறந்தார். அந்த இடம், கோவில் நகரமாம் திரு காளகஸ்தியில் (ஆந்திர பிரதேசம்) உள்ளது. அவர் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீபுரம் மற்றும் மும்மிடி சோழபுரம் மலைப்பாங்கான வனபகுதியில் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டிருந்தவர். இவர் சிவபுராணத்தில் சிறந்த சிவனடியாராக விளங்கியவர், மேலும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக அறியப்பட்டவர், இறைவன் சிவபிரானுக்கே தனது கண்களையே அம்பால் கொய்து சிவபிரானுக்கு அளித்தவர், அதனால் சிவபிரானின் அன்பிற்குப் பாத்திரமாகி பெரும்பேறு பெற்றவரானார்.

போய நாயக்கர்களின் கோவில்கள்
ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம்
ஸ்ரீ பூரி ஜெகநாதர் ஆலயம் கி.பி. 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை பரம்பரை பரம்பரையாக சத்ரிய வம்சமான சாளுக்கிய மன்னர்கள் வழி தோன்றலாகிய போய அரச வம்சாவழி மக்களால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது.

ஸ்ரீ போய கங்கம்மா கோவில்
பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) ஒரு சிறுகுன்றினைச் சுற்றி காட்டுப் பகுதியில் வசித்து வந்தார்கள். அந்த பகுதிகளில் நவாப்புகளின் அடக்குமுறை மீது சீற்றம் கொண்டிருந்தனர். ஒரு நல்ல சந்தர்பத்தில் போய பழங்குடிகள் நவாப்பின் வீரர்களை அந்த சாம்ராஜ்யத்திலிருந்து விரட்டி அடித்தனர், அது அந்த மலையில் இருந்த அம்மன் ஸ்ரீ சக்தி தேவியின் கருணையால் என நினைத்து இன்றளவும் ஸ்ரீ சக்தி தேவியினை போய மலை கங்கம்மா என அழைத்து வழிபட்டு வருகின்றனர், இந்த தலம் திருப்பதி மலையருகில் சில கிலோமீட்டர் துரத்தில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வரும் நவராத்திரி காலங்களில் திருவிழா எடுப்பர், அந்த சமயத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீ கங்கம்மா தேவியினை தரிசிக்க வருகை புரிவர், இக்கோவில் 1990 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அறக்கட்டளை துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஸ்ரீ சென்னகேசவ கோவில்
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் கடவகல்லு புத்தூர் மண்டல் எனும் ஊரிலுள்ள சென்னகேசவ கோவில் போய பாளயக்காரர்களான (Palegar / Palayakarar = Local Kings ) மேசா திம்மன்ன நாயுடு அவர்களால் 16 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது, தற்பொழுது ஆந்திரபிரதேச அரசால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு
கோவில்களில் போய நாயக்கர்களின் பங்கு அளவிடமுடியாதது, கோவில்களுக்கான அதிகமான திருப்பணிகளை செய்துவந்துள்ளது வரலற்றுச்சுவடுகளின் மூலமாக அறியமுடிகின்றது.

அரசியலில் போய இன முக்கியஸ்தர்கள்
மறை திரு டாக்டர் B.R .அம்பேத்கார் போய இனமான மஹார் (Mahar ) எனும் துணை பிரிவினை சார்ந்தவராவார்.

இன்றைய நிலை
போயர்களை மத்திய அரசு பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், ஆந்திரப்பிரதேசத்தில் பின்தங்கிய சமூக வகுபினராக ஏ பட்டியலிலும் அறிவித்துள்ளனர், மற்றும் தமிழகத்தில் போயர்கள் (Boya, Boyas, Boyer / Boyar) எனக்குறிப்பிட்டு பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வைத்துள்ளனர்.

குறிப்பு: இச்செய்திகள் அனைத்தும் போய நாயக்கர்களின் Blogger ல் இருந்து எடுக்கப்பட்டது, இதன் உண்மைத்தன்மையை அறிந்தவர்கள் விளக்கவும்...

எதிர்பார்ப்புடன்...
சித்தன் சிவமாரி
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER