மூன்று தரை பல்லவ முத்தரையர்கள்
நாடாண்ட முத்தரைய மன்னர்கள் ______________________________ பல்லவ முத்தரையர்கள்: ------------------------------------------- 1. பரதன் வியாளகஜ மல்லப் பல்லவரையன்: முதலாம் இராராஜனின் கி.பி. 987 ல் உடையார்குடி கல்வெட்டில் இவனைப்பற்றிய செய்திகள் வந்துள்ளன. இதனை ஆவணம் இதழ் கல்: 1994ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. பரதன் வியாள கஜ மல்லப் பல்லவரையனின் தந்தை பல்லவ முத்தரையன் ஆவான். இந்தப் பல்லவ முத்தரையன் வெண்ணையூர் நாட்டவன். இவன் அரசியல் செல்வாக்குப் பெற்ற தலைவனாக இருந்தவன். இவனது அபிமானம் பெற்ற ஆதித்த கரிகால் சோழ இளவல் ஒருவனைச் சில அதிகாரிகள் கூடிக் கொன்று விட்டனர். இந்த இவளலின் ஆன்மா சாந்தியடைய வேண்டி 2 3/4 வேலியும், 1 மா நிலத்தையும் விலைக்கு வாங்கியுள்ளான். இந்த நிலத்தை திரு நந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயில் முன்பு கட்டப்பட்டுள்ள மூவாயிரத்து நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீராட்டும் அந்தனரின் பராமரிப்பிற்காக கொடையாக அளித்துள்ளான். இதன் மூலம் இவனுக்கும், கரிகால் சோழனுக்கும் குல அடிப்படையில் பிணைப்பு இருந்துள்ளதை நன்கு அறியலாம். 2. பல்லவ முத்தரையன்: -------------------------------