எரிகல் முத்துராஜு தனஞ்சயவர்மன் (முத்தரையர்களின் முதல் கல்வெட்டு)


(எரிகல் முத்துராஜு தனஞ்சயவர்மன்)

களமல்ல கல்வெட்டுப்
பாடமும் விளக்கமும்...

கல்வெட்டு பாடம்:

……../ కల్ముతురా / జు ధనంజ / య ఱు రేనా / ణ్డు ఏళన్ / చిఱుంబూరి / రేవణకాలు / (పం) పు చెనూరు కాజు / ఆఱికాశా ఊరి / ణ్డవారు ఊరి / న వారు ఊరిస…/ హాపాతకస / కు

….. / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi / raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa…. / hapatakasa / ku

… / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரைனா / ண்டு ஏலன் / சிறும்பூரி /ரைவணகாலு (பம்) / பு செனூரு காஜு / அரிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச …. / ஹபாத கச / கு

1. ……………….
2. కల్ముతురా  கல்முத்துரா
3. జు ధనంజ  ஜ தனன்ஜ
4. య ఱు రేనా  ய ரு ரைனா
5. ణ్డు ఏళన్  ண்டு ஏலன்
6. చిఱుంబూరి  சிறும்பூரி
7. రేవణకాలు (పం)  ரைவணகாலு(பம்)
8. పు చెనూరు కాజు  பு செனூரு காஜு
9. ఆఱికాశా ఊరి  அரிகாசா ஊரி
10. ణ్డవారు ఊరి  ண்டவாரு ஊரி
11. న వారు ఊరిస…  னவாரு ஊரிச
12.
13.
14.
15.
16. హాపాతకస  ஹபாதகச
17. కు.  கு

தனஞ்சயன்:- குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன், வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன், சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி, அற்றமில் அர்ச்சுனற்கே அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)

கல்வெட்டுப் பொருள்: (மொழிபெயர்ப்பு)

எரிகல் முத்துராஜு தனஞ்சயரின் ரைணாட்டை எதிர்த்துச் சண்டையிட சிறும்பூர் ரைவண்ணன் காலாட்படையை அனுப்பியதும் செனூரு காஜு (ஆரிகாசா) ஏளனமாகக்  கொக்கரித்துச் சத்தமிட்டு சண்டைக்குப் புறப்பட்டான். அச்சமயம் (ஊரிண்டவாரு) ஊர்ப்புறம் வாழ்ந்த (இண்டர் – இடையர், கீழ்க்குலத்தோர்) கீழ்க்குலத்தவர்களும் (ஊரினவாரு) ஊரிலுள்ளவர்களும் ஊரின் (ஒரு இடத்தில் ஒன்றாகத் திரண்டனர்) – – – – (பாதகசகு) நடையைப் பின்வாங்கினர்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER