இரணசிங்க முத்தரையர் கல்வெட்டு

2017 கால பதிவு...

இரணசிங்க முத்தரையன்
கல்வெட்டு கண்டுபிடிப்பு "விலக்க
ஏரன் இரணசிங்க முத்தரையன்"

பற்றிய 1100 ஆண்டுகள்
பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு !

------------------------------------------
------------------------------------------


முத்தரையர் மரபில் ஒன்பதாம் நூற்றாண்டில் தன்னாட்சி பெற்று ஆண்ட கோஇளங்கோ முத்தரையனின் சம காலத்தில் புதுக்கோட்டை பகுதியில் இந்த 'இரணசிங்க முத்தரையன் '  ஆதித்த சோழனுக்கு பக்க பலமாக இருந்து நாடாள்வாராகச் செயல்பட்டுள்ளார்.

நிருபதுங்கப் பல்லவனின் கல்வெட்டு குறிப்பிடும் "முத்தரையர் நாடு" பகுதியில் முத்தரையர்களின் நேரடி ஆட்சி நிறைவுற்றபிறகு ஒன்பதாம் நூற்றாண்டுவாக்கில் நாடுகட்டி ஆண்ட  முத்தரையர்கள் பின்னர் சோழப்பேரரசிற்கு உட்பட்ட நாட்டு அரையர்களாகவும், நாடாள்வாராகவும் மாற்றம் பெற்றனர். ( உதாரணம் - முத்தரையர் மரபினராகிய தானவதரையர்கள் ஆண்ட தானம நாடு)

பிற்காலச் சோழராட்சியில் நாட்டுத் தலைவர்களாகவும், நாடாள்வாராகவும், அரையர்களாகவம் , படைத் தளபதிகளாகவும், போர் மறவர்களாகவும் மாற்றம் பெற்ற முத்தரையர்கள்  நீர்ப்பாசனப் பணிகளுக்காக,  நீர் மேலாண்மையை மேற்கொண்ட செய்திகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது இரணசிங்க முத்தரையனைப் பற்றிய  செய்தி புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வுக் குழுவினரின் மூலம் தெரிய வந்துள்ளது... கந்தர்வக்கோட்டைப் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளிலேயே காலத்தால் முந்தைய கல்வெட்டாகவும் இது கருதப்படுகிறது.

என்றும் அன்புடன்...
உங்கள் ((((( *சிவமாரி* )))))

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER