மூன்று தரை சோழ முத்தரையர்கள் (26முதல் 28வரை)
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: _____________________________________ சோழ முத்தரையர்(கள்): __________________________ 26.கம்பன் அரையன் ஸ்வஸ்திக் கிணறு. -------------------------------------------------------------------- மாற்பிடுகு பெருங்கிணறு (விசைய நல்லூழான், கம்பன் அரையன், அரையன் தாழி) விசைய நல்லூழான் என்ற முத்தரையனின் ஒரு கல்வெட்டு, தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீளூரில் உள்ளது. இதில் இவன் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலம்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவன் என்கிறது. இவனும் இவனது தம்பியுமான கம்பன் அரையனும், ஆலம்பாக்கத்தில் புகழ்பெற்ற மாற்பிடுகு ஏரியையும், திருச்சி திருவெள்ளறையில் ஸ்வஸ்திக் வடிவில் புகழ்பெற்ற பெருங் கிணற்றையும் அமைத்துள்ளார்கள். இவர்கள் தனது அரசியல் செல்வாக்கு காரணமாக, தென் ஆற்காடு மாவட்டம் கீளூரிலுள்ள திரு.வீரட்டனேஸ்வரர் கோவிலுக்கு நந்தவனம் அமைத்து, நடுவில் பூ மரம் வைத்து, திருத்தவும் தண்ணீர் இறைக்கவும். இந் நகரத்தார் வழியாக, இந்த விசைய நல்லூழான் வழியினர் பொன் கொடையளித்துள்ளனர். பொன் 30 கழஞ்சும், விடேல் விடுகு துளை