மூன்று தரை சோழ முத்தரையர்கள் (26முதல் 28வரை)
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்:
_____________________________________
சோழ முத்தரையர்(கள்):
__________________________
26.கம்பன் அரையன் ஸ்வஸ்திக் கிணறு.
--------------------------------------------------------------------
மாற்பிடுகு பெருங்கிணறு
(விசைய நல்லூழான், கம்பன்
அரையன், அரையன் தாழி)
விசைய நல்லூழான் என்ற முத்தரையனின் ஒரு கல்வெட்டு, தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கீளூரில் உள்ளது. இதில் இவன் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலம்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவன் என்கிறது. இவனும் இவனது தம்பியுமான கம்பன் அரையனும், ஆலம்பாக்கத்தில் புகழ்பெற்ற மாற்பிடுகு ஏரியையும், திருச்சி திருவெள்ளறையில் ஸ்வஸ்திக் வடிவில் புகழ்பெற்ற பெருங் கிணற்றையும் அமைத்துள்ளார்கள்.
இவர்கள் தனது அரசியல் செல்வாக்கு காரணமாக, தென் ஆற்காடு மாவட்டம் கீளூரிலுள்ள திரு.வீரட்டனேஸ்வரர் கோவிலுக்கு நந்தவனம் அமைத்து, நடுவில் பூ மரம் வைத்து, திருத்தவும் தண்ணீர் இறைக்கவும். இந் நகரத்தார் வழியாக, இந்த விசைய நல்லூழான் வழியினர் பொன் கொடையளித்துள்ளனர்.
பொன் 30 கழஞ்சும், விடேல் விடுகு துளையிட்ட செம் பொன்னாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தொகுதி 7 மற்றும் பெரும்பிடுகு முத்தரையர் பக். 36லும் ஆர்.பி ராமலிங்கம். கல்வெட்டு எண் 926லும் காணப்படுகிறது.
இந்த அரையன் தாழி என்ற முத்தரையன் பற்றிய கல்வெட்டு திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திருவெள்ளறையில் தொகுதி 19ல் கல்வெட்டு எண் 202ல் காணப்படுகிறது. இந்த அரையன் தாழி மிகுந்த தெய்வ பக்தி கொண்டவன். திருவெள்ளறையைச் சுற்றிலும் முத்தரையர்கள் இன்றும் வாழ்கிறார்கள். இவன் திருவெள்ளறையைச் சார்ந்தவன்.
இவனின் அபார தெய்வ பக்தியால், திருவெள்ளறையிலுள்ள, திருவானைக்காவல் பெருமானடிகளுக்கு விளக்கு வைத்து எரிக்க 30 கழஞ்சு பொன்னைக் கொடுத்து, இதனை முதலீடாக வைத்துக் கொண்டு விளக்கு எரிக்கும்படி செய்துள்ளான்.
இங்குள்ள கிணறு நாலு மூலை கிணறு என்றும், மாமியார் மருமகள் குளம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கிணற்றின் மேல்புறம் கல்வெட்டு ஒன்று அழகிய பாடலாக காணப்படுகிறது. அப்பாடலானது.👇
"ஸ்ரீ கண்டார் காணார் வுலகத்தே
காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்த
நான் பார்த்து நின்று நைய்யாதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத்
தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது
உலகறுய வைம்மினேய்"
என்கிறது. இதன் பொருளாவது இப்போது தான் கண்டோமே அதற்குள் மறைந்து விட்டதே என்று பேசும்படியான, நிலையாமை, மிக்க இக்கண்டார் காணாவுலகத்தின் கண் பற்று கொண்டு நில்லாமல் உனக்காக பரமன் விதித்த முடிவு நாட்களின் அறம்செய்து கொள்வோமே என்று நில்லாமல், இறுதிக் காலத்தில் தண்டூன்றித் தவிக்கச் செய்யும் தள்ளாமை மிக்க காலமும் வந்து எதுவும் செய்ய முடியாமல் தளர்ந்து போய் நில்லாமல், உன்னிடம் இருக்குமானால் அதை ஒழுங்காகத் துய்த்து விட்டு எஞ்சியதை இவ்வுலகம் அறியும்படி அறங்களில் போட்டு வையுங்கள் என்கிறது.
இதை அமைத்த கம்பன் அரையன் தான் மட்டும் கேணி தொட்டு அறம் செய்ததோடு நில்லாமல், பிறரையும் அறஞ்செய்யத் தூண்டி இப்பாடலை இக்கிணற்றிலேயே பொறித்துள்ளான்.
27.மாரிமுத்து முத்தரையர்:
---------------------------------------------
இவர் திருச்சி மாவட்டம், திருவானைக்காவலைச் சேர்ந்த மல்லிகைபுரம் கொண்டையம்பேட்டையைச் சேர்ந்தவர். இவரது தகப்பனார் மிராஸ்தார் வீரபத்திர முத்தரையர் என்பவராவார். இவர் கொண்டையம்பேட்டை மல்லிகைபுரத்தில் அருள்பாலித்து வரும் "ஏரணியாமாந்தவன்" கோயிலில் இதே ஊரைச் சேர்ந்த, அம்பலக்காரர் தெருவில் வசித்துள்ளார். இவர் 45 முழத்தில், 225 கறணைகளுடன் கூடிய இரும்புச் சங்கிலியில் மணிகளையும், இணைத்து செய்து சுமார் 20 அடி உயரத்தில் ஆலமரத்தையும், மருத மரத்தையும் இணைத்துக் கட்டியுள்ளார்.
கோயிலில் மணி அடிக்கும் போது இம்மணிகளும் ஒலி எழுப்பும்படி அமைத்துள்ளது சிறப்பாகும். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம்
காவல்(காரர்) =முத்தரையர். மிராஸ்தார். அம்பலக்காரர். தெரு என்பதிலிருந்து திருச்சி மாவட்டத்தில் முத்துராஜா என்ற பெயரில் உள்ளோர் ஆதியில் அதாவது கி.பி.1864 வைகாசி மாதம் 16ஆம் தேதி புதன் கிழமையில். கல்வெட்டில் உள்ளபடி "அம்பலகாரர்கள்" என்றே வாழ்ந்துள்ளனர் என்பதை அறியலாம்.
இக்கோயிலில் சங்கிலியாண்டவர்க்கு கொண்டையம்பேட்டே அம்பலக்காரர் தெருவைச் சேர்ந்த முத்தரையர் ஒருவரின் வன்னி முத்தரையர் மனைவி .................. செய்து வைத்த வேல் என்று திரிசூலத்தை கல்வெட்டுடன் நட்டுள்ளார். திரிசூலத்தின் உயரம் 6அடி உள்ளது.
குறிப்பு: மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில், வன்னிவலையர், வன்னிமூப்பர், வன்னி முத்துராஜா, என்ற பெயர்களில் முத்தரையர் உள்ளனர். மதுரையில் வன்னி மூப்பர் சங்கம் இருந்து முத்தரையர் சங்கத்துடன் இணைக்கப்பட்டது.
28.காவலர் (காவல்காரர்):
---------------------------------------------
பிற்கால பாண்டியர் காலத்தில், புதுக்கோட்டை பகுதிகளில் முத்தரையர்கள், அரையன் என்ற பட்டப்பெயரில் குறுநில பகுதிகளை ஆண்டனர். இவர்கள் மக்களையும், நாட்டையும், காவலாக இருந்து காத்ததால் காவல்காரர் என பெயர் பெற்றனர். இவர்கள் வசித்த ஊர்களும் இவ்வாறே பெயர்கள் ஏற்பட்டன. (Inscription (texts) pudukkottai state No.484)
இவ்வாறே தாராபுரத்திற்கு, விராடபுரம், காந்தபுரம், தாரகபுரி, குந்தவை, விண்ணகரம், ஸ்கந்தபுரம் என்ற பெயர்களும் உண்டு. இவ்வாறு சிறப்புப் பெற்ற தாராபுரத்தை கங்கர்கள் ஆண்டனர். தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ள "கொற்கை" என்னும் ஊர் தென்னன் கரை நாட்டின் தலைநகராக விளங்கியது. இப்பகுதியிலுள்ள கண்ணகி கோயில் (தற்போது மாரியம்மன்) இன்றும் காவல்காரர் என்ற பாண்டிய இன மக்களுக்கு முதல் மரியாதை இருந்து வருகிறது. நூல். கோவை மாவட்டம் ஆர். சோம. லெ. பக்.212
தொடரும்...
என்றும் அன்புடன்...
உங்கள் தோழன் சிவமாரி....
Comments
Post a Comment