மூன்று தரை சோழ முத்தரையர்கள் (21முதல் 25வரை)
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: _____________________________________ சோழ முத்தரையர்(கள்) __________________________ 21.அரங்குளவன் கொற்றவன் ---------------------------------------------------- இவனைப்பற்றிய கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கோயிலில் வீரபாண்டிய தேவரின் 9வது ஆட்சியாண்டில் (கி.பி.1306)ல் வெட்டப்பட்டுள்ளது. அரங்குளவன் மிகப்பெரிய நிழக்கிழாராகவும், அரசியல் முக்கியத்துவம் பெற்றவனாகவும் விளங்கியுள்ளான். இவனைப்பற்றி பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவனது தம்பி திறையன் வில்ல முத்தரையன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரங்குளவன் கொற்றன் திருவரங்குளம் கோயிலுக்கு தனது தம்பிமார் திரையன் வில்ல முத்தரையனும், அவனது தம்பிமாரும் சேர்ந்து பெரும் நிலப்பரப்பை, மா, புளி இதர மரங்களுடன் 10,000/- பொற்காசுகளுக்கு விற்றுள்ளான். இந்த நிலத்திற்கு எல்லை கூறும்போது பாண்டி முத்தரையனின் எல்லைக்கு வடக்கு எனக் கூறுகிறது. எனவே இந்நிலம் திருவரங்குளம், திருக்கட்டளை, மாஞ்சன் விடுதிக்கு தெற்கில், வெள்ளாற்றுக்கு உட்பட்ட பெரும் பரப்பாக இருந்ததை அறியலாம். 13ம் நூற்றாண்டில் முத்தரைய