Posts

Showing posts from October, 2019

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (21முதல் 25வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: _____________________________________ சோழ முத்தரையர்(கள்) __________________________ 21.அரங்குளவன் கொற்றவன் ---------------------------------------------------- இவனைப்பற்றிய கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கோயிலில் வீரபாண்டிய தேவரின் 9வது ஆட்சியாண்டில் (கி.பி.1306)ல் வெட்டப்பட்டுள்ளது. அரங்குளவன் மிகப்பெரிய நிழக்கிழாராகவும், அரசியல் முக்கியத்துவம் பெற்றவனாகவும் விளங்கியுள்ளான். இவனைப்பற்றி பல கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவனது தம்பி திறையன் வில்ல முத்தரையன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரங்குளவன் கொற்றன் திருவரங்குளம் கோயிலுக்கு தனது தம்பிமார் திரையன் வில்ல முத்தரையனும், அவனது தம்பிமாரும் சேர்ந்து பெரும் நிலப்பரப்பை, மா, புளி இதர மரங்களுடன் 10,000/- பொற்காசுகளுக்கு விற்றுள்ளான். இந்த நிலத்திற்கு எல்லை கூறும்போது பாண்டி  முத்தரையனின் எல்லைக்கு வடக்கு எனக் கூறுகிறது. எனவே இந்நிலம் திருவரங்குளம், திருக்கட்டளை, மாஞ்சன் விடுதிக்கு தெற்கில், வெள்ளாற்றுக்கு உட்பட்ட பெரும் பரப்பாக இருந்ததை அறியலாம். 13ம் நூற்றாண்டில் முத்தரைய

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (16முதல் 20வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: _____________________________________ சோழ முத்தரையர்(கள்) __________________________ 16.முத்தரையன் ஆரூரு இவனது கல்வெட்டு தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூரில், முதலாம் ராஜராஜனின் 19வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் உள்ளது. திருநாவலூர் திருத்தோனீஸ்வரத்துக் கோயிலில் இக்கல்வெட்டு உள்ளது. இங்குள்ள மலையனுக்காக திருநந்தாவிளக்கு வைத்து எரிக்க, சாவாலும், மூப்பாலும் குறையாது 90 ஆடுகளை இந்த முத்தரையன் ஆரூர் வழங்கியுள்ளான். இக்கல்வெட்டு எண் 986 இதனை தெரிவிக்கிறது. 17.அப்போதி முத்தரையன் இவனது கல்வெட்டு தென் ஆற்காடு மாவட்டம் திருக்கோவிலூரில் 3ம் கிருஷ்ணனின் (கண்ணரதேவரின் 19வது ஆண்டு) திருத்தோண்டீஸ்வரம் கோவிலில் உள்ளது. அப்போதி முத்தரையன் இக்கோவிலில், வயது முதிர்வாலும், இறந்துபடுதல் மூலமாகவும், எப்போதும் குறைவுபடாமல் 90 ஆடுகளை வைத்து நொந்தா விளக்கை எரிக்கும்படி கொடுத்துள்ளான். இச்செய்தி கூறும் கல்வெட்டு எண்.996 இதனை தெரிவிக்கிறது. 18.விசையாலய முத்தரையர் இவனது கல்வெட்டு திருச்சி மாவட்டம், திருநெடுங்கலம், லால்குடி வட்டத்தில், 3ம் குலோத்துங்க ச

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (11முதல் 15வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: __________________________________ சோழ முத்தரையர்(கள்) _________________________ 11.அபிமான மேரு சோழ முத்தரையன் தொகுதி 17 க.எ.186ல் முதலாம் இராஜேந்திர சோழனின் 8மற்றும் 10வது ஆட்சியாண்டு (கி.பி.1020-1022) குமரிக்குட்டி என்ற சிறப்பு பெயரும் இவனுக்கு உண்டு. மேரு என்றால் இமயம் போல மிக உயந்தது என்ற பொருளை குறிக்கிறது. குமரி என்றாலும், குட்டி என்றாலும் இளமையை குறிப்பதாகும். மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானதால் குமரிக்குட்டி என சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவன் திருவக்கரை கோயில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் அமைந்துள்ளகோவிலாகும். வீர தீர செயல்களால் புகழப்பட்ட இவன், தெய்வபக்தியும் மிகுந்தவனாக விளங்கியுள்ளான். முத்தரையர் ஆட்சி பிற்கால சோழர்களால் பறிக்கப்படும். ஒரு நூற்றாண்டுக்குள் சோழனுடன் அபிமானத்துடன் இணைந்து சோழ முத்தரையர் என்ற பெயரையும் பெற்றவன். இவன் இக்கோவில் மூலஸ்தானமுடைய மகாதேவர் மீது கொண்ட பக்தி காரணமாக 64 பலம் எடை கொண்ட வெண்கலத் தளிகையும் ஒரு விளக்கையும் தானமாக கொடுத்துள்ளான். இவன் வடபிடாகை ஆற்றுப் பார்க்கத்தை ச

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (6முதல் 10வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: ____________________________________ சோழ முத்தரையர்(கள்): __________________________ 6.சங்கர நாராயணன் என்ற சோழ முத்தரையன் இவரைப்பற்றிய கல்வெட்டு ஒன்று, திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோவிந்த புத்தூரில் கோப்பர கேசரியின் 13வது ஆட்சியாண்டு (கி.பி.1025)ல் உள்ளது. இவர் கோவிந்தப்புத்தூரில் ஸ்ரீ கைலாசநாதர் ஆழ்வார் என்ற கோவிலை கட்டியுள்ளார். இக்கோயிலை பராமரிக்கவும், திருச் சென்னடைபுறம், நெய்யமுது, கறியமுது, வெற்றிலை பாக்குப் படையல், அயனச் சங்கராந்தி, இரண்டுக்கும் விசு இரண்டுக்கும் வைகாசி விசாகமும், நீராட்டுதல், பெருந்திருவமுது செய்யவும், திருப்புகையும், திருச்சந்தனமும், திருவிளக்கு போடவும், அதற்குத்தினம் எண்ணெய் நாழியும் ஆழாக்கு இத்தனையும் குறைவரத் தினசரியும் செய்து வர வேண்டும் என்றும் அதற்காக பட்டர்கள் இவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக வடகுடி கண்மாயில் நில தானம் கொடுத்துள்ளார். இவர் திருச்சி மாவட்டம் மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் என்று திரு.நடன காசிநாதன் கூறுகிறார். இச்செய்தி தொகுதி.19 க.எ.331ல் கல்வெட்டை காணலாம். 7.வேட்டைக்காரன் சோழ ம

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (1முதல் 5வரை)

Image
மூன்று தரை முத்தரையர்கள்: ______________________________ சோழ முத்தரையர்(கள்) _________________________ 1.எதிரில்லாதானான சோழ முத்தரையர்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில், இக் கோயில் கட்டும்போது பல்வேறு பட்டவர்களுடன் ஆலங்குடி ஊராண்ட "எதிரில்லாதானான சோழ முத்தரையர்" இரண்டு நிலைக் காலைத் தர்மமாக கொடுத்துள்ளதை புதுக்கோட்டை கல்வெட்டு 1037விளக்குகிறது. 2.சேக்கிழான் அரையன்: தென் ஆற்காடு மாவட்டம் காட்டு மன்னார் கோயிலருகிலுள்ள உடையார்குடி கோயில் கல்வெட்டில், கோ ராசகேசரி வர்மனின் 6வது ஆட்சியாண்டில் மேலப்பழுவூரை சேர்ந்த "சேக்கிழான் அரையன் சங்கர நாராயணனாகிய சோழ முத்தரையன்" நிலம் கொடையளித்துள்ளான் என்று கூறுகிறது. 3.சித்தக்குட்டி மாதவன்: மதுரை மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் குருவித்துரை கல்வெட்டில் "சித்தக்குட்டி மாதவனான சோழ முத்தரையன்" கல்வெட்டு உள்ளது இவனைப்பற்றி ஏற்கனவே (சத்ரு பயங்கர முத்தரையன் என்ற தலைப்பில் பார்த்திருக்கிறோம்.) 4.முடிகொண்ட சோழ முத்தரையன்: ஜெயங்கொண்ட சோழபுரம் கல்வெட்டில் ராஜ ராஜனின் 27ஆவது ஆட்சியாண்டி

கோ இளங்கோ முத்தரையர்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: ____________________________________ 6.கோ இளங்கோ முத்தரையர் கோ இளங்கோ முத்தரையர்க்கு *உத்தமதாணி* என்ற சிறப்பு பெயரும் இருந்துள்ளது. இவன் *கோனாளறு முத்தரையன்* என்றும் அழைக்கப்பட்டுள்ளான். இந்த கோனாளறு முத்தரையன் சுயேட்சையாக தனித்து ஆண்டவன். இம்மன்னன் வல்லத்தை நலைநகராக கொண்டு புதுக்கோட்டை பகுதிகளையும் ஆட்சிபுரிந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இவனது காலம் கி.பி.630-660 ஆகும். "வரத ஸ்ரீ கோனாளறு முத்தரையற்கு யாண்டு பதி மூன்றாவது கீரனூர் உத்தமதாணி ஈஸ்வர வரத்து பெருமானடிகளுக்குத் ............." என்ற கல்வெட்டு தனது யாண்டு குறிக்கப்படுவதிலிருந்து உறுதிப்படுகிறது. இக்கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கீரனூரில் தன்னால் கட்டப்பட்ட உத்தமதானீஸ்வரர் கோவிலில் உள்ளதாகும். இம்மன்னனின் 13ஆவது ஆட்சியாண்டு வரை இருந்ததற்கு சான்றாக உள்ளது. இந்த கீரனூரில், தனது சிறப்புப் பெயரான "உத்தமதாணி" என்ற பெயரிலேயே இளங்கோவதி முத்தரையன் கோயிலை கட்டி, "உத்தமதானீஸ்வரர்" எனப் பெயரையும் சூட்டியுள்ளான். இந்த கோவில் திருவிழா நடத்த

சத்ரு பயங்கர முத்தரையர்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: ____________________________________ 5.சத்ரு பயங்கர முத்தரையர் சத்ரு பயங்கர முத்தரையர் நெல்லை மாவட்டத்தில் அரசனாக இருந்துள்ளார். இவனது மனைவியை கல்வெட்டுக்கள் அரசி என்றே குறிப்பிடுகின்றன. இவன் பாண்டிய நாட்டில் ஸ்ரீ மாறன், ஸ்ரீ வல்லபனின் கி.பி.811-860 ஆட்சி காலத்தில் அரசியல் தலைவனாக விளங்கியவன். நெல்லை மாவட்டம் செவலப் பேரியிலும், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், எருக்கன்குடியிலும் இவனைப்பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த சத்ரு பயங்கர முத்தரையனுக்கு "இருப்பைக்குடி கிழவன்" "எட்டிச் சாத்தன்"  என்ற சிறப்பு பெயர்களும் இருந்துள்ளன. இவன் இரண்டாம் வரகுண பாண்டியனின் தந்தையான ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் காலத்தில் செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைவனாக இருந்துள்ளான். இவனே வரகுண பாண்டியனின் ஆட்சியாளனாக இருந்தவன். நெல்லை மாவட்டம் செவலப்பேரி அழகர் கோயிலின் தென் சுவற்றில் உள்ள கல்வெட்டு எண் 71 (ஏ.ஆர்.எண்421/1906) 👇👇👇👇 1)ஸ்ரீ கோச்சடையர் மாறர்க்கு இயாண்டு இரண்டு இதனெதிர் பத்தொன்பது இவ்வாண்டு (இரிஞ்) சோழ நாட்டு ஆலங் 2)குடி சத்துரு பயங்கர மு

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்

Image
நாடாண்ட முத்தரையர் மன்னர்கள்: _____________________________________ 4.பெரும்பிடுகு முத்தரையர் முத்தரையர் மன்னர்களுள் சீரோடும், சிறப்போடும் ஆண்ட மன்னன் இரண்டாம்  பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் மன்னன் ஆவான். இவனது காலம் கி.பி.660 முதல் 690 வரை என்று வரலாற்றறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். வல்லத்தையும் தஞ்சையையும் தலைநகராக கொண்டு ஆண்டான். இவனது விருதுப் பெயர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டையில் நடு கல்லாக நடப்பட்டுள்ளதில்..👇 1)ஸ்ரீ சத்ரு கேஸரி 2)அபிமான தீரன் 3)வாள்வரி வேங்கை குத்தியது என்றும். தஞ்சாவூர் மாவட்டம் செந்தலையில் கட்டப்பட்டுள்ள சுந்தரேஸ்வரர் கோவில் தூணில் ஒரு பக்கத்தில்👇👇 1)ஸ்ரீ சத்ரு மல்லன் 2)ஸ்ரீ கள்வர் கள்வன் 3)ஸ்ரீ அதி சாகசன் என்றும் அதே தூணில் மறு பக்கத்தில்👇👇👇 1)ஸ்ரீ மாறன் 2)அபிமான தீரன் 3)சத்ரு கேசரி 4)தமராலயன் 5)செருமாறன் 6)வேல் மாறன் 7)சாத்தான் மாறன் 8)தஞ்சைக்கோன் 9)வல்லக்கோன் 10)வான் மாறன் என்றெல்லாம் புகழ்ந்து பொறிக்கப்பட்டுள்ளது. காலத்தால் முந்திய இவனது ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இவ்வளவு வெற்றிச் சிறப்புப் பெயர்க

காடக முத்தரையர்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: __________________________________ 3.காடக முத்தரையர் பல்லவ நாட்டை பல்லவர்கள் ஆண்டனர். இவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். அப்போது சோழ நாட்டுப்பகுதியிலும் பல்லவர்கள் ஓரளவு ஆட்சி செய்தனர். மீதப் பகுதிகளில், பல்லவர்களின் பங்காளிகளாக, பாதுகாவலர்களாக இருந்து முத்தரையர் ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய நாட்டை பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டாகும். பாண்டியர்க்கும், பல்லவர்க்கும் எப்போதும் போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது. பாண்டியர் படையெடுத்து வரும்போதெல்லாம் முத்தரையரின் சோழ நாட்டை தாண்டித்தான் படை நடத்த வேண்டிய கட்டாம். இப்படி படை நடத்தி வரும்போது பல்லவரோடு போரிடுவதற்கு முன்பு, முத்தரையருடன் போரிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாம் இருந்தது. இப்படி பமுறை பாண்டியர்கள் முத்தரையரிடம் தோற்றுள்ளனர். பல்லவருடன் போரிட முடியாமலேயே நாடு திரும்பினர். இவ்வாறு நாடு திரும்பிய பாண்டியர்கள், முத்தரையருடன் போரை தடுக்க எண்ணி, சினேகிதம் கொண்டாட முயன்றனர். காலப்போக்கில் தங்களது ஆட்சிக்கு உதவியாக முத்தரையர்களையும் வைத்துக் க

வால்மீகி வம்சம் முத்தரையர்

Image
#வால்மீகிவம்சம் 🔥🔥🔥 கி பி பதினாறாம் நூற்றடில் கருநாடக தேசத்தினை அரசாட்சி செய்துவந்த, சித்ரதுர்கா அரச குடும்பமானது வேடர்கள் எனும் போய நாயக்கர்களின் வம்சமாகும். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) வம்சாவளியான வால்மீகி குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் எனும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,[46]மேலும், ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும். போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு பிரிவே ஆகும். முடிராஜ் இனத்தை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோலி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோலி என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்தரையர் மற்றும் முத்திராயன் என்றும் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோலி (Koli) என்றும் அழைப்பர்!!! நன்றி... தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாணவர் அணி Facebook like page...

சாண்டில்யன் மோகனச்சிலை

Image
சாண்டில்யன் மோகனச்சிலை நாவல் முத்தரையர்களை களப்பிரர் சந்ததிகளாக்கி அவர்களை மூர்க்கர்கள், முரடர்கள், கொலைகாரர்கள் என்று திரித்து சிறுமைப்படுத்த முயன்ற போதும்... இவர்களின் வீர தீர பராக்கிரமங்களை நூலாசிரியரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்பது ஆசிரியரின் பரிதாப நிலையை காட்டுகிறது.😂😂 தமிழகத்தில் இருண்டகாலம் என்று சொல்லப்படும் களப்பிரர்களான முத்தரையர் காலத்தில் தான் திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் இயற்றப்பட்டன... மேலும் தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய பெருங்குடி முத்தரையர் குடி என்பதை மார்தட்டி சொல்லும் அருகதை முத்தரையர்க்கு மட்டுமே உண்டு என்பதை நூலாசிரியர்கள் உணர்ந்து உண்மையை எழுத வேண்டும்... இல்லையேல் ஆதாரத்தோடு நாங்களே போர்தொடுப்போம்... ஆட்சி இழந்து சிலகாலம் அறியாமையால் அடிமைப்பட்டு கிடந்துவிட்டோம். ஆனால் இன்று கருவில் இருக்கும் குழந்தைக்கு கூட முன்னோர்களின் பெருமைகளை சொல்லித்தான் வளர்க்கிறோம்... தமிழும், தமிழ்நாடும் முத்தரையர் குல சொத்து இங்கே எவன் உரிமை கொண்டாடுவதையும் இனி அனுமதிக்க போவதில்லை... மீண்டும் முத்தரையர் ஆட்சி மலர்ந்தே தீரும் என்பதை கர்வமிகு

வாணகோ முத்தரையர்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: ___________________________________ 2.வாணகோ முத்தரையர் வாணகோ முத்தரையரின் முன்னோர் தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதிகளிலும், தமிழகத்தின் வடபகுதியும், மைசூர் மாநிலத்தின் தென் எல்லையுமான பகுதிகளிலும் ஆட்சி செய்துள்ளனர். இவர்களைப் பற்றிய போதிய கல்வெட்டு ஆதாரங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லை. எனினும் வடஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலையை அடுத்த தண்ட்ராம்பட்டிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள் மட்டுமே நேரிடையாக கிடைத்துள்ளன. இரண்டும் நடுகற்களாகும். வட்டெழுத்தில், முதலாம் நரசிம்மனின் 7ம் ஆட்சியாண்டில் (கி.பி.667)ல் வெட்டப் பெற்றவையாகும். "வாணகோ முத்தரைசர் நாடு பாவிய் மேற் கோவலூர் மேல் வந்து தஞ் சிற்றப்படிகளை எறிந்த ஞான்று" என்று காணப்படுகிறது. இந்த கல்வெட்டும், மற்றொரு கல்வெட்டும் முத்தரைய மன்னர்களின் பழைய இருப்பிடத்தையும், சிறுகச் சிறுக நாட்டை விரிவுபடுத்தியதையும் அறிய உதவுகிறது. இவ்வாறு நாட்டை விரிவுபடுத்தும் போது, இரண்டு போர் வீரர்கள் மரணமடைந்துள்ளனர். இருவேறு சமயம் போரில் இறந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி மறவாத வாணகோ முத்தரையர் நடுகல் எரித்து, நிக

கரிகால சோழன் முத்தரரையர்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: ____________________________________ 1.கரிகால் சோழன் கரிகால் சோழன் கீர்த்தி பெற்ற முத்தரையர் சோழ மன்னன் ஆவான். உறையூரை தலைநகராக கொண்டு சோழ நாட்டை ஆட்சி செய்தவன். இவன் செயற்கரிய செயல்களை மக்களுக்கு செய்து அழியாப் புகழ் பெற்றவன். இக் கரிகாலன் முத்தரையர் குலத்து, சூரிய வம்சத்தை சேர்ந்தவனாவான். கரிகாலன் முத்தரையர் குலத்தவன் என்று பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. அவையாவன; பழனி மடம் பற்றிய செப்பு பட்டயத்தில் (கி.பி.1674)ல் வெட்டியதில், பின்பக்கம் வரி எண் 3லுள்ள வரியில் முத்தரையர் சூரிய வம்சத்தினர் என்று கூறுகிறது. இம் முத்தரையர்கள் கோப்புலிங்க ராஜாவின் வம்சத்திலே பெண் எடுத்தவர்கள் என்றும், சோழருடனிருந்தவர்கள் என்றும், சோழர் சார்பாக பாண்டியரை வென்றவர்கள் என்றும் வரிகள் 62முதல் 64வரை கூறுகின்றது. ஆலங்குடி நாட்டு அம்பலம் திரு.மயிலப்பன் முத்தரையரிடமுள்ள செப்பேடு சகாத்தம் 1400க்கு கி.பி 1478ல் உள்ள செப்பேட்டில் கரிகால் சோழனும், உக்கிர வீரபாண்டியன் ராஜாவும் முத்தரையர்க்கு கரை பிரியல் செய்ததாகக் கூறுகிறது. திருவரங்குளத்தை அடுத்துள்ள "இம் மண் ஆண்டான்பட

முத்தரையர் மன்னர்கள்...

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்... _____________________________________ 1.கரிகால் சோழன் 2.வானகோ முத்தரையர் 3.காடக முத்தரையர் 4.பெரும்பிடுகு முத்தரையர் 5.சத்ரு பயங்கர முத்தரையன் 6.கோ இளங்கோ முத்தரையர் மூன்று தரை முத்தரையர்கள்... _________________________________ சோழ முத்தரையர்... 1.எதிரில்லாதானான சோழ முத்தரையர்... 2.சேக்கிழான் அரையன் 3.சித்தகுட்டி மாதவன் 4.முடிகொண்ட சோழ முத்தரையன் 5.கருணாகர சோழ முத்தரையன் 6.சங்கர நாராயணன் என்ற சோழ முத்தரையன் 7.வேட்டைக்காரன் சோழ முத்தரையன் 8.சுந்தர சோழ முத்தரையன் 9.சேக்கிழான் சத்தி மலையனாகிய சோழ முத்தரையன் 10.விக்கிரம சோழ முத்தரையன் 11.அபிமான மேரு சோழ முத்தரையன் 12.மும்முடி சோழ முத்தரையன் 13.விக்கிரமச் சோழப் பிரம்மாதராய முத்தரையன் 14.குலமாணிக்க முத்தரையன் 15.கண்டராதித்த முத்தரையன் 16.முத்தரையன் ஆரூரு 17.அப்போதி முத்தரையன் 18.விசையாலய முத்தரையன் 19.உடையான் முத்தரையன் 20.காடவதி அரையன் (பூதிதீரன்) 21.அரங்குளவன் கொற்றன் 22.அனந்தகோப முத்தரையன் 23.கண் திறந்ததும் மயில் பறந்ததும்______________முத்தரையன் 24.நானூற்றி முத்தரையன்

வலையர்

Image
முன்னைதமிழருள் மூத்தவர் வலையரே தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு கலத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி பகைவனை விரட்டியப் போர்மறவரும் அவரே அதனாலேபுகழும் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் அன்னோரை பின்னாளில் ஐங்குறுநூறும் அழகாய்ச்சொன்னது“வலைவர் தந்த கொழுமீன்” என்றவர்பெயரை... திணை சார்ந்த தொன்மைத் தமிழரின் வரலாறு,அவர் ஆற்றியத் தொழில் சார்ந்தே சாதியாய் உருப்பெற்றது என்றே சொல்கின்றது.குறிஞ்சித் திணையில் பிறந்திட்ட தமிழன் மெல்ல மெல்ல முல்லைத் திணைக்கு நகர்ந்திட்டான்.அங்கும் நிலைக்காமல் மருதத் திணைநோக்கி நகர்ந்தாங்கே நிலைபெற்றான்,அங்கேயே அவன் நாகரிகம் அடைந்தான்,போர்த் தொழில் பயின்றான்,பிழைப்புக்கு ஓர் தொழிலும் அறிந்தான்.அதன் பின்னரே நெய்தலுக்குச் சென்றான்,கரைகடந்து கலமேறி உலகை அளந்தான்.இயங்கியல் அடிப்படையில் ஆய்ந்து பார்த்தால் தமிழர் வரலாறு/உலக மாந்தர் வரலாறு இதுவாகத்தான் இருக்கும். மண்ணில் வாழும் குடிகளிலெல்லாம் தொன்மைச் சிறப்பு மிக்க ஒரேகுடி தமிழர் குடியே.அக்குடியிலும் முதுகுடி எதுவென்று