Posts

பாண்டி முத்தரையன் சோழிக அரையன் | பாண்டி முத்தரையன் அரட்டவதி அரையன் | பாண்டிப்பெருந்தேவி

Image
சோழிக அரையன் என்கிற அகணிதன் குளம் வெட்டி தன் பெயரை வைத்துள்ளான் | இதே பகுதியில் பாண்டி முத்தரையர் அரட்டவதி அரையனின் தாயார் பாண்டிப்பெருந்தேவி, பாண்டி முத்தரையன் சோழிக அரையனின் நினைவாக சிவன் கோயில் ஒன்றும் ஏற்படுத்தியிருக்கிறார். பாண்டிப்பெருந்தேவி பாண்டியகுல பெண்ணாக இருக்கலாம்.

ஆரையன் ஆயிரவனான இளஞ்சிங்க முத்தரையன் | ஏக வீர முத்தரையன்

Image
ஆரையன் ஆயிரவனான இளஞ்சிங்க முத்தரையன் போரில் வீர மரணமடைந்தான், அவனுக்காக ஏக வீர முத்தரையன் நடுகல் எடுப்பித்தான்...

நல்லகுட்டி முத்திரியன் | பட்டாமணியம் தம்மணாமுத்திரியன்

Image
லால்குடி தாலுகா ராசாம்பாளையத்திலிருக்கும் நல்லகுட்டி முத்திரியன் மகன் பட்டாமணியம் தம்மணாமுத்திரியன் ராசாம்பாளையம் குடியிருப்பு பகுதியின் ஆலமரத்தடியில் தருமமாக ஒரு சாவடியும் தண்ணீர்ப்பந்தலும் ஏற்படுத்தி அதன் செலவுக்கு வருமானம் கிடைக்கும்படி கொடுக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றியது இக்கல்வெட்டு. 

ஆரையன் ஆயிரவன் | இளஞ்சிங்க முத்தரையன்

Image
கொடுமங்கலத்திற்கு பகைவர் ஆநிரைகளை கவர வரும்போது ஆரையன் ஆயிரவன் எதிர்த்து போரிட்டான். அப்போது அவன் தந்தை சடையமரையன் தன்மகன் ஆரையன் ஆயிரவனைக் காப்பாற்ற முன்வந்து போரிட்டு மரணமடைந்தான். மரணமடைந்த தன் தந்தைக்கு மகன் ஆரையன் ஆயிரவன் நடுகல் எடுப்பித்தான் | இந்த ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்க முத்தரையன் ஆவான் |

பேரயன் முத்தரையன் காரி | முத்தரையன் தும்பன்

Image
ஏதோ ஒரு போரில், சாத்தயன் என்பவருடன் பேரயன் முத்தரையன் காரி என்பவரும், திருவூறல் என்பவருடன் முத்தரையன் தும்பன் என்பவரும் இறந்துபட்டிருக்கிறார்கள்

தமிழப்பேர் அதியரைசன் (வலையர் அரசன்)

Image
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வாழைக்குறிச்சி சிவன்கோயில் ஊரணிக்குள் கிடக்கும் பலகைக்கல் 8ம் நூற்றாண்டு கல்வெட்டு | தமிழப்பேர் அதியரையனுக்கு (வலையர் அரசன்) அவன் தாயார் நட்டுவித்த கல் என்ற செய்தியை தருகிறது. இவர் போரில் இறந்துபட்டிருக்கலாம்.

கார்மண்டல சதகம் பாண்டிய நாட்டு முத்தரையர்

Image
இதுவரை வெளிவராத புதிய சதக (கார்மண்டல சதகம்) பாடல். புதிய பல வரலாற்று செய்திகளோடு பாண்டிய நாட்டை ஆண்ட முத்தரையர் வரலாறு 🐬 கீழ்க்காணும் படச்செய்தி 👇 || இவர்கள் மதுரையிலிருந்தபோது பலநூல்கள் தொகுத்ததாகவும் இசைநூல்கள் தோற்றுவித்ததாகவும் கூறப்பட்டுள்ளார். நாலடியாரிலும் முத்தரையர் புகழப்பட்டுள்ளார். இக்குலத்தார் சோழ தேசத்தை 9ம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்ததாகச் சோழ வமிச சரித்திரத்தால் உணரலாகும்; பல்லவ சாசனங்களிலும் இவர்கள் பெயர்கள் காணப் படும். குடுமியாமலை, பொன்னமராவதி முதலிய ஊர்களில் கிடைக்கும் சாசனங்களால் பாண்டி நாட்டின் சில பகுதிகளை இக்குலத்தினர் ஆண்டு வந்தாரெனப் புலப்படுகிறது. நார்த்தாமலைச் - சாசனத்தில் இவர்கள் மதுரையரசர் குலத்தினரென்று கூறப்பட்டுளது. எனவே இவர்கள் ஒருபெருங்குலத்தை சார்ந்தவராய் தொண்டைநாடு முதல் பாண்டிநாடு வரையில் பரவியிருந்தனர் எனப் பெறப்படும். பாண்டிநாட்டை வௌவி அரசாண்டவர் இம் முத்தரையரே எனலாம். இவர்கள் சைன மதத்தைச் சார்ந்தவராயிருப்பதும் முன் கூறிய கருத்தை வலி யுறுத்துகின்றது. களப்பிரர் என்பார் கூலிப்படை வீரரெனக் கருதலாகும். முத்தரையர் இக் கூலிப்படை வீரரைக