வலைஞர்
தமிழர்கள் கடலில் சென்று மீன் பிடிக்கும் தொழிலை மிக நெடுங்காலந்தொட்டு செய்து வருகின்றனர். சங்க இலக்கியங்களில் மீன் பிடிக்கும் தொழில் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப் படுகின்றன. கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்பவர்களை மீனவர் என்று இன்றைக்கு நாம் அழைக்கிறோம். இவர்களைச் சங்க காலத்தில் ‘வலைஞர்’ என்று சுட்டியுள்ளனர். ‘வலைஞர்’ என்பது வலையால் மீன்பிடிப்பவர் எனும் பொருளில் வரும் ஒரு காரணப் பெயராகும். சங்க இலக்கியங்களில் மீன் வகைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. மடு, குளம், கழனி போன்ற நீர்நிலைகளிலுமிருந்து மீன் பிடித்த குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆனால் ‘மீனவர்’ என்ற சொல் எங்கும் இடம் பெற்றிருக்கவில்லை. அகநானூற்றூப் பாடலொன்று கடலுக்குள் சென்று மீன்பிடிப்போனைத் ‘திமிலோன்’ என்றும் சுட்டுகின்றது. திமில் என்றால் ‘மீன்படகு’ (Tamil Lexicon,, ப.1880) என்பதாகும். ‘திண்டிமில் வன்பரதவர் (புறம். 24) என்று புறநானூற்றுப் பாடலொன்றும் சுட்டுகிறது. ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ திமிலோன் தந்த கடுங்கண் வயமீன் தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர் விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும