வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்
வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம் ------------------------------------------------------------ வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவ கவுண்டர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவ கவுண்டரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துக்கள்) உள்ளன. அவை 1.வேட்டுவர் நாகர் இனத்தவர். 2.குரு குலத்தவர். 3.கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர். 4.கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள். இக்கொள்கைகளின் உண்மைத் தன்மையை இங்கே ஆய்வோம். நாகர் --------- வேட்டுவர் நாகர் இனத்தவரே என்று கனகசபைப்பிள்ளை[