தொல்லியலில் (ஆவணத்தில்) முத்தரையர்
வாணகோ அரையர்:
________________________
விழுப்புரம் மாவட்டம் மகளூர் சிவன் கோயிலில் கி.பி.1253ல் வாணகோவரையன் கொடுத்துள்ள தனது உடல் நலம் வேண்டி செய்துள்ளான்.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் சி
2. இராசேந்திர சோழ தேவற்கு இ (யாண்டு 7வ
3. து வன்னெஞ்ச பெருமாள்ளான வாண
4. கோவரையர் திருமுகப்படி சிங்களரா
5.யரும், இராராப் பிரமராயரும் இரா
6. சேந்தி சோழப் பிரமராயரும் புரவரியாரு செ
7. ய்ய கடவபடி பரிதூற் கூற்றத்து கணங்
8. கூர் உடையார் திருத்தாதோன்றீசுர மு
9. டைய நாயனாற்கு பூசைக்கும், திருப்பணிக்கு
10. ம் உடலா ஏழாவது மாசி மாத முதல் இவ்வூர்
11. பரி ஏரி நன்செய் நிலத்திலே ஒரு வேலி
12. நிலம் இறையி (லி) தேவதானமாக நமக்கு
13. நன்றாக விட்டேன் இப்படி கணக்கில் நி
14. றுத்தி அடைத்து குடுப்பதே இவை வா
15. ணகோவரையந் எழுத்து இவை திரும
16. ந்திர ஓலை எழுவார் நம்பிக்கு நல்லாந் எ
17. ழுத்து.
பக்கம் 52ல். 19.7. கொட்டாம்பட்டிக்கு அருகிலுள்ள சொக்கலிங்கபுரத்தில்
விநாயகர் கோயில் முன் மண்டபத்தூணில், விகாரி வருடம் (கி.பி.19001) திருச்சுற்றிலுள்ள விநாயகர் கோயிலை சொக்கலிங்கபுரத்தில் இருந்த கட்ட சிலம்பாம்பலகாறன் பிச்சன் அம்பலம் அவன் மனைவி வீராயி ஆகியோர்
செய்ததை விளக்கும் கல்வெட்டு
1. விகாரி ஸ்ரீஅற்பி
2. சி. மீம் 9சொ
3. க்கலிங்க புற
4.த்திலிருக்கும் வலை
5.யரில் கட்ட சி(லி)மபா
6.ம்பலக்காறன் பிச்
7.சநம்பலம் அவன்
8.பெண் சாதி விரா
9.யி மேற்படி குடும்பம் பிள்ளை
10. யாரிடத்தில் நித்திய ___
11. ருவை.
கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்தில் நத்தமேட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள
புற்பவன ஈசுவரர் கோயிலில், வீரராசேந்திரனின் 26வது ஆட்சியாண்டில்
அரைய நாட்டு துடுமலைச் சேர்ந்த காட்டு வேட்டுவன் முத்தன் சக்கையன், (தென்னிலை) யைச்சேர்ந்த உய்யவந்தான் கையிலாயன்
கொடுத்தனர். இம்மண்ணனது 6வது ஆட்சியாண்டில் வேட்டமங்கலத்து ஊராரும், அரையர்களும், தென்சேரியைச் சேர்ந்த பூலுவ வேட்டுவன் சிலம்பன், செஞ்சிறுப்பிள்ளையும், நடுச்சேரியைச் சேர்ந்த கரடிவேட்டுவன்
செய்யப்பிள்ளையும் நொந்தாவிளக்கு வைத்தனர்.
23.1. கோயில் முன் மண்டப மேற்புறச் சுவரில் தென்மேற்கு மூலையில் 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில்
1 ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யா
2. ண்டு 14வது கிழங்கனாட்டு வேட்
3. டமங்கலத்து நடுவிற் சேரிக் கறடி வேட்டு
4. வரிற்செய்ய பிள்ளை செய்யபிள்ளை யேந்
5. வேட்ட மங்கல்தினாயனார் புற்பவன முடை
6. யாற்குச் சந்தியா தீப விளக் கொந்றுக்கு னா
7.ந் இக்கோயிலுள் பிராமணற்கு குடுத்த பழ
8.ஞ் சலாகை அச்சு ஒன்றுக்கும் சந்திராதி
9.த்தவரை குடங்கொடு கோயிற் புகுவாந் எரிக்
10.க் கடவாந் இது பந்மா ஷேஸ்வ ரட்சை
23.4. சிதைந்த நிலையில் தென்புறம் குமுத வரியில் உள்ளது. காலம் 13ஆம் நூற்றாண்டு.
1. ஸ்வஸ்தி ஸ்ரீவி ரார்) சேந்திர
2. தேவற்கு யாண்டு 26 (ஆவது) அரைய நாட்டுத் துடுமலில் இருக்கும் காட்டுவ
3. வேட்டுவந் முத்திஞ் சக்கையேந் புற்பவன முடையார் கோயிலுக்கு சந்தியா தீப விளக்கு ஒ
4. ன்றுக்குப் பழஞ் சலாகை அச்சு ஒன்றுங் கொண்டு ஊற் பிராமணந் குடங்கொடு கோயில்
5. புக்கான் இடக்கடவதாக இது மாயேசுர இரக்ஷை,
23.6. கோயில் முன் மண்டபத்தின் வடசுவரில் உள்ள கல்வெட்டு வேட்டமங்கலம் ஊரவரும், அரையர்களும் நான்கு எல்லைகாட்டி நிலம்
கொடுத்துள்ளனர்.
23.7. பக்கம் 67ல் கோயில் முன் மண்டபத்தில் மேல்புறச் சுவரின் வடமேற்கு மூலையில் 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில்
1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யா
2. ண்டு 14ஆவது கிழங்க நாட்டு, வேட்டமங்கலத்
3. து தென் சேரிப் பூலுவ வேடுவரிற் சிலம்பந், செஞ்
4. சிறுப் பிள்ளையேந் வேட்டமங்கலத்தினாயநார் புற்
5. பவந முடையமாற்குச் சந்திய தீப விளக்கொந்றுக்
6. கு நான் இக் கோயிலுற் பிராமணற்கு குடுத்தப
7. பழஞ் சலாகை அச்சு ஒன்றுக்கு சந்திராதித்தவ
8. ரை குடங்கொடு கோயில் புகுவான் எரிக்க கட
9. வாந் இது பந்மா ஹேச்சர ஷை.
இவ்வூர் வேடர்கள் நிறைந்திருந்ததால் வேட்டமங்கலம் எனப் பெயர் ஏற்பட்டது. வேடர்களும், வேட்டுவ (கவுண்டர்களும்) பூர்வீகத்தில் முத்தரையர் சாதியைச் சேர்ந்தவர்களே ஆவர். மேலும் இக்கோவிலுக்கு
கொடையளித்துள்ளனர்.
12/2001 பக்.25 ஒழிந்தியாம்பட்டு, திரு அரசிலி ஆளுடையார் கோவிலில், கருவறை வடக்கு சுவரில், விக்கிரமச் சோழனின் (கி.பி.1127)ம்
ஆண்டு அரை விளக்கு வைக்க 45 ஆடுகளை
வாணராய முத்தரையன் கொடுத்துள்ளான். இவ்வூர் பாண்டிச்சேரி, திண்டிவனம் நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் ஊருக்கு வடக்கே 6 கி.மீட்டரில் உள்ளது.
1.ஸ்வஸ்தி ஸ்ரீ பூமாது புணரப் புவிமாது
2.வளர நாமாது விளங்க ஜயமாது விரும்
3.பந் தன்னிரு பதுமலரடி மன்னர் சூட மன்னி
4.யஉரிமையில் மணிமுடி சூடிச் செங்கோல்
5.சென்று திசை தொறும் வளர்ப்ப வெங்கலி நீக்கி
6. மெய்யறந் தழைப்ப கலிங்க மிரியக் கடகரி
7.நடாத்தி வலங்காளாழி வரை யாழி நடாத்தி
8. எரிசுடரளவும் ஏழு குடை நிழற் கீழ் வீரஸிம்ஹா
9. ஸனத்து முக்கோக்குழா நடிகளோடு
10. வீற்றிருந்தருளிய கோபரகேசரி பந்மரான திருபுவனச்
11.சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யா
12.ண்டு 9வது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒ
13.ய்மானடான விஜய ராஜேந்திர சோழவளநாட்டு பெருவெம்
14. பூர்நாட்டு திருவரசிலி ஆளுடையார்க்கு இன்னாட்டு
15.குயில் குலகாலபுரத்திருக்கு வலையன் கடியாறனுக்காக வாண
16.ராய முத்தரையன் வைத்த திரிநந்தா விளக்கு அரை அரையாலாடு நாற்ப
17. திதைஞ்ச சாவா மூவாப் பேரகடாக இது பந்மாஹேஸ்வர ரக்ஷை
குறிப்பு : இக்கல்வெட்டில் வலையனுக்காக, வாணராய முத்தரையன் நந்தாவிளக்கு (ஒரே இனம்) என்பதற்காக வைத்துள்ளது தெரிகிறது.
17.2. புதுக்கோட்டை மாவட்டம், ராஜாப்பட்டியிலிருக்கும் சிவன் கோவிலில் மூன்றாம் குலோத்துங்கனின் கி.பி.1189ல் கோயிலுக்கு தேவதானமாக நிலம் விட்டு, தன்னன் எதிரிலாப் பெருமாளான குலோத்துங்கச் சோழ கடம்பராயன் கல்வெட்டியுள்ளான்.
1. ஸ்வஸ்திஸ்ரீதிரிபுவனச் சக்கரவத்திகள் ஈழமும் மதுரையும், பாண்டியந் முடித்
2. தலையும் கொண்டருளிய குலோத்துங்க சோழ தேவர்கு யாண்டு 11ஆவது...
3........ பாடி கொண்ட சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து தெந்கோன் நாட்டு... காணக்கீ சிரமுடைய நாயனா
4. ற்கு சார் அரையந் தன்னன் எதிரிலாப் பெருமாளான குலோத்துங்க சோழக் கடம்பரையனேன்
5. இன் நாயனார்க்கு இறையிலி தேவதானமாகத் திருக்கை மலரில் உதகம் பண்ணிக்குடுத்...
6. ங்க..க பொதிந்து வருகிற மங்கலம் குளத்துக்கு பெருநாள் கெல்லைக்குட்பட்ட
7. மேல் நோக்கிய மரமும், கீழ்நோக்கிய கிணறும் உடுப்போடி யாமை தவழிய மற்றும் எ
8. ப்பேர்பட்ட கடமை, குடிமையும் பூஜைக்கும் திருப்பணிக்கு முடலாக நான்
9._____________ என்று கூறுகிறது.
அதே கோயிலில், அதே எதிரிலிக் கடம்பராயன் பூசை திருப்பணிக்கு நிலக் கொடையளித்துள்ளான். 17/3 ல, கி.பி.1196ல்
வெட்டப்பட்ட கல்வெட்டு.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவநச் சக்கரவத்திகளீழமும், மதுரையும், பாண்டியந் முடித்தலையும் கொண்டருளிய கு
2. லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 18வது இரட்டபாடி கொண்ட சோழவளநாட்டு உறத்தூர் கூற்றத்து தென் கோனாட்டு சா
3. சரணா க்கீசுவரமுடைய னாயனாற்கு இன் னாட்டு சார் அரையன் தன்ன (ன் எதிரிலாப் பெருமாளாந குலோத்துங்க சோழக்
4. கடம்பராய நேன் பெருமாள் சீ பாதத்து விண்ணப்பித்திட்டு போகவிட்ட அருளிச் செயற்படி காரவயல் புரவின்படி
5. நிலத்தில் இன்னாயனார் தேவதாந நிலத்தில் பழந்தேவ தானமாய் வருகிற நிலமுந் திருநாமத்து காணியாக நாயநார்....
6. விலை கொண்டுடைய நிலமும் குடிமக்கள் பலரும் திருக்கை மலரில் நீர் வார்த்து குடுத்த நிலமும், ஊர் ஒழுகின்படி அகவ
7. யல் நம்பன் வயக்கலும், தேவன் வயக்கலும் கொடு முடுக்கு தர் இரண்டும் பறிகாலும், பிச்சதேவந் வயக்கலும் தேவந் வயக்கலும்,
பறிகாலும் தொத்து புரதுரை...ணும்
8. சலக்குறையும், நகரத்தாந் வயக்கலும்... சிங் நெடுங்கனும்... இதன் கிழக்கு தேவ..
9. எம் இதன் மேற்கு முடுக்கு பறிகாலும் மேற்கு து...
10. வயலும் மாஞ்செயும் குறுக்கத்தி துடவையும், கல்லதுடவையும்
துடவையும் பாதிரிச் செயும் உத்திநி...
11. மை நங்கை வயக்கலும் தெங்கந் திருனந்த வானமும், பொந்.....வயக்கலும் சிறு... வயக்கலும்... ச் செ
12. யும் கூத்தறிகுளமும் மணவயக்கலும் உள்ளிட்ட நிலம்... வயல் புரவுக்குள்பட்ட ஏர் அகவாய்கு..
13. ச்ச வயல்தடி நிலம் சாவப ஆக நிலம்... இன்னிலம் அரை யேழும் மாவரையால் வந்த பசான கடமை விளைந்த நிலத்தால்
14. வந்தந விரைக்கடமை அற்பசி குறுவை மற்றும் னெல் கடமையால் வந்தநவும் கீழிறையால் வந்தன பயிர் உள்ளிட்ட கடமையால் வந்த
15. னவும் இறையிலி அந்தராயங்களால் வந்தனவும் கூட்டிக் கொண்டு பெருமாள் திருமேனிக்கு னன்றாக சந்திராதித்தவர் பூசை செல்லவும் தி
16. ருப்பணிக்குடவாகவும் அருளிச் செயற்படி கல்வெட்டி குடுத்தேந் குலோத்துங்க சோழக் கடம்பார நேந் இது பன்மாஹேஸ்வர ரஷை. ஆவணம் இதழ் 12/2001 பக்கம்:33
20.2 ஆவணம் இதழ் 12/2001பக்கம்:40
-----------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பொன்வாசி நாதர் கோவிலில் கி.பி.1308ல் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர
தேவரின் காலத்தில் கோயில் பூசைக்கும், திருநாளுக்கும், பத்தருக் குளத்தையும், வயலையும், சார் அரையன் கண்டன் கடம்பராயன் தேவதானமாக விடப்பட்டது. இங்கேயுள்ள கல் சன்னலுக்கு கிழக்கில்
இத்திரு சாலக்கமும் இந்நாயனாரு நலவயல் முத்தரையன் அரையனான தர்மம் என்றும் கூறப்பட்டுள்ளது.
1. ஸ்ரீ கோமாறு பன்மரான திரிபுவ-சக்கரவர்த்திகள் ஸ்ரீ எம்மண்டலமுங்
கொண்டருளிய குலசேகர தேவர்கு யாண்டு 40
2. கோனாடான கடலடையா திலங்கை கொண்ட சோழவளநாடு உறத்தூர் கூற்றத்து இலுப்பையூர்
3. பிறந்த சி.மாயேசிரளல்லார் விடையாதேவி திருவுமுடைய நாயனாரு
திருப்பூசைக்கும் திருநாளுக்கும்
4. பெருமாள் திருமேனிக்கு நன்றாக வரியிலும் புரவிலும் கழித்துக்
சாரையன் கண்டன் க
5. டம்பையராயர் பற்று நாட்டவரு இந்நாயனார் குடி நீங்காதத்
தேவதானமாக திருக்கை ம
6. லரில் உத்தமும் பண்ணித் திருமலையில் கல்வெட்டிக் குடுத்த புரம்
புத்தருக்குளமும் வயலு (பரி)
7. கமுள்ள புஞ்சையும் குடுத்த படிக்கு எல்லையிரவது கீழ்பாற்கெல்லை துளாத்து குளத்து னீர் ___
8. காவைக்கு மேற்கு தென்பாற்க் கெல்லை புலியூர் எல்லைக்கும் கோங்குடி எல்லைக்கும் வடக்கு
9. மேல்பார்கெல்லை ஆனைபடு சுனைக்கு கிழக்கு வடபார் கெல்லை இராச..... க்கு போகும்
10. வழிக்கு தெற்கும் ஆக இசைந்த பெருநாங்கெல்லைகுட்பட்ட குளமும் வயலும், புஞ்சையும், குடி நீங்க தேவ
11. னமாகர் திருமலையிலே கல்வெட்டு குடுத்தேன் கண்டன் கடம்பையராயனும், நாட்டவரும்
12. நாளது கடம்பைராயர் திருமுகப்படிக்கு இநாயனார் கோவில் ஆதி சண்டேசுர கோயிற் கணக்கு
13. ஊரவரு முந்நாளிலே இக்குளமும் வயலும் வறள காரி இளமக்களில் ஆயன் அரியானு கதிர்மாலையும் பக்கல்லும் விலை கொண்ட
புரம்பக்குடி கொண்டுடையரான பெரி அரசர் சாராய கோனுக்கு வேந்த சாக்கனான மாகட கண்டக் கோனுக்கு இருநூறு இராசனுக்கு
பாம்பனுக்கு.... புரம்.. கச...கெல்லை குடி நீங்காத் தேவ
14. தானமாகக் காணியாக குடுத்த இருநூற்று ஐம்பத்து ஆறு (குழி கொண்டது ஒரு மாவாக மாத்
15. தால் திருச்சூலக் காலால் அளக்கும்...ளத்துக்கு பினை..டுக்காலால்
அளக்கும் மாத்தா கீழரை காசு 15ம் கோடை போகம் யரை..
16. க்கடவோமா மாகவும் யிப்படி சம்மதித்து கல்வெட்டி குடுத்தோம். இவனைவோமும் மாள்வார்க்கு புஞ்சைப் போகம் னாடு செய்த
மரியாதை கொள்ளக் கடவோமாகவும் கண்டன் கடம்பராயன் எழுத்து
17. சிமாயேசுரக் கண்... வலங்க பெருமா எழுத்து
அருகிலுள்ள கல்வெட்டில், விழுமிய முத்தரையன் நிலக்கொடையளித்ததையும் மற்றொரு கல்வெட்டில், வளவதரையனுக்கு
நிலம் விற்கப்பட்டுள்ளதையும் கல்வெட்டுகள் தெளிவுபடக் கூறுகின்றன. பக்:42-44
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருமைக்குளத்திற்கு அருகில் உள்ள நடுகல்லில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் வலைவாணன். இக்குளத்திற்குச் செல்லும் வழியில் கி.பி.13ம் நூற்றாண்டில்
வெட்டப்பட்ட கல்வெட்டில் மேல்பகுதியில், சம்மட்டி, கலப்பையும், கீழ்பகுதியில், முக்காலி மீது பூர்ணகும்பம் இரு குத்துவிளக்கு, சிறு கத்தி
மற்றும் கேடயம் கோட்டுரு வங்கிகளில் உள்ளன. மேற்கோயில் முற்றத்திற்காண வாயில் இரண்டு கரை நாட்டைச் சேர்ந்த வலைவாணன்
என்பவரால் அமைக்கப்பட்டுள்ளது.
1 ஸ்வஸ்திஸ்ரீ
2. நகரந்தெலிங்க குலகால
3. புரமான குலோத்துங்க
4. சோழ பட்டினத்துத்
5. திருமேற் கோயிலாம் பெ
6. ருமான் திருமுற்றத்துத்
7. திருவாசல் மாடம் இட
8. ண்டுகரை நாட்
9. டு வலை வாணன்
ஆ-ம் ஆவணம் இதழ் 12/2001 பக்கம்:58
ஆவணம் இதழ்13/2002 பக்:25
----------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நல்லூர் கிராமத்தில் வயலில் பழைய சிவன் கோவில் வடபுறம் சுவரில் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டுள்ளது.
குறிப்பு : இவ்வூரிலுள்ள புரஉலகன் என்பவரிடமுள்ள செப்பேடு செய்தியையும் காணலாம்.
இங்குள்ளவனநாதர் ஊரணியை உலக முத்திரையர் பெரிய பெருமாள்
புத்திரன் புர உலகன் வெட்டியுள்ளான்.
1. பிலவங்க ஹ (
சித்திரை 26உவ
2. னநாதர் ஊரணி உலக
3. முத்திரையர் பெரிய பெருமா
4. ள் புத்திரன் புர உலகன்
5. வெட்டி விச்ச ஊரணிம
6. வருடம் தன்மம் இந்
7. தஊறணிக்கு இடை தி
8. டை பண்ணினார்கள் காறாம்ப
9. சுவைக் கொன்ற பாவம், என்று எச்சரித்து வெட்டப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரம் அருள்மிகு சாந்தநாத சுவாமி கோயில் காலம் சுமார் 13ஆம் நூற்றாண்டு.
இக்கோவிலின் திருவிழாவினை பலரும் கொண்டாடியுள்ளனர். பற்றிய கல்வெட்டில் அரையர் மக்கள் கொண்டாடிய விவரம்
1. ஸ்வஸ்தி ஸ்ரீஉடையார் குலோத்துங்க
சோளீச்சுரமுடைய நாயனார் திருநாள்
முறை திருக்கோடி சுற்று கோயில் பெருமாள்
2. திருநாட்டுப் பூசைய் முறை
திருநாவுக்கரைசன் திருநாள் னாற்பத்தெண்ணா இரப்
பெருந்தெரு ஊர் முறை... ங்குடி ஊர் முறை
3. இரண்டாம் திருநாள் இளம்பிறை குடி
ஊரா முறை மூன்றாம் திருநாளும் நாலாந்
திருநாளும் புது... அரைய மக்கள்
முறை ஐந்தாம் திருநாள்
4. சிங்க மங்கலத்து ஊர் அரைய மக்கள் முறை
ஆறாம் திருநாள் சிங்கமலத்து
இள நாட்டாரும் புதுக்கோட்டை இள நாட்டாரும் முறை.
5.__________________ என்று உள்ளது. ஆவணம் 13/2002 பக்: 19
ஆவணம் 15/7/2004:
----------------------------------------
பெரம்பளூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூரில் 3ஆம் ராஜராஜசோழன் (1216-1257) ல் சிற்றரசாக இருந்த ஆறகளூர்
வாணகோவரையன் தனது வம்சத்து மன்னர் செம்பை இராஜராஜ மகதனான வாணகோ வரையன் கோயில் கட்டியுள்ளான். இக்கோயில்களில், மகததேசன் பொன்பரப்பின வாணகோவரையன் கி.பி.1172-1216லும் தாயிலும் நல்ல பெருமாளான குலோத்துங்கச் சோழ வாணகோவரையன் (1181-1220) லும் பெயர்களில் கட்டியுள்ளான். இக்கல்வெட்டுக்கள் இவ்வூருக்கு அருகிலுள்ள திருமாந்துரைச் சிவன்கோயிலில் கிடைத்துள்ளன.
மூன்றாம் ராஜராஜசோழனின் யாண்டு 12ல் (கி.பி.1228)ல் வாணகோவரையன் என்ற சிற்றரசர் இக்கோயில் பூசைக்கும்.
திருப்பணிக்கும் என நஞ்சை நிலம் 1/2 யும், புஞ்சை நிலம் 14 வேலியும், இறையிலியாக வழங்கியுள்ளான்.
1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராசராஜ சோழ தேவற்கு யாண்டு பன்னிரண்டாவது வாணகோவரையன் ஓலை வெம்
2. பார் ஊரவரும், தானத்தாரும் கண்டு தங்கள்ளூர் உடையார் பொன் பரப்பின ஈசுவரமுடைய நாயனார்க்கு பூசைக்கு திரு
3. ப்பணிக்கு இறையிலியாக இட்ட நன்செய் நிலம் அரையும், புன்செய் நிலம் பதினாலு வேலியும் இட்டேன் வாணகோவரையனேன் இது திருமு
4.ப்படி. என்று கூறுகிறது.
ஆவணம் 15/2004 பக்:71
----------------------------------------------
அதே வெம்பையர் கோயிலில் கி.பி.17, 18ஆம் நூற்றாண்டில் இவ்வூரில் இருந்த ஞானியர் என்பவரின் மகன் சொறிய முத்திரியன்
என்பவர் பொன்பாப்பினாதற்கு திருமஞ்சனம் செய்ய (அபிசேகம்) கிணறு வெட்டிக் கொடுத்துள்ளான்.
1. சவுமிய வருஷம்
2. சித்திரை மாதம் 30ம் தேதி
3. வெண்பாதிலிரு
4. ந்த ஞானியர் மகன்
5. சொறிய முத்திரியன்
6. பொன்பரப்பி னாதற்கு
7. திருமஞ்சனம் யுண்டா
8.க்கின பலன் சதா சேருவை
ஆவணம் 15/2004 பக்:74
-----------------------------------------------
பெரம்பளூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன் பேரையூர் சிவன் கோயிலில் கருவறைத் தென்புறம் சுவரில் 3ஆம் இராஜ இராஜனின் 36வது ஆட்சியாண்டு கி.பி.1252ல் வெட்டப்பட்ட மகாமண்டபக் கிழக்கு வடக்குச் சுவர் குமுதப்படையில் பேரவூர் ஊரவர் கோயிலுக்கு அமுது படைக்கவும், ஒரு நொந்தா விளக்கு ஏற்றவும் இறையிலியாக நிலம் விடப்பட்டது. அதேபோல அரசன் தென்னவரையன்,
வங்கார முத்தரையரின் மகன் கொல்லத்தரையர் ஆகிய இருவரும் சேர்ந்து நான்கு நந்தா விளக்குகள் எரிக்க இறையிலியலாக நிலம் வழங்கினர்.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ பேரவூருடையார் திருமுக் கூடலுடைய நாயநார் கோ
2 யில் முப்பது வட்டங்காணி உடைய சிவப்பிராமணர் முன்னாளி
3. ல் பேரவூர் பக்கல் கொண்ட உபயம் இன் னாயனாற்கு அமுது படிக்கு நெல்லுக் குரு
4. ணியும் திரிநுந்தா விளக்கு ஒன்றும் அரசன் தென்னவராயரும், வங்கார முத்த
5. ரையர் மகநார் கொல்லத்தரையரும் இன்னாயநார் தேவதான இறை இலி யி
6. னுக்கு இவர்கள் விட்ட நிலம் உபயமாகக் கொண்டு எரிக்கும் திரிநுந்தா விளக்கு நாலு ஆக விள
7. இராஜ இராஜ தேவற்கு யாண்டு 36 றாவது வரையும் இந்த மஞ்சு திரிநுந்தா விளக்
8. கும் எரித்து நெல்லுக் குறுணிக்கு அரிசி முன்னாழி உரியும் இந்த சிவப்பிராமணர் செ
9. லுத்திப் போது கிறப்படியைச் சந்திராதித்த வரையும் செல்வதாக மகர நாயற்
10. றுபூர்வ்வ பக்ஷத்துதெசமியும் புதன் கிழமையும் பெற்ற புணர் பூசத்து நா
11. ள் கல்வெட்டி வித்தோம் நிலங்கலந்த ஸ்ரீருத்ர ஸ்ரீமாஹேஸ்வர ரோம் ஸிவமஸ்து
ஆவணம் 15/2004 பக்:81-82
இதழ் 21/2010
--------------------------
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாஞ்சார் என்ற ஊரிலிருந்த வலையரில் எதிர்முனை கண்ட முத்தரையனுக்கு சார் அரையன் தன்னன்
கடம்பராயன் குளம், வயல் விட்டுள்ளான்.
1. ஸ்வஸ்திஸ்ரீதிரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலசேகர தேவற்கு யாண்டு மேஷ நாயிற்று
2. அமரபக்சத்து துதியையும், திங்கள் கிழமையும் பெற்ற விசாகத்து நாள் கோனாடான கடலடையா
3. திலங்கை கொண்ட சோழவள நாட்டு உறத்தூர் கூற்றத்து சார்அரையன் தன்னன் தெங்கனான கடம்பார
4. யனேன் இவ்வூர் வலையரில் எழும்போதனான எதிர்முனை கண்ட முத்தரையனுக்கு நான் விற்ற சண்ணு
5. வான குடிக்காடு இவ்வூர் உடையார் குலோத்துங்க சோளீஸ்வர முடையார்க்கு குடி நீங்கா தேவதானமாக குடுத்த இக்குடிகாட்டுக்கு
பெருநான் கெல்லையாவது கீழ்பாற்கெல்லை கடையன் குடிக்காட்டு எல்லைக்
6. கு எழுந்தருள இருக்கிற திருச்சூல் தேவர்க்கு மேற்கும், தென்பாற்கெல்லை அஞ்நூற்றுப் பேரையன்கு
7. டிக் காட்டில் முன் பாழுங் கிணற்றில் வட விளிம்புக்கு கிழக்கும் வடபாற் கெல்லை குயத்தூர் நாயனார் பழந்
8. தேவ தானத்துக்கும் த...க்கும் ஆக இசைந்த பெருநான் கொலைக்குட்பட்ட இக்குடிகா
9. டும் குளமும், வயலும் இந்நாயனார்க்கு...... தேவதானமாக திருக்கை மலரில் நீர் வார்த்துக் குடு
10. க்கையில் இந்நிலத்துக்கு ஸ்ரீ பாண்டாரத்துக்கு கடமை யிருக்குமிடி
ஆவணம் 21/2010 பக்:79
ஆவணம் 1/1991பக்:39
-------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், சேத்திமுத்திப்பட்டி கண்மாயில் பழைய மடைத் தூணில் கி.பி.9ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில்
1.ஸ்ரீ செ
2.பூர் மா
3.ங்கல
4.முடையா
5.ன் குவா
6.வ(ன)க்
7.கன் வெ
8. நல் மண
9. வாட்டி
10. முனேன்
11. எழுவி
12. நாட்டின
13. குமரிக்க
14.கல்.என்று குவாவனின் பெயர் காணப்படுகிறது. குவாவன் முத்தரைய மன்னன் ஆவான்.
ஆவணம்8/1997 பக்கம் 24
-------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், அரசமலை ஊராட்சியிலுள்ள அய்யனார்
கோவிலில் உள்ள சுவாமி சிலைக்கு அருகிலுள்ள பாறையில் உள்ள
கல்வெட்டு
கி.பி.1547ல் அரச மீகாமன் நிலையில் இருந்த வலையர்க்கு, சவம் அடக்கம் செய்வதற்கும், துறை ஆற்றுவதற்கும், சுழுந்து இடவேண்டாம்
என்று ஆணையிட்ட கல்வெட்டாகும்.
1. சகாத்தம் 1469 மேல் செல்லா நின்ற ஆனந்த வருஷம் சித்திரை 5உ அரச மீகாமன் நிலை ஊராக அ
2. மைந்த ஊரவரோம் மேற்படியூர் வலவற்கு நின்றையம் இட்டபடிக்கு சவம் அடக்கிறதும் துறை ஆற்றுகிறதும்
3. மியானக் கரைக்கு சுழுந்து இடவேண்டாம் என்று சட்டன் இட்டுக் குடுத்தபடிக்கு அரச மீகா
4. மன் நிலை ஊரவர் சொற்படிக்கு வாழைக் குறிச்சி தொண்டைமானார்... பெருமாள் எழுத்து உ
ஆவணம்8/1997 பக்38
-------------------------------------------
பெரம்பலூர் வட்டம், சாத்தனூர் ஏரியில் நடப்பட்டுள்ள மதகுகல் கி.பி.12-13ம் நூற்றாண்டில் வெட்டப்பட்டுள்ளது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ
4. செய்வித்தான்
2. இத்தூம்பு அரங்
5. சாத்தன்னூர்
3. கன்அரையன்
6.உடையான்
என்று அரங்கன் அரையன் கட்டியதை காட்டுகிறது.
ஆவணம் 9/1998 பக்கம்:40
---------------------------------------------------
தஞ்சை மாவட்டம், செந்தலைக் கோயில் கல்தூணில், பெரும்பிடுகு முத்தரையன் போரிட்டு வென்ற இடங்களை கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். அதில் கொங்குநாட்டு திங்களூரை முத்தரையர் தம் பகைவர்களோடு
போரிட்ட இடங்களில் ஒன்றாகக் கூறப்பெறும் திங்களூர் என்று அவர்கள் கூறியுள்ளனர். முத்தரையர் போரிட்ட திங்களூர் சோழ நாட்டை சேர்ந்தது. முத்தரையர் தலைநகரான நியமத்தின் அருகே தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ.
வடமேற்கேயுள்ளது. இரண்டு திங்களூருக்கும் இடையே 225 கி.மீ. இருக்கும். முத்தரையர் கோநகரங்களான வல்லமும், தஞ்சையும் அவர்கள் போரிட்ட அண்ணல்வாயில், அழுந்தியூர், கண்ணனூர், காந்தளூர், காறை, கொடும்பாளூர், செம்பொன்மாரி, புகழு ஆகியவை சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டை நோக்கிய வழிகளிலுமே உள்ளன. திங்களூர் மட்டும் கொங்கு நாட்டில் இருக்க முடியாது என்று புலவர் செ.ராசு அவர்கள் பதிவு செய்துள்ளார்.
பக்கம் 75ல்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், மலையடிப்பட்டி ஊருக்குத் தென்புறமுள்ள நரிப்புலி ஆண்டவர் கோவிலின் மேற்கு பாறையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள கல்வெட்டு கி.பி.1440ல் உள்ளதாகும்.
1. சகாத்தம் 1362ன் மேல் செல்லா
2. நின்ற சுக்குல வருஷம் அற்பசி மாதம்
3. பொன்னமராவதி நாட்டு வடபற்று செவ்வ
4. ல்லூர் ஊராக வமந்த ஊரவரோம் எங்
5. கள்ளூர் வலையர் எங்களுக்கு செய்யும் காரி
6. யம் காவணமுமிட்டு கடமையுமிட்டு
7. கள்ளூர் வலையர் எங்களுக்கு செய்யும் காரி
8. போகக் கடவார்களாகவும் இப்படிக்கு
9. ஊரவர் சொல்படிக்கு
மற்றொரு கல்வெட்டு அதே இடத்தில் உள்ளது. காலம் 14ஆம் நூற்றாண்டு. அதே செவ்வல்லூர் ஊரவர்கள், அவ்வூர் வலையர்களுக்கு அவர்கள் செய்யும் கடமைக்கு வெட்டப்பட்டுள்ளது.
1 செவ் வல்லூர் பணை
2. யான் சேதிபராயன் உ
3. ள்ளிட்டாற்கு இவ்வூர் வ
4. லையர் வீட்டால் குறுணி
5. தா நியமும் ஆடிக் காத்திகை
6. க்கு ஒரு முசலும் குடு
7. க்க கடவோமாகவும்
ஆவணம் 14/2003 பக்கம்:20
-----------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகிலுள்ள வேகுப்பட்டி அழகஞ்சான் கண்மாயில் தெற்கு மடையை கி.பி.900ல் அரிகுலகேசரி முத்தரையன் குமிழியும், மிண்டகமும், கடையங் கிணறும் செய்துள்ளான்.
1. ஸ்வஸ்திஸ்ரீயாண்டு மு
2. ப்பத்தஞ்சாவது
3. இவ்வாண்டு இக்கு
4. ளத்தில் குமிழியு
5. ம் கற்காலும் மிண்
6. டகமும் கடையங்
7. கிணறும் செய்வித்
8. தான் (அரையன் கா)
9. னப் பேராயின அரி
10. குல கேசரி முத்தரை
11. யனேன். என்று கூறுகிறது.
ஆவணம்14/2003 பக்கம்:111
---------------------------------------------
இந்தப் பட்டையம், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள மணப்பட்டி என்ற ஊரை, கானாட்டார், கோனாட்டார் எல்லைச்
சண்டையில் தலைப்பலி கொடுத்தமைக்கு காணியாச்சியாகக் கொடுத்துள்ளனர். இந்தப் பட்டையம் 18ஆம் நூற்றாண்டாகும்.
2 ம் பக்கம் வரி 41ல் யிப்படிக்கு நாட்டார் முத்திரியன் வில்லுனி நத்தம் மணமங்கலம் நல
42 லூருக்கு ஊரது பூராவுக்கு வந்தவன் நாட்டாபிள்ளை என்ற பேறு கொண்ட)
43 தந்திரிமாரில் பிடார முத்திரியன்ன், செம்ம முத்திர
44யன் கா முத்திரியன் குப்பிடார முத்திரியன் உள்ளிட்டார்களும் நாரா.....
மணமங்கள நல்லூரைப் பள்ளனுக்குக் கொடுத்துள்ளனர்.
ஆவணம் 18/2007
------------------------------
இவ்விதழ் பக்கம் 154ல் தென்னிந்திய நடுகற்கள் என்ற தலைப்பில் காட்பாடியைச் சேர்ந்த ர.பூங்குன்றன் என்பார் வெளியிட்டுள்ளார்கள். இதில் பக்கம் 160ல் நடுகல் காட்டும் குலங்கள் என்ற தலைப்பில், அரையர் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளதில்
பெரும்பாணர், வாணர், கங்கர், கொங்கணி, பிரிதி கங்கர் போன்ற அரச குலப் பெயர்கள் "அரைசர்" என்ற பட்டத்துடன் நடுகற்களில்
குறிப்பிடப்படுகிறது. தண்டம் பட்டு நடுகல் கல்வெட்டு "ஈசை பெரும் பாணரைசரு" என்றும் கூறும் மற்றொரு கல்வெட்டு "ஊர் அரைசரு பெரும்பாணதியரைசரு" என்றும் கூறுவதைக் காண்கிறோம். பெரும்பான முத்தரைசர் பெரும்பாண இளவரைசர் வேசலிப் பேரரசைர்.
வாணபருமரைசர், கங்கபருமரைசர், அரிமறை பருமர், போன்ற பெயர்கள் கூறப்படுகின்றன. பாலாசிரியர், பாரதாயர், பராமதாயர், அமரடக்கியார், காட்டிறைகள், கங்க விசைய ஏனாதியர் போன்ற பெயர்களும்
எடுத்துக்காட்டத்தக்கன.
இப் பெயர்களில் "அரைசர், அரையர், தாயர், திறையர், இறையர், அந்தை, பருமரைசர்" போன்ற விகுதிகள் ஆளப்பட்டுள்ளன. அரைசர்
என்பது வடமொழி "ராஜா" என்பதன் திரிந்த வடிவம். ஆதிராஜா என்பதன் திரிந்த வடிவம் "அதியரைசர்" என்பர். வேள்விக்குடி செப்பேட்டில் அளவரிய "அதிராசனா" என்று கூறப்படுகிறது. அரைசர் என்பது தமிழ் மரபில் வந்த பெயர் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் "ராஜா" என்ற சொல்லுக்கும் "வேள்" என்ற சொல்லுக்கும் இடையில் பொருள் ஒற்றுமை
உள்ளது. "அரசன்" (ராஜா) ஒருமை என்றால் "அரைசர்” பன்மை. "பெரும்பாணரைசர்" என்பது பாணர் குல வேளிர்களைக் குறித்து வந்தது.
இருளப்பட்டி நடுக்கல்லில் "பருமரைசர்” என்று கூறுவது குறிப்பிடத் தக்கது. "பருமர்" என்பது வர்மன் என்பதன் தமிழ் வடிவம். வர்மர், அரைசர்
என்பவருக்கும் மேல் இருப்பவர். பெரும்பாலும் வேந்தன் என்பதற்குச் சரியாகக் கூறப்படும் வடமொழிச் சொல் எனலாம். பல்லவ மன்னன்
ஒருவனைத் தொண்டையந் தார் வேந்தன்" என்று கூறுவதிலிருந்து இது விளங்கும். ஆகையால் "வர்மன்" என்பதுடன் அரசன் என்பது சேர்ந்து "வருமரசன்" (பருமரைசரு வந்துள்ளது எனலாம். கி.பி. நான்காம் நூற்றாண்டில் வடமொழியைப் பயன்படுத்தும் போது சரியான விளக்கமின்றிப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையே இது விளக்குகிறது. அதிகாரப்படி நிலையில் வர்மன் அரசரினும் உயர்ந்தவன் என்பதையும், சத்திரிய மரபினன் என்பதையும் காட்டவே "வர்மன்" என்ற பெயர் கூறப்படுகிறது.
முத்தரைசர்-இளவரைசர்.
முத்தரைசர், இளவரைசர் என்ற இரு துணைப் பெயர்கள் நடுகற்களில் வருகின்றன. இவற்றில் முத்தரைசர் என்பது முத்தரையா பரம்பரையைக்
குறித்து வந்தது எனக் கருதப்படுகிறது. உண்மையில் இச்சொல் ஒரு குலத்திலேயே மூத்த பிரிவினர் என்பதைக் குறித்து வந்தது. பெரும்பான முத்தரைசர், பெரும்பான இளவரைசர் என்று கூறியதிலிருந்து இது
உறுதிப்படுத்தப்படுகின்றது. முத்தரையர் என்ற குலத்திற்கும், பெரும்பாண முத்தரைசர்க்கும் தொடர்பு ஏதுமில்லை.
மேலும் வாணகோவரையர் பரம்பரையில் "வாணகோ முத்தரைசர்" என்றும், வாணகோ இளவரைசர் என்று கூறப்படும் இரு பிரிவுகள் இதனை வலியுறுத்தும். இளவரைசர் என்பது ஒரே குலத்தில் இளைய பிரிவினைக் குறித்து வந்தது எனலாம் என்று விளக்கமாக ஆவணம் 18/2007ல் பக்கம் 160-161ல் விளக்கமளித்து உள்ளார்கள்.
ஆவணம்2/1992 பக்கம்:16
--------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம். குண்டூர் அய்யனார்கோவில் சிற்பக்கல்வெட்டு கி.பி.9-10ம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகும். இவ்வூர் களத்து மேட்டில் உள்ள வயலில் இக்கோயில் உள்ளது. குண்டூர் ஏரியின் கற்குமிழியைச் செய்வித்தவன் குவாவன் என்ற முத்தரையன் இந்தக் குவாவனே இந்த அய்யனார் சிற்பத்தையும் எழுந்தருளுவித்துள்ளான்.
1. ஸ்ரீபெருங் குண்டூர்....
2. னம... னத குவாவ
3. ன் செய்வித்த...
4.______ மகா சாத்த
5. ன் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஆவணம் 2/1992 பக்கம்:28
---------------------------------------------------
ஜெயங்கொண்ட சோழபுரம் கோவிலில் கி.பி.1045ல் இக்கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு 27 வரிகளைக் கொண்டுள்ளது.
22.... ஜயங் கொண்ட சோழன் எனும் உயர்
23. ந்த பெரும்புகட் கோ விராஜகேசரி பந்மராந உடையார் ஸ்ரீராஜாதி ராஜ தேவற்கு
24.யாண்டு 27ஆவது காரைக்காட்டு நெண்மேலி
25. யாந ஜயங் கொண்ட சோழபுரத்துப் பள்ளி கயிநூர் கலியநான டிகொண்ட
26. சோழ முத்தரையந் மகந் கலியன் கயிறூர்க்கும் கலியன் வாணியனுக்கும் வை
27. த்த திருநுந்தா விளக்கு ஒந்றுக்கு விட்ட பசு 32 இவை பந்மா ரக்க்ஷை
இக்கல்வெட்டில் கயிர் ஊர் கலியன் என்ற முத்தரையனுக்காக இக்கோயிலில் விளக்கு எரிக்கப்பட்டுள்ளது.
ஆவணம்2/1992 பக்கம்:33
---------------------------------------------------
பெரம்பளூர் வட்டம், அசூர் சொக்கநாதர் கோயில் மகா மண்டபத்தில் தென்சுவற்றில் சகம் 1350 (கி.பி.1428) டிசம்பர் 24ம் தேதிய கல்வெட்டில் 6
படையான வரிகளைக் கொண்டுள்ளது. இதில் 5வது வரிப்படையில்
4.____________வா
5. ணியர் பேர்க்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும், இடையர். வலையர், கண்மாளர் குடிமக்கள்.... பறையர் பேர்க்கு பேர் ஒன்றுக்கு
இரண்டு பணமும்....... குடுக்கக் கடவோம்
என்று உள்ளது. இவ்வூரில் வலையர் என்ற சாதியில் இருந்தனர் என்பதற்காச் சான்றாகும்.
ஆவணம் 16/2005 பக்கம்:101
---------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கோட்டூரில் உள்ள பெரியகுளம் மடையை சுந்தரசோழன் காலத்தில் 2வது ஆட்சியாண்டில்
கி.பி.958ல் இவ்வூரைச் சேர்ந்த இருமடி சோழ சிக்களாந்தி முத்தரையன் ஆன தரங்கம் போளறன் என்பவர். இக்குளத்தில் கற்குமுளி, கற்கால் அமைத்து உள்ளனர்.
1. ஸ்வஸ்திஸ்ரீ
2. கோ இராச கே
3. சரி பன்மற்கு யா
4. ண்டு 2 இவன்
5. ண்டு கான
6. நாட்டு கோட்டி
7. ஊர் குளம் கற்கு
8. மிழி வைச்சு க
9. ற் கால் நாட்டினா
10. இவ்வூர் இரு
11. மடி சோழ சி
12.ங் களாந்தி மு
13. த்தரையனா
14. ன தரங்கம்
15. போளறன்
என்று கூறுகிறது.
ஆவணம் 16/2005 பக்கம்:102
-------------------------------------------------------
மேற்படி குளக்கரையில் பாறை மீதுள்ள ஒரு கல்வெட்டு முதலாம் குலோத்துங்கன் ஆட்சியாண்டு 47ல் அதாவது கி.பி.1117ல் முன்னாளில் இருமடி சோழ சிங்களாந்தி முத்தரையனால் அமைக்கப்பட்ட குமிழியை
தற்போது புதிப்பித்து அமைத்துள்ளான். காலம் சுமார் 150 ஆண்டு மடை பழுது இல்லாமல் இருந்துள்ளது.
1. திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கொ லோ
2. துங்க சோழ தேவர்கு யாண்டு 47
3. ஆவது கான நாடான விருதராச பயங்க
4. ரவளநாட்டுக் கான நாட்டுக் கோட்டியூர் அ
5. ரையன் பெரியான் உட்காரக் கண்டனான கொ
6. லோத்துங்க சோழக் கனக ராஜனேன் எங்க
7. ள்முதிலிகள் மும்முடி சோழ சிங்களாந்தகி முத்த
8. ரையர் இவ்வூர்க் குளம் கற்குமிழி படுத்துக் கல் நா
9. ட்டி நாட்டின கல்லிலே எழுத்து வெட்டின பின்பு இக்
10. குமிழியழிந்தது அழிந்தகுமிழி புதுக்கினே
11. ன் கொலோத்துங்க சோழ கனக ரா
12. ஜனேன்.
இவன் சோழ மன்னன் வழிவந்த முத்தரையன் எனத் தெரிகிறது.
பூதி தீரன்:
------------------
தெ.இ.கல்வெட்டு தொகுதி III பகுதி III பக்:360 க.எ.183,
வரத ஸ்ரீ கோவிசய (இருபதங்க விக்கிரமதேவற்கு யாண்டு இருபத்தாறாவதுகாலியூர் கோட்டத்துத் தன் கற்றுத்தர மேருச் சதுர்வேதி மங்கலத்து சபையோம் நில வில ஆவணக் கை எழுத்து முத்தரயர் நாட்டு மீ கூற்று விளாநாட்டுக் கூகூர்க் கூ
கூர் விசய நல்லுழான் காடவதி யரய னாகிய பூதி தீரனுக்கு எம்மூர்த் தென்படாகை பெருங் கொட்டேரிக் கீழா டலம் பூண்டித் தெற்குக் கூறிடாதே கிடந்த கீழ்பூண்டியும் என்கின்றது.
இக்கல்வெட்டு செங்கல்பட்டு மாவட்டம், உத்தரமல்லூர் வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த நில விலை ஆவணத்தில்,
முத்தரையர் நாட்டு மீ கூற்று விளாநாடு கூவர் என்ற முத்தயைர் நாடு இருந்ததை விளக்குகிறது.
448. தஞ்சை மாவட்டம். செந்தலையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் 2வது நூணில் கோ இளங்கோ முத்தரையர் மன்னராக இருந்த விவரத்தைக் கூறுகிறது.
1. வரத ஸ்ரீ கோ இளங்கோ முத்தரையர்க்கு யாண்டு 18-ஆவது நியம மாகாளத்து
2. பிபாரியார்க்கு, திருவமுதினுக்கும், திருவிளக்கினுக்கும், திருஆராதனை செவார்க்கும்
3. திருவமுது அட்டுந் தூடமும் மணியும், கொண்டான் ஒருவனுக்கும் திரு
4. மெழுக்கிடுவார் இருவர்க்கும் பொது நானாழி அரிசியாக இரண்டு திருவமுதுக்கும்
5. பகல் விளக்கு ஒன்றும் நந்தாவனக்குடிகள் மூவர் பாதசிவன் முருகள் படுக
6. ன்தரவின்னால் உண்ண கடவ நெல் (85) பிடாரியார்க்கு உதகபூர்வம் வச்ச நிலம் எயி
7. ல் நாட்டு குத்தமங்கலம் மூவேலி நெல்லு முந்நூற்றுக்கலம் இது காத்தான்டி என்
8. தலை மெவின பன்மாகே ரஷ்சை
ஆவணம் 0/1995 பக்:28,
---------------------------------------
தென்னாற்காடு மாவட்டம், திட்டக்குடிவட்டம், ஓரங்கூர் வாரீசுவர் கோயிலில் சுப்பிரமணியர் சன்னதிக்கு வடபுறம் கிடக்கும் கற்பலகையில்
மூன்றாம் இராசாதிராசனின் 18வது ஆட்சியாண்டு கி.பி.1234ல் இக்கோயிலுக்கு இராஜாஜ மகதை நாடாழ்வான் என்பவர் ஆறகழூர் சிற்றரசரான பொன் பரப்பின வாணகோவரையர் இருந்தார். இவ்வூர் புல்லூர் குறும்பூர் என்றிருந்து புவிகரம்பூர் என இன்று அழைக்கப்படுகிறது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவற்கு யாண்டு 25வது மலடாசிய இந்நாத வளநாட்டு நரையூர்க் கூற்றத்து உரங் கூ
2. ர் உடையார் திருவாலிசுரமுடைய நாயனாற்கு நாயன் காமநான இராரா மகதை நாடாழ்வான் இன்னாயநாற்கு இறையிலி நாச்சேரி நத்தமான கான்று காட்டி நல்லு பேரூர் எல்லை
3. க்கு கிழக்கு கேணிக்கு மேற்க, புல்லூர் கறும்பூர் எல்லைக்கு வடக்கு என் நில நஞ்சை ஒரு வேலியும் இத்தை சூழ்ந்த புஞ்சை 15 வேலி இன்னிலத்து
4. க்கு பொன்வி உள்பட அனைத்தாயமு நாயனாற்கு குடுத்தோம் இது மாற்றுவான் ஏழு ஏழு பிறப்பு ஏழெசம் அறுவாள். என்கிறது.
இதழ் 3/1993 பக்கம்:12
--------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மதியநல்லூர் கிராமத்தில், உள்ள பெரிய கண்மாயின் மேற்கே மடைத் தூணில் உள்ள கல்வெட்டு
1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாத்
2. தன் மாறன்
3. செய்வித்த
4. குமிழி என்றுள்ளது.
மதியநல்லூர், அன்னவாசல் ஊர் அருகே உள்ளதாகும். அருகிலுள்ள நார்த்தாமலை முத்தரையர் வரலாற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டான ஊராகும்.
இதழ் 6/1995 பக்:17
--------------------------------
வட ஆற்காடு மாவட்டம், குடியாத்தம் வட்டம், வங்கட்டுரில் கி.பி.959ல், இரண்டாம் ஆதித்த சோழன் காலத்திய நடுகல்லில் அதில்
4:3 உள்ள கல்வெட்டில்
1. சாத்தயன் உடன்பட்டான் அடியா
2. ன்ஊர் பேரயன் முத்தரையன் காரி என்றும்
4/4 உள்ள கல்வெட்டில்
1. திருவுறல் உடன் பட்டான்
2. முத்தரையன் தும்பன என்றும் உள்ளது.
கல்வெட்டுக்கள் தெளிவாக உள்ளன. நடுகல்லில் உள்ளவர்களோ மாடுகளைத் தடுத்து திருப்பிய போரில், மேற் கண்டவர்களும் சேர்ந்து இறந்துள்ளனர்.
ஆவணம்7/1996
----------------------------
11:1ல் அதே இடத்தில், முதலாம் பராந்தக சோழனின் கி.பி.907-953 கல்வெட்டு ஒன்றில் கொடுக்க மங்கலத்தில் பகைவர் கால்நடைகளைக்
கவற வரும்போது, ஆரையன் ஆயிரவன் எதிர்த்துப் போரிட்டு இறந்துள்ளான். அப்போது அவனது தந்தை சடைய மரையன் தன் மகன்
ஆரையன். ஆயிரவனைக் காப்பாற்ற முற்பட்டு, போரில் வீரமரணமடைந்தான். இறந்த தன் தந்தைக்கு ஆரையன் ஆயிரவன் இந்த நடுகல்லை எடுத்துள்ளான்.
1. மதிரை கொண்ட கோப்பர
2. கொடுக்க
3. மங்கலத்
4. தூராழ் வான்
5. சடைய மரைய
6. ன் காலி கொ
7. ள்ள மகனை
8. ச் சேமஞ்
9. செய்து
10. எதிரே
11. ய் ஞட
12. ந்து
13. சென்
14. றுபட்டா
15. ன்ச
16. டை
17. ய மரை
18. யன் மகன்
19. ஆரை
20. யன்
21. ஆயி
22. ரவன்
23. கல் பொ
24. றிப்
25. பிச்
26. சான் தந்
27. தையா
28. ரைச்
29. சாத்தி
என்று கூறுகிறது. ஆரையன் ஆயிரவன் என்பவன் முத்தரையனே ஆவான்.
இதழ் 7/1996 பக்கம் 30-34
------------------------------------------
சேலம் மாவட்டம், நாமக்கல் வட்டம், கூளிப்பட்டி பெருமாள் கோயில் காட்டு கிணற்று மேட்டிலிருந்து தற்போது சேலம் அருங்காட்சியகத்திலே வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஆரையன் ஆயிரவனுக்கு இளம்சிங்க முத்தரையன் என்ற பெயர் உள்ளதை விளக்குகிறது. அந்த ஆரையன் ஆயிரவனுக்கு இளஞ்சிங்க முத்தரையன் என்ற பெயர் இருந்ததை விளக்குகிறது. அவன் பேரில் வீர மரணம் அடைந்தான். அவனுக்காக ஏக வீர முத்தரையன் நடுகல் எடுத்துள்ளான். தந்தைக்கும், மகனுக்கும் பக்கம் பக்கத்திலேயே நடுகற்கல் நடப்பட்டுள்ளன.
1. வீர பாண்
2. டிகளை எறிஞ்
3. சு தலை கொ
4.ண்ட கலி
5. கால சோழ
6.ற்குச் செல்லா
7. நின்ற யா
8.ண்டு நாலா
9. வது கொ
10. டுக்க
11. மங்
12.கல
13. த்திலி
14. ருக்கும் ஆரைய
15. ன் ஆயிர
16.வனான
17. இளஞ்
18. சி
19.ங்கமு
20. த்தரை
21. யன் த
22.ன்னூ
23. ர்க்கா
24.லி
25...........
26...........
27.............
28. வளான ஏக
29. வீர முத்தரை
30. யன் அல்லு
31.நாட்டு விச்சா
32.ன். என்கிறது.
இதழ் 7/1996பக்:102
------------------------------------
திருச்சி மாவட்டம், ராசாம்பாளையம் கிராமத்தில் நடப்பட்டுள்ள பலகைக் கல்வெட்டில், 15.4.1859ல் இவ்வூரிலிருக்கும் நல்லகுட்டி முத்திரியன் மகன்
பட்டாமணியம் தம்மணா முத்திரியன் தருமமாக ஒரு சாவடியும் தண்ணீர் பந்தலும் ஏற்படுத்தி அதன் செலவுக்கு நிலக் கொடையளித்துள்ளார்.
லால்குடியில் பழைய பெயர் லாலு கெடி என்கிறது. இந்த வட்டத்தில் உள்ள பல ஊர்ப்பெயர்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
---------------------
1. உ சுவஸ்தி ஸ்ரீவிசையா புதய
2. சாலியவாகன சகாப்தம்
3. 1781 கலியுகம் 4960
4. யிதின்மேல் செல்லா நின்ற
5. சித்தாற்தி வருஷம் சித்தி மீ4உ சு
6. க்கிரவாறம் சுக்கில பட்சம் தி
7. ரயோதெசி சுக்கிர நட்சத்திரம்
8. கூடின சுபதினத்தில் லாலு கெ
9. டித் தாலுகா திருவெள்ளாரை வ
10. கை செ புனாம் பாளையம் மஜார்
11. ராசாம் பாளையத்திலிருக்கும்
12. நல்லகுட்டி முத்திரியன் குமாற
13. ன் பட்டாமணியன் தம்மணா முத்தி
14. ரியனியப்பட்டிருக்குர தருமத்தி
15. ன் விபரம் திருச்சினாப்பள்ளியில்
16. யிருந்து செட்டி குள மாற்க மாயி
17. சென்னைப்பட்டனம் போகப்பட்ட...
18. மாற்கத்தில் ராசாம்பாளையத்துக்
19. குடியிருப்பு நத்ததுக்கு கென....
20. ஆலமரத்தடியில் சுறமச் சாவடி
21. யும் தண்ணீர் பந்தலும் யேற்ப
22. டித்தி அதின் சிலவுக்காக வருமா
23. னம் உண்டாக்கியிருக்கிறது
24. தண்ணீர் பந்தலுக்கு கிழக்கு
25. இனாம் செ ராசாம்பாளைய யெல்லைக
26. க்கி மேற்கு யினாம் பஞ்சாங்க
27. மானியத்துக்கு வடக்கு தோரன
28. ஆலமறத்து சலக்கட்டுக்கு தெற்கு
29. யிந்த நான் கெல்லைக்கி உள்பட்ட
30. புஞ்செ காணி 2 யதில் யென்னால் வயித்திருக்
31. குர யிலுப்பை தோப்புல விருட்
32. சமும், ரஷ்தாவுக்கு மேற்கு திரு
33. வேங்கட கரியான் தோட்டத்துக்கு
34. மேபுறம் தெற்கு வடக்கு கட்டுக
35. ரைக்கும் மேற்படி புசெயிலுப்பைத் தோப்
36. புக்கும் கீழபுறம் கரைக்கும் கிழக்கு
37. பஞ்சாங்க மாணியத்துக்கு வடக்கு
38. தண்ணீர்பந்தல் ஆல மரத்துக்கும்
39. தெற்கு யிந்த நாங்கெல்லைக்கு உள்
40. ப்பட்ட புசெ காணி 3 யிதில் யென்னால் வை
41. த்திருக்கிற இலுப்பை தோப்பு பலவி
42. ருட்சமும் மேற்படி ரஷ்தாவுக்கு மேற்கு கா
43. ளிசெல்லப் பெருமா வகைத்
44. தோட்டம் கீழ்பத்து கரைக்கும் திரு
45. வேங்கட கரியான் வகை புசெ தோ
46. ட்டம் கீழ்புறம் கரைக்கு கிழக்கு திரு
47. வேங்க புசெ இலுப்பை தோ
48. ப்புக்கு வடக்கு ராசாபாளையம் கு
49. டியிருப்பு நத்தத்துக்கு தெற்கு இந்
50. தநாங் கெல்லைக்கி உள்பட்ட
51. புசெ காணி 20 புசெயில் (ல) யென்னால் சொ
52. ந்தப் பணம் சிலவு செய்து வெட்டியி
53. ருக்குர தெற்பகுளமும் நந்தவா
54. னம் பல விருட்சம் புதுகேணி தோ
55. ட்டமும் அட்டகலம் 3 புசெக் காணி 5செயி
56. நிலத்தில் நான் மேற்படிதிய யிலுப்
57. பை தோப்பும் நந்தவனம் பல விரு
58. ட்சங்களும் புதுசாயி வெட்டின தெ
59. ப்பகுளம் கேணியும் அதுக்குப் பா
60. ச்சலான நிலங்களுடன் சாகு
61. படியாயிருக்குர நிலங்களும் மேற்படி தற்
62. மத்து செயாதியப்படி....
63. துயென்னுடைய செயிகையினால்
64. மேல் கண்ட பாவத்துகளில் வற
65. ப்பட்ட லாபத்தினால் மேற்படி தற்மம் நிர்
66. வகி வரும்படி சிலாசாசனம் பண்ணி
67. யிருக்குரேன் அந்தப்படிகேயி
68. சைக்கும் பிறகுயென் பின்னோற்கள்
69. முதலாகிய புத்திர பவுதிர வம்ச
70. ஷ் தாறர்கள் இந்த தற்மத்தின் பே
71. ரில் முக்கியமான சிந்தை வைத்த
72. மேல் கண்ட தோப்புகளையும்
73. தோட்டங்களையும் பிறபலப்படு
74. திமுகுந்த ஆதாயங்காட்டி வரும்
75. படி முயற்சிகை செய்து மேற்படி தற்ம
76. ம் அழியாமல் நிலைமை கண்டு வரும்
77. படி யாவற்றாளும் உண்மை கொ
78. ண்டு செய்துவர வேண்டியதற்கா
79. கயிந்த சிலாசாசன முமாயி
80. தெரியப்படுத்திக் கொண்டி
81.. ருக்கிரேன்உ
சித்திரை மாதம் 11உ சுக்
கிறவாரத்தில் யெழுதி முடி
ந்தது முற்று உ
ஆவணம் 7/1996 பக்:113,
-----------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குண்டூர் ஏரிக்கரையின் அருகில் களத்துமேட்டு வயல் வரப்பில் கி.பி.9-10ஆம் நூற்றாண்டில் உள்ள கல்வெட்டாகும். இந்தக் குண்டூர் ஏரியில் காணப்படும் குமிழி இராஜகேசரியான முதலாம் ஆதித்த சோழனின் 15வது ஆட்சியாண்டில் மாறன் குவாவன் மகா சாத்தன் என்னும் ஐயனாரை செய்துள்ளான். அய்யனாரின் பீடத்திலேயே இக்கல்வெட்டு உள்ளது.
1. ஸ்ரீபெருங் குண்டூர்
2. னம்... தை குவாவ
3. ன் செய்வித்த..
4. -------- மகா சாத்த
5. ன். என்கிறது. குவாவன் முத்தரையர் மன்னன் ஆவான். இப்பகுதியில் காணப்படும் மன்னர்களில் இவனே மூத்தவன் எனக் கருதப்படுகிறான். இவனின் புதல்வர்களான குவாவன் மாறன், குவாவன் சாத்தன் என இருவர் இருந்துள்ளனர்.
ஆவணம் 13/2002 பக்25
----------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நல்லூர், வயலில் உள்ள பழைய சிவன் கோவில் வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு இதன் காலம்
கி.பி.17ம் நூற்றாண்டு ஆகும். இதில் வனநாதர் ஊரணியை உலக முத்தரையர் பெரிய பெருமாள் புத்திரன் புர உலகன் வெட்டிக் கொடுத்துள்ளார். இந்த ஊரணியை இன்று அப்பச்சி ஊருணி என்று அழைக்கின்றனர்.
1. பிலவங்க ஸ்ரீ சித்திரை 26 உ வ
2. னநாதர் ஊரணி உலக
3. முத்திரையர் பெரிய பெருமா
4.ள் புத்திரன் புர உலகன்
5. வெட்டிவிச்ச ஊரணி ம
6.வருட தன்மம் இந்
7. த ஊறணிக்கு இடை தி
8. டை பண்ணினார்கள் காறாம் ப
9. சுவைக் கொன்ற பாவம், என்று எச்சரித்துள்ளது.
ஆவணம் 19/2008 பக்கம்:89
----------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், மேலப்பனையூரிலிருக்கும் அகிலாண்டேஸ்வரி சுவாமி கோயிலில் 13 ஆம் நூற்றாண்டில் அர்த்த
மண்டபத்தில் பாக்கற்கள் மற்றும் தூண்களை பல மக்களும் தானமாகக் கொடுத்தனர்.
ஒரு பாக்கல்லை (9ஆவது கல்)
1 இப் பாக் கல்லு
2. குளமங்கலத்
3. து வலையரில்
4. தன்னன் என்கிறது. இங்குள்ள முத்தரையர்கள் வலையர் என்ற பட்டப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆவணம் 22/2011 பக்கம்
--------------------------------------------
திருச்சிராப்பள்ளி அமிர்தலிங்கேஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவரில், மூன்றாம் இராச ராசனின் 12வது ஆட்சி ஆண்டில் கி.பி.1223ல் வெட்டப்பட்ட கல்வெட்டில், இவ்வூரைச் சேர்ந்த அரையர்களும், பிள்ளை சோழகோனாரும் கூடியுள்ளனர். இந்தக் கூட்டத்தில், 79 நாட்டுப் பதினென் பூமி சித்திர மேழி பெரிய நாட்டார்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், இக்கோயிலுக்கு இவ்வூர் கன்மாளர், வண்ணார் ஆகியோர் இதற்கு முன்பு செய்து வந்த தொழில்களைச் செய்து வர
வேண்டுமென்று தீர்மானித்துள்ளனர். இத்தீர்மானத்தை 18 வரி கொண்ட கல்வெட்டாக வெட்டியுள்ளனர். இதில்
13. செய்யக் கடவதாகச் சொன்னோம் மூன்று
14, பாதி அரையர்களும் பிள்ளை சோழகோனா (ரும்) என்று வெட்டியுள்ளனர். மூன்று பங்கு சொத்துடையவர்களாக முத்தரையர் இருந்துள்ளனர்.
ஆவணம்23/2012 பக்கம்
-----------------------------------------
பாண்டி முத்தரையன் கல்வெட்டு
1. ஸ்வஸ்தி ஸ்ரீ பாண்டி முத்தரையனாயின அரட்டவதி அ
2. றையர் பாண்டிப் பெருந்தேவி பாண்டி முத்தரையரானான
3. சோழிக அரையரைச் சாத்தி எடுப்பித்தாள்
4. காள ஈச்வரம் இது காத்தாரடி என்றலை மேலன என்று கூறுகிறது.
ஆவணம் 23/2012 பக்கம்:25
----------------------------------------------
தஞ்சாவூர் மாட்டம், வட்டம், நாங்கூர் என்னும் புதுக்குடி சிவாலயத்தில் 10ஆம் நூற்றாண்டில் வெட்டிய கல்வெட்டு இங்குள்ள நாங்கூர் கோயிலில் இராமபிரான் திருமேனி முன்பு தன் மைத்துனனான நாராயணன் வைகுந்தனன் நலம் பெற வேண்டி ஒரு நந்தா விளக்கு எரிப்ப தற்காக பாலைச் சேந்தனான தென்கரை நாட்டு முத்தரையன் என்பவன் 240 வெள்ளாடுகளைக் கொடுத்துள்ளான்.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ
2. வீரபாண்டியன்
3. தலை கொண்ட கோ
4. ப்பரகேஸரி வர்ம
5. ற்கு யாண்டு 4 ஆ
6. வதிந் நாங் கூர்
7. ப்பள்ளி அகரத்து
8. ஸ்ரீ ராகவற்கு நாரண
9. ன் வைகுந்தனான
10. அனந்த கோப மு
11. த் தரையனைச் சார்த்தி
12. இவன் மைத்து
13. னன் பாலை சேந்த
14. நனான தென் க
15. ரை னாட்டு முத்தரை
16. யன் னொந்தா வி
17. ளககு ஒன்றனு
18. க்கு உடலாக
19. க்குடுத்த வெள்
20. ளாடு 200 னாற்ப
21. து இவை யிவூர்
22. ரக்ஷை, என்கிறது.
ஆவணம் 23/2012 பக்:30
-----------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், உடையாளிப்பட்டியிலுள்ள பிச்சிகுடி பெரிய குளத்தில், 10 ஆம் நூற்றாண்டில் வளசிகுடி மதுராந்தக முத்தரையன் வசிட்டன் என்பவன் இங்கே மடையைக் கட்டியுள்ளான். இதுபற்றிய கல்வெட்டு.
1. மதிரான் தக மு
2. த்தரையன் எந்ப
3. து இக்கால் இது செ
4. ய்விச்சு பேரிட்டேன்
5. வளசிக்குடி நாயக
6. ன்சீர் நக்கன் செருமதந், என்று கூறுகிறது.
ஆவணம் 23/2012பக்:113
------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், விசலூர் சிவன் கோயிலில் தெற்கு சுற்றாலைச் சுவரில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15வது ஆட்சியாண்டில் கி.பி.1193ல் இவ்வூரார் வசம் வளம்பக்குடி உடையான் என்ற விசயாலய முத்தரையன் தனது தந்தையின் பெயரில் இக்கோயிலுக்கு நிலக் கொடையளித்து, கல் வெட்டியுள்ளார். பல முத்தரையர்கள் கொடையளித்துக் கல் வெட்டியுள்ளனர். இவரது தந்தை பெயர் தில்லைநாயகன் என்று கல்வெட்டு கூறுகிறது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ மருதையம், வீரபாண்டியன் தலையுங் கொண்டருளிய கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 15
2. வது ஜயசிங்க தலகால வளநாட்டு மீசெங்கிளி நாட்டு விசலூர் ஊராய் இசைன்த உரோம் எ
3. ங்கள் னாயானார் விசலூருடையார் வாசுகிசுர முடையார் சந்திராதாத்தவர் தானமாக
4. ஊர் கீழ் இறையிலி செய்து குடுத்த பரிசாவது எங்கள் காணியான விசலூர் குடி... பெருவெ
5. ண்ணைனல்லூர்க்கும்...... இவ்வூர் எல்லைக்குள் சோழன் வயலுக்கும் இசைன்த கீழ்பார்க் கெல்லைஞ் குடி எ
6. ல்லைக்கு மேற்கும், தென்பார்க் கெல்லை புலியூர் எல்லைக்கு வடக்கும் மேற்பார்... புலியூ
7. ர் எல்லைக்குக் கிழக்கும், வடபார்க்கெல்லை திருவைண்ணை நல்லூர் எல்லைக்கும் விசலூர்
8. குளத்து னீர் கோவைக்கு தெற்கும் ஆக இன்த பெருநாள் கெல்லைக்கு வுட்பட்ட குளமும்
9. விளை நிலமும் புஞ்சையும், ஊர் மனையும் மற்றும் எப்பேர்பட்டதும் பலபடினிமந்தகாரர்
10. க..... வேண்டு மனித்த மங்களுக்கும் சந்திராதத்தவர் செல்வதாக குடிநீக்கி தேவ
11. தானமாக வளப்பக்குடி வளம்பக்குடையாந் நல்ல திருநாட்டு பெருமானாத விசயாலய முத்த
12, ரையர் தய்ப்நார் (தகப்பனார்) பேரால் தில்லை நாயகனல்லூர் என்ற சிவ நாமத்தால்
13. கல்வெட்டிக் கடுத்தோம் விசலூர் ஊராய் இசைந்த ஊரோம் இது பன்மரகேஸ்வர ரட்சை
ஆவணம்23/2012 பக்24.
---------------------------------------
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், எறையூர் தாகம் தீர்த்த புரீசர் கோயில் மகாமண்டப தென்புற நுழைவாயில் இளருபக்க நிலைக் கால்களில் இரண்டாம் ராசாதிராஜ சோழன் காலத்தில் ஆட்சியாண்டு 13ல் கி.பி.1179ல் வெட்டப்பட்ட கல்வெட்டில், இந்த நாட்டின் பாடி காவலுடைய ஆதித்தன் மண்டலியான இராதிராஜ வங்கார முத்தரையன் இக்கோவிலில் திருவிழா செய்ய தனது 16 வேலி நிலத்தைக் கொடுத்து கல் வெட்டியுள்ளான்.
1. தேவற்க
2. கு யாண்
3. டு 13வது
4. வடகரை விரு
5. தராஜ பயங்
6. கர வள நாட்
7. டு மேற்கா நா
8. ட்டு பிரஹ்ம தே
9. யம் ஸ்ரீ முடி
10. கொண்ட சோ
11. ழச் கருப் பே
12. பதி மங்கல
13. த்து மேல் பி
14. டாகை இடை
15. ரயூர் திருமா
16. ரம்பாடிக் தி
17. ரு வீதிஸ்வர
18.முடைய நா
19. னார்க்கு
20. இன் நாட்டு
21 பாடி காவலு
22 டைய ஆதித்
23. தன் மண்ட
24. லியான இரா
25. ஜாதிராஜ வ
26.ங்கார முத்த
27.ரையநேன்
29. காணியாய் வ
30.ருகிற பாடி கா
31. வல் இன் நாய
32. னார்க்கு திரு நா
33. ள் முன்பு இ
34. ல்லாமை
35. யில் திருவா
36. னித் திருநா
37. ள் எழுந்தரு
38. ளுகைக்கு
39. த் தேவர் தே
40. த தானம் து
41. ளாரான வல
42. வ வல்லச்
43. சகுப்பேதி ம
44. ங்கலத்து இ
45. ராரா மங்கல
46. ம் நிலம் பதிநறு
47. வேலியில்
48. வந்த பாடி கா
49. வல் கார்பசா
50. னம் உள்பட
51. நாயனார்க்
52. கு திருநாளு
53. க்கு வேண்
54. டுவன வை
55. ற்றுக்கு திரு
56. ப்படியில்
57. நீர் வாத்து
58. குடுத்தேன்
59. மண்டலியா
60. ந இராஜாதி
61. ராஜ வங்கா
62.ர முத்தரை
63. ய நேன் இது
64.சன் திராதி
65. த்தவரை செ
66.ல்லக் டகவ
67. தாக விட்டேன் உ
ஆவணம் 23/2012 பக்கம்:125
----------------------------------------------------
மேற்படி இறையூர் கோவில் மகாமண்டபத்தில் தென்புறம் இடது பக்கம் நிறுத்தப்பட்டுள்ள தூணில் வீரராசேந்திர சோழன் மூன்றாம் குலோத்துங்க சோழனின்) ஆட்சியாண்டு 3ல் கி.பி.1181ல் நிலக்கொடை அளித்து வங்கார முத்தரையன் கல்வெட்டியுள்ளான்.
1. ஸ்வஸ்தி ஸ்ரீதிருபுவ
2. ன சக்கரவத்திகள்
3. ஸ்ரீ வீர ராஜேந்திர
4. சோழ தேவற்கு ய
5. ாண்டு 3 றாமாவ
6. து வடகரை விருத
7. ராஜ பயங்கர வளனாட்
8. டு மேற்கா நாட்டு
9. கரைப் போக்கு னா
10. ட்டு இரையூருடை
11. யார்திருமாறம் பா
12. டி திருவீதி சுரம்
13. முடைய நாயனார்
14. திருநாமத்துக்கா
15. ணியான திருமாற
16. ம்பாடி நன் செய் பு
17.ன் செய்யும் இரை
18. யூர் நன் செய் திரு
19. நாமத்துக் காணி
20. யும் இராரா வினாய
21. கப் பிள்ளையார்த் தி
22. ரு நாமத்துக் காணி
23. நன் செய் புன் செய்
24. ம் சுப்பிரமணிப் பி
25. ள்ளையார் தேவ தா
26. நம் நன் செய்யும்
27.ஸ்ரீ கைலாசமுடைய நா
28. யனார் தேவதான
29. நன் செய்யும், புன் செ
30. யும் தென்கரை சிற்
31. றிரையூர் புன் செய்
32. திருநாமத்துக்காணி
33. யும் துளார் இராரா
34. மங்கலம் தேவதா
35. ந னஞ்செயும் இ
36. ன் நாட்டுத் தேவதா
37.ன திருநாமத்துக் கா
38. ணி தேவதானங்
39. கள் உடலிற்பாதி விட
40. இப்படியே இத்திருவீ
41. திசுரமுடைய நாய
42. னார்க்கும் பலதேவ
43. ர்களுக்கும் விலிவொ
44. ன்று பாதியால் வ
45. ந்த நன் செய்பு
46. ன் செய்யும் திரு
47. நன் தவநங்களி
48. ல் மாமரங்கள்ளு
49.டல் ஒன்று பாதி
50. யும் கொண்டு பூ
51.சையுந் திருப்ப
52. ணியுஞ் சந்திரா
53. தித்தவரை செ
54. ல் வதாக விட்டே
55.டம் பொன் பரப்பி
56. னான் நான வீ
57.ர வங்கார முத்
58. தரைய நேன் இவ
59.ங்ஸம் ரக்ஷித்
60. தருளுவதாக விட்
61. டோம்: உ
குறிப்பு : கல்வெட்டுக்களில், "ராராபுரம்", "ராராமங்கம்” என்று குறிப்பிடப்படுகிறது. தஞ்சாவூரில் ராரா முத்திரைக் கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் ராராபுரம் என்ற ஊர்கள் ராரா முத்தரையர் பெயரால் ஏற்பட்ட ஊர்களாகும்.
தொடரும்....
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற் சங்கம்..🔥🔥
Comments
Post a Comment