பழனி மடப் பட்டையம்
பழனி மடப் பட்டையம்:
__________________________
கி.பி 1674. ஆனந்த வருடம் தை மாதம் 3ஆம் தேதி, ஆதி காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து செப்புத் தகட்டில் எழுதி வைத்தார்கள். கோவில், குடிகளின் வரலாற்றை இவை தெரிவித்தன. அக்காலத்தில் நடைபெற்ற செயல்களை அறிந்து கொள்ள ஓலைச் சுவடிகள், கல்வெட்டுக்கள் நமக்குப் பயண்படுகின்றன.
தமிழகத்தில் முத்தரையர்களிடம் இத்தகைய பட்டையங்கள் ஏராளமாக உள்ளன. ஆரம்பகாலத்தில் மூத்த அரையர்களாகிய முத்தரையர்கள், ஊர், நாடு, நகரங்களுக்கும் தலைவர்களாகவும் கோவில் குளங்களைக் காப்பவர்களாவும், நாட்டை அரசாள்பவர்களாகவும் இருந்தனர். அக்காலத்தில் கோயிலில் இம் முத்தரையர் செய்துள்ள நல்ல காரியங்களைச் செப்பேட்டில் எழுதி வைத்தனர். இவ்வாறு பழனி கோயிலில் பொது மடம் ஒன்றைக் கட்டிப் பராமரித்து, அதற்கான ஆக்கபூர்வமான செய்திகளையும் பட்டையமாக வழங்கியுள்ளனர்.
இந்தச் செப்புப் பட்டையம் 27 செ.மீ. க்கு 36 செ.மீ அளவில் தயாரித்துள்ளனர்.
இந்தப் பட்டையத்தில் முன்பக்கம் 78 வரிகளும் பின்பக்கம் 79 வரிகளையும் கொண்டுள்ளது. இப்பட்டையத்தில் பட்டைய வாசகங்களாக
40 வரிகள் எழுதப்பட்டுள்ளன.
சுருக்கமான விளக்கம்:
--------------------------------------------
கயிலாசத்திலே, திருத்தேர் வருகையில் செண்ட பெறண்ட மாகிற பறவை சகல மிருகங்களையும் வதைத்து சாப்பிட்டது. சிங்காரத் தோப்பையும், நந்தாவனத்தையும், பூங்கா வனத்தையும் அழித்தது. பரமேஸ்வரனின் திருத் தேருக்கு வழி விடாமல் மறித்து, சில காலம் வைத்துக் கொண்டது. இந்தப் பறவையின் அடாத செயல்களைக் கண்ட தேவர்கள், பரமேஸ்வரனிடம் வந்து பயத்துடன் நின்றனர்.
பயப்படாதீர்கள் என்று கூறிய பரமேஸ்வரனின் திருத் தோளிலே ஒரு வேர்வை கண்டது.
அந்த வேர்வைத் துளி ஒரு முத்தாய்த் திரண்டது அந்த முத்தைப் பூமியிலே விட, இரண்டு பிளவையாக வெடித்து இரண்டு வன்னி முத்துராஜா பிறந்தனர். அவர்களுக்குப் பின் குடுமி, பூணநூல், வேல், காலும் கட்டின கச்சையும், உருவின மந்திர வாளும், பதினெட்டாயுதத்துடன் வந்தார்கள்.
சுவாமியைத் தொழுது நின்றார்கள். இந்த அடியார்களைப் பார்த்து, பெரிய வன்னி முத்தரசனே, சின்ன வன்னி முத்தரசனே யிந்த திருத்தேருக்கு வழிவிடாமல் நிற்கிற பட்சியை வெட்டிச் சம்மாரஞ் செய்யக் கட்டளையிட்டார்.
அந்தப் பட்சியினூடே யுத்தம் செய்து சிறகை வெட்டி இரண்டு துண்டாக்கினார்கள். இரண்டு அம்பு முனையாலே தூக்கிக் கொண்டு
வந்தனர். இத்தகைய பராக்கிரமச் செயல்களைச் செய்ததற்கு, சந்தோஷப்பட்டு, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்கள். இதற்கு நாங்கள் பூமியிலே ராஜ்ஜிய பாரம் பண்ணி வர வேண்டும் என்றனர்.
உடனே வரமும் கொடுத்து, விருது, பவளக் குடை, பச்சைக் குடை, முத்துக் குடை, வெள்ளைக்குடை, சிவப்புக் கொடை, வெள்ளைக் குதிரை, பல்லக்கு, வெண் சாமரை, புலிக் கொடி, வாடாதமாலை, வலம் புரி சங்கு, வாத்தியமும்,
பத்திரண்டு பஞ்சவர்ணை விருதுங் கொடுத்தார். தெய்வலோகத்துக்கு பெரியவன்னி முத்தரசனை பாதுகாவலா இருக்கும்படியும், திருவாரூருக்கு தியாகேசர், திருச்சியில் செவந்தீஸ்பரர், செம்புலிங்கத்தையும் தரிசனம் செய்து, சின்ன வன்னி முத்தரசனை ஸ்ரீரங்கத்து நாயக்கருக்குப்
பாதுகாவலாக இருக்கச் செய்தார்.
இப்போது கோப்புலிங்க ராசாவின் வம்சப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். இவனுக்கு சின்னன் என்கிற வன்னி முத்தரசன்
பிறந்தான். அவன் வயிற்றிலே சென்னிய வள நாடனென்றும், சேமனென்றும், அகளங்கன் என்றும், ராஜாக்கள் நயினா ரென்றும், நல்ல
நாச்சியார் என்ற பெண்ணும் பிறந்தனர்.
இந்த நால்வரும் சோழ ராசாவிடமிருந்தனர்.
அப்போது சோழனுக்கும், பாண்டியனுக்கும் எல்லைச் சண்டை மூண்டது. சோழருடனிருந்த நான்கு பேரும், பாண்டியனைத் தோற்கடித்து,
மதுரைக்குத் துரத்தி விட்டனர். இவர்களின் பராக்கிரமத்தைக் கண்ட பாண்டியன், நல்ல நாச்சியாளை திருமணம் செய்து கொடுத்து சமாதானம் செய்து கொண்டார். மீண்டும் படையுடனும், பரியுடனும் வந்த சோழ முத்தரையர்களின் குதிரையைப் பரித்த பாண்டியன் பந்தியில் படையெடுத்து வந்த
பாண்டியன், படையை வெட்டி, செயித்தான்.
இவனது வலது தோளிலே வந்த வன்னியப் பிரதாபன், மூவா முடி காவலோர், வல்லமும், தஞ்சையும், வளப்பமுடைய சென்னியும்,
கொல்லியுஞ் சிகையுமுடையோர், ஆணை கண்ணும் வளநாடும், அரசும் உடையோர் கயிலையிங்கிரி, காவலோர் இராமநாத தேவரையும் மற்றவர்க்கு சம்மந்தப் பட்டவர்களாக இருந்தனர்.
ஏழாயிரம் பண்ணையில் அரசாளும் செப்புப்பரி பாண்டியன், குதிரை ஏரிய வன்னி முத்துராஜா, சிவகிரியில் அரசாளுபவர், ஆயிரங்கால் மண்டபங் கட்டி வைத்த, வன்னி முத்தரசர்,
வேப்பங்குளத்தில் அரசாளும் வன்னி முத்துராஜா, தனிக்கோடி காவலோர், சூரிய வம்மிசத்தோர், திருப்பதி, காவேரி, கொல்லிமலை, வெள்ளாறு உடையோர், சூரிய வயானியர், ஈளமும், கொங்கும், யாழ்ப்பாணம், ஏழு மண்டலங் கொண்டோர், எழுபத்தேழு பாளையம் பாரிபாலினஞ் செய்பவர், திருமலை நாயக்கர் மதுரையில் ஆட்சி செய்து வருகிற சாலியவாகன சகாற்த்தம் சூருள சாசா (1596க்கு கி.பி. 1674) ஆம் ஆண்டின் மேல் கலியுக சகாற்த்தம் ச சூ எள எளறு (4774) ன் மேல் செல்லா நின்ற ஆனந்த ஸ்ரீதை மாதம் ங (3) தேதியன்று இப்பட்டையம் எழுதப்பட்டது.
கீழ சமுத்திரத்திற்கு மேற்கு, சிதம்பரம், சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர், திருப்பந்துருத்தி, இவ்வூர்களைச் சேர்ந்த சோழ வள நாட்டிலுள்ள
வன்னி முத்தரசர்கள், அனைவரும், திருசிரபுரம் (திருச்சி) வீம நாயக்கன் பாளையம், அல்லித்துரை, அதவத்தூர், யெட்டரை, கோப்பு, அயிலாப் பேட்டை, நவலூர் இந்த ஏழு நாட்டைச் சேர்ந்த வன்னி முத்தரசர் அனைவரும், சீரங்க நதி, திருவானைக்காவல், உத்தமசேரி, துரையூர்,
மங்கலம், கரிகாலி நாடு யிதைச் சேர்ந்த வன்னி முத்தரசர்களும், தென் சமுத்திரத்திற்க வடக்கு, கன்னிகாமரி, திருக்குற்றாலம், திருச்செந்தூர்,
சேது, ராமநாதபுரம், காளையார் கோயில், சிவகங்கை, திருப்புவனம், யிதைச் சேர்ந்த வன்னி முத்தரசனைவோரும், திருப்பத்தூர்,
புதுக்கோட்டை, பிரான்மலை, முருங்கைநாடு, தாடிக்கொம்பு, பதிநெட்டும் பாளையப்பட்டிலுள்ள வன்னி முத்தரசனைவோர்களும்,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி, ஏழாயிரம் பண்ணை, சிவகிரி, சேத்தூர், அணைத்தலை, சமுசாபாரம், வேப்பங்குளம், மதுரை, யிதைச்
மேல் சேர்ந்த பாண்டிய வள நாட்டிலுள்ள வன்னி முத்தரசனைவோர்களும், சமுத்திரத்திற்கு கிழக்கு கொச்சி, கள்ளிக்கோட்டை வண்ணாரக்காடு, பாலைக்காடு, கொல்லங்கோடு, கொடுவாயி, பாலைக்காடு சேர்ந்த முத்து வன்னியரும், கோயம்புத்தூர், சேலம், சீரங்கப்பட்டிணம், சென்னைப்பட்டிணம், கங்கோந்தி, வேட்டுவாய்க்கு கிழக்கு, காவேரிக்குத் தெக்கு, உய்யக்கொண்டான் ஆற்றுக்கு வடக்கு, சிந்தாமணி, தேனூற், ஆண்டு கொண்டானாற்றுக்கு மேற்கு ராசகெம்பீர
வள நாட்டிற்கு தொன்னூற்றாரு கிராமத்தில் உள்ள முத்தரசரும், விளாவல்வீதி, அமனாப்பட்டி, திருவானைக்காவல், பூனாங்கஞ்சி, வலம்நாடு, வடகரை, வீர சிங்கநாடு, கண்டாதித்த நாடு, ஆலம்பாக்கம், காஞ்சிவப் பிள்ளையார், திருப்பந்துருத்தி, மல்லப்ப முத்தரசன்,
தையாகவுண்டன், ஆமூற் பறந்து வெட்டி... வக்கிரி தானுக்கும் கிழக்கு , கொல்லிடக் கரைக்கு வடக்கு, வளிப்பற்றுக்கு தெற்கு, வினைப்பதியன், அறியலூற், திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கு, அரியமங்கலம்.
முருக்கையூர்க்கு மேற்கு, உய்யக்கொண்டான் கரைக்கு வடக்கு, காவேரிக்குத் தெக்கு, ஆலத்தூர், கற்கண்டார்கோட்டை, கீழக்குறிச்சி,
உய்யச்சோழ வள நாடு, கண்டராதித்த நாடு, ஆலம்பாக்கம் ஏழு கரை நாட்டார், திருவெள்ளாறு, திருப்பைங்கிலி, பாச்சலூர், விக்கலூர், செம்பியன் குடியில்...... மன்னல்லூர், மாலு பாக்கரை நாடு, ஆமூர்நாடு, முசிறி, கண்ணுற்றாரு, பதினாலு கிராமத்தில் நாலு கிராமத்திலுள்ள முத்தரசரும், செட்டிகுளம், கோடம்பித்தூர், தச்சங்குறிச்சி, எது மலை,
யிறங்குடி, துரையூற்றுக்கரை, மாதேவி மங்கலம், கரிகாலிநாடு, தலைமலை, தண்டலை நாடு, அயிலூற், தொட்டியம், காடுபட்டி,
காட்டுப்புத்தூர், விமலைநாடு, கொல்லிமலைக்கு மேற்கு, கோனூர்,
சிந்தாமணி, நாமக்கல், பரமத்தி, வாழ வந்தி நாடு, யிடையார், சேந்த மங்கலம் தென்கரை, நித்த விநோத வளநாடு, குன்று சூழ்ந்த குளிசை
வள நாடுகளுக்கு, வளநாடு, கடலை வளநாடுகளும், தூர் பரந்தாடி, மதுக்கரைக்கு மேற்கு, வேங்கலநாடு, மணநாடு, சலையநாடு,
தட்டையநாடு, தேங்கரை நாடு, வைக்கபுரி நாடு, அண்ட நாடு, கல்லுருக்க நாடு, போன குளக்கி நாடு, ஆனைமலை நாடு, ஆறு நாடு, பாலைக்காட்டுச் சேரி, கொல்லங்கோடு, கேரள தேசத்து முத்தரசரும், கொங்கு, திருப்பத்தூர் நாலு நாட்டிலும் உள்ள முத்தரசரும்,
சோழ தேசத்தில், தராசலப்பேட்டை நாட்டிற் காத்துக் கோட்டை, முத்தரசனல்லா முத்தரசன், மடநதைப்பாக, முத்தரசனாயிர முத்தரசன், மல்லப்பு ஆண்டியப்பன், செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கடுவளி, சிதம்பரம், சீர்காழி, வேளூர், திருவிடைமருதூர். திருவலஞ்சுளி, மன்னார் கோயில், பட்டுக்கோட்டை, தானம நாடு, வழுவாடி, சிதம்பரம். அறந்தாங்கி, கூகைப்புலியான் பேரியரையன், பேராம்பூர், ராச சிங்கத்தேவற், மலையப்பன், முத்தரசன், திருமானூர் மோனனையப்பன், கக்கலூர், சூரைக்குடி, விராளியதேவர், பாக்க நாடு, கலிநாடு, சிவப்பரநாடு, காறிநாடு, தளிக்காநாடு, பிரான்மலை, முருங்கைநாடு, அஞ்சு நிலை
நாடு, கேரள வள சிங்கநாடு, திருப்பத்தூர், நார்த்தாமலைநாடு, காநாடு, விநாடு, திண்டுக்கல், வெள்ளிப்பனை, தாடிக்கொம்பு, பதினெட்டுப் பாளையப் பட்டிலுள்ள முத்தரசரும், பாண்டிவளநாடு, வைகைக்குத் தெற்கு, அறுப்புக்கோட்டை வன்னி முத்தரசன், மந்திரியோடை, வளத்தா முத்தரசன், திருப்பத்தூரான முத்தரசன், மதுரை அளக முத்தரசன், சந்தையூற் வீர முத்தரசன், கங்கை முத்தரசன், பாலையம்பட்டி உடையாறேம் பலம், விருதுக்கு வெட்டி, வில்லூர், கறசக்குளம்,
முடுத்தாநாடு, மாநாடு, வரிசைநாடு, ராமநாதபுரம், கீழக்கரை, கமுதி,
தொண்டி, திருவாடானை, சாக்கிக்கோட்டை. சிவகங்கை, திருநெல்வேலி, நாஞ்சிநாடு. மற்றும் சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம், தொண்டை மண்டலம், மின்னாங்குடி மண்டலம் முதலாகியதும் காசிக்கும் தெற்கு, கன்னியாகுமரிக்கும் வடக்கு ராத பட்டணத்துக்கு மேற்க்கு, கோளிக்கூட்டுக்குக் கிழக்கு 56 தேசத்திலுள்ள, முத்து வன்னியரும் பழனி ஸ்தலத்திற்கு வந்து சுவாமி தெரிசனை செய்து, திருவாவினங்குடிக்கும் கீழ்புறம், சரவணப் பொய்கைக்கும் தென்மேல்புறம், மடவாலயங்கட்டி வைத்து, மடத்துக்கு வேலாயுத உடையாற்கு மற்றும் குழந்தை வேலுடையானுக்க தாம்பிர சாதனம் எழுதிக் கொடுத்து, மடத்தில் நீராகரமும், உப்பு ஊறுகாயும், மயேஸ்வர பூசையும், நடக்கும் படிக்கு, பேரூருக்குப் பத்துப் பணமும், தித்தூருக்கு அஞ்சு பணமும், முண்டைப் பண்ணைக்கு ரெண்டு பணமும் பயவாளுக்கு ஒரு பணமும், கலியாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு ரெண்டு பணமும், பெண் வீட்டுக்கு ரெண்டு பணமும், சாதியில் குற்றா குற்றம் திறந்த பணத்தில் மடத்தய்யனுக்கு மூன்றில் ஒரு பங்கும், தேறச்சிக்கு ஒரு பணமும், கட்டளையிடப்பட்டுள்ளது. இந்தப் படிக்கு
புத்திர, பவுத்திரப்படி பராமரிக்க சந்திராள், சூரியாள் உள்ள வரைக்கும் நடத்தி வரக் கடவோமாகவும், மீத தருமத்துக்கு யாதாவது பிற கேடா, திருந்தாது நாட்டாற் மறித்து, மங்கல மோதி வெங்கலம் அடகு எடுத்துக் கொடுப்போமாகவும், பிதற்கு மாதம் ஒரு வராகன் வீதம் செய்து. இல்லை போ என்று தடுத்து சொன்ன பேர்களுக்கு, கொங்கைக் கரையில், காறாம்பசுவை கொன்ற தோசத்திலே போகக் கடவதாகவும், தங்கள் தங்கள்
மாதா, பிதா, குருக்களைக் கொன்ற தோசத்திலே போக, பஞ்ச பாதகம் போவராராகவும், இந்த தருமத்திற்கு யாதாவது ஒருத்தர் வாக்கு சகாயம்,
அன்ன சகாயம் சரீர சாகாயம் செய்த பேருக்கு கொள்ளும் பலன், காசி விஷவதை மார்பிலிருந்ததை, சொக்க லிங்கத்தையும், பழனிப் பாறையையும் சேவித்த பலன், பேரு பெருவாகவும், மஞ்சாங்கோப்பில் சமுசுகுடி, எழுதின பட்டையம் எழுதினது ராமசாமிகவிராயர். ஆறனத்துரையே வாழி. திருச்சிற்றம்பலம்.
பட்டையம்:
---------------------
இடம் : கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கணியூர்
காலம் : கலியுகம் 4774 : சகம், கி.பி.1673
ஆவணம் : 22/2011
1. உ வைய்ய நீடுக மாமளை மன்னுக மெய் விரும்பிய அன்பற் விழங்குக சைவ நன்னெரி தாந்தழைத்தோ
2. ங்குக தெய்வ வெண்திரு நீறு சிரக்கவே, கறுணைபொழி திறுமுகங்க
ழாறும் வாழி கரகமல பன்னிரெண்டு கைவேல் வ
3. ாழி யிருசரண மென்றலைமேல் னாழு மோங்க யிந்திரபதவிக் கப்பாலும் யினிதும் வாழி அறுள்பரவி அமரற்சிரை மீட்
4. டேயாண்ட ஆரிரெண்டு திருநயனத் தழகும் வாழி மருவணியும் பைங்கடப்பந் தாறும் மாற்பும் வாழி பரிமயில் சேவல் கெ
5. பாடியும் வாழி வாழி, அடைந்தவற் துணைவா வாழி அடயலற் கரியாய் வாழி மடந்தைதன் மைந்தா வாழி மாதவன் மறுகா வாழி
6. திடம்புனை வேலா வாழி தேவறா றுயிரே வாழி படற்ந்தபோற் அசுரர் கூற்றன் பறமனே வாழி வாழி, நன்னெரி முகமும் வாழி நா
7.தமும் முடியும் வாழி பன்னிறு சுரமும் வாழி பாதபங் கயமும் வாழி கன்னிமாற் ரெழுவற்வாழி கதியொடு பழனிவாழியென்னருள் வினை
8.யை நீக்கும் யிழையவன் வாழி வாழி, ஸ்ரீபுவன தகன பரமேஷ்பற குமாறன அமறர்சிரை மீட்ட தேவற்கள் தேவன் தெய்வ
9.லோக னாயகன் அகலாண்ட கோடி பிரமாண்ட னாயகன் கோகநகனைச் சரசமாடி குட்டிக் குடுமியை நெட்டி போக்கி
10. கேல விறம்பதங் கொடுத்த தமாற கெம்பீறன் கொக்கறுவரை யாழி கொட்ட ராவுத்தன் வக்கிரமிடு அசுரேசற் வட்ட
11. நீரொம் உக்கிர மயிலேரி வரும் உத்தண்ட தீரன் பக்கறப் பகட்டறக்கர் பட்டிடம்படக் கழுத்தில் கொக்கரித்துடல் கிழித்த குக்குட
12. க் கொடிக்குமாறன் கூளி கொட்டக் கூகை பசாசுகள் தொக்க நிற்த்த தாழமொற்ற சூரன் மாழவதற்கு பாரிய நீடிய கச்சை
13. கட்டி பாற வேலெடுத்த சேவுக தீரன் அசுரற் குலைகாறன் அமறாபதி காவலன் தோடு செறி காதினன் தோகைமயில் வா
14. கனன் சீதரன் றிருமருகன் சிவசுப்பிரமணியன் சண்டப் பிரசண்டன் அன்டற்க்கொரு மிண்டன் ஆறாறு நூறூறு அஷ்டமங்
15. கலம் ஆவிநன் குடி பன்றிமலை பூம்பரை பழனிமலை காவலன் யிடும்பன் மலையென யீராறெனும் பள்ளி யி
16. லங்கும் வைகாபுரி நாட்டுக் கிறைவன் பத்திப் பிரியன் பக்த வச்சலன் பார்பதி புத்திரன் சிவசுதகணபதி விக்கின விநாயக (ச) கோதர
17.ன் யெல்லாத்தேவர்க்கும் வல்லவறாகிய ஸ்ரீவீர பழனிமலை வேலாயுத சுவாமியார் திருவருள் படிக்கி வீரவாகு தேவரறுளிய
18. பாடல், சுப்பிரமணிய ஸ்தலமாகிய திருச்செந்தூர் திருப்பரங்குன்றம் சீருலாவிய திருவாவினன்குடி திருவேரகம் திரு
19. ச்சோலைமலை திருக்கழுக்குன்றம் பிரப்பதியாகிய ஆறு தலத்திலும் யெழுந்தருளி மகாபூசை கொண்டருளாநின்ற சுப்பிரமணிய
20.சுவாமியார் திருவருள்பெற்ற தமது அடியார் பக்தசனமாகிய பேருக்கு தலத்தில் எழுந்தருளிய திருமுகமாவது சுகஸ்திரிமன்
21. மகாமண்டலீசுரன் அரியர் ராயர் தள விபாடன் பாஷைக்கித் தப்புவராய் கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்
22. நாடு கொடாதான் பூர்வ தெட்சன பச்சிய உத்தர சமுத்திராதபதி யெண்மண்டலமுந் திரைகொண்டருளிய ராஜதிராஜன்ரா
23. ஜ பரமேசுபரன் ராஜப் பிரதாபன் ராஜமார்த்தாண்டன் ராஜகெம்பீரன் மறைபுக்கார் காவலன் அசுபதி கெசபதி நரபதி நவபதி நவ
24.கோடி நாராயணன் வங்களர் சிங்களர் சீனகர் சோனகர் ஆரியர், பப்பரர், ஒட்டியார், மதங்கர், மாளவர், மலையாளர், கொங்கர்
25. கலிங்கர், துலுக்கர், கண்ணடியர், சத்திரியர், முத்திரியர், வசியர், மறாஷ்ட்டவர், யென்னப்பட்ட பதினென் பூமியும் யேழு தீவு சூழ்ந்த
26. அன்பத்தாரு தேசாதிபதியான சோழ மண்டல பிரதாப நாசாரியார், பாண்டிய மண்டல பாவனாசாரியார், சேர மண்டலஞ்சீப
27. னாசாரியார் தொண்டமண்டலம் சண்டப் பிரசண்ட னாசாரியார் பறாமரமாகிய பரமேஸ்வரன் தராதவம் படைக்கத் தா நினைந்தருளி
28. பறாபறத்தில் சகலமு உண்டாக்கி நடந்த வருகிற காலத்தில் றாச சத்ரு பத்திரிய மதிகமாயி கெசமுகா சூர்னிங்கிரவன் தெய்வலோ
29. கத்திலே வந்து தேவேந்திரன் முதலான தேவ றிஷி கலையும் துறத்தி விட்டு தெய்வலோகத்தையும் கட்டிக் கொண்டிருந்த ப
30. டியினாலே தேவேந்திரன் தேவறிஷிகளுங் கூடி கயிலாச கிரியிலே வந்து பரமேஸ்பறனிடத்தில் முறையிட்டார்கள்
31. அதற்குப் பயப்படாதிர் கழென்று அபையஸ்தங் கொடுத்து கெசமுகா சூரனைக் சங்கரிக்க சிங்காரத் தோப்பிலே கணபதி பிறந்து
32. யுத்கத்தில் கிசமுகா சூரனை தன்னுடைய கொம்புனாலே குத்தி செயம்பண்ணி பெரிச்சாழி வாகனமாக்கி யேரிக்கொண்டு கண
33. பதி வருகிறபோது முன் பார்பதி சாபத்தினால் பாம்பாயிருந்த மகாவிஷ்ட்னு விக்கினேஸ்பறனை கண்டபோது சாபமு நீங்கி
34. யபோது மகாவிஷ்ட்டுணுவும் பிள்ளையார் னோம்பு னோக்கி செய்தார் ரெண்டாவது தக்கன் வேழ்வியை யழிக்க அகோர வீரபத்தி
35. றன் பிறந்தார். மூன்றாவது சூர பற்மாவை செயிக்க சுப்பிர மண்ணியர் பிறந்தார் தாரு கா சூரனையும் சிங்க முகா சூரனையும் வதைத்து
36. கரனுடைய சரீரத்தை வேலாயுதத்துனாலே பிழவை செய்து ஒரு பிழவை சேவலும் ஒரு பிழவை மயிலு வாகனமா
37. க யேரிக்கொண்டு தேவற் சிரையும் விடிவித்து தெய்வேந்திரனுக்கு பட்டாபிசேகமும் சூட்டி வைத்து கையிலாசகிரிக்கி வந்து
38. விட்டார் னாழாவது தெய்லோகத்திலே தேவேந்திரன் முதலான தெய்வ ரிஷிகழு முனீயீஷ் பற்றும் கிண்ணறர் கிம்புருடற் அ
39. ஷ்ட்ட வைரவர் சித்தி வித்தியாதரர் ஆயிரத்தெரு சத்திகள் கெருடர் காந்துருவற் அஷ்ட்ட திக்கு பாலகற் முதலான தேவற்களு
40. ங்கூடி சுவாமியானவர் தானடவம் சங்காரமாகிய பரமேஸ் பரனுக்கு கையிலாசத்திலே திருத்தேற் ரெழுந்தரு
41. ளி திருவலப் பிரகாரமாக வருகையிலே கெண்ட பெறண்டமாகிய பட்சி சகல மிருகங்கழையும் வதைத்து சாப்பிட்டு கொண்டு
42 சிங்காறத் தோப்பையும் திருநந்தாவனத்தையும் பூங்காவனமெல்லாம் அழித்துப்போட்டு பறமேஷ்பறனுடைய திருத்தேருக்கு வழிவி
43. டாமல் முன்னமேதின்று வழிமறித்துச் சிறகால் மரைத்துக் கொண்டது அதுகண்டு சகல தேவர்களும் பயந்து பரமேஷ் பரனுடை
44. ய திருத்தேற் மரபிலே வந்து நின்றார்கள் அப்பொழுது பரமேஷ்டாக பார்த்துப் பயப்படாதிருங்களென்ற அபையஸ்தங்
45. கொடுத்தார். அந்தப் பட்சியின் பேரிற் கோபமாய்த் திருத்தேரை நிறுத்திக்கொண்டு நிற்கையில் பரமேஷ்டரனுடைய வலது
46. திருத் தோளிலே ஒருவேற்வை கண்டுது அந்த வேற்வையொரு முத்தாய்த் திரண்டுது பரமேஷ்பாரி கண்டு அந்த முத்தைப் பூமியின்
47.கண்ணிலே வாங்கிவிட்டாள் அந்த முத்து யிரு பிளவையாக வெடித்து யிரண்டு வன்னி முத்தரசர் பிறந்து பின் குடுமி பூ
48.நூலும் வேலும் வில்லும் கட்டின கச்சையும் உருவின மந்திர வாளும் பதினெட்டாயுத முஸ்த்திப்புடனே வந்து சுவாமியி
49.னுடைய திருப்பாதத்தைத் தொழுது நின்றார்கள் நின்ற அடியார்களைப் பார்த்து வாறும் பிள்ளாய் பெரிய வன்னி முத்தரச
50.னே சின்ன முத்தரசனேயிந்த திருத்தேருக்கு வழிவிடாமல் முன்னமே நிற்கிற பட்சியை வெட்டிச் சம்மாரஞ் செய்து
51. கொண்டு வாருங்களென்று விடைகொடுத்தார். அந்தப் பட்சியுடனே யுத்தஞ் செய்து சிரகற் வெட்டியிரு துண்டாக்கி யிரண்டு பே
52. ரும் பிரண்டு அம்பு முனையிலே கோற்த்துத் தூக்கிக்கொண்டு வந்து சுவாமியினுடைய திருப்பாதத்துக்கு முன்னமே வைத்து வ
53. ணங்கி நின்றார்கள் நின்ற அடியார்களைப் பார்த்து அவர்கள் பேரிலே சந்தோஷப்பட்டு உங்களுக்கு யென்ன வரம் வேண்டு
54. மென்று கேட்டார் பூமியின் கண்ணிலே யெங்களுக்கு ராச்சிய பரியலினஞ் செய்துவரும்படி கட்டளையி. வேணுமென்று
55. கேட்டுக் கொண்டார்கள். அந்தப்படியவர்களுக்கு வரமுங் கொடுத்த விருது பவளக்குடை பட்சைக்குடை முத்துக்குடை வெள்ளை
56. க்குடை சிவப்புக்குடை வெள்ளைக்குதிரை பல்லக்கு வெண்சாமரை புலிக்கொடி வாடாத மாலை வலம்புரிச்சங்கு வாத்தியமுப்
57. பத்திரண்டும் பஞ்சவர்ன்ன விருதுங் கொடுத்துச் சுவாமி கயிலாசத்துக் செழுந்தருழியாகித் தேவேந்திரனுடனே தெய்வலோக
58. த்துக்குப் பெரிய வன்னி முத்தரசனை பாதுகாவலாயிருமென்று கட்டியனுப்பினார் அதின் பின்புதிருவாருருக்கு வந்து தியாகரா
59. சரையுந் தரிசனஞ்செய்து திரிச்சிரகிரியில் சிவந்தீசுபரையுஞ் செம்புலிங்கத்தையும் தரிசனஞ் செய்துகொண்டு பே
60. ரிய வன்னி முத்தரசனுந் தேவேந்திரனும் அமராபதிப் பட்டணத்துக்குப் போனதின் பிறகு சின்ன வன்னி முத்தரசனை ஸ்ரீ ரங்கத்தி
61. லேதரநாயகருக்குப் பாதுகாவலாயிருமென்று அனுப்பினார். அப்படிப்
பாதுகாவலாயிருந்து வரும் நாளையிலே கோப்பு
62 லிங்கராசாவின் வம்சதிலே ஒரு பெண்ணைகலியானஞ் செய்து கொண்டான் அவன் வயிற்றிலே ஒரு சின்னனென்கிற
63. வன்னி முத்தரசன் பிறந்தான் அவன் வயிற்றிலே சென்னியவள நாடனென்றும் சேமனென்றும் அகளங்கனென்றும் ராசாக்கன்
64. நயினாரென்றும் நல்ல நாச்சியாளென்றொரு பெண்ணும் நாலுபேர் வன்னி முத்தரசர்கள் பிறந்தனர். நால்வருஞ் சோழராசா
65. வினிடலித்திருந்தார்கள் அப்போது சோழராசாவுக்கும் பாண்டியராசா வுக்கும் யெல்லைப பிசகுச் சண்டையானபோது யிந்
66. த நால்வரும் பாண்டியன் படையை முறிய வெட்டி மதுரைமட்டுந் துரத்திவிட்டார்கள் யிவர்கள் பராக்கிரத்தைக் கண்டு பாண்
67. டியராசன் தன்னுடைய தானாதிபதிகளை யனுப்பி வைத்து நல்ல நாச்சி யாளென்கிற பெண்ணைப் பாண்டிய ராசனுக்குக் கலியாண
68. ஞ் செய்து கொடுத்தார்கள். பாண்டியராசன் தனக்கடங்காத சீர்மையும் அழகிய சொக்கத் தம்பிரானென்கிற பட்டத்துப் பரியை
69. யுங் கொடுத்தான் அந்தப்படிக்கி யடங்காத பேர்களை வெட்டிச் செயங்கொண்டு ஆண்டு வருகிர நாளையிலே பாண்டியராசா
70. யிவர்கள் நால்வரையும் பாரக்கவேணுமென்று அளைத்தார். அவர்கள் யெண்ணவொண்ணாத சேனையுடனே அழகிய சொக்கத்த
71. ம்பிரானென்கிற குதிரையின் பேரிலேரிக்கொண்டு வந்து கண்டார் யிவர்களுக்கித்தனை பராக்கிரமமானால் நமக்கு யிவர்கள் அ
72. டங்கார்களென்று பரியைப் பிரித்துப் பந்தியில் கட்டினான் பரியைப் பரித்த பாண்டியன் மதுரையை நான் வன்னிமுத்தரசன் பட்
73. டம்பகலிலே வெட்டிச் சிறைகொள்ளுவேனென்று பந்தியில் பருந்து
பரித்த பாண்டியன் மதுரையை நான் வன்னிமுத்தரசன் பட் பரியின்மேல்க் கொண்டுவருகையில் பரியின் பிற
74.கே படையெடுத்துவந்த பாண்டியன் படையை வெட்டிச் செயங்கொண்டு வலது தோளிலே வந்த வன்னியப் பிரதாபன்
75. மூவர்முடி காவலோர் வல்லமும் தஞ்சையும் வழப்பமுடையோர் சென்னியங் கொல்லியுஞ் சிகைமுடையோர் ஆனைக்
76. கண்ணும் வளநாடும் அரசுமுடையோர் கயிலையங்கிரி காவலோர் ராமநாத தேவரையும் ஒராச்சென்று பிடிப்போர் வல்லா
77. ழர் தேவரையும் வாளரங்கம் பொருதுவோர் பாண்டிய ராசனுக்குச் சம்மந்தக் குடியோர் யேழாயிரம் பண்ணையிலரசாளும்
78. செப்புப் பரிப் பாண்டியன் மழுக் குதிரையேறித் திலுப்பின வன்னி முத்தரசர் சிவகிரியில் அரசாளும் திருவாரூரில் ஆயிரக்கால்
79. மண்டடங் கட்டிவைத்த வன்னிமுத்தரசர் வேப்பங்குளத்தில் அரசாளும் வன்னிமுத்தரசர் ஸ்ரீரங்கத்தில் யேகாதெசி சொக்காவ
80. சல் திருநாளன்றைக்குப் பதினெட்டாழ்வாருக்கு மோட்சங் கொடுத்த
ரெகுநாயகர் வந்திரங்க மண்டபங் கட்டி வைத்தவன்னி
81. முத்தரசர், தனிக்கோடிக் காவலோர் சூரிய வம்மிசத்தோர் திருப்பதி காவேரி கொல்லிமலை கனவெள்ளாறுடையோர்
82. கவிதைக்கு மிண்டர் சூரிய வன்னியர் மறையுக்கார் காவலோர் மலை குலிங்கினுங் கடல் கலங்கினு மனங்கயங்காதகண்டர்
83. அடைக்கலங் காத்து அரசு நிலையிட்ட வன்னியப் பிரதாபர் சென்னிவள நாடன் சேமனகளங்க ராசாக்கள் நயினார் மீளமுங்
கொங்
84.கும் யாள்ப்பாணமும் யெம்மண்டலமுங் கொங்கு திரைகொண்டருளிய ராசாதிராசன் ராஜபரமேஸ்பரன் ராச தேவேந்திரன்
85. ராஜகெம்பீரன் யெழுபத்தேழு பாளையமுந் திறை கொண்டு தும் நிற்கிரக சிஸ்ட பரிபாலினஞ் செய்து விசைய நகரத்தில் வி
86.ர சிம்மாசனத்தில் யெழுந்தருளிய மகாமன்னிய ராசஸ்ரீ பிரபி தேவமகாராயர் சதாசவிமகாராயர் நரசிம்மராயர் ஸ்ரீரங்க
87. தேவமகாராயர் யிவர்கள் பிரதிவு ராச்சிய பரிபாலினஞ் செய்து செங்கோல் செலுத்தியருளா நின்ற காலத்தில் சொக்க
88. லிங்க நாயக்கர் திருமலை நாயக்கர் யிவர்கள் செங்கோல் செலுத்தி மதுரையம் பதியில் ஓதியுணர்ந்து ஒரு குடைக் குள்ளான்
89.டு வேதவொலியும் விளாவாற வீதியும் தபோதனர் மடங்களும் சைவநெறியும் தரும் சத்திரமும் சகல தருமங்களுக்குள்ளாய் நட
90. ந்து வரகுற சாலியவாகன சகார்த்தம் 1596ன் மேல்க் கலியுக சகார்த்தம் 4774ன் மேல்ச் செல்லாநின்ற
91. ஆனந்த வருஷம் தை மாதம் 3 தேதி சோமவாரமும் பூச நட்சத்திரமும் அமுத யோகமும் கூடிய சுபதினத்தில் கீழ்சமுத்திரத்துக்கு மேற்க்
92.கு சிதம்பரஞ் சீர்காளி கும்பகோணம் தஞ்சாவூர் திருப்பந்துருத்தி யிதைச் சேர்ந்த சோழவள நாட்டிலுள்ள வன்னி முத்தர
93. சரனவோர்களும் திரிசிபுரம் வீமநாயக்கன்பாளையம் அல்லித்துரை அதவத்தூர் யெட்டரைகோப்பு அயிலாப்பேட்டை நவ்வலூ
94.ர் யிந்த யேழுநாட்டைச் சேர்ந்த வன்னிய முத்தரசனவோர்களும் ஸ்ரீரங்கம் திருவாணைக்காவல் உத்தமசேரி துரையூர் மங்
95.கலம் கரிகாலிநாடு யிதைச்சேர்ந்த வன்னிமுத்தரசரனவோர்களும் தென் சமுத்திரத்திற்கு வடக்கு கன்னிகுமரி திருக்குற்றா
96.லம் திருச்செந்தூர் சேது ராமநாதபுரம் காளையார் கோயில் சிவகங்கை திருப்புவனம் யிதைச்சேர்ந்த வன்னி முத்தரசரனவோ
97. ர்களும் திருப்பத்தூர் புதுக்கோட்டை பிரமலை முருங்கைநாடு தாடிக் கொம்பு பதினெட்டுப் பாளையப்பட்டிலுள்ள வன்னி முத்தர
98. ரனவோர்களும் பாளையங்கோட்டை திருநெல்வேலி யேழாயிரம் பண்ணை சிவகிரி சேத்தூர் அணைத்தலை சமுசாபுரம் வேப்பங்
99. குளம் மதுரை யிதைச்சேர்ந்த பாண்டிய நாட்டிலுள்ள வன்னிமுத்தரசரன வோர்களும் மேல் சமுத்திரத்திற்குக் கிளக்கு கொ
100. ச்சி கள்ளிக்கோட்டை வண்ணார்க்காடு பாலைக்காடு கொல்லங்கோடு கொடுவாயி பாலைக்காட்டைச் சேர்ந்த முத்துவன்
101. னியரும் கோயமுத்துஊரு சேலம் சீறங்கப்பட்டணம் சென்னைப் பட்டணம் கங்கோத்தி வெட்டுவாயத்தலைக்குங் கிளக்
102. கு காவேறிக்கும் தெக்கு வுய்யக்கொண்டான்னாற்றுக்கும் வடக்கு சிந்தாமணி தேண்ணூற் ஆண்டுகொ
103. ண்டானாற்றுக்கும் மேற்க்கு யிராசகெம்பீர வளநாட்டிற் தொண்ணூத் தாரு கிராமத்தில் உள்ள முத்த
104. றசரும் விளாவறாவீதி வளநாட்டிற் றிருவாணைக்காவல் ஸ்ரீரங்கஞ் சீலிவழநாடு வடகரை வீறசி
105. ங்கி நாடு கண்டாரதித்தநாடு ஆலம்பாக்கஞ் சிவப்பிளையார் திருப்பந் துருத்தி மல்லப்ப முத்தரசன்
106.தையாக்கவுண்டன் ஆமூற்பறந்து வெட்டி வீறறாய தேவற் மருச்சிலவ காத்தானுக்கும் கிளக்கு கொ
107. ல்லிடக் கறைக்கும் வடக்குவளிப் பற்றுக்கும் தெக்கு வீசனம்பதி யன்பிலறியலூற் திருச்சினாப் பள்
108. ளிக்கும் கிளக்கு அறியமங்கலம் முருதன்கயூற்க்கு மேற்க்கு வுய்யம்க்கொண்டான் கரைக்கும் வடக்கு
109. காவேறிக்கும் தெற்க்கு ஆலத்தூற் கற்காண்டாற் கோட்டை கீள்க்குறிச்சி வுய்யக்கொண்ட வள
110. நாடு கண்டராதித்தநாடு ஆலம்பாற்க்கமான னேளுகரை நாட்டாற் திருவெள்ளாறு திருப்பங்கிலி
111. பாச்சலூற் விக்கலூற் செம்பியன்குடி யிலந்தைக் கோட்டம் உத்தமநல்லூர் மாலுபாக்கரை வள
112.நாடு விட்டபற்றுநாடு வெண்பாநாடு கிருவெழ்ழறைநாடு கீள் வள்ளுவப்பநாடு மேல் வள்ளுவப்
113. பதநாடு ஆமூற்நாடு முசிறி கண்ணணூற் றறுபத்திநாலு கிறாமத்தில் நாலு கிறாமத்திலுள்
114.ள முத்தரசரும் செட்டிகுளம் கோட்பித்தூற் திருப்ட்டூற் தச்சங் குறிச்சி எதுமலை யிறங்குடி
115. துங்கான்துரை யூற்றுக்கரை மாதேவி மங்கலம் கரிகாலிநாடு தலைமலை தண்டலையலுக்கரை நா
116. டு அயிலூற் தொட்டியம் காடுபட்டி காட்டுப் புத்தூர் விமலை நாடு கொல்லிமலைக்கும் மேற்க்கு கோனூ
117. ற் சிந்தாமணி நாமக்கலம் பறமத்தி வாளவந்திநாடு யிடையாரு சேந்தமங்கலங் தென்கரை னித்தவி
118. னோதவளநாடு குன்று சூள்ந்த குலிசை வளநாடுகளுக்கு வளநாடு சுடலைவளநாடு களுதூர்ப்பர
119. நாடு மதுக்கறைக்கு மேற்க்கு வேங்கலநாடு மணநாடு தலையநாடு தட்டயநாடு தேங்கறைநாடு
120. வைகாபுறிநாடு அண்டநாடு நல்லுருக்கநாடு பொன்குலுக்கிநாடு ஆனைமலைநாடு ஆருநாடு பா
121. லைக்காட்டுச்சேறி கொல்லங்கோடு கொடுவாய் கேறளதேசத்து முத்தறசரும் கொங்கு இருப
122. த்துநாலு நாட்டிலுள்ள முத்தரசரும் சோழ தேசத்தில் தறாசலப் பேட்டை நாட்டிற் காத்துக்
123. கோட்டை முத்தரச னல்லா முத்தறசன் மடந்தைபாக முத்தரசனாயிர முத்தரசன் மல்லப்
124. ப முத்தரசன் திருவாரூர் அம்மையப்பன் மொன்னையப்பன் ஆண்டியப்பனய்யன் சந்திலை
125. காட்டுப்பள்ளி திருவையாரு கடுவளிக்கும் கிளக்கு சிதம்பறஞ் சீற்காழி புள்ளிருக்கும் வே
126. ளூற் திருவிடைமருதூற் திருவலஞ்சுழி மன்னாற்கோயில் பட்டுக்கோட்டை தானமாநாடு வளுவா
127. டி சிதம்பறம் அறந்தாங்கி கோனாட்டுப் புலியன் பெறியான் அரையகுளம் பற்று வெள்ளாம்
128. பற்றுப் பேறாம்பூற் ராசசிங்க தேவறக்கலூற் சூரைக்குடி விறாளியூர் தேவற்பாக்கநாடு மணப்
129. பாறைநாடு மருங்கிநாடு துவறாபதிநாடு சேங்காறிநாடு கீள்ச் சேங்காறிநாடு கவிநாடு
130. சிவப்பாநாடு காறிநாடு களிக்காநாடு பிறான்மலை முருங்கைநாடு அஞ்சுநிலைநாடு கேரளவளசி
131. ங்கப்ப நாடு திருப்பத்தூர் நாறுத்தாமலைநாடு காநாடு கவிநாடு திண்டுக்கல் வெள்ளிப்பனை தாடிக்
132. கொம்பு பதினெட்டுப் பாளையப்பட்டிலுள்ள முத்தறசரும் பாண்டிவளநாடு மதுரை வைகைக்குத்
133. தெற்கு அறுப்புக்கோட்டை வன்னிமுத்தறசன் மந்தியோடை வளத்தா
முத்தறசன் பனக்கிரு
134. ப்பு தீத்தான் முத்தரசன் மாதிறை அளக முத்தரசன் சந்தையூற் வீற முத்தரசன் பளிக்கு
135. கங்கை முத்தறசன்ம்பாளையம் பட்டியுடையாறேம்பல் விருதுக்கு வெட்டி வில்லூர்க்
136. காசக்குளம் முருக்காநாடு மாநாடு வறிசைநாடு றாமனாதபுறம் கீழ்க்கரைக் கமுதி தொண்டி திரு
137. வாடானை சாகிக்கோட்டை சிவகங்கை திருனெல்வேலி நாஞ்சிநாடு மற்றும் சேறம
138. மண்டலம் சோழமண்டலம் பாண்டிய மண்டலம் தொண்டைமண்டலம் மின்னான்கு ம
139. ண்ட முதலாகிய காசிக்கும் தெக்கு கண்ணியா குமரிக்கும் வடக்கு நாகப்பட்டணத்துக்கும் மே
140. க்கு கோளிக்கூட்டுக்கும் கிளக்கு அன்பத்தாறு தேசத்திலுள்ள முத்துவன்னியறும்
141. பழனித் தலத்துக்கு வந்து சுவாமி தெறிசினை செய்து திருவாவிநன்குடிக்கும் கீள்புறம் சறவ
142. ணைப் பொய்கைக்கும் தென்மேல்புறம் மடவாலையங் கட்டி வைத்து மடத்துக்கு வேலாயுத உ
143. டையாற் குமாறற் கொளந்தை வேலுடையாறுக்குத் தாம்பூற சாதினம் எழுதிக் குடுத்து மடத்தி
144. ல் நீறாகாறமும் உப்பும் ஊறுகாயும் மயேஸ்வர பூசையும் நடக்கும்படிக்கு பேறூறுக்குப் பத்து
145.ப் பணமும் சித்தூருக்கு அஞ்சு பணமும் முண்ணட்டுப் பண்ணைக்கி ரெண்டு பணமும் பயலாளுக்கு
146. ஒரு பணமும் கலியாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு ரெண்டு பணமும் பெண்வீட்டுக்கு ரெண்டு பண
147. மும் சாதியில் குற்றா குற்றம் தீற்ந்த பணத்தில் மடத்தய்யனுக்கு மூன்றிலொரு பங்கும் தேற்
148. க்கு ஒரு பணமும் கட்டளயிட்டபடிக்கி புத்திறா பௌத்திரா பறம்பறிக்கை சந்திறாள் சூரியாள் உ
149. ள்ள வரைக்கும் நடத்திவரக் கடவோமாகவும் பித்தன்மத்துக்கு யாதாமொருவர் கொடாதிருந்தால்
150. நாட்டாற் மறித்து மங்கலமொதுக்கி வெங்கலம் அடகெடுத்துக் கொடுப்போமாகவும் யித்தற்மத்துக்கு யா
151. தாமொருவர் விகாதம் செய்து யில்லை போவென்று கடுத்துச் சொன்னபேற்களுக்கு கெங்கைக்கரை
152. யில் காறாம்பசுவைக் கொன்ற தோஷத்தில் போகக் கடவாறாகவும் தங்கள் மாதா பிதா
153. குருக்களைக் கொன்ற தோசத்தில் போகக்கடவாறாகவும் பஞ்சமா பாதகறாய்ப் போவாறாகவும் யித்
154. தருமத்துக்கு யாதாமொருத்தர் வாக்குச் சகாயம் அன்ன சகாயம் சறீற சகாயம் செய்த பேருக்கு
155. கொள்ளும் பலன் காசி விசுவநாதரையும் ராமலிங்கத்தையும் சொக்கலிங்கத்தையும் பழனி
156. யாண்டவரையும் சேவித்த பலன் பெறுவாராகவும் மஞ்சாங் கோப்பில் சமூகம் கூடி எழுதின பட்டயம்
157. எழுதினது ராமசாமிக் கவிராயர் ஆனந்தத் துரையே வாழி திருச்சிற்றம்பலம்
தொடரும்....
Marimuthuampalam.blogspot.com
தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம்..🔥🔥
Comments
Post a Comment