அம்பலக்காரர் செப்பேடு
அம்பலகாரர் செப்பேடு ____________________________ 63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் வரலாறு கூறும் அம்பலகாரர் செப்பேடு திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் 47 செ.மீ .நீளமும்,27செ.மீ அகலமும் 2.25 கிலோ எடையும் கொண்ட அறிய செப்பேடு ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.இருபுறமும் தமிழில் 115 வரிகளில் அச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது .இதை ஈரோடு கொங்கு ஆய்வு மைய அமைப்பாளர்கள் புலவர்ராசு ,கொங்கு குழந்தைசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர் . நெடுநாள் ஓலைச்சுவடியில் இருந்த பட்டயம் 1878 ஆம் ஆண்டு செப்பேடாக வெட்டப்பட்டுள்ளது . மதுரையைச் சேர்ந்த சேது அம்பலக்காரர் சோழ நாட்டுத் திருச்செங்காட்டங்குடியில் அன்னதான மடம் ஏற்படுத்தி திருவஞ்சைக்கனம் ஆத்மநாத பண்டாரம் வசம் மடத்தை ஒப்படைத்துள்ளார் . சோழ நாடு ,பாண்டிய நாடு, தொண்டை நாட்டுப் பகுதிகளில் அம்பலகாரர் ,சேர்வைக்காரர் ,முத்துராயர் ,முத்திரியப்பார் ,வன்னியர் என்ற பட்டப்பெயர் பெற்று வாழும் சேது அம்பலம் , சோமணம்பலம் , குமாரணம்பலம் ,முருகனம்பலம் ,வடுகனம்பலம் ,குரும்பனம்பலம் ஆகிய ஏழு பிரிவினரும் அந்த ஏழுவகைத் தேவ அம்பலகாரர் தர்ம மடத்திற்கு உரியவர்கள் ,