அம்பலக்காரர் செப்பேடு

அம்பலகாரர் செப்பேடு
____________________________



63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் வரலாறு கூறும் அம்பலகாரர் செப்பேடு 

திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் 47 செ.மீ .நீளமும்,27செ.மீ அகலமும் 2.25 கிலோ எடையும் கொண்ட அறிய செப்பேடு ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.இருபுறமும் தமிழில் 115 வரிகளில் அச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது .இதை ஈரோடு கொங்கு ஆய்வு மைய அமைப்பாளர்கள் புலவர்ராசு ,கொங்கு குழந்தைசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர் .

நெடுநாள் ஓலைச்சுவடியில் இருந்த பட்டயம் 1878 ஆம் ஆண்டு செப்பேடாக வெட்டப்பட்டுள்ளது . மதுரையைச் சேர்ந்த சேது அம்பலக்காரர் சோழ நாட்டுத் திருச்செங்காட்டங்குடியில் அன்னதான மடம் ஏற்படுத்தி திருவஞ்சைக்கனம் ஆத்மநாத பண்டாரம் வசம் மடத்தை ஒப்படைத்துள்ளார் .
சோழ நாடு ,பாண்டிய நாடு, தொண்டை நாட்டுப் பகுதிகளில் அம்பலகாரர் ,சேர்வைக்காரர் ,முத்துராயர் ,முத்திரியப்பார் ,வன்னியர் என்ற பட்டப்பெயர்  பெற்று வாழும் சேது அம்பலம் , சோமணம்பலம் , குமாரணம்பலம் ,முருகனம்பலம் ,வடுகனம்பலம் ,குரும்பனம்பலம் ஆகிய ஏழு பிரிவினரும்  அந்த ஏழுவகைத் தேவ அம்பலகாரர் தர்ம மடத்திற்கு உரியவர்கள் ,அந்த மடத்தை நிர்வகிக்கவும்  ,அன்னதானம் செய்யவும் ஒவ்வொருவரும் குறு  காணிக்கையாக ஆண்டுக்கு இரண்டு பணமும்,திருமணம்,ருதுசாந்தி ,சீமந்தம் இவைகளுக்கு பெண் வீடு இரண்டு பணமும் கொடுக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர் .

இந்த மடம் திருச்செங்காட்டங்குடியில் ஏற்படுத்திய காரணத்தால் அங்கு கி.பி 7 ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த சிறுத்தொண்டர் வரலாறு மிகவும்  விரிவாகக் கூறப்பட்டுள்ளது .63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் வரலாறு கூறும் பெரிய புராணத்தில் கூறப்பெறாத பல அறிய  செய்திகள் சிறுத்தொண்டரைப் பற்றி கூறப்பட்டுள்ளது .

புதிய செய்தி 

மகாபாரத கதையில் வரும் கர்ணன் சொர்ணதானம்(பொன் ) செய்தான் .ஆனால் தானத்தில் சிறந்த அன்னதானத்தை செய்யவில்லை .அன்னதானம்  செய்யும்பொருட்டு கர்ணன் திருச்செங்காட்டங்குடியில் சிறுதொண்டராக அவதாரம் செய்தார் என்று செப்பேடு கூறுகிறது .அன்னதானத்திற்காக மடம்  ஒன்றை ஏற்படுத்தி அன்னக்கொடிகட்டி அன்னமிட்டார் .சிவபெருமான்  சிறுத்தொண்டரின் பிள்ளைக்கறி உன்ன நடந்து வந்த தெற்கு வீதி ” சிவம்பார்க்க ” நடந்த திருவீதி ” என்று அழைக்கப்பட்டது .இவைஅனைத்தும் பெரியபுராணத்தில் கூறப்படாத புதிய செய்திகளாகும் .

இச்செப்பேட்டில் ஒரு பெரியபுராணப் பாடல் உட்பட நான்கு பாடல்கள் எழுதப்பட்டுள்ளன ஒரு பாடலில் திருச்செங்காட்டங்குடிக்கு மந்திரபுரி,செங்காடு ,சத்யபுரி ,தந்திரபுரி ,ஆத்திவனம் ,பாஸ்கரபுரி ,சமுத்திரபுரி ,கணபதீச்சுரம் ஆகிய 8 பெயர் உள்ளதெனக் கூறுகிறது . மற்றொரு பாடலில்  அன்னதானத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது .முருகன் அம்சமாகப் பிறந்த உக்கிர குமார பாண்டியனின் ஏவல் செய் மக்கள் என்றும் ,இந்திர குலம்  என்றும் அம்பலகாரர்கள் குறிக்கப்பட்டுள்ளனர் .செப்பேட்டில் தல விருட்சம் ஆத்திமரம் அழகுடன் செதுக்கப்பட்டுள்ளது .
திருச்செங்காட்டங்குடி கோவில் திருவத்தி மகாமண்டபத்தில் கூடிக்கொடுத்த இந்த தர்ம மட செப்பேட்டை எழுதியவர் நாகூர் நமச்சிவாய முதலியார் .120 x 42 அடியுள்ள இந்த மடம் உள்ள இடம் 15 ஆயிரத்து 120 பணத்துக்கு வாங்கப்பட்டது.அருகில் சான்றோர் மடம் உள்ளது .
அம்பலகாரர் சார்பில் திருமருதை வேங்கு அம்பலகாரர்,குப்புசாமி அம்பலகாரர் ,செங்கழனி அம்பலகாரர் ,முத்துவேல் அம்பலகாரர்,முத்துவேல்  அம்பலகாரர் ,வெங்கடாசலம் அம்பலகாரர் ஆகியோர் கையொப்பமிட்ட இந்த செப்பேட்டில் ஆத்திவனம் அனந்த ராமய்யர்,ஆரூர் மாசிலாமணி தேசிகர்  ,முத்து வைத்திலிங்கம் பிள்ளை ,கணக்கு ராமலிங்கம் பண்டாரம் ஆகியோர் சாட்சி கையொப்பமிட்டுள்ளனர் .

தமிழக  சேது  அம்பலக்கார ,வரலாறு ,சைவ  சமய  வரலாறு  ஆகியவற்றில்  பல  புதிய  அறிய  தகவல்களை  கூறும்  இந்த  அறிய  செப்பேடு  வரலாற்று  முக்கியத்துவம்  வாய்ந்ததாக  கருதப்படுகிறது .தொடர்ந்து  இது  குறித்து  ஆய்வு  நடைபெற்று  வருகிறது .

ஆதாரம் :  தினமலர்  27.11.2004 ஈரோடு  மாவட்ட  பதிப்பில்  வந்தது .

இது  குறித்து  மேல்  அதிகமான  தகவல்கள்  தெரிந்தால்  தெரிய  படுத்துங்கள்  சமுதாயம்  அறிந்து  கொள்ளட்டும் .

தகவல் உதவி: பழனிவேலு சங்கிலித்தேவன்

தொடரும்...

தமிழ்நாடு முத்தரையர் 
முன்னேற்ற சங்கம்..🔥🔥

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER