முத்தரையச் சோழர் வரலாறு



முத்தரையச் சோழர் வரலாறு
___________________________

முத்தரையர் என்கிற வழங்கு பெயர் தொன்மையான அரையர் குலத்தவர் என்கிற பொருளை வழங்கி நிற்கிறது. அப்படி எனில் அவர் எந்த அரசமரபில் தொன்மையானவர் என்று அது குறிப்பிடுகிறது என்பதே நமது ஆய்வு.

முத்தரையரைப் போன்று பாண்டியர் என்கிற சொல்லும் பண்டைய அரையர் என்றும், பண்டைய அரச குலத்தவர் என்றும் கூறி நிற்கிறது. அவர்களையும் எந்த குடிவழியில் வந்தவர் என்றும் ஆராயவேண்டியுள்ளது. பாண்டியர் மீனவர் குடிவழியில் வந்தவர் என்று மிக எளிதாகக் கூறிவிடமுடியும். அதற்கு ஆதாரம் நிறைய உள்ளன. ஒரு புலவர் தென்திசையில் இருந்த பாண்டியரைக் குறிக்கவும், வடதிசையில்
இருந்த கன்னட மற்றும் ஆந்திரர்களைக் குறிக்கவும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளதை பார்க்கலாம்.

"தென்பரதவர் மிடல் சாய
வடவடுகர் வாளோட்டிய” என்றுக் குறிப்பிடுகிறார்.

சோழன் இளஞ்சேட்சென்னி பாண்டியரையும், வடுகரையும் வென்றதையே இவ்வாறு குறிப்பிடுகிறார். எனவே பாண்டியர் பரதவ குலத்தவர் என்றும், மீன் கொடி அவர்களுகடையது என்றும் கூறிவிடலாம். ஆனால் சோழ நாட்டை ஆண்டுவந்த முத்தரையர் எக்குடியினர் என்பதை சற்று ஆழ்ந்து ஆராய்ந்துதான் கூறமுடியும். கன்னட நாட்டின் மலைப்பகுதியில் வாழ்ந்த ஒரு வகை மக்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டை கி.பி. 275 வாக்கில் கவர்ந்து ஆளத்தலைப் பட்டபோது, சோழநாட்டில் சோழர் அரசிழந்தனர்.

பாண்டியர் இலங்கைக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர். சேரரும் மலைக்காடுகளில் சென்று மறைந்து வாழ்ந்தனர். இந்த நிலை கி.பி. 530 வரை நீடித்தது. கன்னட நாட்டாரின் ஆட்சி தமிழகத்தில் நடந்த போது, திருப்பதிக்கு வடக்கே இருந்த சோழர்கள் மட்டும் எஞ்சி
இருந்து அப்பகுதிகளில் தொடர்ந்து அரசர்களாய் இருந்து வந்தனர். கரிகால் சோழன் காலம் முதலே வடக்கே கிருஷ்ணா ஆறு வரையுள்ள நாட்டை சோழர்கள் ஆண்டு வந்துள்ளனர். அவர்கள் ஆண்ட அந்த பகுதியை சூளியநாடு (சோழ நாடு என்றும் அரையர்
நாடு என்றும் வரலாற்றில் அழைக்கப்பெற்றுள்ளனர்.

காஞ்சீபுரத்திற்கு தெற்கே உள்ள பகுதியை மட்டுமே கன்னட நாட்டுக் கலகக்காரர்கள் பிடித்து ஆண்டனர். காஞ்சிபுரத்திற்கு வடக்கே உள்ள பகுதியை கரிகால் சோழன் வழிவந்தவர் என்று தங்களைக் கூறிக்கொண்ட அரையர் நாட்டு சோழர்கள் கன்னடரின் இடையீட்டுக் காலத்திலும் தொடர்ந்து ஆண்டு வந்தனர். இவர்களின் அனேகக் கல்வெட்டுக்களில் தங்களை "முத்துராஜா” என்று குறிப்பிட்டதோடு சோழர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

"அரையர் நாடு” என்று அவர்கள் குறிப்பிட்ட நாடு கடப்பை, கர்நூல், நெல்லூர், சித்தூர், புத்தூர், பெல்லாரி, அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இருந்தது. பிற்காலத்தில் ஆந்திர மாநிலம் முழுவதும் அவர்கள் பரவி அரசர்களாக இருந்துள்ளனர். வட கன்னட மாவட்டத்திலும் அவர்கள் பரவியிருந்தனர். ரேநாட்டுச் சோழர்கள் தங்களைக் குறிப்பிடும்போது தாங்கள் காவிரிக் கரையிலிருக்கும் உறையூரிலிருந்து வந்தவர் என்றும், காவிரிக்கு கரைகட்டிய கரிகால் சோழன் வழிவந்தவர் என்றும், மந்தார மரம் என்கிற ஆத்திமரத்திற்கு உரியவர் என்றும், சூரிய குலத்தினர் என்றும் விடாது பல செப்பு பட்டயங்களில் கூறி வந்துள்ளனர். சில பட்டயங்களில் ராமன் காலம் முதல் அரசாண்ட சூரியன் என்பவர்மு தற்கொண்ட முழுப்பட்டியலையும் கூறி நிற்கின்றன.

அரையர் நாட்டுச் சோழர்கள் என்கிற இவர்களை சற்று திரிந்த நிலையில் ரே நாட்டுச் சோழர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். இந்த ரேநாட்டுச் சோழர்கள் அப்பகுதியியைச் சுற்றி இருந்த எல்லா அரசமரபாருடனும் மணவுறவில் இருந்துள்ளனர். கங்கர்கள், மேலைச்சாளுக்கியர், கீழைச்சாளுக்கியர், கடம்பர்கள், பல்லவர் என அப்பட்டியல் நீளும், ஆனால் பல்லவரோடு அவர்களுக்கு இருந்த உறவு கொஞ்சம் அதிகம் எனலாம்.

நந்திவர்ம சோழன்;

------------------------------------

ஒரு கட்டத்தில் நந்திவர்ம சோழன் என்கிற ரே நாட்டுச்சோழன் முதல் நந்திவர்ம பல்லவன் காலத்தவன்) தம்பிள்ளைகள்மூவர் உதவியுடன் தொண்டை நாட்டையும், சோழ நாட்டையும்கன்னடக்கலகக் காரர்களிடமிருந்து மீட்டு சோழர்களின் பழம்பெருமையை நிலைநாட்டினான். தொண்டை நாட்டையும்,சோழநாட்டையும் தன் மூத்த மகன் சிம்ம விஷ்ணு சோழன் என்கிற கோசெங்கணனை ஆள அனுமதித்தான். இரண்டாவது மகன் சுந்தரநந்தனும், மூன்றாவது மகன் தனஞ்ஜெயவர்மனும் ரே நாட்டை கீழ், மேல் பகுதியாக பிரித்து ஆட்சிசெய்ய அனுமதித்தான்.

காஞ்சிபுரம், வல்லம், தஞ்சை, உறையூர் பகுதியில் அரச இருக்கைகளை அமைத்து சோழன் செங்கணன் என்கிற சிம்மவிஷ்ணு சோழன் சிறப்பாக ஆட்சிசெய்தான். இவனது ஆட்சி தெற்கே இராமநாதபுரத்தின் தென்பகுதியில் உள்ள செம்பி நாடு வரை (செம்பியன்நாடு) பரவி இருந்தது. இவனது மதுரை படையெடுப்பை கடைசி கன்னடநாட்டு அரசன் தமிழ்புலவர்களைத்தூது விட்டு தடுத்து விட்டான். புலவர்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மீது செங்கணன் படை நடத்தவில்லை. ஆயினும் சோழமண்டலத்தில் தோற்ற கன்னடர் பெருங்கூட்டமாக வந்து கொங்குநாட்டில் எதிர்த்தனர். அதில் செங்கணன் வென்றான். கன்னடரோடு வந்த கணயன் செங்கணனிடம் சிறைபட்டான். சோழநாட்டு குடவாயிலில் கணையன் சிறை வைக்கப்பட்டான். அவனை சிறை மீட்க களவழி நாற்பது என்ற நூலை பொய்கையார் என்னும்அக்காலத்து ஒரு புலவர் செங்கணன் மீது பாடினார்.

கன்னடர் காலத்து பின்னடவில் இருந்த சோழ நாட்டில் 100 கோயில்களைக் கட்ட செங்கணன் ஆணையிட்டான். ஆனால் இதில் 78 கோயில்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது. இச்சூழலில் வடக்கே இருந்த இரு தம்பிமார்களின் நாடும் பல்லவர் வசமாகிவிட்டது. சிம்மவிஷ்ணு பல்லவன் என்கிற யுவராஜன் சோழ நாட்டின் மீது படையெடுத்து முதலில் காஞ்சியையும், பின்னர் தஞ்சை வல்லத்தையும் கைப்பற்றினான். இப்போது வயோதிக நிலையில்உறையூர் பாசறையில் செங்கணன் இருந்தான். அவன் மகன்நல்லடி யுவராஜனாக இருந்தான். போர் முனையில் தோற்ற நல்லடியையும், ரேநாட்டு இளவரசனையும் படையுடன் சென்று அவன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த உறையூரை மீட்கும்படி பல்லவன் பணித்தான். செங்கணனும் மக்கள் மீது போரிட புறப்பட்டான். இந்நிலையில் புலவர் தடுத்தனர். தமிழ்புலவர்கள் மீது இருந்த பற்றால் அவர் சொல்படி சோழன்பாறையில் உண்ணா நோன்பிருந்து புகழுடம்பினை செங்கணன் அடைந்தான். அவனது ஆட்சி எல்லையை கவனத்தில் கொண்டு அவனை கோப்பெருஞ்சோழன் என்பர் புலவர்கள்.

பள்ளங்கோயில் செப்பேடு :

------------------------------

இச்செப்பேடு சிம்ம விஷ்ணு சோழனிடமிருந்து சிம்மவிஷ்ணு பல்லவன் சோழநாட்டை பிடித்தான் என்று கூறுவதிலிருந்து இந்த அரசியல் நிகழ்ச்சியை தெளிவாக புரிந்து கொள்ளலாம். காஞ்சியை வென்ற பல்லவன், தொடர்ந்து வந்து வல்லத்தை முற்றுகை இட்டான். அப்போது புலவர் ஒருவர் இதை தனது அகம் 336ம் பாடலில் குறிப்பிடுகிறார். பாவைக் கொட்டிலார் என்னும்அப்புலவர், நல்லடியின் வல்லத்தை சூழ்ந்திருந்த ஆரியப்படை முற்றுகை உடைந்ததைப் போல இப்பெண்ணின் கைவளையல்கள்நொருங்கி உடைவதாகுக என்னும் பொருளில் பாடியுள்ளார்.

- இதன்மூலம் பல்லவர் ஆரிய வம்சாவழியினர் என்று புலவர்கூறியுள்ளதை உறுதிசெய்து பல்லவர்கள் வெளியிட்ட செப்புப்பட்டயங்களில், தங்கள் துரோனாச்சாரியார் என்கிற ஆரியரின்வழிவந்தவர் என்று கூறியுள்ள மையோடு நன்கு ஒத்துபோவதையும் காணலாம். இப்படையெடுப்பின் கால கி.பி. 575ஆகும்.

இதன் பிறகே கடுங்கோன் பாண்டியன் மதுரையில் இருந்த கன்னட நாட்டவரை நீக்கிவிட்டு ஆட்சிக்கு வந்தான். இவனைத்தொடர்ந்து வந்த மூன்று பாண்டியர்களின் கல்வெட்டுக்கள் செம்பிநாடு முதலான பகுதிகளில் காணப்படாததற்குக் காரணம்அப்பகுதி சோழர் வசமே இருந்ததே ஆகும்.

சோழ நாட்டில் சிம்ம விஷ்ணு சோழனின் ஆட்சி கி.பி. 530முதல் 575 வரை 45 ஆண்டுகள் சுய ஆட்சியாக இருந்துள்ளது. சிம்ம விஷ்ணு சோழனின் மகன் நல்லடியின் காலம் முதல்சிம்மவிஷ்ணு பல்லவனுக்கு கட்டுப்பட்ட ஆட்சியாக மாறி போனது. இந்த நிலை பல நூற்றாண்டுகள் தொடர்ந்தது. நல்லடி சோழனுக்குப் பிள்ளைப் பேரு இல்லை. எனவேநல்லடியின் இளைய சிற்றப்பன் தனஞ்செயவர்மனின் பெயரன்குணமுதிதன் சோழநாட்டு அரசனாக ஆகி, ஆளவந்த சோழனாக சோழநாட்டை ஆண்டுவந்தான். 

குணமுதிதன் தம்பி புண்ணிய குமாரன் வடக்கே மேல்பாதி ரே நாட்டின் அரசனாக இருந்தான். சுந்தரநந்தன் வழிவந்தோர் ரே நாட்டின் கீழ்பகுதி நாட்டின் அரசனாக இருந்து வந்தனர். இக்கீழ்ப்பகுதி ரே நாடு திருவொற்றியூர் வரைபரவி இருந்தது.

சாளுக்கியர் படையெடுப்பு:

-----------------------------------------------------

இந்த நிலையில் பல்லவர்களின் கீழ் இருந்த ரே நாட்டை (அரையர் நாடு) சாளுக்கியர் கைப்பற்றிவிட்டனர். எனவே, கீழ்பகுதி ரே நாட்டின் சுந்தரநந்தன் வழியினர் கீழை சாளுக்கியர் கீழும், மேல்பகுதி ரே நாட்டின் தனஞ்செயவர்மனின் வழிவந்த புண்ணிய குமாரன் வழியினர் மேலை சாளுக்கியர் கீழும் இருந்து அரசாள வேண்டிய புதிய நிலை ஏற்பட்டது. தமிழக சோழர் பல்லவர் கீழ்தொடர்ந்து இருந்துவந்தனர். பல்லவர்கள் வடக்கே சாளுக்கியருடன்சண்டைபோட்டு காஞ்சியைக் காத்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாயினர். 

மேற்கே கங்கர்களும் பல்லவர்களுடன்அனேக போர்களை நடத்தினர். இந்த நிலையில் சோழ நாட்டில்இருந்த சோழர்கள் முத்தரையர்கள் (முதிராஜ்) என்கிற பெயரில்சாசனங்களை வெளியிட்டுள்ளனர். தங்களின் சோழர் குடியை நன்கு விளக்கிக் கூறவே முத்தரையர் என்று கூறிக் கொள்ள தலைப்பட்டுள்ளனர். நாம் முன்பு குறிப்பிட்டது போல் முத்தரையர்என்பது பழமையான சோழர் குடிவழிவந்த முத்தரையர் என்று கூறும் மூகத்தானாகவே முத்தரையர் என்றுக்கூறிக்கொண்டுள்ளனர். தொன்மையான சோழர்குடி வழியினர்என்பதே இம்முத்தரையர் என்பதன் பொருள் ஆகும்.

செங்கணன் என்கிற சிம்ம விஷ்ணு சோழன் ஆட்சி, சுயாட்சியுடையது

2.) நல்லடி காலத்து அரசன் : சிம்ம விஷ்ணு பல்லவன்

3. குணமுதிதன் காலத்து அரசன் : மகேந்திர பல்லவன்

குவாவன் மாறன் காலத்து அரசன் : நரசிம்ம பல்லவன்,

கூன்பாண்டியன் குவாவன் மாறன் காலம் முதல் உள்ள முத்தரையர்களின்வரலாறு தமிழகத்தில் தெளிவாக நமக்குக் கிடைக்கிறது. ஆனால்அவன் தந்தை குணமுத்தனின் காலத்து வரலாற்றில் விளக்கப்பட வேண்டிய பகுதிகள் உள்ளன. 

குணமுத்தனின் பெயர் புண்ணியகுமாரனின் செப்பேட்டில் காணப்படுகிறது. குணமுத்தன் என்றால்குணத்தை விரும்புகிறவன் என்று பொருள். இவனது இன்னுமொரு பெயர் இதே பொருளில் காணப்படுவது குணசேனன் என்பதாகும். குணசேனன் என்பவனே திருநல்ல குன்றத்து குடைவரைக் கோயில், திருமெய்யம் குடைவரைக்கோயில், திருகோகர்ணம்குடைவரைக்கோயில், மலையக்கோயில் குடைவரைக்கோயில்ஆகியவைகளைக் குடைவித்தவன். 

அத்துடன் திருமெய்யம், திருநல்லக்குன்றம் ஆகியவைகளில் துவாரகபாலகர்களாக இவனையும், இவன் தம்பி புண்ணியக் குமாரனையும் செதுக்கி வைத்துள்ளான். இவன் காலத்து மகேந்திரவர்மனைப் போல இவனும் இசைப்பிரியனாகவும் இருந்துள்ளான். இதனால் இவன்கற்ற இசை நுணுக்கங்களை இசை கல்வெட்டுகளாக இவன்ஏற்படுத்தியுள்ள நான்கு குடைவரைக் கோயில் உள்ளும், புறமும்எழுதி வைத்துள்ளான். 

ஆனால் இந்த நிலை மகேந்திரனின்குடைவரைகளில் கிடையாது. குணமுதிதன், குணசேனன் என்பதோடு இவனுக்கு குவாவன் என்கிற பெயரும் இருந்துள்ளதை அறியலாம். குவாவன்என்றால் நல்லவன் என்று பொருள். எனவே, இவன் ஏற்படுத்திய குடைவரைக் கோயில் அமைந்திருந்த குன்றத்திற்கு நல்லக்குன்றம்என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. குவாவன்மாறன் என்று இவன்பெயரை முன்வைத்து இவன் மகன் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் புகழ்ச்சோழன் என்றும், 63ரில் ஒருவர் என்றும்ஆனபோது தவாவனுக்காக விருத்தாசலம் நல்லூர், புதுக்கோட்டை புல்வயல் ஆகிய பகுதிகளில் நல்ல நாயனார் என்ற பெயரில்திருக்கோயில்கள் எடுக்கப்பட்டன. அக்கோயில்கள் பிற்காலத்தில்புஷ்பவனேஸ்வரர் கோயில் என்று மாறியுள்ளன.

புகழ்ச்சோழர் ஆன குவாவன் கரூரில் தீயில் இறங்கியபோது இவன் மகன் குவாவன் மாறன் இளைய பருவத்தினன், குவாவன் மாறனின் தமக்கையே மங்கையர்க் கரசியார். குவாவன்மாறன் காலத்தில் மாறவர்மன் அரிகேசரி என்கிற கூன்பாண்டியன் சோழ நாட்டைக் கவர்ந்தான். மங்கையர்க்கரசியையும் மணந்தான். குவாவன்மாறன் நல் உருத்திரன் என்கிற பெயரில் பாண்டியனைப் புகழ்ந்து முல்லைக் கலியைப்பாடினான்.

நார்த்தாமலை ஜைனக்குடைவரையை குவாவன்மாறன்ஏற்படுத்தினான். அவனது பிரதி பெயராகிய நல்உருத்திரன் மலை என்று அக்கோயில் அமைந்திருந்த மலை வழங்கியது. அது திரிபு பெற்று நாருத்தாமலை என்று தற்போது வழங்கிவருகிறது.

நல்ருத்திரன்மலை - நல்ருத்தாமலை - நாருத்தாமலை என்பது அதன் திரிபு படி ஆகி உள்ளது.

சோழர் முத்தரையரே :
--------------------------------------
இவ்வாறாக ரே நாட்டில் தங்கியிருந்த கரிகால் சோழன் வழிவந்த சோழர் குடியினராகிய நந்திவர்ம சோழனின் வழிவந்தவரே சோழ நாட்டை ஆண்டுவந்த முத்தரையர் குடியினர்
என்பது தெளிந்த நீரோடை போல் காணக்கிடைக்கிறது. இவ்வுண்மைகளை தெரிய வொட்டாமல் போனதற்குக் காரணம் கீழ்க்கண்டவாறு இவர்களின் காலத்தை ஒழுங்கு படுத்தாததே ஆகும்,

கோச்செங்கணன் என்கிற சிம்ம விஷ்ணு சோழன்-530-575 கி.பி.
நல்லடி என்கிற பீமச்சோழன் - 575 - 610 கி.பி.
குவாவன் என்கிற புகழ்ச்சோழர் - 610 - 649 கி.பி.
குவாவன்மாறன் என்கிற நல்லுருத்திரன் சோழன்-649-680 கி.பி.

ரே நாட்டில் குவாவனின் தம்பி புண்ணிய குமாரன் வழிவந்தோர் தொடர்ந்து ரே நாட்டுச் சோழர்கள் என்கிற பெயரில் ஆண்டு வந்தனர். அவர்களின் குடிமரபு மக்கள் இன்றைய நாளில் முதிராஜ், முத்துராஜ் என்கிற பெயரில் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

விஜயாலயச்சோழன் :
--------------------------------------------
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் விஜயாலயன் என்கிற ஒரு சோழன் தஞ்சையை முத்தரையச்சோழரிடமிருந்து. கைப்பற்றினான். அவன் சந்ததியினர் பெரிய அளவில் ஆட்சிபெற்று விளங்கினர். இந்த விஜயாலயனும் முன்னர்க் கூறிய

நந்திவர்மச்சோழன் குடும்பத்தைச் சேர்ந்தவனே, இவனைப்பற்றியும் சரியாக விளக்கப்படாததால் சோழருக்குப் பகையாக சோழர்களையே சித்தரித்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வருகிறார்கள்.

அதற்கு துணையாக முத்தரையர் என்கிற பெயர் அமைப்பும் பேதப்படுத்த உதவியாக இருந்து வந்துள்ளது. இதை ஒரு பூட்டகமாக வைத்துக் கொண்டும், விஜயாலயனுக்கும் ரே நாட்டு
முத்தரையச் சோழர்களுக்கும் உரிய தொடர்புகளை சரியாக விளக்கிக் கூறாமலும் காலம் கடத்தப்பட்டு வந்ததால் சோழர்குடி வழியினருக்குத்தான் கவலை, பின்னடைவு எல்லாம். நாம் விஜயாலயனின் முன்னோர் குறித்து தீவிரமாக ஆராய்வோம்.

செந்தலைக் கல்வெட்டு
--------------------------------------------
(குண) முதித பெரும்பிடுகு முத்தரை (3)
யனா யி ன குவாவன் மாறனவ
ன் மகன் இளங்கோவதி யரைய
னாயின மாறன் பரமேஸ்வரன
வன் மகன் பெரும்பிடுகு முத்த
ரைய னாயின சுவரன் மாறனவு
னெடுப்பித்த பிடாரி கோயில். அவன்
எறிந்த ஊர்களும் அவன்போர்க
ளும் அவனைப் பாடினோர் பேர்களும் இ
த்நூன் கண் மெலெழுதினவை

பழையாரைப் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் அரசனாக இருந்த விஜயாலயன் தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான் என்கிறது வரலாறு. யார் இந்த விஜயாலயன் ? இவன் தந்தை பெயர் என்ன? பாட்டன் பெயர் என்ன? இவன் எப்படி திடும் என்று பழையாறைக்கு வந்தான் ? என்ன அரசியல் காரணத்திற்காக தஞ்சையைக் கைப்பற்றினான்? இவன் தாய் யார்?
இவன் தாய் வழிப்பாட்டன் யார் ? இவன் தந்தை ஆண்ட நாடு எது? இவன் தந்தை எப்போது எங்கே மறைந்தான் ? அவன் தந்தைக்கு பள்ளிப்படைக்கோயில் உள்ளனவா ? என்கிற கேள்விகளுக்கு விடைகண்டால், விஜயாலயனின் முன்னோர் எவர் என்பதற்குரிய முழு விபரமும் நமக்கு கிடைத்துவிடும்.

வேலஞ்சேரி பட்டயம் :
------------------------------------------
விஜயாலயனைக் குறித்து வேலஞ்சேரி பட்டயம் என்கிற விஜயாலயனின் பெயரன் முதல் பராந்தகன் செப்பேடு கூறுகிறது. ஒற்றியூரன் என்பவனே விஜயாலயனின் தந்தை. இந்த ஒற்றியூர் என்பது சென்னையின் ஒரு பகுதியாகிய திருவொற்றியூர் ஆகும். இந்த ஒற்றியூரனை சுந்தரச்சோழன் வெளியிட்ட அன்பில் சாசனம் ஸ்ரீ காந்தன் என்று பெயர் கூறி அழைக்கிறது. இதனால் விஜயாலயனின் தந்தை ஸ்ரீ காந்தன் என்றும், இவனது நாட்டின்
இருப்பிடம் ஒற்றியூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாடு என்றும் தெளிவடைகிறது.

80 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்
காஞ்சியில் பல்லவர் இருக்கை இருந்தபோது, ஒற்றியூரில் இச்சோழனின் இருக்கை இருந்துள்ளது. இப்பகுதி கீழ் ரே நாட்டுப் பகுதியின் தென் கிழக்கு முனை ஆகும். ஸ்ரீ காந்தன் கீழைசாளுக்கியரின் கீழிருந்து அரசு புரிந்து வந்தவனா? என்று நாம் வினவும் போது, சென்னை அருங்காட்சியகத்தின் செப்புப் பட்டயமாகிய, ஸ்ரீ காந்தனின் முன்னோர் வம்சா வழிபட்டியல் அடங்கிய கீழைசாளுக்கியரின் செப்பேடுகள் நமக்குக் கிடைக்கிறது. அச்செப்பேடுகளில் உள்ள சோழ அரசர்களின் பெயர் பட்டியலில் முதலில் சுந்தரநந்தன் பெயரும், இறுதியில் ஸ்ரீ காந்தன் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாம் முன்னர் கூறிய தனஞ்ஜெயவர்மனின் அண்ணன்
சுந்தரநந்தன் வழிவந்தவனே இந்த ஸ்ரீகாந்தன் என்பது தெளிவாகிறது. தனஞ்ஜெயவர்மனின் வழிவந்த புண்ணிய குமாரன் ரே நாட்டு மேல் பாதியை ஆண்டுவந்த போது, சுந்தரநந்தனின் சந்ததியினர் ரே நாட்டின் கீழ்ப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர் என்பதும் இதனால் பெறப்படும். புண்ணிய குமாரனின் அண்ணன் குணமுதிதனின் வழிவந்தோர் தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு வாரிசு உரிமையில் சோழநாட்டை ஆண்டுவந்தனர்
என்றும் முன்னரே பார்த்தோம்.

இதனால் தனஞ்ஜெயவர்மனின் வழியினர் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலாக சோழ நாட்டின் ஆட்சியாளர்களாகவும், மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டும் சுந்தர நந்தனின் வழிவந்தோர் ஆட்சியாளர்களாகவும் இருந்துள்ளனர் என்கிற விபரமும் கிடைக்கிறது. சுந்தரநந்தனுக்கும் மகப்பேறு இன்மையால் அப்பகுதிநாடும் நவராமனின் மகன் எரியம்மாவுக்கே ஆட்சிசெய்யக்கிடைத்தது.

ஒற்றியூரில் இருந்த ஸ்ரீகாந்தனின் மகன் எப்படி பழையாறைக்கு வந்தான் ? இவன் ஏன் தாயாதியிடமிருந்தே தஞ்சையைப் பிடித்தான் ? என்பது அடுத்த கேள்விகள். ஒற்றியூர் ஸ்ரீகாந்த சோழனின் காலத்து பாண்டியன் முதல் வரகுணன் என்பவன் ஆவான். சோழநாட்டை நேரடியாக சண்டைபோட்டு வெல்லமுடியாது என்கிற நிலை வரகுணனின் தந்தை ராஜசிம்ம
பாண்டியன் காலத்தில் நம் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன் மாறனால் ஏற்பட்டதால், தேர்ந்த ராஜதந்திரியான முதல் வரகுணபாண்டியன் சோழர்களை உறவுமுறையால் நட்பு அரசர்களாக மாற்றி இருந்தான். அதன் பயனாய் பாண்டியரை வலுப்படுத்திக் கொண்டு சேர, கொங்கு, தகடூர், கங்க நாடுகளை தனதாக்கிக் கொண்டான்.

அதே நேரத்தில் சோழரும் பல்லவரும்
வைத்திருந்த நெருக்கத்தை கெடுத்து ஸ்ரீ காந்தனை பல்லவர் நாட்டின் மீது படையெடுக்கவும் தூண்டி விட்டான். ஸ்ரீ காந்தனின் மூத்த மனைவியின் மகள் அக்கல நிம்மதியை முதல் வரகுணனின் மகன் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபனுக்கு மணம் முடித்திருந்த அதே நிலையில் வரகுணனின் மகள் ஸ்ரீ வல்லம்மாள் என்பவளை இளைய அரசியாக ஸ்ரீ காந்தனுக்கு மணம் முடித்தும் இருந்தான்.

காஞ்சி மீது படையெடுப்பு:
---------------------------------------

ஸ்ரீ காந்தன் கி.பி. 811 வாக்கில் காஞ்சீபுரத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த தந்திவர்ம பல்லவனை வடக்கே தூரத்தி விட்டான். தோற்றுப்போன தந்திவர்ம பல்லவன் வடக்கே சென்று சிறுபடையைத் தயாரித்துக் கொண்டு அடிக்கடி எதிர்பாராத நேரங்களில் திடீர், திடீர் என்று காஞ்சியைத் தாக்கிய வண்ணம் இருந்தான். இதில் ஒரு போரில் ஸ்ரீ காந்தன் வீரமரணம் அடைந்தான். எனவே அபிநவசித்தி முத்தரையன் என்கிற தாயாதி காஞ்சி நாட்டுக்கும், ஒற்றியூர் நாட்டுக்கும் அரசன் ஆனான், இச்சூழ்நிலையில் ஸ்ரீ வல்லம்மாள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தாள். தன் வயிற்றுவாரிசைக் காப்பாற்ற தஞ்சை முத்தரையச் சோழர் தாயாதியிடம் சரண் அடைந்திருந்தாள். தஞ்சை வல்லத்தில் ஸ்ரீ வல்லம்மாள் பெற்றெடுத்த பிள்ளையே விஜயலாய சோழன் ஆவான். இவனுக்கு பதினேழு வயது ஆகும் போது காஞ்சியில்
அபிநவசித்தியையும் தந்திவர்மனும், அவன் மகன் மூன்றாம் நந்திவர்மனும் வென்றுவிட்டனர். அபிநவசித்தி போரில் வீர மரணம் அடைந்தான். காஞ்சி மீண்டும் பல்லவர் வசம் ஆகியது.

அபிநவசித்தியின் மகன் சித்தக்குட்டிமாதவன் என்கிற சோழ முத்தரையன் மாங்காட்டுப் பகுதியின் தலைவராக சிலகாலம் இருந்தபின், மதுரை நிலக்கோட்டை சோழவந்தானில் வந்து தங்கி அக்கல நிம்மதியின் உறவின் பலனாக பாண்டியருடன் இணைந்தான். அபிநவசித்தியின் மறைவுக்குப் பிறகு ஒற்றியூர் நாட்டின் சிம்மாசனத்திற்கு முறையான வாரிசு விஜயலாயன் என்பதால் விஜயலாயன் ஒற்றியூருக்குச் சென்று முடி சூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒற்றியூர் சென்றால் விஜயலாயனையும் பல்லவர் கட்டாயம் கொன்றுவிடுவார்கள் என்கிற அரசியல் சூழ்நிலை இருந்ததால் தஞ்சை முத்தரையர் தாயாதிகள் தங்களது சுந்தரநந்தன் தாத்தா வழிவந்த விஜயாலயனுக்கு பழையாறைப்
பகுதியில் சிறிதளவு நாடு கொடுத்து அங்கிருந்து முடிசூடிக் கொள்ளும்படியும், உரிய காலம் வாய்ந்த போது ஒற்றியூர் நாட்டை மீட்டுக் கொள்ளவும் ஏற்பாடு செய்தனர்.

இந்த விதமாகவே பழையாறைப் பகுதிக்கு அரசனாக விஜயாலயன் வந்தடைந்தான். வந்தநாள் முதல் தனது தந்தை நாட்டை மீட்கும் பேருவகையிலேயே இருந்த விஜயாலயன் ஒருகட்டத்தில் தான் ஒரு பெரிய அரசனாக ஆனால்தான் அது சாத்தியம் என்பதை உணர்ந்து தனக்கு பிறப்பு முதல் உதவிய தாயாதியின் தஞ்சையையே பிடிக்கமுனைந்தான். அவன் எண்ணிய படியே சோழரின் இக்கிளை வலுவடைந்து பல்லவரை நீக்கி காஞ்சியை மீண்டும் 893ல் பிடித்து
பேரரசுகண்டனர். முத்தரையர் எனப்பெற்ற சின்ன தாத்தா தனஞ்செயவர்மனின் சகோதர வழிவந்தோரின் நாட்டை நியாய விரோதமாக பிடித்ததற்குாடாக மாமன்னன் ராணாஜன், ராஜேந்திரன் காலத்தில் கொங்கு நாட்டை அளித்து அரசுபுரிய உதவினர். முத்தரையர் கோனாட்டான், முத்தரசர் என்கிற பெயரில் கொங்கு நாட்டை சோழப் பேரரசு முடியும் வரையில் இருந்து ஆண்டுவந்தனர்.

இந்த கொங்குச் சோழர் வழிவந்த முத்தரச சோழர் முஸ்பர்கள் காலத்தில் மீண்டும் காஞ்சிபுரம் வந்தனர். இதன் முதல் அரசன் வீர சோழ சம்பமகாராஜா என்பவர் ஆவார். காஞ்சியிலிருந்து சிதம்பரம் வரை முன்னேறி, பின்னர் தஞ்சையிலிருந்து வீரபாண்டியன் என்பவனை விரட்டிவிட்டு கி.பி. 1365 முதல் தஞ்சை உறையூர் பகுதியில் இருந்து சோழநாட்டை விஜய நகரத்தாருக்கு உட்பட்டு அரசுபுரிந்தனர். இவ்வழிவந்த அரசர்கள்பட்டியல் கண்டறியப் பட்டுள்ளது. வீரசேகரன் என்கிற முத்தரையச் சோழனிடமிருந்து விஜயநகரத்து ஆட்சி தஞ்சையைக் கைப்பற்றியது. கிருஷ்ணதேவராயன் காலம் முடிவடையும் வரையிலும் இவர்களின் ஆட்சி சோழ மண்டத்தில் இருந்தது.

கிருஷ்ணதேவராயன் தம்பி ஆட்சியில் சேவப்பநாயக்கர் மூலம் தஞ்சையை விஜயநகரம் கைப்பற்றி சோழர் அல்லாத மரபாரின் மூலம் ஆட்சி செய்ய ஏற்பாடு செய்தது. மதுரையிலும் அவ்வாரே பாண்டியரையும் விஜயநகர அரசு நீக்கி நாகமநாயக்கர் மகன் விசுவநாதநாயக்கரை அமர்த்தியது. சோழநாட்டில் வீரசேகரிடமிருந்து சோழநாட்டு ஆட்சியை கைப்பற்றியது கி.பி. 1535 என்று வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். ஆனால் 1554 ஆம் வீரசேகரன் என்ற ருத்திரதேவ மகாராஜன்குடந்தை கும்பேஸ்வரர் கோயிலுக்கு இரண்டு கிராமங்களை தானம் வழங்கியுள்ளார் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இதன் பிறகு கொள்ளிடத்திற்கு வடபகுதியில் இச்சோழர் குடியினர் தங்கி இருந்து உள்ளனர். அவர்களைக் குறித்த சேவப்ப நாயக்கரின் மகன் கல்வெட்டு ஒன்று காஞ்சிபுரத்தில் குறிப்பிடுகிறது. அதாவது, ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கியிருந்த இவ்வரசனின் இருக்கை இருந்த ஊரை "வளையச் சோழன் இருப்பு" என்று அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

நாயக்கர் காலம் முதல் இச்சோழர் குடியினர் பின்னடைவில் சிக்கினார். இதுவரை பார்த்த நமது ஆய்வின்படி நந்திவர்ம சோழனின் மூன்று பிள்ளைகள் வழிவந்தவரே தமிழகத்திலும், ரே நாட்டினும், அரசுபுரிந்து வந்த சோழர்கள் என்பதும், அதில் முதல் மகன் வழியினர் இரண்டு அரசர்களோடு குழந்தைப் பேரின்மையால் மறைந்தது என்றும், எஞ்சிய தனஞ்செயவர்மன், சுந்தரநந்தன் வழியினரே தொடரந்து அரசர்களாய் இருந்து வந்தனர் என்றும், இவ்விரு கிளையினரும் தங்களை சோழர் என்றும் முத்தரையர் என்றும் வழங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் இருவரும் ஒரே தந்தை வழிவந்தவர் என்றும் பெறப்படும். அதிலும் தனஞ்செய வர்மன் வழிவந்த குணமுதிதன் என்கிற குவாவன் காலம் தொட்டு தொடர்ந்து தங்களை முத்தரையர் என்றே வழங்கிக் கொண்டு நாடாண்டுள்ளதும் பெறப்படும். முத்தரச சோழபுரம் என்னும் ஒரு அரசிருக்கை இருந்த பகுதிகளும் இன்றும் வழக்கில் உள்ளதை எட்டுக்குடி பகுதியில் காணலாம்.

அதேபோல் கீரனூர் பகுதியில் இருந்த கோனாட்டு முத்தரையச் சோழர் கொங்குச் சோழர் என்ற பெயரில் நாடாண்டுள்ளதும் நடைமுறையில் உள்ளது. கொங்கு இலக்கியங்களும் அதை அரண் செய்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக சோழர்களின் தாயகமாகிய காவிரிபாயும் நாட்டில் தொன்மைக் குடியினராகவும், பேரெண்ணிக்கையிலும் வாழ்ந்து வருபவர்கள் இம்முத்தரையர்களே.

சான்றுகள் :

எனவே (1) புண்ணியக்குமரன் செப்புப்பட்டயம் (2) ஸ்ரீ காந்தன் செப்புப்பட்டயம். (3) வேலஞ்சேரி முதல் பராந்தகன் செப்புப்பட்டயம் (4) அன்பில் சுந்தரச் சோழக் செப்புப்பட்டயம் (6) விஜயாலயனின் வாழ்க்கையைக் கூறும் வல்லம் புராணம் ஆசிய சான்றுகளின் அடிப்படையும் முத்தரையர் சோழர் மரபினரே என்று கூற உதவும் ஆவணங்களாக உள்ளன.

மேலும்

(6) ரே நாட்டு சோழர்களின் வாசகங்களின் செய்திகளைத் தாங்கி புதுக்கோட்டை திருவரங்குளம் செப்பேடு "கரிகால் சோழன் குழுவினராகிய சூரிய குல முத்தரையர்" என்று கட்டடியம் கூறி நிற்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும், ஆராய்ந்து முத்தரையர் சோழர் மரபினரே என்று உறுதியோடு கூறுவோம். தொடர்ந்து முத்தரையர் அரசர்களை அரசர் வாரியாகப் பார்ப்போம்.

கி.பி. 75 முதல் 125 வரை ஆட்சி செய்த கரிகால்வளவன் திருப்பதிக்கு வடக்கே கிருஷ்ணாநதிவரை உள்ள தேசத்தை தம்
தமிழ்நாட்டு அரசுடன் சேர்த்து அரசுபுரிந்து வந்தான். கரிகாலனின் மக்களில் சிலர் அப்பகுதிகளில் அரச நிர்வாகத்தைப் பார்க்க நிலையாகத் தங்கிவிட்டனர். அவ்வழிவந்த சோழர்களின் கி.பி. 530ல் நந்திவர்ம சோழன் என்பவனே மிகவும் பிரசித்திப் பெற்ற அரசன். நந்திவர்ம சோழன் வழிவந்தோரின் முழுவிபரப் பட்டியல் இந்நூலுடன் இணைக்கப் பட்டுள்ளது.

நந்திவர்ம சோழன் :
----------------------------------------

இவன் முதல் நந்திவர்ம பல்லவனின் சம காலத்தவன். இந்த நந்திவர்ம சோழனுக்கு மூன்று பிள்ளைகள் என்று நந்திவர்மனின் கொள்ளுப் பேரன் புண்ணியகுமார முத்துராஜா
சோழனின் செப்புப்பட்டயம் கூறுகிறது. (இந்தியக் கல்வெட்டுகள் பதினொன்றாம் தொகுதி நந்திவர்மன் தமிழ்நாட்டை
களப்பிரர்களிடமிருந்து மீட்டு பேரரசனாக ஆண்டவன். தனது ரேநாட்டையும், தமிழ்நாட்டையும் தனது மூன்று பிள்ளைகளுக்கும் மூன்று பகுதிகளாக்கி ஆண்டனர். இவன்காலத்தில் களப்பிரர் மதுரையில் மட்டும் இருந்து கடைசி தலைமுறையில் பாண்டிய நாட்டை ஆண்டனர்.

சிம்மவிஷ்ணு சோழன் : (கி.பி. 530 - 575)
----------------------------------------------------------------------------

இவன் நந்திவர்ம சோழனின் மூத்த மகன். இவனே கோ செங்கணன் என்பவனும் ஆவான். தோற்ற களப்பிரர் மீண்டும் செங்கணனுடன் சேரன் கணையன் முதலானவர்களுடன் வந்து
போரிட்டான். கணையனை கோ செங்கணன் சிறைபிடித்தான். கூட்டுப்படை தோற்று ஓடியது. செங்கணன் களப்பிரர்காலத்தில் தடைப்பட்டிருந்த சிவ, வைணவக் கோயில்களை பேரெண்ணிக்கையில் கட்ட ஏற்பாடு செய்தான். இவன் கட்டிய கோயில்கள் மாடக்கோயில்கள் எனப்படும். பலவகைப்பட்ட கோயில்களை இவன் கட்டியதாக அப்பர் சுவாமிகள் கூறியுள்ளார். இவன் கோயில்கள் பின்னர் சிவ, வைணவ அடியார்களால் பாடப் பெற்று சிறப்பு பெற்றன. இவன் பிறப்பின் போது இவண் தாய் இறந்து போனாள். அவளின் நினைவாக செங்கணனின் ஆட்சிக்கு உட்பட்ட செம்பிய நாட்டில் உத்தரக் கோசமங்கை கோயிலைக் கட்டியதாக கருதப்படுகிறது.

செம்பியன் நாடு என்பதும் இவனது பெயரிலேயே அமைந்தது என்றும் கருதப்படுகிறது. கூன்பாண்டியன் காலம் வரை செம்பிய நாடு சோழர்களின் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. கி.பி. 2ம் நூற்றாண்டில் தான் அருப்புக்கோட்டைக்கு வடக்கே பாண்டியர் வந்தனர் என்பதால் கோச்செங்கணன் சோழநாட்டின் எல்லையை தெற்கே செம்பிய நாடுவரை கொண்டு வைத்தான் என்று நாம் கூற வேண்டியதுகடமை.

சுந்தரநந்தன் : (கி.பி. 530 - 575)
----------------------------------------------------------

இவன் கோசெங்கணனின் நடுதம்பி. இவன் ரே நாட்டின் கீழ்ப்பாதியை ஆண்டுவரலானான். அப்பகுதி கிருஷ்ணா கழிமுகத்திலிருந்து திருவொற்றியூர் வரை நீண்டு கிடந்தது. மேற்கே திருப்பதி மலையை மேற்கு எல்லையாகப் பெற்று இருந்துள்ளது. இவன் வழி வந்தோரின் வம்சபட்டியல் இந்திய கல்வெட்டு தொகுதி
5ல் பக்கம் 123ல் காணலாம். இப்பட்டியலின் கடைசி அரசனாக குறிப்பிடப் பட்டுள்ளவனே ஸ்ரீ காந்தன் என்னும் திருவொற்றியூர் அரசன். கீழைச்சாளுக்கியரின் கீழ் இருந்து பின்னாளிலும், ஆரம்பத்தில் பல்லவரின் கீழ் இருந்தும் இவ்வழியினர் அரசுபுரிந்துள்ளனர். ஸ்ரீ காந்தனின் மகனே விஜயாலயன் என்கிற
முத்துராஜா சோழன் ஆவான். இன்றும் திருவொற்றியூர் நாட்டில் முத்துராஜாக்கள் நிரம்பவாழ்ந்து வருகின்றனர்.

தனஞ்செயவர்மன் : (கி.பி. 530 - 575)

இவன் கோசெங்கணனின் கடைக்குட்டி தம்பி, செங்கணனின் தாய் இறந்து போய்விட்டதால் இளயராணிக்குப் பிறந்தவர்கள் சுந்தரநந்தனும், தனஞ்செயவர்மனும் என்பதே சரி, தனஞ்செயவர்மன் கல்விகேள்விகளில் மிகவும் பிரசித்தமானவன், கலைகளில் வல்லவன். ரே நாட்டின் மேல் பாதியை ஆரம்பத்தில் பல்லவர் கீழும், பின்னர் மேலை சாளுக்கியர் கீழும் இருந்து ஆட்சி செய்தனர், இவன் பிரிவு அரசர்கள். இவனது பெயரன்கள் மூவர். மூவரில் இருவருக்கு தனது அண்னன் மார்களின் தேசம் மகப்பேறு இன்மையால் கிடைத்தது. 

மகேந்திர விக்கிரம வர்மன் : ( கி.பி. 575 - 610)

-------------------------------------------------------

இவன் தனஞ்செயவர்மனின் மகன். நவராமன் என்கிற பெயரும் இவனுக்கு உண்டு. கல்லெழுத்தில் ஆசையுள்ளவன் என்று செப்புப்பட்டயம் கூறுவதால் இவன் அரசியல் நிகழ்ச்சிகளை கல்லில் எழுதி வைக்கும் ஆர்வம் உள்ளவன் என்று தெரிகிறது. இவன் காலத்தில் தான் பல்லவர் ரேனாட்டு சோழர் இரு பிரிவினரையும் வென்று விட்டனர். சோழ நாட்டின் மீது சிம்மவிஷ்ணு பல்லவன் படையெடுத்து வந்தபோது, பல்லவர் படைக்கு உதவியாக இவனும் படையுடன் வந்து தனது பெரியப்பன் நாட்டை பல்லவருக்காக பிடிக்க போரிட்டு இருக்கிறான். இவனும் சிம்மவிஷ்ணு பல்லவனைப் போன்று தமிழ்நாட்டு வெற்றியை

தான் பெற்றதாகப் பட்டயத்தில் குறிக்கப் பட்டுள்ளது கொண்டு கூற வேண்டி உள்ளது. உறையூர் முற்றுகையின் போது நல்லடி தன் தந்தை மீதே படை செலுத்தியதை பார்க்கும் போது இவன் செய்தது ஒன்றும் குறையாகாது என்று கூறலாம். நல்லடியுடன், மகேந்திர

விக்கிரமனும் சென்று உள்ளான். எனவே தான் புலவர்கள் தம்மக்களின் மீதே போரிட வேண்டாம் என்று கூறியுள்ளனர். கோசெங்கணணுக்கு கோப்பெருஞ்சோழன் என்னும் பெயர் வழங்கியுள்ளது அறியத்தக்கது. 

குணமுத்தன் : (கி.பி. 610 - 649)

----------------------------------------------------------

இவன் மகேந்திர விக்கிரம வர்மனின் மூத்தமகன். இவனைப்பற்றி ரேநாட்டில் தொடர்ந்து எந்த குறிப்புகளும் இல்லை. இவன் தமிழகத்து அரசியலுக்கு நல்லடிக்குப் பிறகு சோழநாட்டை ஆளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன். குணமுத்தன் என்றால்

குணத்தை விரும்புபவன், அதாவது நல்லவன். நல்லவன் என்னும் பொருள் பொதிந்த குவாவன் என்னும் அபிஷேகப் பெயரைப் பெற்றவன். இவன் மகேந்திர பல்லவனின் சம காலத்தவன்,

மகேந்திரனைப் போல கலைகளில் வல்லவன். குறிப்பாக இசைக்கலையில் தீவிர ஈடுபாடு உள்ளவன், பரிவாதிறி என்னும் யாழ் இசைப்பதில் வல்லவனாகிய இவன் இசை நுணுக்கங்களை இவன் குடைந்த சிவன் குடைவறைகளில் கல்லில் எழுதிவைத்து

புகழ்பெற்றவன். மகேந்திர பல்லவன், எடுப்பித்த குடைவறைகளில் இது போன்ற இசைக்கல்வெட்டுக்கள் இருக்காது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு சிவன் குடைவறைகளை இவன் ஏற்படுத்தியுள்ளான். அங்குள்ள இசைக்கல்வெட்டுக்களைக் கொண்டு இவற்றை அடையாளங்கண்டு கொள்ளலாம்.

திருமெய்யம் வைணவக் குடைவறையும் இவன் ஏற்படுத்தியதே என்று கருதப்படுகிறது. அதே போல் குணசீலம் பெருமாள் குடைவரையும் இவன் பெயர் தாங்கியதே என்று கருதுவதால் அந்தப் பணியும் அவனுடையதே ஆகும். குணமுத்தன் என்பதையே குணசேனன் என்று கல்வெட்டுகளில் இவன் கூறியுள்ளான் என்பதறியவும். குவாவன் முத்தரையரையே புகழ்ச் சோழர் என்று வரலாறு கூறிவருகிறது. அதற்காதாரமாக திருநல்லக்குன்றத்து கட்டுமானக் கோயிலில் புகழ்ச் சோழரின் கரூர் நிகழ்வுகள் ஏழு ஓவியங்களாக வரையப் பெற்றுள்ளன. மிகவும் செதிலம் அடைந்த நிலையில் உள்ள அவ்வோவியங்கள் பெரியபுராண புகழ்ச்சோழர் வர்ணனைகளை எதிரொலிக்கின்றன. திருநல்லக்குன்றம் என்பது திருநல்லவன் குன்றம் என்பதன் திரிபு ஆகும். அங்குள்ள குடைவறை , நம்குவாவன் முத்தரையர் என்கிற புகழ்ச்சோழரால் அவர் ஆட்சிகாலத்தின் போது ஏற்படுத்தப்ட்டது. குவாவனின் மகளே மங்கையர்க்கரசியார், குவாவன் முத்தரையரைத் தான் மணிமுடிச்சோழன் என்று அப்பரும், சேக்கிழாரும் கூறியுள்ளனர். தந்தையைப் போல மகளும் 63ல் ஒருவராக பக்தியில் சிறந்து

விளங்கியவர். கூன்பாண்டியனை மணந்திருந்த அவர் சைவ மதம் தழுவச் செய்தவர். புகழ்ச்சோழரின் நினைவாக அனேகக்கோயில்கள் தமிழகமெங்கும் காலந்தோறும் எடுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார், புஷ்பவனேஸ்வரர்,

பூவாண்டார், தீயாடியப்பர், நல்ல நாயனார், மாசிலிசுவரர், மெய்யநாதர் ஆகிய பெயர்களில் அக்கோயில்கள் உள்ளன. இவர் பெயரில் கோவனூர் (தவாவனூர்) நல்லூர் என்ற ஊரின் பெயர்களும் உள்ளன. 

புண்ணியக் குமாரன் : கி.பி. 615 - 660

--------------------------------------------------------------

நம்புகழ்ச்சோழரின் தம்பி, இவன் ரே நாட்டின் மேல் பாதி அரசனாக முடி சூட்டிக்கொண்டவன். இவன் வழிவந்த அரசர்களின் பட்டியல் தொல்லியல் துறையினரால் கல்வெட்டு ஆண்டு

அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவன் வழிவந்தோர் கிருஷ்ணா ஆற்றுக்கு வடக்கேயும் பெருமளவில் நாடுகளை வென்று ஆட்சிசெய்துள்ளனர். கீழைசாளுக்கிய அரசனின் நாட்டை பிடித்துக்கொண்டு அவர்களை விரட்டிவிட்டனர். அவர்கள் நம் ராஜராஜனிடமே வந்து தஞ்சம் பெற்றது எல்லாம் இவர்கள் படைத்த வரலாறு. பின்னர் ராஜராஜன்தான் வேங்கிநாட்டை மீட்டுக்கொடுத்தான். அக்காலத்தில் காஞ்சிபுரம் முதல் வேங்கிநாடு வரை, மேற்கே ஹைதராபாத்திலிருந்து பெல்லாரி வரை என்று இவர்களின் நாடு ஆந்திர நாட்டில் பெருகிகிடந்தது. இக்காலத்து நமது ராஜராஜன் எழுச்சியால் அவர்கள் அடங்கி போயினர்.

ராஜராஜன் இல்லையேல் சோழப்பேரரசு ரேனாட்டு பிரிவினரால் ஏற்பட்டிருக்கலாம். ஜடாச்சோள பீமன் என்கிற புண்ணிய குமாரன் கிளை அரசன் ஒருவன் அத்தகைய மாவீரனாகத் தோன்றியிருந்தான்.

நம் புண்ணியக் குமாரன் வெளியிட்ட செப்புப் பட்டயமே முத்தரையச் சோழர் வரலாற்றில் மிகமுக்கியப் பங்கு வகிக்கும் முதல்

பட்டயம் ஆகும். பட்டய விபரம் வருமாறு :


நல்லடி : (கி.பி. 575 - 610)

-----------------------------------------------

புண்ணிய குமாரன் குடும்பத்தில் தனது பிரிவு அரசர்களை மட்டுமே குறித்துள்ளான். மற்ற இரண்டு பிரிவு அரசர்களைக் குறிக்கவில்லை. ஆனால் நமது ஆய்வுமூலம் சிம்ம விஷ்ணு

சோழரின் மகன் நல்லடி என்பதை இலக்கிய ஆதாரம் கொண்டு அறியலாம். சிம்ம விஷ்ணுதான் கோசெங்கணன் என்ற உண்மையை உணர்ந்த போது அது சாத்திய மாகிவிடுகிறது. நல்லடிக்கு பீமச்சோழன் என்கிற ஒரு பிரதி பெயரும் இருந்துள்ளது. இவன் சரும நோயால் கஷ்டப்பட்டுள்ளான். இதனால் இவனுக்கு குழந்தைப் பேறும் இல்லை. இவன் குழந்தைப் பேறு வேண்டி தஞ்சை - மேல வீதியில் சங்கர நாராயணர் கோயிலைக் கட்டியுள்ளான். அக்கோயில் அப்போதைய பாண்டி நாட்டு சங்கரன் கோயில் புகழ்க்காரணமாக செய்தது. மேலும் இவன் தஞ்சை கரந்தை. சிவன் கோயிலையும் சரும நோய் காரணமாகக் கட்டியுள்ளான். மேலும் திருநல்லம் என்கிற கோயிலையும் இதே காரணத்திற்காக இவன் கட்டியதே மூன்று கோயில்களின் தலவரலாறுகள் - இவற்றைக் குறிப்பிடுகின்றன. இறுதியில் சிவகங்கை குளத்தில் குளித்துவிட்டு கரையில் படுத்தபோது இவனும் இவனது அரசியும் இறந்து போயினர். அந்த இடத்தில் இன்றும் குளத்தின் ஒரு பகுதியில் சிவலிங்கம் வைத்து வணங்கப்படுகிறது. குளத்தின் கீழ்கரையில் தஞ்சை தளிகுளத்தார் கோயில் இவனுக்காக குவாவன் ஒரு கோயிலை கட்டினான். அக்கோயில் தற்போது மராட்டியர் காலத்தில் வெண்ணாற்றங்கரையில் பெயர்த்து கட்டப்பட்டுள்ளது. ராஜராஜன் பெரிய கோயிலைக் கட்டும் வரையில் இக்கோயிலே சோழர்களின் புனிதக் கோயிலாக கருதப்பட்டது.

இது முதல் தஞ்சை நகர் முத்தரையர்களால் சிறந்த நகரமாக உருவாக்கப்பட்டது. வல்லத்துக் கோட்டையைப் போல் தஞ்சையிலும் மதில் சூழ்ந்த நகரத்தை முத்தரையர்கள் ஏற்படுத்தினர். அந்நகருக்கு குவாவன் தனது பாட்டன் தனஞ்செயவர்மன் பெயரையே வைத்து மகிழ்ந்தான். தனஞ்செயபுரி என்று வழங்கிய அந்நகர் அதே காலம் முதலே தன்செய், தஞ்சை என வழங்கிவந்துள்ளது.

பெரும்பிடுகு குவாவன் மாறன் : (கி.பி. 649-680)

-----------------------------------------------------------

குவாவன் முத்தரையர் என்கிற புகழ்ச் சோழர் மறைவுக்குப் பிறகு அவர் மகன் குவாவன் மாறன் சோழ அரசரானான். அப்போது பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரையும், வல்லத்தையும் பிடித்துக் கொண்டான். குவாவன் மாறன் என்கிற நல் உருத்திரன் தனது சகோதரி மங்கையர்க்கரசியை பாண்டியர்க்கு மணம் முடித்து பாண்டியனுடன் சமாதானம் செய்து கொண்டான். மங்கையர்க்கரசி அரிகேசரி மாறவர்மனை ஜைனமதத்திலிருந்து சிவமதத்திற்கு ஞானசம்பந்தர் மூலமாக மதம்மாற்றினார். குவாவன் மாறனின் இறுதி காலத்தில் பெருவளநல்லூர் போர் மூலம் சோழநாடு மீண்டும் பல்லவர் கீழ்வந்தது. சோழநாட்டின் தென்மேற்குப் பகுதிமட்டும் பாண்டியர் வசமே இருந்தது. சோழன்நல்லுருத்திரன் பாண்டியனின் கட்டுப்பாட்டில் இருந்த போது இச்சோழரால் பாடப்பட்டதே முல்லைக் கலி ஆகும்.

விடேல் விடுகு இளங்கோவதி அரையனாகிய மாறன் பரமேஸ்வரன் (கி.பி. 680 -705)

-----------------------------------------------------------------

இவன் பெயரைக் கொண்டே இவனுக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்திருக்கலாம் என்று கூற வேண்டும். ஆனால் என்ன காரணத்தினால் மூத்தவன் முடிசூடவில்லை என்று தெரியவில்லை. ஆனால் அந்த மூத்த சகோதரன் வழியில் வந்த ஒருவனே சுவரன் மாறனுக்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த சாத்தன் மாறன் என்று யூகிக்கலாம். சோழநாட்டில் நன்னிலம் பக்கம் பரமேஸ்வரமங்கலம் என்று ஒரு ஊர் உள்ளது. அவ்வூர் இவன் பெயரால் அமைந்தது என்று கூறலாம்.

பெரும்பிடுகு சுவரன் மாறன் : (கி.பி. 705-745)

-------------------------------------------------------------

மாறன் பரமேஸ்வரனின் மகனாகிய இவன் மாவீரன். பாண்டிய ராஜ சிம்மனை பல போர்களில் வென்ற சோழன் இவனே. கூன் பாண்டியனிடமிருந்து மீட்கப்படாத எஞ்சிய சோழ நாட்டை மீட்டவனும் இவனே. சோழநாட்டின் தென் எல்லை முழுவதும் கிழக்கே கடற்கரை முதல், மேற்கே புகளூர் வரை 12 போர்களை

பாண்டினுடன் நடத்தியுள்ளான். மிகவும் வலுவான பாண்டியரின் படைகளை தோற்கடித்தக் காரணத்தினால் புலவர்கள் வெகுவாகப் புகழ்ந்து சுவரன்மாறனைப் பாடியுள்ளனர். அப்பாடல்களை நியமம் காளிகோயிலில் கற்றூண்களில் மூன்று அடுக்கு களில் எழுதிவைத்து உள்ளான். அவை தற்போது செந்தலை சுந்தரரேஸ்வரர் கோயில் மண்டபத்தில் உள்ளன. அவைகளைத் தொல்லியத் துறையினர் படியெடுத்து. பதிப்பித்து காத்துள்ளனர். அதற்காக தொல்லியல் துறைக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம். மேலும்சுவரன் மாறனின் அனேக வழங்கு பெயர்களும் அங்கே பதிப்பில் உள்ளன.

சுவரன் மாறன் வென்ற போர்களங்கள் :

-------------------------------------------------------------

1. கொடும்பளூர், 2.

 மணலூர்,

3. திங்களூர்,

4. அழுந்தியூர், 

5. காரையூர், 

6. வெண்கோடல், 

7. புகழி,

8. கண்ணனூர், 

9. காந்தளூர், 

10. மறங்கூர், 

11. அண்ணல்வாயில்,

12. செம்பொன்மாரி, ஆகிய இடங்களில் பாண்டியர் சேரர் படையுடன் போரிட்டு வென்றுள்ளான்.

இவனைப்பாடிய புலவர்களின் பெயர்கள்:

1.பாச்சிள் வேன் நம்பி
2.ஆச்சாரியர் அறிருத்தர்
3.கோட்டாற்று இளம்பெருமானார்
4.கிழார் கூற்றத்து பவதாய மங்கலத்து அமருநிலையாயின குவாவன் காஞ்சன்,

மேலும் சுவரன் மாறன் புதுக்கோட்டை மாவட்டம்
கிள்ளுக்கோட்டைக்கருகில் தனி ஒருவனாக தன்மீது பாய்ந்து தாக்கிய வரிப்புலியை தன் உடைவாளால் குத்தி கொன்று உள்ளான். இந்தச் செய்தியை அங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறி நிற்கிறது. பாண்டியருடன் நடந்த போரில் உதவியமைக்காக சுவரன்மாறன் யாதவ வேளிர்களை கொடும்பாளூரில் இருக்க தன்காலம் முதற்கொண்டு அனுமதித்து உள்ளான். இவ்வழிவந்த முதல் யாதவவேள் பாண்டியனின் யானைபடையை வென்றதாகக்
கூறிக்கொண்டான். முத்தரையருடன் நல்லுறவில் இருந்த இப்பிரிவினர் தொடர்ந்து முத்தரையர்களுடன் மணவுறவிலும் இருந்துள்ளனர். பாண்டியருடன் சேர்ந்து சுவரன்மாறனை எதிர்த்து போரிட்ட கொடும்பளூர் பழைய தலைவர்கள் எவர் என்று பெயர்கூட தெரியவில்லை. அவர்கள் பாண்டிய நாட்டிற்குள் சென்றுவிட்டனர் என்று கூறலாம். சுவரன் காலம் முதல் கொடும்பளூரில் இருந்த
வேளிர்களுக்கும், பாண்டியருக்கு உதவிய வேளிர்கட்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் வேறு, இவர்கள் வேறு.

விடேல் விடுகு சாத்தன் மாறன் (கி.பி. 745 - 770)
------------------------------------------------------------------

சுவரன்மாறனுக்குப் பிறகு சோழநாட்டின் அரசனாகப் பொருப்பேற்ற சோழன் சாத்தன் மாறன் ஆவான். இவனது பெயரைக்கொண்டு சுவரன் மாறனின் சொந்த மகன் இல்லை என்று உணரமுடிகிறது. சொந்த மகன் என்றால் மாறன் என்கிற சொல் பெயரின் முற்பகுதியாக இருந்திருக்கும். எனவே இவன் சுவீகார மகனாக இருக்க வேண்டும். சாத்தன்மாறன் திருமெய்யம்
குடைவறைக் கோயிலை புதுப்பிக்கும் பணியினை செய்துள்ளான். இவன் தாய் பெரும்பிடுகு பெருந்தேவி அண்டக்குடி என்ற ஊரினை இக்கோயிலுக்கு தானம் வழங்கியுள்ளாள். சுவரன்மாறன் காலம் முதல் கோனாடு முழுவதும் சாத்தன்மாறன் சோழனிடமே இருந்துள்ளது என்பதை இக்கல்வெட்டு கூறிநிற்கிறது. மேலும் ஏரிக்கு கலிங்குகட்டிய செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. முத்தரையர்களின் நீர்ப்பாசன பணிகளை அது தெரிவிக்கிறது.

பெரும்பிடுகு இரண்டாம் குவாவன் (கி.பி.770-791)
-----------------------------------------------------------------

இவன் வெளியிட்ட கல்வெட்டு ஒன்று பொன்விளைந்தான் பட்டியில் கிடைத்துள்ளது. இவன் மனைவியின் பெயர் மாந்தூர்த்தடிகள். இவள் பெயரைக் கொண்டு இவள் ஜைனமத ஈடுபாடு உள்ளவள் என்று தெரிகிறது. அதற்கேற்றார்போல் இக்கல்வெட்டில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்த தைனப் பள்ளிக்கு தானம் கொடுத்ததையே குறிப்பிடப்படுகிறது. எனவே முன் சொன்னக் கருத்து உறுதிப்படுகிறது. மாமண்டூர் ஜைனபள்ளியில் கல்விபயின்ற பல்லவ அரசி ரேவாவின் மகளாக இவள் இருக்கலாம். இரண்டாம் குவாவன் சிறந்த சிவபக்தன். ஆனால் இவனது இளைய அரசியாகிய மாந்தூர் தடிகள் தீவிர ஜைன ஈடுபாடு உள்ளவள். குவாவானின் பிற்காலத்தில் சோழநாடு மேற்கூறு சோழநாடு, கீழ்க் கூறுசோழநாடு என இரு பிரிவுகளாக்கப் பட்டு இளைய ராணி மாந்தூர் தடிகள் மகன் குவாவன் எட்டி கீழ்க்கூறு சோழநாட்டிற்கு அரசனாகவும், மூத்த அரசி மகன் குவாவன் சாத்தன் மேற்கூறு சோழநாட்டிற்கும் அரசர்களாக ஆயினர்.

குவாவன் எட்டியின் இருக்கை வடவல்லம் என்கிற முத்தரச சோழபுரம் என்னும் இடத்தில் இருந்துள்ளது, இது எட்டிக்குடிக்கு அருகில் உள்ளது, தூர்ந்து போன அகழிகள், தகர்ந்து வீழ்ந்த மதில்கள் ஆகியவைகளை முத்தரச சோழபுரத்தில் இன்றும் காணலாம். இவ்வூரைக்குறித்து திருக்குவனை தியாகராஜபெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கீழ்வருமாறு பேசுகிறது.
"இளங்குடி இருக்கை வடவல்லம் என்கிற இந்திரபதி நல்லூர்". என்பதே அக்கல்வெட்டின் வாசகம். இதனைக் கொண்டு குவாவனின் இளயக்குடி வழியினர் இங்கு இருக்கைக் கொண்டு சோழநாட்டின் கீழ்பகுதியை அரசுபுரிந்தனர் என்று நாம் அறியலாம். இவ்வழியினரின் கீழ்ச் சோழநாட்டில் பல முருகன் கோயில்களை எடுப்பித்தது அவர்களின் ஜைன தாயின் ஈடுபாட்ட ஆகும். மேலும் இந்தப் பிரிவு சோழ நாட்டில் இரண்டாம் புலிக்காடு என்றும், எட்டிபுலிக்காடு என்றும், கழுகப்புலிக்காடு என்றும் ஊரின் பெயர்கள் ஜைனமதத் தன்மையையும், இரண்டாவது
இளையகுடியினர் என்பதையும் குறிப்பிட்டு நிற்பதையும் காணலாம்.

குவாவன் எட்டிக்கு, எட்டிச்சாத்தன், எட்டிக்குவாவன், எட்டிக்கடம்பன் என்ற மூன்று மகன்கள். கீழச்சோழ நாட்டை மூன்று பகுதிகளாக்கி அவைகளின் ஆளுநர்களாக அவர்களை ஆக்கினான் எட்டி அரசன், மூத்தவன் எட்டி சாத்தனுக்கு வலங்கைமான், ஆலங்குடிப்
பகுதியைத் தலைமையிடமாகவும், இரண்டாவது மகனாகிய எட்டி குவாவனுக்கு புதுக்கோட்டை கலசபுரத்தைத் தலைமையிடமாகவும், மூன்றாவது மகனாகிய எட்டிக்கடம்பனுக்கு எட்டிக்குடி வல்லத்துக் கோட்டையை தலைமையிடமாகவும் ஆக்கிக் கொண்டனர்.
எட்டிச்சாத்தன் பின்னர் அரசியல் சூழ்நிலைக் காரணமாக தெற்கே சாத்தூர் பகுதியில் சென்று தங்கி பாண்டியருடன் இணைந்து தஞ்சையைப் பிடித்த விஜயாலயன் மீது போர் நடத்த தலைமையேற்று வந்துள்ளான்.

விடேல்விடுகு குவாவன் சாத்தன் (கி.பி. 791 - 832)
-----------------------------------------------------------------

மேற்குபகுதி சோழநாட்டு அரசனாக தந்திவர்மபல்லவன் காலத்தில் இருந்தவன். இவனது படைப்புகளான குன்றாண்டார்கோவில் குடைவரைக் கோயிலும், திருவாலத்தூர் அப்பர் பெருமான் குடைவரை, திருமால் குடைவரை ஆகியவைகளை ஏற்படுத்தியவன். இவன்காலத்து பிற்பகுதி கி.பி. 811 முதல் சுயாட்சியுடன் ஆட்சி செய்தவன், இக்காலத்தில்
ஏற்பட்டவைகளே திருவெள்ளரை திருமால், சிவன் குடைவரைகள், ஸ்வத்திகக்கிணறு முதலானவைகள் பாண்டியன் முதல் வரகுணன்
இவனுடன் நல்லுறவில் இருந்தான். இவன் மகன்கள் சாத்தன்பழியிலி, சாத்தன்பூதி என்கிற இருவரும், சாத்தன்காளி என்கிற மகளும் இருந்தனர்.

பெரும்பிடுகு சாத்தன் பழியிலி (கி.பி. 832 +55 = 887)
-----------------------------------------------------------------

சாத்தன் பழியிலி தஞ்சையிலிருந்து அரசுபுரியவில்லை. தஞ்சையின் தலைமை ஆட்சி இவன் தம்பி சாத்தன்பூதி இளங்கோ முத்தரையன் ஏற்றிருந்தால் இவன் வேறு இடத்தில் இருந்துள்ளான். இவன் நிருபதுங்க பல்லவன் காலத்திலும் இருந்துள்ளதால் 55 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்திருக்க வேண்டும். இவன் தடைவித்த பழியிலீச்சுவரம் என்னும் நார்த்தாமலை குடைவரை நிருபதுங்க பல்லவன் காலத்தது. நிருபதுங்களின் ஏழாம் ஆட்சியாண்டில் குடைவிக்கப்பட்டதென ஆய்வேடு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் விடேல்விடுகு முத்தரையன் மகன் என்று குறிக்கப்பட்டிருப்பதாலும், இவனது இளய சகோதரனை விடேல் விடுகு இளங்கோவதி அரையன் என்று கல்வெட்டுக்கள் குறிப்பதாலும் சாத்தன்பழியிலியின் பட்டப்பெயர் பெரும்பிடுகு என்றே இருந்திருக்க வேண்டும் என்பதோடு விடேல் விடுகு, பெரும்பிடுகு பெயரை மாறி, மாறி முத்தரைய அரசர்கள் வழங்கிக் கொண்டுள்ளனர் என்பதும் தெளிவாகிறது. இவன் காலத்து கொடும்பாளூர் வேள் நிருப கேசரி என்பவன் நிருப துங்கனுடன் இளம்வயதில் காஞ்சியில் வளர்ந்தவன் நிருப கேசரி. நிருப துங்கனின் ஏழாவது ஆண்டில் பழியிலிஈஸ்வரமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் இம்மூவரும் ஒரு சேர்ந்த காலத்தில் பாதி வாழ்க்கைக் காலத்தையாவது பெற்றிருந்திருக்க வேண்டும்.

விடேல்விடுகு சாத்தன்பூதி (கி.பி. 832 + 60 = 892)
-----------------------------------------------------------------

சோழநாட்டை கோசெங்கணனுக்குப் பிறகு சுதந்திரமாக ஆண்டவர்களின் இவன் தந்தை குவாவன் சாத்தனும், இந்த சாத்தன் பூதியுமே ஆவர். இதே நேரத்தில் கீழ்ச் சோழநாடும் இவன்
தாயாதிகளால் ஆளப்பெற்றது. இதற்கு வித்திட்டவன் ஒற்றியூர் சோழன் ஸ்ரீகாந்தனே ஆவான். எனவே அவன் மகள் விஜயாலயனை பழையாறையில் இருப்பிக்கச் செய்தவனும் இந்த சாத்தன்பூதி என்கிற இளங்கோ முத்தரையனே ஆகும். இவனை “உத்தமதானி” என்று கல்வெட்டுக்கள் அழைக்கின்றன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் இவன் பெயரால் அமைந்தது. இவன் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும், தஞ்சை மாவட்டத்திலும் பல இடங்களில் கிடைக்கின்றன. கீரனூர் உத்தமதானிஸ்வரம், நார்த்தாமலை, சாத்தன் பூதீஸ்வரம், கீழ்த்தானியம் மேல்தானியம் ஆகிய ஊரில் உள்ள சிவன்கோயில் ஆகியவை இவன் கட்டிய சிறப்பான கட்டுமானக் கோயில்கள் ஆகும். சாத்தன் பூதியின் மூத்த சகோதரியின் மகள் சாத்தபெருமாள் என்பவளை ஆதித்த சோழன் மணந்திருந்தான்.

பெரும்பிடுகு பூதிகளரி (கி.பி. 892 + 55 = 947)
-------------------------------------------------------------------

இவன் ஆதித்த சோழன் காலத்திலும், முதல் பராந்தகன் காலத்திலும் புதுக்கோட்டைப் பகுதி தலைவனாக இருந்துள்ளான். இவன் எடுப்பித்த குடைவறைக் கோயிலே பூவாலைக்குடி பூவாண்டார் கோவில். தற்போது புஷ்பவனேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அக்கோயில் முதல் குவாவன் புகழ்சோழருக்காக எடுப்பிக்கப் பெற்றது. இதன் அருகிலேயே வலது பக்கத்தில் அம்மன் கோயில் உள்ளது. வலது பக்கத்தில் இருப்பதால் இது மகள் ஸ்தானம் எனப்பெறும். எனவே மங்கையர்கரசிக்காக எடுப்பிக்கப்பட்ட கோயில் எனலாம். இதைப் போன்றே திருநல்லக்குன்றத்திலும் குடைவறைக்கு வலது புரத்தில் ஒரு அம்மன் கோயில் எழுப்பிக்கப் பட்டுள்ளது. அதுவும் இதே கொள்கையில் எனலாம். இவ்விருக்கோயில்களையும் நன்கு
ஆராய்ந்தால் மங்கையர்க்கரசிக்காக எடுப்பிக்கப்பட்டக் கோயில் என்பதற்குத்தக்க ஆதாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். பூதிகளரிக்கு அமரூன்றிய முத்தரையன் என்றும்
பெயரிருந்தது. திருப்பழனம் கோயிலில் குறிக்கப் பெறும் ஆதித்தனின் திருக்கோஷ்டியூர் படைத்தலைவன் இவனாக
இருக்கலாம்.

விடேல் விடுகு ஏறாவக்கோ முத்தரையர் : (கி.பி. 947+57= 1004)
------------------------------------------------------------------

ஏறாவக்கோ என்னும் முத்தரைய மன்னன் ஒருவர் இருந்தாக திருநல்லக்குன்றத்து குடைவறைக் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவன் மகன் பெரும்பிடுகு முத்தரையன் என்றும் குறிக்கப்படுவதால் கண்டிப்பாக. ஏறாவக்கோ முத்தரையரின்
பட்டப்பெயர் விடேல்விடுகு என்று தான் இருந்திருக்க வேண்டும். மாமன்னன் ராஜராஜன் காலத்திலும் விடேல்விடுகு, பெரும்பிடுகு பட்டத்துடன் அரச ஸ்தானத்தில் முத்தரையர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் இருந்துள்ளது இதனால் பெறப்படுகிறது. அம்மன்னர்கள் அக்காலத்தில் கோனாட்டார் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். ஏறாவக்கோ முத்தரையர் காலத்தில் கட்டப்பட்டதே மூவர்கோயில். முத்தரையர் குலக்கொடி கற்றளியின் கணவன் சிறிய வேள் கட்டியது. அவன் சுந்தரச் சோழன் தமக்கைவரகுணா என்பவளையும் மணந்திருந்தான் என்பதால் மூவர் கோயில் கட்டப்பட்ட காலம் நமக்கு பிடிபடுகிறது. கல்வெட்டின் எழுத்தமைதியும் 10ம் நூற்றாண்டின் உடையதே என்று வல்லுனர்
கூறியுள்ளதும் இதனை அரண் சேர்க்கும். . கற்றளியின் மகன்கள் இருவர்
1. பராந்தகவர்மன்
2. ஆதித்தியவர்மன் இருவரை மட்டுமே
மூவர்கோயில் கல்வெட்டுக்கள் குறிப்பிடுவதால். இக்கோயில்கள்
கற்றளியின் வற்புறுதலில் பேரில் கற்றளியின் மக்களே கட்டினர் என்பதில் ஐயமில்லை. இங்கே குறிக்கப்படும் 8 தலைமுறை வேளிர்களும் சுவரன்மாறன் காலம் முதல் வைத்து பார்த்தால் சரியாக வருகிறது. 8வது தலைமுறை சுந்தரச்சோழன், ஏறாவக்கோ காலத்தவன் என்பது நிருபணமாகிறது.

பெரும்பிடுகு முத்தரையர் கோக்கலி மூக்கன் :
------------------------------------------------------------

புதுக்கோட்டை கோநாட்டு பகுதியிலிருந்து கொங்குச் சோழராக பணியேற்றவன். புதுக்கோட்டையில் வாழும் வரையில் இவன் பெரும்பிடுகு பட்டத்தைத் தரித்து இருந்தான். அது அவனது மன்னர் அந்தஸ்த்தை குறிப்பதாகும். கி.பி. 1004 முதல் கொங்குச் சோழனாக பணியேற்ற பின் ராஜேந்திர சோழனின் பரகேசரி பட்டத்தை தரிக்கலானான். இவன் மனைவி தயாநிதி என்று திருநல்லக்குன்றத்து கல்வெட்டு குறிப்பிடுகிறது. கொங்கு நாட்டில் இப்பெயரின் பிரதிப்பெயராக இட்டிமுத்தர்
அழைக்கப்பட்டுள்ளது. இப்பெயர் முத்தரையர் மகளார் வரகுணாட்டி என்பவனின் பெயரின் பின்பகுதியைக் கொண்டது. ஆண்வழியினர் போல், பெண்வழி அரசியரின் பெருமையை நிலைநாட்ட தாயின் பெயரை முன்வைத்து பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். முத்தர் என்பது (அருள்) நிதியர் என்பதாகும். எனவே தயாநிதி என்பதே இட்டி முத்தர் என்று குறிக்கப்பட்டுள்ளது எனலாம்.

குவாவன்பட்டி (800 - 840 கி.பி)
---------------------------------------------------------

இளையக்குடி இந்திரபதி திருக்குவளைக்கு நேர் மேற்கில் உள்ள வடவல்லக்கோட்டையில் இருந்து ஆண்ட முதல் அரசன். இவன் நாட்டை ஆண்ட போது சுதந்திர அரசனாக இவன் அண்ணன் குவாவன் சாத்தணைப்போல் ஆட்சி செய்தவன். அழகில் சிறந்த இம்மன்னனின் திருமுகம் எட்டுக்குடி முருகனாக அழகான வடிவத்தை இன்றும் தரிசிக்கலாம். இவன் கட்டியதுதான் வைத்தீஸ்வரன் கோயில் முருகன் சன்னதி என்பர். சோழநாட்டில், அதிலும் கீழ்ப்பகுதி சோழநாட்டில் முருகன் கோயில்கள் கட்டப்பெற்றது இவன் காலம் முதலே ஆகும். சோழ நாடு இரு பிரிவாக ஆகிய போதிலும் மூத்தகுடி வழியினருக்கே தலைமைப் பொருப்பு இருந்திருக்கலாம். ஆயினும் கீழ்ப்பகுதிச் சோழருக்கு தனிப்படை இருந்துள்ளது தெள்ளாற்றுப் போரின்போது தெரிகிறது. ஆனால் இது விஜயாலயன் தஞ்சையை பிடித்த பின்னர் கீழ்ப்பகுதிச் சோழர் தம் நாட்டுப் பகுதிக்கு தனிப்படை வைத்துக் கொண்டனர் எனலாம். இல்லை எனில் மிகவும் எளிதில் கீழ் பகுதியையும் விஜயாலயன் பிடித்து இருப்பான். பாண்டியர் உதவியுடன் கீழ்பகுதிச் சோழர் படை மிக வலுவாக இருந்துள்ளது கீழ்ச் சோழநாட்டு அரசில் பணியாற்றியவர்களில் கோட்புலியார்,
மிழலைகுறும்பநாயனார், ஏயர்கோன்கலிக்காமர் ஆகியோர் சிறந்த தனாதி பதிகளாவர்.

எட்டிகுவாவன் (850- 880 கி.பி.)
-----------------------------------------------------------

இவன் குவாவன் எட்டியன் இரண்டாவது மகன், இவன் தம்பி எட்டிக்குடி வல்லத்தில் இருந்து ஆட்சி செய்தான் இவன் அண்ணன் எட்டிச் சாத்தன் முதலில் வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டான். விஜயாலயன் தஞ்சையைக் கைப்பற்றிய பின் இதனால் ஏற்பட்ட கோபத்தில் கறுவு கொண்டு ஆலங்குடி பகுதியை தமையன் வசம் விடுத்து பாண்டியன் கூட்டுறவில் பாண்டிய நாட்டின் பகுதியை ஆளும் உரிமையுடன் மதுரைக்கு தெற்கே உள்ள சாத்தூர் பகுதிக்குச் சென்றுவிட்டான். அதைப் பற்றி எட்டிச் சாத்தனைப் பற்றி கூறும்போது பார்க்கலாம். எட்டிக்குவாவன் எடுத்த கலசபுரம் கோட்டை ஒரு நூற்றாண்டு மட்டுமே இவர்கள் ஆட்சியில் இருந்துள்ளது. இவனின் ஜைனமதத் தொடர்பு கராணமான இக்கோட்டையின் மத்தியில் ஒரு முருகன் கோயில் கட்டி இருப்பான் போலும் அதனால் இக்கோட்டையின் மத்தியில் காணப்படும் குளம் பொய்கை என்று வழங்கப்படுகிறது. அப்பொய்கை முன்பு சரவணப்பொய்கை என்று வழங்கப்பட்டிருக்கலாம்.

மேலும் கலசபுரமும் வல்லம் என்கிற பெயரிலேயே வழங்கி உள்ளது எனலாம். ஏனெனில் இந்தப் பகுதி நாட்டுப் பெயர் வல்ல வளநாடு என்று அழைக்கப்படுகிறது. இவன் காலத்தில் உருவாக்கப்பட்டதே மிழலைக் குறும்பநாயனார்க்காக எடுப்பிக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். அக்குடைவரைக்கோயில் உள்ள துவாரகப் பாலகரில் ஒன்று எட்டிகுவாவனுடையதும், மற்றொன்று எட்டிக்கடம்பன் உடையதும் ஆகலாம். கி.பி. 890க்கு முன்பு உருவாக்கப்பட்டது. பெரும்பிடுக. விடேல்விடுகு பட்டத்தையும் கீழ்பகுதி சோழர் அணியவில்லை
என்பதால் மேற்பகுதி சோழருக்கே மூத்தகுடி என்பதால் அவ்வுரிமை இருந்தது எனலாம். விஜயாலயன் மீது பாண்டியன் நடத்திய குடமூக்குப் போர், அரசலாற்றுப் போர் காரணமாக மேல்பகுதி சோழநாட்டின் பகுதியாகிய மேற்கு புதுக்கோட்டைப் பகுதி விஜயாலயனிடமிருந்து பாண்டியன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் கைப்பற்றியதால் இப்பகுதி எட்டிருவாவனின் நிறுவாகத்தின் கீழ் வந்தது.

இதனால் தான் இப்பகுதியில் கீரனூருக்கு கிழக்கே எட்டிகுவாவன்பட்டி (எட்டுகாப்ட்டி என்ற ஊர் காணப்படுகிறது. அதேபோல் சித்தன்னவாசல் சமணக் குடைவரையை இளங்குமணன் புதுப்பித்து ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் மற்றும் அவன் மனைவியின் படமும் ஓவியமாகத் தீட்டப்பட்டது. திருப்புறம்பியம் போருக்குப் பின்னர் மேற்கு புதுக்கோட்டைப் பகுதியும், திருச்சி மாவட்டமும் மீண்டும் விஜயாலயனின் கைக்கு வந்தது. இதன்பிறகே ஆதித்தனின் ஆரம்பகாலக் கல்வெட்டுக்கள் இங்கெல்லாம் கிடைக்கின்றன. ஆயினும் கி.பி. 890 வரை கீழ்சோழ நாட்டின் ஆட்சி இவர்களிடமே இருந்துள்ளது.

குவாவன் பட்டி என்கிற ஊரும் இவன் பெயருடையதே.. எட்டிக்குளவான் என்றும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. எட்டிக்குவாவனின் மனைவி பாண்டியனின் மகள் ஆவாள். இவர்களின் மகன் குவாவன் அனுக்கன் என்பவன். குவாவன் அனுக்கனின் மனைவியும் ஒரு பாண்டியதியரசி என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இவ்வரசி பாசனவசதி செய்துள்ளாள். ஏரிக்குக் கண்மாய் கலிங்கு கட்டிக் கொடுத்துள்ளதையும் அக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. முனன் எழுவி என்பது அவ்வரசியின் பெயர். ஆதித்தன் கலசபுரத்தையும் கீழ்பகுதி சோழநாட்டையும் கைப்பற்றிய பின்பு இந்த குவாவன் அனுக்கனும் முனன் எழுவியும் வெள்ளாற்றுக்கு தெற்கில் பாண்டிநாட்டில் சேவூர் என்கிற ஊருக்கு உடையவனாக பாண்டியன் ஆக்கி உள்ளான் எனலாம்.

கி.பி. 890ல் ஆதித்தன் புதுக்கோட்டை கலசபுரத்தை சேதமின்றிக் கைப்பற்றினான். அவன் கலசபுரத்தின் அருகில் உள்ள திருகட்டளையில் ஒரு சிவன் கோயில் கட்டினான். இதன் ஆண்டு ஆதித்தனின் 20வது ஆட்சி ஆண்டு ஆகும். எட்டிக்குவாவனைச் சேர்ந்தோர் பாண்டிய நாட்டிற்குள் பின்வாங்கினர். ஆயினும் ஆதித்தன் திருக்கோஷ்டியூர் வரையிலும் தனது நிர்வாகத்தை உண்டாக்கினான் என்பதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இவ்வெற்றி தற்காலிகமாகத்தான் இருந்துள்ளது எனலாம். ஏனெனில் குவாவன் அனுக்கனின் இருக்ககையாக சேத்திமுத்திப்பட்டி இருந்துள்ளதால் மறு பேரில் பாண்டியன் வெள்ளாறு வரை தனது ஆட்சியை மீட்டுவிட்டதையே இது காட்டுகிறது அல்லது குவாவனின் மகனும், கடம்பனின் மகனும் ஆதித்தனின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால் அவர்களுக்கு அவர்களின் பாண்டியர் உறவு முறையை மனதில் கொண்டு, அவர்களின் கோரிக்கையின் படி பாண்டிய நாட்டு ஊர்களை அவர்களின் இருக்கைகாக கொடுத்து கட்டுப்பாட்டுடன் உடைய வாழ்க்கைக்கு அனுமதித்து இருக்கலாம். எனவே தான் கடம்பன் எட்டியின் கல்வெட்டு ஒன்று திருநலக்குன்றத்து குடைவரைகோயிலில் காணப்படுகிறது.

இக்கல்வெட்டை வெளியிட்டவன் எட்டிக்கடம்பனின் மகன் ஆவான். குடைவரைக் கோயிலுக்குள் காணும் மற்ற அரசர்களின் கல்வெட்டுகளில் முதல் கல்வெட்டாகும். இப்போது திருநலக்குன்றம் ஆதித்தனின் முழுக்கட்டுப்பாட்டிற்கு வந்தது என்பதில் ஐயமில்லை. கல்வெட்டை கூறியுள்ள கடம்பனெட்டி அதளையூர் நாடாள்வான் என்று கூறுவதாலும் ஆதித்தனின் ஆட்சியாண்டைக் குறிப்பதாலும், பழைய பெயரையே கூறியுள்ளான். அதளையூர் நன்னிலம் தாலுக்காவில் உள்ள ஊர். இவன் தந்தையின் ஆட்சியின் போது இவன் அதளையூர் நாடாள்வானாக இருந்துள்ளான். எட்டுக்குடி வல்லமும் ஆதித்தனால் கி.பி. 890ல் . கைப்பற்றப்பட்டதால் கடம்பன் எட்டியும் பாண்டி நாட்டு ஊரின் தலைவனாக்கப்பட்டிருக்கலாம். காரணம் இவனது மனைவியும் பாண்டியர் மகளாக இருந்ததால் அரசியின் உரிமை படி அப்படி ஒரு ஏற்பாடு என்றால் தவறில்லை.

ஆதித்தனின் 20ம் ஆட்சியாண்டிற்குப் பிறகு உள்ள கல்வெட்டுகளே கீழ்ப்பகுதி சோழநாட்டில் காணப்படுவதில் வேதாரண்யம் கல்வெட்டும் ஒன்றாகும். ஆதித்தன் கலசபுரம், வல்லம், எட்டிக்குடி வல்லம் கோட்டைகளைக் கைப்பற்றிய போது மேற்குப் பகுதி சோழ நாட்டில் இருந்த ஏறாவக்கோவின் தமயன் வழிவந்தோர் ஆதித்தன் பக்கல் இருந்தனர் என்பதால், கீழ்ப்பகுதி ஆட்சியாளர்களின் வழிவந்தோர் பாண்டியர் உறவு முறையோடு சேர்ந்து மூத்தகொடி தாயாதிகளினின்றும் ஒதுங்கி சென்றனர்.தொடர்ந்து அவர்கள் பாண்டியர் அரசியர்களையே மணந்து வந்திருக்க இடமுண்டு. ஆனாலும் அவர்களும் தானாதிபதிகளாகவே சிறந்து விளங்க முடிந்ததே அன்றி மீண்டும் அரசர்களாக ஆக
லை. இவ்வாறு பாண்டிய நாட்டு முத்தரையச் சோழர் குழுவினரே மறவருள் உள்ள சேர்வை என்கிற குழுவினர் ஆவர். ஒரு கட்டத்தில் பாண்டியரை விடுத்து சோழரின் ஆட்சிக்காக பாடுபடத் தொடங்கிவிட்டனர் எனலாம்.

மேற்குப் பகுதி முத்தரையச் சோழர்களும் தானாபதியாகவே தான் தொடர்ந்து ஆதித்தன் காலத்தைத் தாண்டியும் வாழமுடிந்தது ஆனால் இப்போது இவர்கள் கீழ்பகுதி சோழ நாடாகிய தானமநாட்டிலும் தங்கி வாழ்ந்து நிலை பெற்றனர். அவர்களே புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியில் உள்ள தானமநாட்டு முத்தரைய சோழர்களாகிய சேர்வை பட்டம் தாங்கி வாழ்ந்து வரும் பிரிவினர் ஆகும். இவர்களில் பல புகழ் பெற்ற தானாதிபதிகள் ஆதித்தனின் பின்னோர்களிடம் சிறப்புற்று வாழ்ந்தனர். இவர்களின் மூத்த கொடிவழி வந்த கோக்கலிமூர்க்கன் வழிவந்தோர் மட்டும் கொங்குசோழர் என்கிற வாய்ப்பைப் பெற்று கொங்கு நாட்டின் சோழ அரசர்களாக இருந்து ஆட்சி செய்து வந்தனர்.

எனவே தான் இளங்கோ முத்தரையரை உத்தமதானி என்று மெச்சிப் புகழ்ந்தான். விஜயாலயனும், ஆதித்தனும், உத்தமதானியின் இந்த அரசியல் முடிவால் சோழர் குலம் வெற்றி பெற்று புகழ் பெற்றது. உத்தமதானியின் அரசியல் கொள்கை பாண்டியரும், பல்லவரும் அன்னியரே. விஜயாலயனோ தாயாதி. ஒன்று நலம் தலைமையேற்க வேண்டும் அல்லது விஜயாலயன் தலைமை ஏற்க வேண்டும். அதுவே சரியானது என்று முடிவு செய்திருந்ததால் அவனது உறுதிப்பாடு நிலைத்திருந்தது. எந்த ஒரு அரசனும் எடுக்கும் சரியான முடிவே வரலாறு படைக்கும். சிதறிகிடந்த சோழநாட்டை ஒருங்கிணைத்து ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்தால் தான் பல்லவரை வென்று தம் திருவொற்றியூர் நாட்டை மீட்க முடியும் என்பது விஜயாலயன் எடுத்த முடிவு. அந்த முடிவை தான் தோற்றுவிட்ட போதிலும் ஏற்றுக்கொண்டதே உத்தமதானியின் ஒப்பற்ற முடிவு உத்தமதானியும் பாண்டியன் பக்கம் சென்றிருந்தால் நாடு மேலும் பல பிரிவுகளாக்கப்பட்டு சிற்றரசர்களாகவே இருக்கவேண்டி இருந்திருக்குமே அன்றி பேரரசு கண்டிருக்கவே முடியாது. இந்த வகையில் இவ்விரு தாயாதிகளும் ஒத்துப் போயினர் எனலாம்.

அதுவே பேரரசு காண அடிகோலியது. திருப்புறம்பிய வெற்றி கி.பி. 870ல் நிகழ்ந்தது 871ல் ஆதித்தன் முடிசூட்டினான். வெற்றி பெற்றுவிட்டாலும் கீழ்பகுதி சோழநாட்டை அவன் கைப்பற்றவில்லை. ஒரு வேளை அவர்களையும் மனம் மாற்றி தம் பக்கம் கொண்டு வர தூதுவர்களின் மூலம் தொடர்பு கொண்டு பார்த்திருக்கலாம். முன்பே தாயாதி நாட்டைப் பிடித்துக் கொண்டவன் என்கிற கெட்டபெயர். எனவே கீழ்ப்பகுதி சோழநாட்டு தாயாதிகள் தம்பக்கம் வர போதுமான கால அவகாசம் அளித்தான் ஆதித்தன் என்று தான் கூற வேண்டும். கி.பி. 850ல் தஞ்சையைக் கைப்பற்றிய காலம் முதல் விஜயாலயன் எதிர்கொண்ட போர்கள் பல

1. தெள்ளாற்றுப் போர்,
2.குடமூக்குப் போர்,
3. அரசிலாற்றுப் போர்,
4. திருப்புறம்பியப் போர்

இவ்வாறாக நான்கு போர்களை கி.பி. 890க்குள் சந்தித்து விட்டான். 5 ஆண்டுகளுக்கு ஒரு போர் என்று நடந்துள்ளது. எவ்வாறு எப்படிப்பட்ட போர்களை சந்தித்தான் ? எவ்வாறெல்லாம் தம்மைப் பலப்படுத்திக்கொண்டான் ?

1.சேரர் மரபு பழுவேட்டரையர்களுடன் மழப்பாடியில் மணவுறவு கொண்டிருந்ததன் மூலம் கணிசமான பலம் கிடைத்தது.

2.கங்கர்களுடன் மணவுறவும், நட்பும் கொண்டிருந்ததால் மேலும் இவனுக்கு படைபலம் கிடைத்துள்ளது.

3.ராஷ்டிரகூடர்களுடனும் மணவுறவு கொண்டதன் மூலம் அதிகப்படியான பலம் கிடைத்தது.

4.பல்லவர்களின் துணை முன்னேயே இருந்து வந்தது.

5.சேரமன்னனின் மகளை தனது மகனுக்கு ஆதித்தன் திருமணம் செய்ததன் மூலமாக ஒட்டு மொத்த சேரர் உதவியும் சோழர்களுக்குக் கிடைத்தது. எனவே இக்காரணங்களே பெரிய பலம் உள்ள அரசனாக ஆதித்தனை ஆக்கியது எனலாம்.

எட்டிச்சாத்தன் (840 - 875) கி.பி.

---------------------------------------------------

விஜயாலயச் சோழன் என்று தஞ்சையைப் பிடித்தானோ, அன்றே கீழ்பகுதி சோழர்கள் பாண்டியன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் பக்கம் சேர்ந்து விட்டனர். உதவி செய்த தாயாதிகளையே ஒழித்துக்கட்ட நினைத்த விஜயாலயனை ஒழித்து சோழ நாட்டின் பகுதியை அவனிடமிருந்து மீட்கத் துடித்தனர். ஆனால் விஜயாலயன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபனின் மணந்திருந்தவன். அவன் சகோதரி ஸ்ரீ வல்லமாளின் மகன். எப்படி சம்மதிப்பான் பாண்டியன் விஜயாலயனை ஒழிக்க எனவே பாண்டியனின் மகளை மணந்திருந்தவர்களாக தாங்களும் இருந்தபோதிலும் பாண்டியனின் மனம் மாறும் வரை வாளாதிருந்தனர். 

வந்தது தொள்ளாற்றுப் போர் மூன்றாம் நந்திவர்மன் மீது பாண்டியன் படைநடத்தினான். தஞ்சையையும் கவர்ந்திருந்த விஜயாலயன் தன் மாமனுக்காக பாண்டியர் பக்கம் நின்று போரிட தனது படையையும் அனுப்பி இரந்தான். அதேபோல் கீழ்ப்பகுதி சோழநாட்டின் படையையும் எட்டிக்கடம்பன் அனுப்பி இருந்தான். சேரமான் படையும் சென்றிருந்தது பாண்டியர் படை தலைமையேற்றது, மூன்றாம் நந்திவர்மனே வெற்றி பெற்றான். பின்னர் நான்கு படையும் பல்லவர் பின் தொடர தத்தம் நாடு நோக்கி பின் வாங்கினர். அவரவர் எல்லைவரை பல்லவர்படை முன்னேறி சென்றது. இந்த சூழ்நிலையில் விஜயாலயன் பல்லவரோடு இணைந்து கொண்டான்.

பரகேசரி கோக்கலி மூர்க்கன் என்கிற விரக்கிரம சோழன் : (கி.பி. 1004 - 1045)

----------------------------------------------------------------

தஞ்சையைத் தன் தயாதிகளிடமிருந்து விஜயாலயன் கி.பி. 850ல் கவர்ந்தது அநீதி என்பதை உணர்ந்திருந்த ராஜராஜன், ராஜேந்திரன் கோக்கலிமூர்க்கனை கொங்குச் சோழராக நியமித்து ஆளச் செய்தனர். இதைக் கொங்கு மண்டல சதகம்

" சொற்றவராதோர் கனிவுள கத்தோர் நுகன்றநூர் கற்றவர் தங்கட் குதவுதனோம் பெனக் கண்டவராம் செற்றமிகு முத்தரசர்கள் வாழ்வு செழித்தரசு மற்ற புகழும் பெற்றாண்டதுவுங் கொங்கு மண்டலமே"

என்று கூறுகிறது. இவ்வாராக கி.பி. 1004 முதல் 1303 வரை கொங்கு நாட்டுச் சோழர்களாக முத்தரையச் சோழர்கள் அரசுபுரிந்தனர். அவர்களின் வம்சாவழிப்பட்டியல் இத்துடன் இணைப்பில் கூறப்பட்டுள்ளது. கொண்டு அறியவும். கொங்குச் சோழர்களின் இறுதியில் முஸ்லீம்கள் படையெடுப்பால் மதுரை அவர்கள் வசமானபோது கொங்கு நாடும் பாதிக்கப்பட்டது. அப்போது ஓய்சளர்களும் வடக்கில் இருந்து கொங்கு நாட்டைத் தாக்கினர். இதில் ஓய்சளர்களுடன் சமாதானமாக இருந்து பின்னர் காஞ்சிபுரம் வந்து தங்கினர். 

காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு சிதம்பரம் வரை முன்னேறி, பின்னர் பாண்டியரை தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து நீக்க முயற்சி மேற்கொண்டனர். அவ்வரிசை அரசர்களின் முதலாமவன் வீரசோழசம்ப மகாராஜன் என்பவன் ஆவான். கடைசி அரசன்

வீரசேகர சோழன் என்பவன் ஆவான். இவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்து முத்தரையச் சோழர் ஆவர். அவர்களின் பட்டியல் கீழ்வருமாறு இவ் ஆசிரியரால் பட்டியலிடப்பட்டுள்ளது.

வியை நகர அரசர்கள் காலத்து முத்தரையச் சோழர்

-------------------------------------------------------------


1. வீர சோள சம்ப மகாராஜா

(கி.பி. 1304 - 1340)

2. கரிகால் சோள மகாராஜா

(கி.பி. 1340 - 1370)

3. கரிகால் சோள விக்கிரம பாண்டியன் (கி.பி. 1370 - 1410)

4. வாலக சோழ மகாராஜா (வாலி) (கி.பி. 1410 - 1446)

5. அக்கலராய என்கிற வாலக்காமய

சோழமகாராஜா

(கி.பி. 1446 - 148)

8. சென்னிய சோள மகாராஜா

(கி.பி. 1481 - 1509)

7. சென்னிய பாலய சோள மகாராஜா (கி.பி. 1509 =1535

8. வீரசேகர சோள மகாராஜா

(கி.பி. 1535 - 1554)

9. வீர அணுக்க சோழ மகாராஜா (கி.பி. 1554 - 1585)

10. விட்டலேஸ்வர சோழகனார்

(கி.பி. 1585 - 1614)

மூத்தகிளை :

11. திப்பரச சோள மகாராஜா (காஞ்சிபுரம்) (கி.பி. 1481 - 1509)

12. திப்புரச பொக்கையா சோள மகாராஜா (கி.பி. 1509 - 1535)

இவ்வாறாக தஞ்சை நாட்டை விஜயாலயன் தாயாதிகளிடம் விட்டபின், கொங்கு நாட்டைப் பெற்று புகழுடன் ஆட்சி செய்தனர். அதுவும் போனபின் மீண்டும் தஞ்சை நாட்டை பாண்டியரிடமிருந்து மீட்டு கி.பி. 1535 வரை ஆட்சிசெய்த முத்தரையர், பிற்காலத்தில்

பாளையக்காரர்களாக தமிழகத்தில் சில பகுதிகளில் இருந்துவந்தனர். அதுவும் தற்போது முடிந்து மக்களாட்சி நாட்டில் சாதாரண குடிமக்கள் நிலையை எய்தினர்.

சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகள்

_______________________________________


1. விஷ்ணு

2. பீர்மா

3. மரிசி

4. காசியபன்

5. ஆரிமன்

6. மகாவீரன்

7. ருத்ரசித்

8. சந்திரசித்

9. சுசிதரன்

10. சிபி

11. சோழன்

12. சென்னி, கிள்ளி முதலானோர்

13. கோசெங்கணன் (பல சிவன் கோவில்களை கட்டியவர்)

14. நல்லடிக்கோன்

15. வளவன் (தணமுத்தன்)

16. ஸ்ரீ காந்தன்

17, விஜயாலயன்

18. ராஜகேசரி - ஆதித்தன்

19. வீரசோழன் (பராந்தகன்)

20. அரிஞ்சியன் (வைதும்ப கல்யாணியை மணந்தவன்)

21. சுந்தரசோழன் - (பாண்டியரை வென்றவர், அழகியவன்)




Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

வேட்டுவ கவுண்டரின் பூர்வீகம்