மாலவல்லியின் தியாகம் | சரித்திர நாவல் | முத்தரையர் பகுதி |
||மாலவல்லியின் தியாகம்|| இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 16 - விஷ விருட்சம் அன்று தஞ்சை மன்னர் மாறன் முத்தரையர் அரண்மனையில், மந்திராலோசனை மண்டபத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடக்க ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும், போர் முறை நன்கு அறிந்த நிபுணர்களும், கூட்டங் கூட்டமாக மந்திராலோசனை மண்டபத்துக்குள் வந்து அவரவர்களுக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்தனர். தஞ்சை அரசர் முத்தரையர் கோபத்தினால் கொதிக்கும் உள்ளத்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அமைச்சர் புலிப்பள்ளியார் கொடும்பாளூருக்குப் போய்க் கோட்டை ரகசியங்களை அறிந்து கொண்டு வந்த விஷயம் முதலில் ஆரம்பமாகியது. புலிப்பள்ளியார் கம்பீரமான குரலில் பேசத் துவங்கினார். “அரசே, சபையோர்களே! கொடும்பாளூரில் தான் நாம் முதலில் வேரோடு களைந்தெறிய வேண்டிய விஷ விருட்சம் கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது. அந்த விஷ விருட்சத்தின் நிழலில் தான் பழையாறை நகர் சின்னப் பயல் விஜயன் ஒண்டிக் கொண்டிருக்கிறான். அந்த விஷ விருட்சம் வெட்டப்பட்டு விட்டால், சோழ அரசைப் பற்றிய நினைப்புக்கூட யாரு